க.பாலாசி: பவானி தேனீ...

Wednesday, October 28, 2009

பவானி தேனீ...


காலேஜ்ல படிக்கிறப்ப ஒருத்திய காதலிச்சேன். ஆதலினால் டெய்லியும் அவ டேபிள்ல (அவ போனதுக்கு அப்பறம்தான்) ஒரு கவிதன்னு எழுதி வைச்சிட்டு வருவேன். மறுநாள் போய் பாக்குறப்ப அது இருக்காது. ரொம்ப பாசமா அத பிளேடால சொரண்டி வைச்சிருப்பா. அதுக்கெல்லாம் சளைச்சவனில்லங்கற கணக்கா நானும் விடாம எழுதி வைச்சிகிட்டே இருந்தேன். அவளும் டெய்லியும் அழிச்சிட்டு போய்டுவா.


திடீர்னு ஒருநாள் அவ இடத்துல நான் எழுதின கவிதைக்கு பின்னூட்டம் போட்ட மாதிரி


பவானி தேனி

பாலாசி பண்ணி


- ன்னு எழுதியிருந்துச்சு (அவ்வ்வ்வ்...). நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. திடீர்னு இப்டி இருக்கே என்னடான்னு பார்த்தா அதுக்கு முதல் நாள் அவளோட அண்ணனுக்கு மாலைநேர வகுப்பு அதே கிளாஸ்ல நடந்திருக்கு. அதனாலத்தான் பாசமலர் அண்ணன் அன்ப பொழிஞ்சிருக்கார். அதுக்காகல்லாம் கவலப்படுறது நம்ம பரம்பரைக்கே பழக்கம் கெடையாதுல்ல. வழக்கம்போல வழுக்கத்தலயில எண்ண தடவுறமாதிரி அப்டியே போய்கிட்டிருந்துச்சு எதுக்குமே பிரையோசனமில்லாம.


கடைசியா நானும் மூணு வருசம் முடிச்சு நாலாவது வருசமும் பி.எஸ்.சிய படிச்சேன். அவ கரைட்டா மூணு வருசத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டு எம்.எஸ்.சிக்கு போயிட்டா. நான்தேன் நாசமாப்போனேன்.


அப்டி எழுதுன கவிதையில (நாமலே சொல்லிக்க வேண்டியதுதான்) ஒருசிலது கீழ தொங்கிகிட்டு இருக்கு (என்னோட பழைய டைரியில சுட்டது)



உன் கண்கள்

எழுதிய கவிதையில்

வளைத்துப்போடப்பட்ட

வார்த்தைகள் நான்.


******


காதல் மீன்கள்

உன் மனதில்

தூண்டிலுடன்

எத்தனை ஆண்களடி...



******


மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)

என்னை

மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)


******


நான் பிறந்தது

அமாவாசையாம்...

உண்மைதான்

நீ பிறக்கவில்லையே...


******


உன்

கொலுசொலியால்...

கூவ மறந்த

குயில் நான்.


******


உன் பின்

வருகையில்

காற்றினில் அசையும்

துப்பட்டாகூட சொல்கிறது

வா...வா...என்று..


******

(பேருந்தில்)

முன்னிருக்கையில்

அமராதே....

எதிர்வரும்

வாகனங்கள்

முத்தமிடப்போகிறது.


******


முல்லைக்கு

தேர் கொடுத்தானாம்

பாரி...

மன்னித்துவிடு...

உன்னை

பார்த்திருக்கமாட்டான்.


******

இப்பவும் புரியல...அவ அண்ணன் ஏன் அப்டி எழுதினான்னு. இது ஒன் சைடு...டபுள் சைடு ஒண்ணு இருக்கு (அது ஒரு பெரிய கத....)


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...




48 comments:

தமிழ் நாடன் said...

//மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)
என்னை
மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்) ///

ஆட்டம் முடியறதுக்கு முன்னாடியே உங்களுக்கு முடிவு தெரிஞ்சிருக்கே???!!!

எல்லாமே அருமை! நீங்க மயில கோட்டை விட்டதைத் தவிர!

பிரபாகர் said...

டைரிய இன்னும் புரட்டி நிறையா எழுதுங்க பாலாசி. ரொம்ப நல்லாருக்கு.

பிரபாகர்.

புலவன் புலிகேசி said...

//மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)
என்னை
மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)
//

கலக்கிட்டடா காப்பி.....
நல்லா இருக்கு பாலாஜி. நல்ல வேலை எனக்கு எவளும் மாட்டல..இல்லனா நானு வருஷம் படிச்சிருப்பேன்........

ஈரோடு கதிர் said...

//நாலாவது வருசமும் பி.எஸ்.சிய படிச்சேன். //
என்ன அவசரம் அதுக்குள்ளே

//இப்பவும் புரியல...அவ அண்ணன் ஏன் அப்டி எழுதினான்னு//

நல்ல வேளை உங்க ஒடம்ப பிரிக்கல இல்லை... அது போதும்ப

//நான் பிறந்தது
அமாவாசையாம்...
உண்மைதான்
நீ பிறக்கவில்லையே...
//

கவித... கவித....

கவிதைகள் நல்லாயிருக்கு பாலாஜி

கலகலப்ரியா said...

கவித கவித.... (ம்ம்.. இப்டி கவிதை பார்த்தா சொரண்டாம என்ன பண்ணுவா... ) ஜூட்..

கலகலப்ரியா said...

:o kathir.. neenga eppo idaila vantheenga.. =))

ஈரோடு கதிர் said...

//கலகலப்ரியா said...
கவித கவித.... (ம்ம்.. இப்டி கவிதை பார்த்தா சொரண்டாம என்ன பண்ணுவா... ) ஜூட்..//

ஆத்தாடி....

பாலாஜி பையன் 4 வருசம் படிச்சு எழுதுன கவிதையம்மா...

எதுக்கும் கவித....கவித... இருக்கட்டும்

ஹேமா said...

பாலாஜி அப்பவே இப்பிடித்தானா நீங்க !அவ அண்ணா உங்களை இப்பவரைக்கும் விட்டு வச்சிருக்காரே !

கவிச்சொட்டுக்கள் அருமை.

பழமைபேசி said...

குறுங்கவிதைகள்...இரசித்தேன்!

வால்பையன் said...

//மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)
என்னை
மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)
//

இது தத்துவம் இல்ல,
உண்மை!

சந்தனமுல்லை said...

:)) கவுஜ..கவுஜ!!

/
உன்

கொலுசொலியால்...

கூவ மறந்த

குயில் நான்./


அவ்வ்வ்!

சந்தனமுல்லை said...

/அதனாலத்தான் பாசமலர் அண்ணன் அன்ப பொழிஞ்சிருக்கார்./

LOL!

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..:-)))

/வால்பையன் said...

//மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)
என்னை
மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)
//

இது தத்துவம் இல்ல,
உண்மை!//

இது அக்மார்க் வில்லத்தனம்

அன்புடன் நான் said...

பாலாசி...மிக நேர்த்தியான பதிவு இது. அது நிறைய பேருக்கு வாய்ப்பதுதான்... அது ஒரு கனாக்காலம்...ம்ம்ம்ம்ம். கவிதை உண்மையும் மிக நல்லாத்தான் இருக்கு

vasu balaji said...

அண்ணன் சொரண்டுனது சரி அந்தம்முனி எப்புடி பிராண்டாம விட்டுச்சி. இன்னும் எனக்கு புரியலயே. ஹி ஹி. டமாசு. கவிதைகள் நல்லாருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரசித்தேன்

Ashok D said...

மொத்த பதிவுமே நல்லாவந்திருக்கு பாலாசி
பின்றிங்க...

காலேஜ் படிக்கும்போதும் நல்லாவே எழுதியிருக்கீங்க.

காமராஜ் said...

நான் பிறந்தது

அமாவாசையாம்...

உண்மைதான்

நீ பிறக்கவில்லையே...




காதலிக்காவிட்டாலோ
கதலிக்கும்போது கவிதை எழுதாவிட்டாலோ.
கவிதைசெய்யும் ஆசை கருகிப்போகும்.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி.......மீதியையும் தொடருங்கள்.....



வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

இன்னும் இருந்தால் பொழியுங்கள்!

வெண்ணிற இரவுகள்....! said...

//பேருந்தில்)

முன்னிருக்கையில்

அமராதே....

எதிர்வரும்

வாகனங்கள்

முத்தமிடப்போகிறது.




//
அழகான வரிகள்

இன்றைய கவிதை said...

நிம்ப ஆச்சரியமா போச்சி!
இருக்காதா பின்னே?
நாங்களும் இதையே தானே எயுதிருக்கோம்?!

டைமிருந்தா நம்ம ஸைடு வந்து பாருங்க!

பாமரத்தனமா ஒரு கேள்வி கேக்குதேன்...
கொசுவத்தி சுருள் எதுக்கு ஸார் போட்டீக?!

velji said...

கொசு வர்த்தியில் கவிதை மணம் கம்ழ்கிறது.டைரியை பத்திரப்படுத்துங்கள்.இன்னும் இனிமையாய் தெரியும் காலம் வரும்.

மகேஷ் : ரசிகன் said...

கவிதை நல்லா இருக்கு. அதற்கான மூலம் கவிதையாய் இருக்கு..:)

ப்ரியமுடன் வசந்த் said...

//முன்னிருக்கையில்
அமராதே....
எதிர்வரும்
வாகனங்கள்
முத்தமிடப்போகிறது.//

அடப்பாவி

இதை சுரண்டுனதுக்கு அப்புறமுமா உனக்கு அவள் காதல் புரியலை..

:)))

சந்தான சங்கர் said...

//நான் பிறந்தது

அமாவாசையாம்...

உண்மைதான்

நீ பிறக்கவில்லையே...//

அருமை பாலாசி..

கொசுவர்த்திய வச்சதால

பவானி தேனீ பறந்துருச்சு
பாலாசி பின்னிட்டாரு..

thiyaa said...

கவிதைகள் அருமையாக இருக்கு

மா.குருபரன் said...

சூப்பரா இருக்கு பாலாசி..
காலேஜ்ல நீங்களும் "வண் சையிடு லவ்" பார்ட்டியா??
அப்ப நம்ம கட்சி....

அன்பேசிவம் said...

நண்பா, இந்த டூ சைட் லவ்வைவிட ஒன் சைட் லவ் தர்ற பீலிங்ஸும், சந்தோசமும் தனிதான், இல்லையா? நமக்கு நாமே பேசிக்கொள்வது முதல்..... என்னவோ போங்க, மறுபடியும் பழச கிளறிவுட்டுடிங்க... நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க.. :-)

சந்தான சங்கர் said...

ஒரு பாடல்
எழுதியிருக்கின்றேன்
வந்து பாடிட்டு இல்ல
சாடிட்டு போங்க..

அன்புடன் மலிக்கா said...

/முல்லைக்கு
தேர் கொடுத்தானாம்
பாரி...
மன்னித்துவிடு...
உன்னை
பார்த்திருக்கமாட்டான்/

அப்படியா, நீங்கபார்த்தீட்டீகள்ள!!!!!!!

ஓட்டுபோட்டச்சி ஓட்டுபோட்டாச்சி ஓட்டுபோட்டாச்சி,,.....

க.பாலாசி said...

//Blogger தமிழ் நாடன் said... ஆட்டம் முடியறதுக்கு முன்னாடியே உங்களுக்கு முடிவு தெரிஞ்சிருக்கே???!!!
எல்லாமே அருமை! நீங்க மயில கோட்டை விட்டதைத் தவிர!//

ஆமா தல....நன்றி நாடன்...

//Blogger பிரபாகர் said...
டைரிய இன்னும் புரட்டி நிறையா எழுதுங்க பாலாசி. ரொம்ப நல்லாருக்கு.
பிரபாகர்.//

அப்படியே ஆகட்டும் அன்பரே...நன்றி...

//Blogger புலவன் புலிகேசி said...
கலக்கிட்டடா காப்பி.....
நல்லா இருக்கு பாலாஜி. நல்ல வேலை எனக்கு எவளும் மாட்டல..இல்லனா நானு வருஷம் படிச்சிருப்பேன்........//

ஆகா...தப்பிச்சிட்டீங்களே...நன்றி நண்பா...

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
// என்ன அவசரம் அதுக்குள்ளே//

என்னா வில்லங்கம்...

// நல்ல வேளை உங்க ஒடம்ப பிரிக்கல இல்லை... அது போதும்ப//

ஹ...ஹா....

// கவித... கவித....
கவிதைகள் நல்லாயிருக்கு பாலாஜி//

அப்பாடி ஒத்துகிட்டாங்க....

நன்றி தலைவரே...

//Blogger கலகலப்ரியா said...
கவித கவித.... (ம்ம்.. இப்டி கவிதை பார்த்தா சொரண்டாம என்ன பண்ணுவா... ) ஜூட்..//

லகலகலகலகல......பிரியா....நன்றி...

//Blogger கலகலப்ரியா said...
:o kathir.. neenga eppo idaila vantheenga.. =))//

அவரு இடையில வரலிங்க....32 வருஷம் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்.

//Blogger கதிர் - ஈரோடு said...
ஆத்தாடி....//

ஆத்தாடியாவது காத்தாடியாவது....

// பாலாஜி பையன் 4 வருசம் படிச்சு எழுதுன கவிதையம்மா... எதுக்கும் கவித....கவித... இருக்கட்டும்//

அதானே எவ்வளோ கஷ்டபட்டு படிச்சேன் தெரியுமா...

க.பாலாசி said...

//ஹேமா said...
பாலாஜி அப்பவே இப்பிடித்தானா நீங்க !அவ அண்ணா உங்களை இப்பவரைக்கும் விட்டு வச்சிருக்காரே !
கவிச்சொட்டுக்கள் அருமை.//

ஆமாங்க...எனக்கும் அதுதான் ஆச்சரியம். நன்றி ஹேமா...வருகைக்கு....

//Blogger பழமைபேசி said...
குறுங்கவிதைகள்...இரசித்தேன்!//

நன்றி அய்யா....

//Blogger வால்பையன் said...
இது தத்துவம் இல்ல,
உண்மை!//

அவ்வ்வ்வ்வ்வ்............

நன்றி அண்ணா....

க.பாலாசி said...

//சந்தனமுல்லை said...

:)) கவுஜ..கவுஜ!!
அவ்வ்வ்! LOL!//

வவ்வ்வ்வ்வ்வ்.....நன்றி அக்கா...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது..:-)))//
இது அக்மார்க் வில்லத்தனம்//

என்னைவச்சி காமடி கீமடி பண்ணலையே...

நன்றி அன்பரே...

//Blogger சி. கருணாகரசு said...
பாலாசி...மிக நேர்த்தியான பதிவு இது. அது நிறைய பேருக்கு வாய்ப்பதுதான்... அது ஒரு கனாக்காலம்...ம்ம்ம்ம்ம். கவிதை உண்மையும் மிக நல்லாத்தான் இருக்கு//

மிக்க நன்றி கருணாகரசு அவர்களே...

க.பாலாசி said...

//Blogger வானம்பாடிகள் said...
அண்ணன் சொரண்டுனது சரி அந்தம்முனி எப்புடி பிராண்டாம விட்டுச்சி. இன்னும் எனக்கு புரியலயே. ஹி ஹி. டமாசு. கவிதைகள் நல்லாருக்கு.//

நாங்க அந்தம்முனி போனதுக்கப்பறம்தான எழுதுவோம்.

நன்றி...அய்யா...

//Blogger T.V.Radhakrishnan said...
ரசித்தேன்//

நன்றி டி.வி.ராதா...

//Blogger D.R.Ashok said...
மொத்த பதிவுமே நல்லாவந்திருக்கு பாலாசி
பின்றிங்க...
காலேஜ் படிக்கும்போதும் நல்லாவே எழுதியிருக்கீங்க.//

நன்றி அசோக் அண்ணா....

//Blogger காமராஜ் said...
காதலிக்காவிட்டாலோ
கதலிக்கும்போது கவிதை எழுதாவிட்டாலோ.
கவிதைசெய்யும் ஆசை கருகிப்போகும்.//

நன்றி தோழரே உங்களின் கருத்திடலுக்கும் வருகைக்கும்...

க.பாலாசி said...

// ஆரூரன் விசுவநாதன் said...
பாலாஜி.......மீதியையும் தொடருங்கள்.....
வாழ்த்துக்கள்//

நன்றி அன்பரே...தொடர்கிறேன்.

//Blogger தேவன் மாயம் said...
இன்னும் இருந்தால் பொழியுங்கள்!//

அப்படியே ஆகட்டும்...அன்பரே...

//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
அழகான வரிகள்//

நன்றி வெண்ணிற இரவுகள்....

க.பாலாசி said...

//Blogger இன்றைய கவிதை said...
நிம்ப ஆச்சரியமா போச்சி!
இருக்காதா பின்னே?
நாங்களும் இதையே தானே எயுதிருக்கோம்?!
டைமிருந்தா நம்ம ஸைடு வந்து பாருங்க!//

கண்டிப்பா பார்க்கிறேன் நண்பரே...

// பாமரத்தனமா ஒரு கேள்வி ேக்குதேன்...
கொசுவத்தி சுருள் எதுக்கு ஸார் போட்டீக?!//

அந்தகால ஞாபகம் அதான்....நன்றி நண்பரே வருகைக்கு...

//Blogger velji said...
கொசு வர்த்தியில் கவிதை மணம் கம்ழ்கிறது.டைரியை பத்திரப்படுத்துங்கள்.இன்னும் இனிமையாய் தெரியும் காலம் வரும்.//

நன்றி வேல்ஜி அண்ணா....

//Blogger மகேஷ் said...
கவிதை நல்லா இருக்கு. அதற்கான மூலம் கவிதையாய் இருக்கு..:)//

மிக்க நன்றி மகேஷ்.....

க.பாலாசி said...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
அடப்பாவி
இதை சுரண்டுனதுக்கு அப்புறமுமா உனக்கு அவள் காதல் புரியலை..
:)))//

புரியலையேப்பா....புரியலையே....

நன்றி நண்பரே....

//Blogger சந்தான சங்கர் said...
அருமை பாலாசி..
கொசுவர்த்திய வச்சதால
பவானி தேனீ பறந்துருச்சு
பாலாசி பின்னிட்டாரு..//

நன்றி சங்கர்....

//Blogger தியாவின் பேனா said...
கவிதைகள் அருமையாக இருக்கு//

மிக்க நன்றி தியா....

க.பாலாசி said...

//Blogger மா.குருபரன் said...
சூப்பரா இருக்கு பாலாசி..
காலேஜ்ல நீங்களும் "வண் சையிடு லவ்" பார்ட்டியா??
அப்ப நம்ம கட்சி....//

சேம் பிளட்....நன்றி நண்பா...

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நண்பா, இந்த டூ சைட் லவ்வைவிட ஒன் சைட் லவ் தர்ற பீலிங்ஸும், சந்தோசமும் தனிதான், இல்லையா? நமக்கு நாமே பேசிக்கொள்வது முதல்..... என்னவோ போங்க, மறுபடியும் பழச கிளறிவுட்டுடிங்க... நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருங்க.. :-)///

அப்டியா...நீங்களும் ரொம்ப அடிவாங்கிருப்பீங்க போலிருக்கு....வாழ்த்துக்கள்.

நன்றி நண்பா....

//Blogger சந்தான சங்கர் said...
ஒரு பாடல்
எழுதியிருக்கின்றேன்
வந்து பாடிட்டு இல்ல
சாடிட்டு போங்க..//

வருகிறேன்...நண்பா....

//Blogger அன்புடன் மலிக்கா said...
அப்படியா, நீங்கபார்த்தீட்டீகள்ள!!!!!!!//

அதானே.....

// ஓட்டுபோட்டச்சி ஓட்டுபோட்டாச்சி ஓட்டுபோட்டாச்சி,,.....//

நன்றி...நன்றி....நன்றி....

சத்ரியன் said...

//காலேஜ்ல படிக்கிறப்ப " ஒருத்திய " காதலிச்சேன்.//

பாலாசி,

நெஜமாவா? ...ஏன்னா, டபுள் சைடு கத வேற இருக்குதுன்னு ....கொசுரு செய்தி கொட்டியிருக்கீக.

ஒன் சைடுக்கே இப்பிடின்னா.... ? சீக்கிரம் டபுள் சைடு ...க(வி)தையும் கேட்கனும் போல இருக்கே...!

என்னைய மாதிரி இளவட்டங்களுக்கு தேவை படுது. இதுமாதிரி நெறைய எழுதுங்கப்பா... நல்லாயிருக்கு. !

சீமான்கனி said...

அண்ணே...வணக்கம் நே..... நல்லா இருக்கியளா...கொசு வத்திஉம் கவிதைகளும்... சூப்பர் அண்ணே...
அப்பவே இப்டிதனா???

ஊடகன் said...

//நான் பிறந்தது
அமாவாசையாம்...
உண்மைதான்
நீ பிறக்கவில்லையே...//


படித்த்தில் பிடித்தது........
கலக்குங்க தலைவா........
அழகான கவிதைகள்.........

"உழவன்" "Uzhavan" said...

அடுத்த கதையையும் சீக்கிரம் சொல்லுங்க. நமக்குதான் அடுத்தவங்க கதையைக் கேக்குறதுனா ஒரு அதிகப்படியான ஆவல் இருக்குமே :-)

Beski said...

பாலாசி,
எல்லாம் கலக்கல்.

காதலினால் மடையனாக்குவது அல்லது மடையனாவது உண்மைதான்.

க.பாலாசி said...

//சத்ரியன் said...
பாலாசி,
நெஜமாவா? ...ஏன்னா, டபுள் சைடு கத வேற இருக்குதுன்னு ....கொசுரு செய்தி கொட்டியிருக்கீக.
ஒன் சைடுக்கே இப்பிடின்னா.... ? சீக்கிரம் டபுள் சைடு ...க(வி)தையும் கேட்கனும் போல இருக்கே...!
என்னைய மாதிரி இளவட்டங்களுக்கு தேவை படுது. இதுமாதிரி நெறைய எழுதுங்கப்பா... நல்லாயிருக்கு. !//

இளவட்டங்களா?........அவ்வ்வ்வ்....

நன்றிண்ணே வருகைக்கு...

//Blogger seemangani said...
அண்ணே...வணக்கம் நே..... நல்லா இருக்கியளா...கொசு வத்திஉம் கவிதைகளும்... சூப்பர் அண்ணே...
அப்பவே இப்டிதனா???//

ஆமாண்ணே....வாங்க நல்லாத்தேன் இருக்கேன். நன்றி நண்பா...

//Blogger ஊடகன் said...
படித்த்தில் பிடித்தது........
கலக்குங்க தலைவா........
அழகான கவிதைகள்.........//

நன்றி நண்பரே...

//Blogger " உழவன் " " Uzhavan " said...
அடுத்த கதையையும் சீக்கிரம் சொல்லுங்க. நமக்குதான் அடுத்தவங்க கதையைக் கேக்குறதுனா ஒரு அதிகப்படியான ஆவல் இருக்குமே :-)//

ஆகா....கிளம்பிட்டாங்கையா....நன்றி உழவன்...

//Blogger எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said...

பாலாசி,
எல்லாம் கலக்கல்.
காதலினால் மடையனாக்குவது அல்லது மடையனாவது உண்மைதான்.//

அப்படியா நண்பா....நன்றி வருகைக்கு....

kanagu said...

கவிதையெல்லாம் தாறுமாறுங்க... காதலிச்சாலே கவிஞர்களா ஆயிடுவாங்க அப்டிங்குறது உண்மை தானோ.?? :) :)

vasu balaji said...

வாங்க தம்பி நம்ம திண்ணைக்கு. ஒரு தொடர் இடுகைல பவானி தேனீ கொசுவத்தி இருந்தா சொல்லலாம்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO