க.பாலாசி: எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...

Wednesday, August 18, 2010

எதோ வீ.ஏ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல...

‘எய்யா எதோ வீ.ஓ-வுக்கு ஆளு எடுக்கறாங்களாம்ல நீ ஃபாம் அனுப்பிட்டியா’ன்னு எப்பாரு கேட்கும்போது ‘இல்ல’ன்னு சொல்லித்தொலைச்சிட்டேன். ஃபோன்லயே விட்டாரு பாருங்க டோஸு ‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு. பெத்த மனுஷன் கத்தினா நல்லதுக்காதான இருக்கும். ஏழு கழுத வயசாயும் இன்னும் நமக்கிந்த புத்தி வரமாட்டுதேன்னு போஸ்டாபிஸ்க்கு போனாத்தான் தெரியுது, தலையில ஒட்டு முடிகூட இல்லாத கெழங்கட்டைகள்லாம் அவத்தால குத்தவச்சிருக்கறது.

வந்துதே எனக்கு வீரம், அப்பிளிகேஷன் வாங்கலாம்னு போனா ஸ்டாக் இல்லயாம். ஒருபக்கத்தால ‘அவைலபில்‘ன்னு நோட்டீஸூ, இன்னொரு பக்கத்தால அவுட் ஆஃப் ஸ்டாக்குன்னு.





ஒரு வழியா நண்பருகிட்ட வாங்கி ஃபில் பண்ணி போஸ்ட் பண்ணப்போனா ‘கொல்’லுன்னு ஒரே கூட்டம். உள்ளப்போனொன்னே ஒரு செம ஃபிகர்தான் கண்ணுல பட்டுது. ரொம்ப நேரமா அந்த க்யூவுலேயே நின்னுகிட்டிருந்தேன். போஸ்ட் மாஸ்டர் கிட்டத்தால போனப்பதான் தெரிஞ்சிது நான் நிக்கவேண்டியது அடுத்த க்யூன்னு. கொஞ்சநேரத்துக்கெல்லாம் ‘அம்மே’ன்னு ஒருப்பயபுள்ள வந்து அந்த ஃபிகர் கால கட்டிப்புடிச்சிது. அடக்கருமமே...நேத்து புள்ளபெத்தது, நாளைக்கு பெக்கப்போறதுலேர்ந்து நிக்குதுங்க. அதுங்களுக்கு அடுத்தால க்யூல புருஷனுங்களும் ஒரு கேரி பேக்கோட நிக்கிறாங்க. இந்த புள்ளையாண்டானுங்களுக்கு என்னா நம்பிக்க பாருங்க. எதோ காசு குடுத்தாதான் இந்த வேலையெல்லாம் கெடைக்கும்னு பேச்சுப்போக்குல சொல்லிக்கிட்டு திரிஞ்சதெல்லாம் சந்தடிச்சாக்குல அப்ளை பண்ணிட்டு வெளியில வருதுக. அதுசரி நம்பிக்கத்தான வாழ்க்கையே.

அந்த குண்டம்மா ஃபிரியட்ல கடைசிகாலத்துலதான் TNPSC-ய ஓப்பன் பண்ணுச்சு. எதோவொரு நம்பிக்கையில நானும் கடக்கு கழுதன்னு எக்ஸாம் எழுதுனேன். அதோட அந்தம்மா ஆட்டம் காலி. இப்பயும் அதே நம்பிக்கையிலத்தான் எழுதப்போறேன்.. பாப்போம்..



போஸ்ட் ஆபிஸ் வாசல்தாங்க


ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஃபில் பண்ணவேண்டியத, ஒருநாளைக்கு முன்னாடிதான் பண்ணணும்னு விதி போல..


தோ பாருங்க இவரும்தான்


கடைசியா கண்ணாமுழி தெரியற மாதிரி ஒருத்தன் நிக்ரானே, அவன எவத்தையோ பாத்த மாதிரி தெரியுது...


ம்க்கும்... எந்த புள்ளைய பெத்ததுக்காக இந்த நெலமயோ தெரியல



வெய்யலுதான். என்னா பண்றது. வயிறு காயுதுல்ல. இந்த சீஸன்ல விய்க்கலன்னா எப்ப விய்க்க முடியும்.




உள்ளபோன அம்மாக்காக வெயிட்டிங்...



எதோ சீரியஸான டிஸ்கஸன் போலருக்கு




பேரெல்லாம் நல்லாத்தான் வச்சிருக்காங்க.. ஒரு நல்ல மனுஷங்க பேர விடுறதில்ல..


இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல


என்னதான் காமடி பண்ணினாலும் அரசாங்க வேலைக்கு எளசுங்கள்ட கிராக்கி அதிகம்தான். நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க. என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.

சும்மாவாச்சொன்னாங்க ‘எலிக்கு திண்டாட்டம், பூனைக்கு கொண்டாட்டம்’னு..







40 comments:

vasu balaji said...

/‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு./

அப்ப 25 காசு ஆட்டைய போட்டதுக்கே அப்புடி பனிஷ்மெண்ட் குடுக்கற மனுசனாச்சே சூதானமா இருக்க வேணாம்.

இந்த இடுகையப் படிச்சா உன்கதி என்ன:))

தேவன் மாயம் said...

வி.ஏ.ஓ பர்ச்சைக்கு பிட்னஸ் சர்டிபிகேட் குடுத்து மாளலை பாலாஜி!

ஈரோடு கதிர் said...

யெய்யா..

நீ பிட்னஸ் சர்டிபிக்கேட் வாங்கலையா

மவனே... உன்னோட ஒடம்புக்கு யாராவது பிட்னஸ் சர்டிபிக்கெட் குடுக்கட்டும்...

அப்புறம் குழுமம் சார்பா அந்த மருத்துவரோட ஊழலை கண்டிச்சு போராட்டம் நடத்துறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

வெட்டி ஆபிஸர் வேலைக்கு இப்புட்டு டிமாண்டா?

சரி....வாழ்த்த்க்கள் .....நல்லா இருங்கப்பு

நசரேயன் said...

ம்ம்ம்

கலகலப்ரியா said...

:)).. சூப்பரப்பு... படங்கள் செம.. (இடுகை போட மேட்டர் கிடைக்கும்னே போறதாக்கும்..)

சிநேகிதன் அக்பர் said...

இப்படி வேற நடக்குதா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்.. இணையம், பொட்டிதட்டிகள், வெளிநாடு எல்லாத்தையும் விட வெளியேயும் நிறைய விசயம் இருக்குன்னு தெரியுது.

கலக்கலான பஞ்ச்களுடன் நல்ல தொகுப்பு பாலாசி.

Chitra said...

என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.


..... உண்மை நிலை அதுதான். நிஜம், மனதை சுடுகிறது.

சீமான்கனி said...

//நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க.//

ஆமாம் பாலாசி கடைசில அதான் நடக்கும்...பிட்னஸ் சர்டிபிக்கேட்டா ஆமாம் நிச்சயமா தேவை பாலாசி அதுல கொஞ்சம் கவனமா இருங்கோ...நான் வாறேன்....

சத்ரியன் said...

//ஏழு கழுத வயசாயும் இன்னும் நமக்கிந்த புத்தி வரமாட்டுதேன்னு..//

அப்பு,

“ நமக்கிந்த” அப்பிடின்னு பொத்தாம் பொதுவா எழுதுற வேலையெல்லாம் வெச்சிக்கப்படாது. சொல்லிட்டேன்.

இதுக்கும் மேல அடங்கலன்னா,

ஈரோடு குழுமத்துல புகார் செய்யவேண்டியதிருக்கும்.

சத்ரியன் said...

//உள்ளப்போனொன்னே ஒரு செம ஃபிகர்தான் கண்ணுல பட்டுது. ரொம்ப நேரமா அந்த க்யூவுலேயே நின்னுகிட்டிருந்தேன். போஸ்ட் மாஸ்டர் கிட்டத்தால போனப்பதான் தெரிஞ்சிது நான் நிக்கவேண்டியது அடுத்த க்யூன்னு. //

உங்க பகுமானம்... என்னத்தச் சொல்ல?

தாராபுரத்தான் said...

அட..நம்மை மாதிரி ஆளுகளையும் மதித்து எப்படி புல் அப் பண்ணுவது.. என கேட்பவருக்களுக்கு....நல்ல அனுபவம்போங்க..

சத்ரியன் said...

அந்த குண்டம்மா ஃபிரியட்ல கடைசிகாலத்துலதான் TNPSC-ய ஓப்பன் பண்ணுச்சு. எதோவொரு நம்பிக்கையில நானும் கடக்கு கழுதன்னு எக்ஸாம் எழுதுனேன். அதோட அந்தம்மா ஆட்டம் காலி. இப்பயும் அதே நம்பிக்கையிலத்தான் எழுதப்போறேன்..//

அப்படின்னா.... நீங்க வி.ஏ.ஓ எக்ஸாம் எழுதந்துமே... கெழட்டய்யா ஆட்டம் காலிதானா? ரைட்டு.

சத்ரியன் said...

//கடைசியா கண்ணாமுழி தெரியற மாதிரி ஒருத்தன் நிக்ரானே, அவன எவத்தையோ பாத்த மாதிரி தெரியுது...//

தெரிஞ்சா செரிதான்.

பழமைபேசி said...

//நசரேயன் said...
ம்ம்ம்
//

இவர் ஏங்க வீடு வீடாப் போயி முனகிட்டுக் கெடக்காரு??

a said...

//
பழமைபேசி said...
//நசரேயன் said...
ம்ம்ம்
//

இவர் ஏங்க வீடு வீடாப் போயி முனகிட்டுக் கெடக்காரு??
//
நா கேக்களாமுன்னு இருந்தேன்... நீங்க கேட்டுட்டீங்க...

yeskha said...

அப்டியே சேலத்து பக்கமும் வந்து பாருங்க. நானு மெரண்டுட்டேன் போஸ்ட் ஆபீஸூல இருக்குற கூட்டத்தப் பாத்து. ஏதோ பயபுள்ளைக பக்கத்துல இருக்குற மாரியாத்தா கோயிலு நோம்பிக்கு நிக்கிற கியூவாட்டருக்கே நெனச்சா வி.ஏ.ஓ மேட்ருனு சொல்றாய்ங்க.. லட்சக்கணக்குல குவியுதாமுல்ல அப்ளிகேசனு.... (ஒரு குரூப்புட்ட கேட்டேன், ஏப்பா, இப்பதான் கவருமெண்டு வேலைக்கு பின்சின் தர மாட்டாய்களே, அப்பறமும் ஏன் இப்டினு. "கவரு" கெடைக்குமுல்ல... அது எப்பயும் இருக்குற மேட்டராச்சே, பின்சின உடுண்ணே.. ங்குறாய்ங்க)

கண்ணகி said...

ஹ...ஹா.....எங்கபோனாலும் இடக்குதான்...அதிக நையாண்டி உடம்புக்கு ஆகாது...பார்த்து இருங்க...

முனைவர் இரா.குணசீலன் said...

நாரப்பயலுக அதையும் காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க..


அட ஆமா நண்பா.

ALHABSHIEST said...

"இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல"
இது எங்க விண்ணப்பம் கொடுத்து எவ்வளவு காசு கொடுத்து இந்த வேலைக்கு சேர்ந்துச்சுனு யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்

அன்புடன் நான் said...

அப்பாடி.... ஒரே பதிவுல ... நகைச்சுவை, சோகம்,இயலாமை, வறுமை,தன்னம்பிக்கை,நம்பிக்கை,ஆசை,இப்படி கலந்துகட்டி... படங்களோட அருமையா தந்திருக்கிங்க.

அன்புடன் நான் said...

ஈரோடு கதிர் said...

யெய்யா..

நீ பிட்னஸ் சர்டிபிக்கேட் வாங்கலையா

மவனே... உன்னோட ஒடம்புக்கு யாராவது பிட்னஸ் சர்டிபிக்கெட் குடுக்கட்டும்...

அப்புறம் குழுமம் சார்பா அந்த மருத்துவரோட ஊழலை கண்டிச்சு போராட்டம் நடத்துறேன்//

விடுங்க பாலாசி.... கதிர்அண்ணன் பாப்பாவ கூட்டிக்கிட்டு ஏதாவது சான்றிதழ் வாங்க உங்ககிட்டதான் வந்தாகனும்.

அன்புடன் நான் said...

"இதுக்கு ஒண்ணும் சொல்ல தெரியல"
நான் சொல்லட்டுமா?

விண்ணப்பம் ஏற்றி வந்த வண்டி மாடு.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தேவன் மாயம் said
//வி.ஏ.ஓ பர்ச்சைக்கு பிட்னஸ் சர்டிபிகேட் குடுத்து மாளலை பாலாஜி!//
அப்படியே நம்ம பயபுள்ளைக்கும் ஒரு சர்டிபிகட் குடுத்துடுங்க டாக்டர்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தேவன் மாயம் said
//வி.ஏ.ஓ பர்ச்சைக்கு பிட்னஸ் சர்டிபிகேட் குடுத்து மாளலை பாலாஜி!//
அப்படியே நம்ம பயபுள்ளைக்கும் ஒரு சர்டிபிகட் குடுத்துடுங்க டாக்டர்

r.v.saravanan said...

காச வாங்கிட்டு யாராருக்கோ பட்டாப்போட்டு குடுத்திர்ரானுங்க. என்னதான் அரசாங்கத்தோட தகுடுதித்தம் தெரிஞ்சாலும் எதோவொரு நம்பிக்கைதான் இவ்ளோ அலமலப்புக்கும் காரணம்.


கண்டிப்பாக பாலாசி

படங்கள் தொகுப்பும் கமெண்டும் அருமை

ஹேமா said...

பூனைகுக் கொண்டாட்டம்...அது வாசிக்கிற நாங்க
எலிக்குத் திண்டாட்டம்....அது பாலாஜி நீங்க !

புலவன் புலிகேசி said...

/‘அந்தப்பய மொவனே, இந்தப்பய மொவனே’ன்னு பாதி அவரையே திட்டிட்டு என்னையும் கொஞ்சமா கொதறி வச்சாரு./

நல்ல காமெடி தல. அப்பறம் நல்ல பதிவும்....

சு.சிவக்குமார். said...

ஹலோ பாலாசி..ஒரு சப்ப மேட்டரை இவ்ளோ நல்லா எழுதிப்புட்டு அன்னிக்கு கேட்டதுக்கு படிக்கிறதோட சரின்னு சொல்லீட்டிங்களே.....ஒ..இதான் நிறைகுடம் தளும்பாதுன்றதோ...

அகல்விளக்கு said...

அட
அட
அட....

சேம் பிளட்டுண்ணா....

நானும் அதே போஸ்ட் ஆபிஸ் கியூவுலதான் அதுக்கு முந்தின நாள் நின்னுகிட்டு இருந்தேன்...

:)
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....

பனித்துளி சங்கர் said...

அங்கு நடந்ததை மிகவும் நேர்த்தியா படம் பிடித்துக் காட்டி இருக்கிறது உங்களின் எழுத்து நடையும் புகைப்படங்களும் . இந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கிருந்துக் கிடைத்தது !? பகிர்வுக்கு நன்றி தல

sakthi said...

ரொம்ப நொந்திருப்பீங்க போல

படங்களில் காத்திருப்பின் வலி தெரிகின்றது பாலாசி

கமலேஷ் said...

நண்பரே...நீங்க எடுதுருக்கிற புகை படங்களையும், நடக்கும் நிகழ்வை கவனிக்கும் போது..இதையே ஒரு குறும்படமா பண்ணலாம் போல இருக்கு, இந்திய பெருமைய பறைசாற்ற மாதிரி இருக்கும்...

தப்பா எடுதுக்கதீங்க நண்பா..ஏனோ இப்படி எனக்கு கத்தனும்னு தோணுது.

மன்னிக்கணும்...

கோவிந்தா ....கோவிந்தா.....

Anonymous said...

காலேஜ் படிக்கும்போது இப்படி நாலு எக்ஸாம் எழுதினா ஒண்ணாவது க்ளிக் ஆகும்னு எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன். வேலையும் கிடைச்சுது. ஆனா அப்பறம் .......

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அப்ப 25 காசு ஆட்டைய போட்டதுக்கே அப்புடி பனிஷ்மெண்ட் குடுக்கற மனுசனாச்சே சூதானமா இருக்க வேணாம்.
இந்த இடுகையப் படிச்சா உன்கதி என்ன:))//

எல்லாம் படிக்கமாட்டாருங்கற தைரியம்தான்... நன்றிங்க..

//Blogger தேவன் மாயம் said...
வி.ஏ.ஓ பர்ச்சைக்கு பிட்னஸ் சர்டிபிகேட் குடுத்து மாளலை பாலாஜி!//

அதுசரி... குடுங்க, குடுங்க.. நன்றி..

//Blogger ஈரோடு கதிர் said...
யெய்யா..
நீ பிட்னஸ் சர்டிபிக்கேட் வாங்கலையா
மவனே... உன்னோட ஒடம்புக்கு யாராவது பிட்னஸ் சர்டிபிக்கெட் குடுக்கட்டும்...
அப்புறம் குழுமம் சார்பா அந்த மருத்துவரோட ஊழலை கண்டிச்சு போராட்டம் நடத்துறேன்//

இப்டில்லாம் நடக்கும்னு தெரிஞ்சிதான் நான் ஃபிட்னஸ் வாங்கல... நன்றிங்க..

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
வெட்டி ஆபிஸர் வேலைக்கு இப்புட்டு டிமாண்டா?
சரி....வாழ்த்த்க்கள் .....நல்லா இருங்கப்பு//

அட ஆமங்க... நன்றி...

//Blogger நசரேயன் said...
ம்ம்ம்//

ம்ம்ம்ம்ம்ம்..... நன்றி...

//Blogger கலகலப்ரியா said...
:)).. சூப்பரப்பு... படங்கள் செம.. (இடுகை போட மேட்டர் கிடைக்கும்னே போறதாக்கும்..)//

இந்த படங்களே செமயா? போனப்பெறவுதான் இப்படி ஒண்ணு போடனும்னு தோணுச்சுங்க... நன்றிங்கா..

//Blogger சிநேகிதன் அக்பர் said...
இப்படி வேற நடக்குதா.//

ஆமங்க அக்பர்... நன்றி..

//Blogger ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...
ம்ம்.. இணையம், பொட்டிதட்டிகள், வெளிநாடு எல்லாத்தையும் விட வெளியேயும் நிறைய விசயம் இருக்குன்னு தெரியுது.
கலக்கலான பஞ்ச்களுடன் நல்ல தொகுப்பு பாலாசி.//

ஆமங்க செந்தில்... நன்றியும்..

//Blogger Chitra said...
..... உண்மை நிலை அதுதான். நிஜம், மனதை சுடுகிறது.//

சரிதான்... நன்றிங்க சித்ரா...

க.பாலாசி said...

//சீமான்கனி said...
ஆமாம் பாலாசி கடைசில அதான் நடக்கும்...பிட்னஸ் சர்டிபிக்கேட்டா ஆமாம் நிச்சயமா தேவை பாலாசி அதுல கொஞ்சம் கவனமா இருங்கோ...நான் வாறேன்....//

இனிமேலாவது கவனமா இருக்கணுங்க நண்பா... நன்றி...

//Blogger சத்ரியன் said...
அப்பு,
“ நமக்கிந்த” அப்பிடின்னு பொத்தாம் பொதுவா எழுதுற வேலையெல்லாம் வெச்சிக்கப்படாது. சொல்லிட்டேன்.
இதுக்கும் மேல அடங்கலன்னா,
ஈரோடு குழுமத்துல புகார் செய்யவேண்டியதிருக்கும்.//

ஹி..ஹி...நாம எல்லாருமே அப்டித்தானங்கப்பு...

//உங்க பகுமானம்... என்னத்தச் சொல்ல?//

பகுமானமா? அப்டின்னா?

//Blogger தாராபுரத்தான் said...
அட..நம்மை மாதிரி ஆளுகளையும் மதித்து எப்படி புல் அப் பண்ணுவது.. என கேட்பவருக்களுக்கு....நல்ல அனுபவம்போங்க..//

ஓ... நன்றிங்க...

// அப்படின்னா.... நீங்க வி.ஏ.ஓ எக்ஸாம் எழுதந்துமே... கெழட்டய்யா ஆட்டம் காலிதானா? ரைட்டு.//

அப்டித்தான் நெனைக்கிறேன்...பார்ப்போம்... நன்றிங்க..

// தெரிஞ்சா செரிதான்.//

ஹி..ஹி..

//Blogger பழமைபேசி said...
இவர் ஏங்க வீடு வீடாப் போயி முனகிட்டுக் கெடக்காரு??//

அதயேன் கேக்குறீங்க... நன்றிங்க..

//Blogger வழிப்போக்கன் - யோகேஷ் said...
நா கேக்களாமுன்னு இருந்தேன்... நீங்க கேட்டுட்டீங்க...//

சரிதான்... நன்றி...

//Blogger yeskha said...
அப்டியே சேலத்து பக்கமும் வந்து பாருங்க. நானு மெரண்டுட்டேன் போஸ்ட் ஆபீஸூல இருக்குற கூட்டத்தப் பாத்து. ஏதோ பயபுள்ளைக பக்கத்துல இருக்குற மாரியாத்தா கோயிலு நோம்பிக்கு நிக்கிற கியூவாட்டருக்கே நெனச்சா வி.ஏ.ஓ மேட்ருனு சொல்றாய்ங்க.. லட்சக்கணக்குல குவியுதாமுல்ல அப்ளிகேசனு.... (ஒரு குரூப்புட்ட கேட்டேன், ஏப்பா, இப்பதான் கவருமெண்டு வேலைக்கு பின்சின் தர மாட்டாய்களே, அப்பறமும் ஏன் இப்டினு. "கவரு" கெடைக்குமுல்ல... அது எப்பயும் இருக்குற மேட்டராச்சே, பின்சின உடுண்ணே.. ங்குறாய்ங்க)//

ஓ...இப்படியும் இருக்கா... நல்லது... நன்றிங்க..

//Blogger கண்ணகி said...
ஹ...ஹா.....எங்கபோனாலும் இடக்குதான்...அதிக நையாண்டி உடம்புக்கு ஆகாது...பார்த்து இருங்க...//

ஹி..ஹி..நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும்ங்க... நன்றிங்கா..

//Blogger முனைவர்.இரா.குணசீலன் said...
அட ஆமா நண்பா.//

நன்றிங்க..

க.பாலாசி said...

//Siva said...
இது எங்க விண்ணப்பம் கொடுத்து எவ்வளவு காசு கொடுத்து இந்த வேலைக்கு சேர்ந்துச்சுனு யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்//

அதானே... நன்றிங்க சிவா..

//Blogger சி. கருணாகரசு said...
அப்பாடி.... ஒரே பதிவுல ... நகைச்சுவை, சோகம்,இயலாமை, வறுமை,தன்னம்பிக்கை,நம்பிக்கை,ஆசை,இப்படி கலந்துகட்டி... படங்களோட அருமையா தந்திருக்கிங்க.//

நன்றிங்க கருணாகரசு..

// விடுங்க பாலாசி.... கதிர்அண்ணன் பாப்பாவ கூட்டிக்கிட்டு ஏதாவது சான்றிதழ் வாங்க உங்ககிட்டதான் வந்தாகனும்.//

ஆமா..ஆமா..வரட்டும் பாத்துக்கிறேன்..

//Blogger சி. கருணாகரசு said...
நான் சொல்லட்டுமா?
விண்ணப்பம் ஏற்றி வந்த வண்டி மாடு.//

ஓ..இருக்கும்..இருக்கும்...

//Blogger மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
அப்படியே நம்ம பயபுள்ளைக்கும் ஒரு சர்டிபிகட் குடுத்துடுங்க டாக்டர்//

எனக்கு வேண்டாங்க... நான் அனுப்பிட்டேன்... நன்றிங்க...

//Blogger r.v.saravanan said...
கண்டிப்பாக பாலாசி
படங்கள் தொகுப்பும் கமெண்டும் அருமை//

நன்றிங்க சரவணன்...

//Blogger ஹேமா said...
பூனைகுக் கொண்டாட்டம்...அது வாசிக்கிற நாங்க
எலிக்குத் திண்டாட்டம்....அது பாலாஜி நீங்க !//

சரியாச்சொன்னீங்க ஹேமா... நன்றி...

//Blogger புலவன் புலிகேசி said...
நல்ல காமெடி தல. அப்பறம் நல்ல பதிவும்....//

நன்றிங்க நண்பரே...

க.பாலாசி said...

// சு.சிவக்குமார். said...
ஹலோ பாலாசி..ஒரு சப்ப மேட்டரை இவ்ளோ நல்லா எழுதிப்புட்டு அன்னிக்கு கேட்டதுக்கு படிக்கிறதோட சரின்னு சொல்லீட்டிங்களே.....ஒ..இதான் நிறைகுடம் தளும்பாதுன்றதோ...//

அட..நீங்கவேற...போறபோக்குல கொட்டுறதுங்க இதெல்லாம்... இதப்போயீ... நன்றிங்க சிவக்குமார்..

//Blogger அகல்விளக்கு said...
அட
அட
அட....
சேம் பிளட்டுண்ணா....
நானும் அதே போஸ்ட் ஆபிஸ் கியூவுலதான் அதுக்கு முந்தின நாள் நின்னுகிட்டு இருந்தேன்...
:)
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா....//

அப்டியா...சரி..சரி...நன்றி ராசா..

//Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அங்கு நடந்ததை மிகவும் நேர்த்தியா படம் பிடித்துக் காட்டி இருக்கிறது உங்களின் எழுத்து நடையும் புகைப்படங்களும் . இந்த புகைப்படங்கள் எல்லாம் எங்கிருந்துக் கிடைத்தது !? பகிர்வுக்கு நன்றி தல//

நன்றிங்க சங்கர்...

//Blogger sakthi said...
ரொம்ப நொந்திருப்பீங்க போல
படங்களில் காத்திருப்பின் வலி தெரிகின்றது பாலாசி//

ஆமங்க சக்தி... நன்றி...

//Blogger கமலேஷ் said...
நண்பரே...நீங்க எடுதுருக்கிற புகை படங்களையும், நடக்கும் நிகழ்வை கவனிக்கும் போது..இதையே ஒரு குறும்படமா பண்ணலாம் போல இருக்கு, இந்திய பெருமைய பறைசாற்ற மாதிரி இருக்கும்...
தப்பா எடுதுக்கதீங்க நண்பா..ஏனோ இப்படி எனக்கு கத்தனும்னு தோணுது.
மன்னிக்கணும்...
கோவிந்தா ....கோவிந்தா.....//

நானும் சொல்லிக்கிறேன்... கோவிந்தா..கோவிந்தா... நன்றிங்க கமலேஷ்..

//Blogger சின்ன அம்மிணி said...
காலேஜ் படிக்கும்போது இப்படி நாலு எக்ஸாம் எழுதினா ஒண்ணாவது க்ளிக் ஆகும்னு எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சேன். வேலையும் கிடைச்சுது. ஆனா அப்பறம் .......//

அப்டியா... அதான் வேலைகிடைச்சிடுச்சே அப்பறமென்ன.. நன்றிங்க...

'பரிவை' சே.குமார் said...

படங்களும் படங்களின் கீழ் போட்ட வரிகளும் அருமை.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO