க.பாலாசி: வேறென்ன வேண்டும்

Wednesday, January 12, 2011

வேறென்ன வேண்டும்

.

கல்யாணிக்கு
ஒருகால் இல்லை

அக்கம்பக்க பிள்ளைகளுக்கு
அவள் அத்தையாகியிருந்தாள்

சிலர் பெரியம்மா பெரியம்மா என்பார்கள்
நானும்தான்...

செல்லையன் மட்டும்
அம்மா என்றுதான் கூப்பிடுவான்

எனக்குத்தெரிந்து
கல்யாணிதான் பலருக்கு

நேற்றுப்பிறந்த பொண்டு பொடிசுகளால்
ஆத்தாவும் ஆகிவிட்டாள்

வேறென்ன வேண்டும்
கல்யாணிக்கு கல்யாணம்தான் ஆகவில்லை.


.

28 comments:

ராமலக்ஷ்மி said...

மனம் தொட்ட நல்ல கவிதை. இப்படியான கல்யாணிகள் நாடெங்கிலும்.

Unknown said...

cliche

பழமைபேசி said...

touche

க ரா said...

arputham balaji :)

பத்மா said...

நல்லாயிருக்கு பாலா

Admin said...

அருமை நண்பரே!

உங்களது வலைப்பூ கூட பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.

அன்புடன் நான் said...

மனம் கனக்கும் கவிதை... மிக தெளிவான நடை பாராட்டுக்கள்... பாலாசி.

அன்புடன் நான் said...

க.பாலாசிக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

நல்லாவே இருக்கு பாலாசி - அவ்ங்க கல்யாணியாகவே இருக்கட்டும் - பல சொற்களீல் அழைக்கப்பட்டாலும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாசியின் முத்திரை... சிறப்பு.

vasu balaji said...

ம்ம். என்ன இப்ப ஒரு கால் மட்டும்தானே இல்லை. தாங்கி நிக்க எத்தனை தோள்கள் இருக்கு. அருமை.

ஈரோடு கதிர் said...

||வேறென்ன வேண்டும்||

ஒன்னும் வேண்டாம்
இப்பொதைக்கு இந்தக் கவிதை போதும்!

வினோ said...

கடைசி வரிகளில் வாழ்கிறது மனசு....

Unknown said...

அப்பப்பா. அமர்களமான வரிகள். அசத்துங்க.

settaikkaran said...

நெகிழ்ச்சி!

பவள சங்கரி said...

நல்ல கவிதை பாலாசி....

arasan said...

படித்து முடிக்கையில் மனம் கனத்துபோகிறது...

arasan said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அம்பிகா said...

\\ராமலக்ஷ்மி said...
மனம் தொட்ட நல்ல கவிதை. இப்படியான கல்யாணிகள் நாடெங்கிலும்.\\
:-)))

Mahi_Granny said...

அருமையான கவிதை பாலாசி

ஹேமா said...

நம் நாடுகளில் நிறையவே கல்யாணிகள் இப்படித்தான் பாலாஜி !

Anonymous said...

மனதை நெகிழச் செய்துவிட்டது பாலாசி...சிக்கனமாய் செதுக்கிய சின்னக் கவிதை அர்த்தம் பொதிந்ததாய்..

மா.குருபரன் said...

அருமையான கவிதை நண்பா

அகல்விளக்கு said...

touching lines....

'பரிவை' சே.குமார் said...

மனம் தொட்ட நல்ல கவிதை.

r.v.saravanan said...

மனம் கனக்கும் கவிதை பாராட்டுக்கள் பாலாசி.

பாலாசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

நன்றி ராமலஷ்மிக்கா
நன்றி முகிலன்
நன்றி பழமைபேசி
நன்றி இராமசாமி
நன்றி பத்மா மேடம்
நன்றி துயரி
நன்றி கருணாகரசு
நன்றி சீனா அய்யா
நன்றி செந்தில்வேலன்
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி ஈரோடு கதிர்
நன்றி வினோ
நன்றி சித்ராக்கா
நன்றி சேது
நன்றி சேட்டைக்காரன்
நன்றி நித்திலம் மேடம்
நன்றி அரசன்
நன்றி அம்பிகா
நன்றி Mahi_Granny அம்மா
நன்றி ஹேமா
நன்றி தமிழரசிக்கா
நன்றி மா.குருபரன்
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி சே.குமார்
நன்றி ஆர்.வி.சரவணன்.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப அருமையான கவிதை பாலாஜி.. வாழ்த்துகள்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO