க.பாலாசி: பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

Monday, July 19, 2010

பதிவுலகில் நான் எப்படிப் பட்டவன்?

நண்பர் புலவன் புலிகேசி என்னையிந்த தொடரிடுகைக்கு அழைத்திருந்தார். அவருக்கு எனது நன்றிகள்.



1)வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சி@பாலாசி

2)அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

இல்லை. க.பாலாசி என்பதுதான் எனது முழுமையான பெயர். முதலில் என்பெயரின் கடைசியெழுத்தான ‘சி’ என்பதை தலைப்பாக வைத்திருந்தேன். பிறகு மாற்றம்வேண்டி சி@பாலாசி என்பதாக மாற்றிக்கொண்டேன்.

3)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

முதலில் கேபிள் சங்கரின் திரைவிமர்சனங்கள் படிக்க ஆரம்பித்து அப்படியே படிப்படியாக வலைப்பூவென்றால் என்னவென்பதை அறிந்து பிறகு ஏதோவொரு நப்பாசையில் எனக்கான வலைப்பூ ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அனுபவங்கள், மனதில் உருவாகும் ஆக்கங்கள், சிலசமயம் சரி, தவறெனப்படுவதையும் பதிந்துகொண்டிருக்கிறேன். அவை கட்டுரையாகவோ கவிதையாகவோ இருக்கலாம்.

4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

தடியெடுத்தவர்கள் யாவரும் தண்டல்காரர்களில்லை. பிரபலம் என்ற அடைமொழி வலைப்பதிவாளர்களுக்கு பொருந்துமா என்றும் தெரியவில்லை. பாதையெங்கும் வியாபித்திருக்கும் பூக்களின் வாசம் சிலநேரம் ரம்மியமான மழையை மனதிற்குள் தூவிவிடும். சிலநேரம் அமர்ந்து அலவலாவ செய்துவிடும். அதுபோல் விரும்பியவர்களை மற்றும் விரும்பின இடுகைகளை வாசிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன் அவ்வளவே.

5)வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. பகிர்வுக்காக சில அனுபவங்களை எழுதியிருக்கிறேன். அது நல்லதோ, கெட்டதோ யானறியேன். படிப்பவர்களின் ரசிப்பு மற்றும் பின்னூட்டங்களை தவிர்த்த விளைவுகள் என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதுமில்லை.

6)நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சயம் பொழுதுபோக்கவும், போக்கிற்காகவும் அல்ல. சம்பாதிப்பதற்காகவும் அல்ல.

7)நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


ஒன்றுக்கு மட்டும்தான்.

8)மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

மற்ற பதிவர்கள் மீது கோபம் என்று இதுவரை வந்ததில்லை. மண்வாசனையும், மனிதத்தன்மையும், சூழ்நிலைச்சார்ந்த அக்கரையையும் வார்த்தைகளில் எடுத்தியம்பும் அனைவரும் பொறாமைகள் தவிர்த்த விருப்பத்திற்குரியவர்கள். அதையும் மீறின பொறாமை அவ்வப்பொழுது எழுவதுண்டு. இன்னாரென்று எளிய அடைப்புக்குள் புகுத்திவிடயியலாது.

9)உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாரட்டைப் பற்றி..

முதலில் பின்னூட்டமிட்டவர் கோவி.கண்ணன் என்று ஞாபகம். தொடர்புகொண்டு பாராட்டியவரெனில் அது ஈரோடு கதிர் அவர்களாகத்தான் இருக்கவேண்டும். எதோவொரு கவிதைக்கோ, கட்டுரைக்கோ கிடைத்த அவரின் பாராட்டும் ஊக்கமும் மென்மேலும் எழுதத்தூண்டியது. தவறெனில் சுட்டிக்காட்டவும் அவர் தயங்கியதாக தெரியவில்லை. அதுவே இன்றென் கூழாங்கல் நிலைக்கு காரணமும்கூட. பின்காலத்தில் வந்தமர்ந்த வானம்பாடிகள் அய்யாவின் தோள்தட்டலும் ஒருவித உற்சாக மனப்பான்மைக்கு பெரிதும் காரணம். இவர்கள் தவிர்த்த அனைத்து வாசிப்பாளர்கள் மற்றும் என்னுடன் பயணித்து படித்து பின்னூட்டமிடும் அனைவரும் என்னை தோள்நிறுத்தி பாராட்டும் வகையைச்சாருவர்.

10)கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. மனம்போன வாழ்வென்றில்லாமல் முயன்று வாழ்கிறேன். மற்றபடி என் வாழ்காலம் இவ்வலைதள தலைப்பின் விரிவில் கூறினதுபோல அமையவேண்டுமென்றே விழைகிறேன்.


இந்த இடுகையைத்தொடர நண்பர் முரளிக்குமார் பத்பநாபனை அழைக்கிறேன்.




50 comments:

r.v.saravanan said...

மனம்போன வாழ்வென்றில்லாமல் முயன்று வாழ்கிறேன். மற்றபடி என் வாழ்காலம் இவ்வலைதள தலைப்பின் விரிவில் கூறினதுபோல அமையவேண்டுமென்றே விழைகிறேன்.

மிக மிக நன்று பாலாசி வாழ்த்துக்கள்
என்றென்றும்

அ.முத்து பிரகாஷ் said...

பதிவுலகில் அனைவராலும் நேசிக்கப் படும் வெகு சிலரில் நீங்களுமொருவர் ... தோழமையின் அன்புகள் எப்போதும் உங்களுக்கு !

vasu balaji said...

வாழ்த்துகள் பாலாசி.:)

தமிழ் உதயம் said...

பதிவுலகில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. வாழ்த்துக்கள்.

KARTHIK said...

கலக்குங்க தல :-))

Starjan (ஸ்டார்ஜன்) said...

அசத்தலான பதில்கள். வாழ்த்துகள் பாலாசி.

அன்பரசன் said...

:)

பத்மா said...

பாலாசி,
அருமை அருமை ..உங்கள் எழுத்து பார்த்து எங்களுக்குத் தான் பொறாமை ....
நீங்கள் உங்கள் வலைப்பூ பிரபல படுத்த ஏதும் செய்ய வேண்டாம் .உங்கள் எழுத்தே பிரபலமாக்கி விடும்
நிஜ வாழ்வில் எப்பிடி பாலாசி good boy யோ அது போல் தான் வலை உலகிலும் .பாராட்டுக்கள் பாலாசி

க ரா said...

நல்ல பகிர்வுகள் பாலாசி. வாழ்த்துகள் :)

க ரா said...

இந்த வாரம் கவிதைல்லாம் எதுவும் இல்லைங்களா :)

அன்புடன் நான் said...

என்னைப்போலவே!... நீங்கலும் நேர்மையான ஆளுங்க.

பாராட்டுக்கள் பாலாசி.

அன்புடன் நான் said...

என்னைப்போலவே!... நீங்களும் நேர்மையான ஆளுங்க.

பாராட்டுக்கள் பாலாசி.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

உங்களை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி..

உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள். :)

ஈரோடு கதிர் said...

என்னவோ தெரியல பாலாசி

நாலு தடவ படிச்சுட்டேன்


வாழ்த்துகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

நன்று:-)))))))))

கலகலப்ரியா said...

short & sweet - a? நல்லாருக்கு சி...

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமை பாலாசி.

எளிய பதில்களும் அதிலுள்ள உண்மையும் பிடித்திருந்தது.

Praveenkumar said...

தெளிவான மற்றும் உண்மையான பதில்கள் அனைத்தும் தங்களது பதிவுகளைப்போல் யதார்த்தமாய்...

அன்பேசிவம் said...

thanks nanba, nalla matter thaan oru rendu naala pathividukiren. ungka pathilellaame alakaa irukku. :-))

elimaiyodu thaana ottikittu varumpola intha alaku. illayaa?

Radhakrishnan said...

எளிமை.

Thamira said...

பார்க்க பொடிசு மாதிரி இருந்துகொண்டு எவ்வளவு அழகா பெரிசு மாதிரி பேட்டி கொடுக்குது பாரேன்.! :-))

(வாழ்த்துகள் பாலாசி. உங்கள் பதிவுகளும் தேர்ந்த முதிர்ந்த பகிர்வுகளாகவே இருக்கின்றன)

பிரபாகர் said...

வித்தியாசமாய் சொல்லியிருக்கிறீர்கள் இளவல்... வாழ்த்துக்கள்.

பிரபாகர்...

அம்பிகா said...

அருமையான சுய விமர்சனம்.
வாழ்த்துக்கள் பாலாசி.

சீமான்கனி said...

//விரும்பியவர்களை மற்றும் விரும்பின இடுகைகளை வாசிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன் அவ்வளவே.//

ஒ அதான் எங்க பக்கம்லாம் வர்றது இல்லையா நான் என்னவோ தல ரெம்ப பிஸியா இருக்குணுல நெனச்சுகிட்டு இருக்கேன் ...அவ்வ்வ்வவ்வ்வ்...

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் நண்பரே..

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

புலவன் புலிகேசி said...

என் அழைப்பை ஏற்று எழுதியமைக்கு நன்றி நண்பா..நல்ல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

பனித்துளி சங்கர் said...

///4)உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
/////////////

இதற்கான பதிலை மிகவும் ரசிக்கும் வகையில் வெளிப்படையாக சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை . நண்பரே . பகிர்வுக்கு நன்றி . தொடரட்டும் உங்களின் வெற்றி பயணம் .

ஹேமா said...

தெளிவான மனம்.பிடித்தமான மனிதர் நீங்கள் பாலாஜி.

காமராஜ் said...

மிக மிக நேர்மையான பதில்கள் பாலாஜி.
செம்பனார் கோவிலா சொந்த ஊர் ?
பத்மா மேடம் சொன்னாங்க.ந.முத்துசாமியின் சிறுகதை
(அகில இந்திய கதைகள் வரிசையில் வரும்)
'செம்பனார்கோவில் போவது எப்படி'
படித்த ஞாபகம் வந்தது.சந்தோசம் பாலஜி.

Cable சங்கர் said...

கண்டுகொண்டேன்.. :)

பூங்குழலி said...

அதுவே இன்றென் கூழாங்கல் நிலைக்கு காரணமும்கூட


நல்ல பதிவு பாலாசி

Karthick Chidambaram said...

நன்று:-)))))))))

Mahi_Granny said...

it is good. அன்புடன் granny

ரோகிணிசிவா said...

என்ன சொல்றதுன்னு தெரியல , அவ்வளவு அழகு , செம்மையான பதில்கள் , HUGS DA BALASI ......

ஆடுமாடு said...

தெளிவான, எளிய பதில்கள்.

வாழ்த்துகள் பாலாசி.

'பரிவை' சே.குமார் said...

//மனம்போன வாழ்வென்றில்லாமல் முயன்று வாழ்கிறேன். மற்றபடி என் வாழ்காலம் இவ்வலைதள தலைப்பின் விரிவில் கூறினதுபோல அமையவேண்டுமென்றே விழைகிறேன்.//

மிக மிக நன்று பாலாசி வாழ்த்துக்கள்.


enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

க‌ரிச‌ல்கார‌ன் said...

வாழ்த்துக்க‌ள் ம‌க்கா

Jerry Eshananda said...

பாலாசியை இன்னும் அதிகமாய் தெரிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி

பா.ராஜாராம் said...

நேரடியான, எளிமையான, அருமையான பதில்கள் பாலாசி.

தாராபுரத்தான் said...

உங்க நிழலில் இளைப்பாறும் பறவையாக நான்..நன்றிங்க தம்பீ.

க.பாலாசி said...

நன்றி r.v.saravanan
நன்றி நியோ
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி T.V.ராதாகிருஷ்ணன் அய்யா
நன்றி தமிழ் உதயம்
நன்றிங்க தலைவரே கார்த்திக்
நன்றி Starjan ( ஸ்டார்ஜன் ) நன்றி அன்பரசன்
நன்றிங்க பத்மா
நன்றி இராமசாமி கண்ணண்
(கவிதைதானே... எழுதிட்டாப்போச்சு)
நன்றி சி. கருணாகரசு
நன்றி Ananthi
நன்றி ஈரோடு கதிர் அய்யா
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி கலகலப்ரியா
நன்றி அக்பர்
நன்றி பிரவின்குமார்
நன்றி முரளிகுமார் பத்மநாபன்
நன்றி V.Radhakrishnan

க.பாலாசி said...

நன்றிங்க ஆதிமூலகிருஷ்ணன்
(முதல் வருகைக்கும்)
நன்றி பிரபாகர் அண்ணா
நன்றி அம்பிகா
நன்றி சீமான்கனி
(அப்டில்லாம் இல்லைங்க..வருகிறேன்)
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி புலவன் புலிகேசி
நன்றி பனித்துளி சங்கர்
நன்றி ஹேமா
நன்றி காமராஜ் அய்யா
(மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் மார்க்கமாக காரைக்கால் செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும்)
நன்றி Cable Sankar
நன்றி பூங்குழலி
நன்றி Karthick Chidambaram
நன்றி Mahi_Granny
நன்றி ரோகிணி அக்கா
நன்றி (ஆடுமாடு) அய்யா
நன்றி சே.குமார்
நன்றி க‌ரிச‌ல்கார‌ன்
நன்றி ஜெரி ஈசானந்தன் அய்யா
நன்றி பா.ராஜாராம் அய்யா
நன்றி தாராபுரத்தான் அய்யா
(உங்கள் நிழல்தான் எனக்கு வேண்டும்)

திவ்யாஹரி said...

நல்ல பகிர்வு பாலாசி..

ஜெய்லானி said...

உண்மையான பதிலகள்..!!

ரோஸ்விக் said...

கலக்கல் பாலாசி. அருமை. வாழ்த்துகள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்கள் மனதையும் எண்ணத்தையும் எங்களுடன் பகிர்ந்துக்கொண்டமைக்கு என் நன்றிகளும்...

அதனை படிக்கின்ற சமயம் மனதில் ஒருவித மகிழ்ச்சியும் உண்டானது...

வாழ்த்துகள் நண்பா.... உங்கள் பயணம், பதிவர் உலகத்திலும், நடைமுறை வாழ்விலும் சிறந்திட...

க.பாலாசி said...

நன்றி திவ்யாஹரி
நன்றி ஜெய்லானி
நன்றி ரோஸ்விக்
நன்றி தஞ்சை.வாசன்

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல தொடர் பதிவு

Athiban said...

அருமையான பதிவு. இந்த பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது..

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO