காதுல கிடக்கிற
குண்டுமணி சைஸ் தோடும்
கையில இந்த
அலுமினிய வளையலும் போதும்
கழுத்துக்கு மட்டும் எப்போதும்போல
சந்திராவோட முருக்கு செயின்
ஏன்னா..
அதுதான் எடுப்பாயிருக்கும்.
அவளும்
அதே கல்யாணத்துக்குப்போனா
இருக்கவே இருக்கு
சரசோட இன்னொரு சீரகச் சங்கிலி
ஒரே தெருவுல விஷேசம்னா
வேறவழியில்ல..
கழுத்தொட்டிக் கருத்துப்போன
சிதம்பரம் கவரிங்‘தான்
கிராக்கி பண்ற
சகுந்தலாகிட்டயும் கல்யாணிகிட்டவும்
எப்பவுமே கேட்கிறதில்ல
நமக்குன்னு
ஒரு கௌரவம் இருக்குல்ல.
••••••••••••••••••••
பூன் கட்டின மூங்கித்தடியும்
ஒரு கம்பி விட்டுப்போன குடையுந்தான்
தர்மலிங்க தாத்தாவோட அடையாளம்
ஒரு கல்யாணம் காட்சி
நம்ம திம்மன்னா
சும்மா கூப்பிட்டாப்போதும்
எட்டு மொழ வேட்டியும்,
காசித்துண்டோடையும் வந்திடுவாரு
வாசல்ல நிக்கிறவன்
வாங்கன்னு
கூப்பிடலன்னா அவ்ளோத்தான்
மொய்ய எழுதிட்டு
வீராப்பா போயிடுவாரு
அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.
கௌரவம் - அ
.
Friday, November 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.
ரெண்டுமே அருமையா.. யதார்த்தமாக இருக்கிறது...
கௌரவர்கள்!!! ;-)
மிக அருமை.
கெளரவம் -ஒள வரை வாசிக்கக் காத்திருக்கிறோம். தொடருங்கள் பாலாசி.
கவிதை நன்றாக இருக்கின்றது
கௌரவம்.., அருமை.
வாழ்கிறோம் என்கிற அடையாளமே இந்த கௌரவம்தான் !
வெள்ளிக்கு வெள்ளிதான் பதிவா பாலாஜி !
//அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.//
நச் வரிகள் இளவல். எளிமையா அழகா இருக்கு!...
பிரபாகர்...
அருமை. பாராட்டுக்கள்!
நல்லாருக்கு பாலாசி!
தொடர் - தொரடட்டும்!
/எட்டு மொழ வேட்டியும்,
காசித்துண்டோடையும் வந்திடுவாரு/
ம்ம். இதுல இருக்குய்யா பெருசோட சுயமரியாதை. சொல்லாம நிறைய விஷயம் சொல்ல ஆரம்பிச்சிட்ட..சபாஷ். முதல் கவிதை மட்டும் சோடையா என்ன?இன்னொரு வெள்ளி..இன்னொரு வாழ்க்கை..ம்ம்.
நல்லா இருக்கு பாலாசி
அருமைங்க... ரெண்டும் அருமை....
இன்னும் கிராமங்களில் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...
இரண்டு கருப்பு வெள்ளை ஓவியம்.உணர்வுகளைச்சொல்லும் ஓவியம். பாலா.பொறுத்திருந்து நச்சுன்னு பொட்டுல போடுறீங்களே.அசத்தலய்யா.
இயல்பு மனிதர்களின் ஆற்றாமை.............
எங்கள் தெரு மனிதர்களை கவிதையில் பார்க்கிறேன்..
அருமை பாலாசி
ஒரு கேரக்டரையே ஒரு குட்டி கவிதையாக்கி விட பாலாசியால் தான் முடியும்.......அருமை பாலாசி.
வட்டார வழக்கில் அசத்தறே பாலாசி
ரெண்டுமே நல்லாயிருக்கு!!!
இப்பத்தானா அ, ஆ?
அப்ப எப்போ வரும் ஒள, ஃக்கெல்லாம்?
எழுத்தாளர் நிறைவுக்கு வந்து அடுத்து கவிப்பேரரசுவா? நிறைவாகத்தான் இருக்கிறது. அடுத்து ஆ என்ன நண்பா?
எழுத்தாளர் நிறைவுக்கு வந்து அடுத்து கவிப்பேரரசுவா? நிறைவாகத்தான் இருக்கிறது. அடுத்து ஆ என்ன நண்பா?
எழுத்தாளர் நிறைவுக்கு வந்து அடுத்து கவிப்பேரரசுவா? நிறைவாகத்தான் இருக்கிறது. அடுத்து ஆ என்ன நண்பா?
ரெண்டும் அருமை
ம்ம்... நல்லாச் சொல்றாப்பு...
முதலாவது வறட்டு கெளரவம் என்று சொல்லாம்...
இரண்டாவது சுய கெளரவம்...
சொல்லால் சொல்லாத ஒன்றை செயலால் உயர்த்தி காட்டுவது கெளரவம்...
எழுத்தில் எடுத்துக்காட்டுகிறது... எங்கள் மனதில் உங்களுக்கென்று ஒரு கெளரவத்தை....
கெளரவம் தலை நிமிர்ந்து... வாழ்த்துகள்...
ரெண்டுமே அருமையா.. யதார்த்தமாக இருக்கிறது.
அழகு..அருமைங்க தம்பி.
மிக அருமையா இருக்கு..
ம்ம்ம்ம் நல்ல கௌரவம் தான்..
சிறு வயது ஊர் நினைவுகள் வருகிறது. அம்மா இதற்கென்றே தனியாக ஒரு செயின் வைத்திருப்பார்.
கவரிங் செயின்கள் வந்தபிறகு அதன் தேவை குறைந்துவிட்டது!! :-))))
கௌரவம்.. யதார்த்தம்.. பாலாசி.. அருமை..
யதார்த்தம் அண்ணா...
ரொம்ப நல்லா இருக்கு...
//வாசல்ல நிக்கிறவன்
வாங்கன்னு
கூப்பிடலன்னா அவ்ளோத்தான்
மொய்ய எழுதிட்டு
வீராப்பா போயிடுவாரு
அவர் கால்லதானயா செருப்பில்ல
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்//
அருமை நண்பரே,
யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது
தொடருங்கள்....
நன்றி
வாழ்க வளமுடன்
//வெறும்பய said...
கௌரவத்துக்கு என்ன குறைச்சல்.
ரெண்டுமே அருமையா.. யதார்த்தமாக இருக்கிறது...//
நன்றிங்க நண்பரே..
//Blogger RVS said...
கௌரவர்கள்!!! ;-)//
நன்றிங்க..
///Blogger ராமலக்ஷ்மி said...
மிக அருமை.
கெளரவம் -ஒள வரை வாசிக்கக் காத்திருக்கிறோம். தொடருங்கள் பாலாசி.//
நன்றிங்க
//Blogger KANA VARO said...
கவிதை நன்றாக இருக்கின்றது//
நன்றி KANA VARO
//Blogger அம்பிகா said...
கௌரவம்.., அருமை.//
நன்றிங்க அம்பிகா
//Blogger ஹேமா said...
வாழ்கிறோம் என்கிற அடையாளமே இந்த கௌரவம்தான் !
வெள்ளிக்கு வெள்ளிதான் பதிவா பாலாஜி !//
அப்டின்னு இல்லைங்க ஹேமா.. இருக்கலாம்... நன்றிங்க..
//Blogger பிரபாகர் said...
நச் வரிகள் இளவல். எளிமையா அழகா இருக்கு!...
பிரபாகர்...//
நன்றிங்கண்ணா..
//logger Chitra said...
அருமை. பாராட்டுக்கள்!//
நன்றிங்க சித்ரா..
//Blogger ஈரோடு கதிர் said...
நல்லாருக்கு பாலாசி!
தொடர் - தொரடட்டும்!//
நன்றிங்க
//Blogger வானம்பாடிகள் said...
ம்ம். இதுல இருக்குய்யா பெருசோட சுயமரியாதை. சொல்லாம நிறைய விஷயம் சொல்ல ஆரம்பிச்சிட்ட..சபாஷ். முதல் கவிதை மட்டும் சோடையா என்ன?இன்னொரு வெள்ளி..இன்னொரு வாழ்க்கை..ம்ம்.///
நன்றியோ நன்றி..
//Gopi Ramamoorthy said...
நல்லா இருக்கு பாலாசி//
நன்றிங்க ராமமூர்த்தி
//Blogger வினோ said...
அருமைங்க... ரெண்டும் அருமை....//
நன்றி வினோ
//Blogger கே.ஆர்.பி.செந்தில் said...
இன்னும் கிராமங்களில் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...//
ஆமங்க செந்தில்.. நன்றி.
//Blogger காமராஜ் said...
இரண்டு கருப்பு வெள்ளை ஓவியம்.உணர்வுகளைச்சொல்லும் ஓவியம். பாலா.பொறுத்திருந்து நச்சுன்னு பொட்டுல போடுறீங்களே.அசத்தலய்யா.//
நன்றிங்க அய்யா..
//Blogger வழிப்போக்கன் - யோகேஷ் said...
இயல்பு மனிதர்களின் ஆற்றாமை.............//
நன்றிங்க வழிப்போக்கன்
//Blogger Balaji saravana said...
எங்கள் தெரு மனிதர்களை கவிதையில் பார்க்கிறேன்..
அருமை பாலாசி//
நன்றிங்க பாலாஜி
//Blogger நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
ஒரு கேரக்டரையே ஒரு குட்டி கவிதையாக்கி விட பாலாசியால் தான் முடியும்.......அருமை பாலாசி.//
நன்றிங்க மேடம்..
//Blogger sakthi said...
வட்டார வழக்கில் அசத்தறே பாலாசி
ரெண்டுமே நல்லாயிருக்கு!!!//
நன்றியக்கா..
//முரளிகுமார் பத்மநாபன் said...
இப்பத்தானா அ, ஆ?
அப்ப எப்போ வரும் ஒள, ஃக்கெல்லாம்?//
வாங்க நண்பா.. போட்டிடலாம்..நன்றி..
//Blogger ஜோதிஜி said...
எழுத்தாளர் நிறைவுக்கு வந்து அடுத்து கவிப்பேரரசுவா? நிறைவாகத்தான் இருக்கிறது. அடுத்து ஆ என்ன நண்பா?//
நன்றிங்க ஜோதிஜி..
//Blogger r.v.saravanan said...
ரெண்டும் அருமை//
நன்றிங்க சரவணன்.
//Blogger கலகலப்ரியா said...
ம்ம்... நல்லாச் சொல்றாப்பு...//
நன்றிக்கோ..
//Blogger தஞ்சை.வாசன் said...
முதலாவது வறட்டு கெளரவம் என்று சொல்லாம்...
இரண்டாவது சுய கெளரவம்...
சொல்லால் சொல்லாத ஒன்றை செயலால் உயர்த்தி காட்டுவது கெளரவம்...
எழுத்தில் எடுத்துக்காட்டுகிறது... எங்கள் மனதில் உங்களுக்கென்று ஒரு கெளரவத்தை....
கெளரவம் தலை நிமிர்ந்து... வாழ்த்துகள்...//
அதேதாங்க வாசன். நன்றிங்க..
//Blogger சே.குமார் said...
ரெண்டுமே அருமையா.. யதார்த்தமாக இருக்கிறது.//
நன்றிங்க சே.குமார்..
//Blogger தாராபுரத்தான் said...
அழகு..அருமைங்க தம்பி.//
நன்றிங்க அய்யா..
//Blogger அரசன் said...
மிக அருமையா இருக்கு..
ம்ம்ம்ம் நல்ல கௌரவம் தான்..//
நன்றி அரசன்
//Blogger ஹுஸைனம்மா said...
சிறு வயது ஊர் நினைவுகள் வருகிறது. அம்மா இதற்கென்றே தனியாக ஒரு செயின் வைத்திருப்பார்.
கவரிங் செயின்கள் வந்தபிறகு அதன் தேவை குறைந்துவிட்டது!! :-))))//
வாங்க ஹுசைனம்மா நன்றி..
//Blogger தேனம்மை லெக்ஷ்மணன் said...
கௌரவம்.. யதார்த்தம்.. பாலாசி.. அருமை..//
நன்றிங்க தேனம்மை..
//Blogger அகல்விளக்கு said...
யதார்த்தம் அண்ணா...
ரொம்ப நல்லா இருக்கு...//
நன்றிங்க ராசா..
//Blogger மாணவன் said...
அருமை நண்பரே,
யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் உள்ளது
தொடருங்கள்....
நன்றி
வாழ்க வளமுடன்///
நன்றிங்க மாணவன்.
பாலா இதே படிக்காம விட்டுட்டேன் போல.வழக்கம் போல அருமை .இத்தகைய மக்களுடன் தான் இப்பொழுது அதிகம் புழங்குகிறேன் .
அத்தனையும் உண்மையான வரிகள் .எத்தனைப் பேர் இப்படி! ..நான் பள்ளிக்கு சென்ற ரிக்க்ஷாகார் நினைவுக்கு வருகிறார் ...ஒரு பதிவே எழுதலாம் .
நன்று பாலாஜி
Post a Comment