க.பாலாசி: ஆரம்பம் 1992...

Friday, February 26, 2010

ஆரம்பம் 1992...

1992. வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளை தன்னகத்துள் நிரப்பியிருந்த வருடம். அவ்வளவு சாதாரணமாக எவர் நெஞ்சினையும் நீங்கும்படியான நிகழ்வுகளாக அவை அமையவில்லையென்பது இன்னொரு சிறப்பு. வெள்ளையனைக் கண்டால் வெளியேறு இல்லையேல் அவனின் எழுத்துக்கள் புதைக்கப்பட்ட ஏடுகளை வேருடன் அருத்தெறி என்ற எண்ணம் அனைவர் இதயத்தையும் கவ்விக்கொண்டிருந்தது. கூடவே சட்டமறுப்பு இயக்கங்களும். 25 பைசாவுக்கு துடைப்பானால் அடித்துக்கொண்ட காலகட்டங்கள் அப்போது மேகம் சூழ்ந்த வானமாயிருந்தன. தவறு செய்தலும், தப்பத்தெரிதலும் மிகையாட்கொண்டிருந்த காலகட்டமது.


அன்றைய நாளில் மிகமுக்கிய கோட்பாடாகவும், குறிக்கோளாகவும் அடிமனதில் தாளமிட்டது ஆங்கில எதிர்ப்பு. இலவசம் என்றபெயரில் அனைத்து புத்தகங்களையும் கொடுத்து, ஆங்கிலத்தையும் அதனுடன் திணித்துவிட்ட பள்ளிக்கல்வி நிர்வாகங்களை எப்படிச் சாடுவது. ஒரு நொச்சி சிம்புக்கு (குச்சி) பயந்து நடுங்கிய நாட்களில் ஆங்கில எதிர்ப்பை நடைமுறைப்படுத்துவதென்பது இயலாதவொன்று. அறவழிப்போராட்டத்தை வகுப்பறை நீங்கிதான் நடத்தவேண்டும் என்று சகலரைப்போலவே எனக்கும் தெரிந்திருந்தது. வகுப்பாசிரியருக்கு எங்களியக்கத்தின் வலிமையைக்காட்ட கருவேலங்காட்டுக்குள் கால்தடம் பதித்து பதுங்கியிருப்பதே சாலச்சிறந்ததென்ற எண்ணமிருந்தது. அங்கே கோலிகுண்டும், கூட்டாஞ்சோறுமாய் குதூகலப்படுத்தும் என் சக வீரனை நினைத்து அகமகிழ்வு பெற்றிருந்தேன்.


போராட்ட புதருக்குள் பதுங்கியிருந்த சில புல்லுருவிகளின் அடிமட்ட செயல்களினால் தலைமை ஆசிரியரின் கையில் தலையினைக்கொடுக்கவும் நான் தயங்கியதில்லை. இரண்டு மூன்று குட்டுகளுக்கு பயந்துவிடுவோம் என்று அவர் நினைத்திருக்கலாம். எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுத்துச்செல்லும் தைரியம் எனக்கும் வாய்த்திருந்தது. பெருமிதம் கொண்டிருந்தேன். ஆவாரம் பூவாக எவளோயொருத்தி எனக்கிந்த வாலிபத்தினையும், வாசத்தினையும் வழங்கியிருக்கவேண்டும். சுஜா. அவள் பெயராக இருக்கலாம். இந்த நன்வரலாற்றில் அவளையும் இழுத்துவிடுவது இழிவினைக்கொணரலாம். விலகிவருவோம்.


அம்மாதிரியானதொரு தருணத்தில்தான் தந்தையுடனான ஒத்துழையாமை இயக்கத்தையும் தீவிரப்படுத்தவேண்டிய கட்டாயமிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமலில்லை. ஒரு மதியவேளை ‘அதிமுக்கிய மட்டைவிளையாட்டுக்காக பள்ளிக்கு செல்லவில்லையென்று, உச்சி வெய்யில் உயிர்ச்சுடும் நேரத்தில் காலணி இல்லாமல் நிற்கவைத்த படுபாதக செயலைச் செய்தவர் அவர். உலகவரைபடத்தில் சிறந்த ஜனநாயக நாடாகக் கருதப்படும் நம் இந்திய தேசத்தின் அவஸ்த்தைகளை தட்டிக்கேட்கப் பிறந்தவொரு தனிக்குடிமகனுக்கு மட்டைவிளையாட்டு விளையாட அனுமதி மறுப்பதென்பது காலக்கொடுமையன்றி வேறென்ன சொல்வது. அதன்பொருட்டே இந்த இயக்கம். இதனூடேப் பிறந்த உண்ணாவழிப் போராட்டமும் செவ்வனே நடந்ததாய் அடிக்கோடிட்ட இவ்வரலாற்று வரிகள் உணர்த்துகின்றன.


ஏ, பி, சி, டி... என்று தொடங்கும் 260 எழுத்துக்களையும் (என் போராட்டங்களால் 26ஆக குறைக்கப்பட்டுள்ளதை அறிவேன்) படித்து சமாளிப்பதென்பது அவ்வளவுச் சுலபமல்ல. ஆங்கில அறிவுடையோர் அறிவர். கடுமைக்கும் கொடுமைக்கும் கால்முளைத்தார்போல் தோன்றும் அவ்வெழுத்துக்களே என் முதல் எதிரியாய் தெரிந்தது. பள்ளியில் கொடுத்த ஆங்கிலப்புத்தகங்களை மஞ்சள் பையில் புகுத்தி என் தாய்மொழியை கலங்கப்படுத்தியதுமில்லை அதுபோல் வழக்கமாய் புத்தகங்களுக்குப்போடும் சாம்பிராணியை அவைகளுக்கு காட்டியவனுமில்லை. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை ஒருபோதும் மறவாதவனாய் அந்த ஆங்கிலப்புத்தகங்களை எடுத்துக்கொண்டு அலைந்து திரிந்து ‘இதயம் மளிகைக்கடை அடைந்தேன். எதற்காக என்று நீங்கள் கேட்கலாம். சொல்வதும் என் கடமையென்றறிவேன். எடைக்குப்போடத்தான்(???!!!!). அப்படி கிடைக்கும் 25 பைசாவுக்காகவும், அதனால் வாங்கப்படும் 25 எண்ணிக்கை ஒரு பைசா மிட்டாய்க்காகவும் ஆசைக்கொண்டதால்தான் நான் இச்செயலை செய்தேன் என்றெண்ணலாம் நீங்கள். மறுப்பதற்கான காரணங்களை மேற்கூறியிருக்கிறேன்.38 comments:

கவிதை காதலன் said...

அர்த்தம் பொதிந்த பதிவு.. நல்லா இருக்கு

ஈரோடு கதிர் said...

//25 எண்ணிக்கை ஒரு பைசா மிட்டாய்க்காகவும்//

...ம்ம்ம்ம்

:))))))))))))))

வானம்பாடிகள் said...

எங்க கதிர்! இவன என்ன பண்ண? அடங்கமாட்டங்குறானே:))

D.R.Ashok said...

அட அட :)

பேநா மூடி said...

அருமை நண்பா..,

பிரேமா மகள் said...

சூப்பர் பாலாண்ணா... கலக்கறீங்க.. தகவலை எப்படி, எங்க, புடிக்கிறீங்க?

அகல்விளக்கு said...

//சுஜா. அவள் பெயராக இருக்கலாம். இந்த நன்வரலாற்றில் அவளையும் இழுத்துவிடுவது இழிவினைக்கொணரலாம். விலகிவருவோம்.//

ரைட்டு....

அகல்விளக்கு said...

//ஏ, பி, சி, டி... என்று தொடங்கும் 260 எழுத்துக்களையும் (என் போராட்டங்களால் 26ஆக குறைக்கப்பட்டுள்ளதை அறிவேன்) //

அப்புறம்....

அகல்விளக்கு said...

//எடைக்குப்போடத்தான்(???!!!!). அப்படி கிடைக்கும் 25 பைசாவுக்காகவும், அதனால் வாங்கப்படும் 25 எண்ணிக்கை ஒரு பைசா மிட்டாய்க்காகவும் ஆசைக்கொண்டதால்தான் நான் இச்செயலை செய்தேன் என்றெண்ணலாம் நீங்கள். மறுப்பதற்கான காரணங்களை மேற்கூறியிருக்கிறேன்.///


கொன்னுட்டீங்க போங்கோ...... (ஆங்கிலத்தை சொன்னேன்....)

:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

ஹேமா said...

பாலாஜி...நாங்க தமிழர்.
நம்ம குணமே இப்பிடித்தான்.

ROMEO said...

பாதி புரியுது மீதி புரியல :(

ராமலக்ஷ்மி said...

மிக அருமை:)!

சி. கருணாகரசு said...

வலையுலக... பதிவர்களே,
நான் உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.....

1992 லே... இந்திய துணைகண்டத்தின் தென் கோடியியிலே... கோடியில் ஒரு கோமேதமகாம்...பாரதத்தின் போர்முரசு... பாலாஜி என்ற அந்த மாவீரனின்... ஆங்கில எதிர்ப்பு போரட்டத்தால்தான்... இன்று நம்மிடையே தமிழும் மூச்சு விடுகிறது என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.....

க.இராமசாமி said...
This comment has been removed by the author.
க.இராமசாமி said...

ஒங்க தந்தையோட நீங்க செஞ்ச ஒத்துழையாமை இயக்கம் ரொம்ப ரசிக்க வெச்சது. கலக்கல் பதிவு.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆகா பாலாசி.. நான் முதல்பாராவை திரும்ப படிச்சிட்டு மேலே வருசத்தை முழிச்சி முழிச்சி பார்த்தேன் மேல மேல படிக்கத்தான் புரிஞ்சுது..

நல்ல விவரிப்புப்பா..அருமை.. :)

தமிழ் பிரியன் said...

செமய்யா இருக்கு! கலக்கல்!

முகிலன் said...

நீங்க மட்டும் அன்னிக்குப் போராடாமப் போயிருந்தா..

அய்யோ நினைச்சிப் பாக்கவே முடியல...

Chitra said...

கலக்கல்.. :-)

அரசூரான் said...

1992-ல போராட்டம் எல்லாம் சரிதான், அதை 1993 வரைக்கும் நடத்தி இருந்தா புத்தகத்தை பாதி விலைக்கு விற்று அதிக துட்டு பார்த்திருக்கலாம்... ரைட்டு 92 போராட்டத்த மிட்டாய் சாப்பிட்டு முடிச்சிட்டீங்க போல... அப்பா கொடுத்தது இலவச இணைப்பா... அவ்வ்வ்.

கலகலப்ரியா said...

ம்க்கும்...

புலவன் புலிகேசி said...

அய்யய்யோ பாலாசிக்கு என்னமோ ஆச்சுப்பா...இன்னாமா போராட்டம் செஞ்சிருக்கீங்க.....

பிரபாகர் said...

இளவல்...

25 பைசாவ வெச்சி இப்படி ஒர் ஆர்ப்பாட்டமா?

அலம்பல் தாங்கல!

பிரபாகர்.

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அருமையான பதிவு நண்பரே . சற்று பொறுமையாக வாசிக்கவேண்டும் . இல்லை என்றால் புரியாமல் போய்விடும் . பகிர்வுக்கு நன்றி !

தேவன் மாயம் said...

அருமை நண்பரே!!

ஜெயந்தி said...

தெரிஞ்சிருந்தா உங்க இயக்கத்துல மொத ஆளா சேர்ந்திருப்பேன். ஆங்கிலம்னா எனக்கும் எட்டிக்காய்தான்.

க.பாலாசி said...

நன்றி கவிதை காதலன்

நன்றி ஈரோடு கதிர் அய்யா..

நன்றி வானம்பாடிகள் அய்யா..
(அவரு ஊருல இல்லையே... )

நன்றி Blogger D.R.Ashok

நன்றி Blogger பேநா மூடி

நன்றி Blogger பிரேமா மகள்

நன்றி Blogger அகல்விளக்கு

நன்றி ஹேமா

நன்றி Blogger ROMEO
(ஓ... அப்டியா?? )

நன்றி Blogger ராமலக்ஷ்மி

நன்றி Blogger சி. கருணாகரசு
(உண்மைய சொன்னீங்க...)

நன்றி Blogger க.இராமசாமி

நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi அக்கா...

க.பாலாசி said...

நன்றி தமிழ் பிரியன்

நன்றி Blogger முகிலன்
(என்னாலையே நினைச்சுப்பாக்க முடியலைங்க...)

நன்றி Blogger Chitra

நன்றி Blogger அரசூரான்
(ஆகா...இந்த ஐடியா தெரியாமப்போச்சே...)

நன்றி Blogger கலகலப்ரியா
(ம்கூம்...)

நன்றி Blogger புலவன் புலிகேசி
(சும்மா..... )

Blogger பிரபாகர்
(போராட்டமே அதுக்குத்தாங்க...)

நன்றி Blogger ♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫

நன்றி Blogger தேவன் மாயம்

நன்றி Blogger ஜெயந்தி
(தெரிஞ்சிருந்தா உங்களையும் கூப்பிட்டுருப்பேன்...)

ஜெரி ஈசானந்தா. said...

ஆரம்பமே கலக்கல்,இன்னும் வாசிக்கனும்ம்னு தோணுது.

அன்புடன் மலிக்கா said...

ஆகா சூப்பர் பதிவு.. ம்ம்ம் நடக்கட்டும்

திவ்யாஹரி said...

//ஏ, பி, சி, டி... என்று தொடங்கும் 260 எழுத்துக்களையும் (என் போராட்டங்களால் 26ஆக குறைக்கப்பட்டுள்ளதை அறிவேன்) //

முடியலைங்க பாலாசி..

தாராபுரத்தான் said...

பழமை பேசி ஆரம்பித்து பாலாஐி தொடர ஆரம்பித்து விட்டார்,,,எங்களைப் போல ஆளுகளை ஒரு வழி பண்ணாம ஒயமாட்டீங்க போல...

தியாவின் பேனா said...

அருமை

பட்டாபட்டி.. said...

அட.. கலக்கிட்டீங்க போங்க..

க.பாலாசி said...

//ஜெரி ஈசானந்தா. said...
ஆரம்பமே கலக்கல்,இன்னும் வாசிக்கனும்ம்னு தோணுது.//

நன்றி வாத்தியாரே...

//Blogger அன்புடன் மலிக்கா said...
ஆகா சூப்பர் பதிவு.. ம்ம்ம் நடக்கட்டும்//

நன்றி மலிக்கா...

//Blogger திவ்யாஹரி said...
முடியலைங்க பாலாசி..//

ஏங்க... நன்றிங்க...

//Blogger தாராபுரத்தான் said...
பழமை பேசி ஆரம்பித்து பாலாஐி தொடர ஆரம்பித்து விட்டார்,,,எங்களைப் போல ஆளுகளை ஒரு வழி பண்ணாம ஒயமாட்டீங்க போல...//

ஹா...ஹா... வாங்க அய்யா...நன்றிங்க....

//Blogger தியாவின் பேனா said...
அருமை//

நன்றி தியா...

//Blogger பட்டாபட்டி.. said...
அட.. கலக்கிட்டீங்க போங்க..//

நன்றிங்க தலைவரே....

சத்ரியன் said...

//கடுமைக்கும் கொடுமைக்கும் கால்முளைத்தார்போல் தோன்றும் அவ்வெழுத்துக்களே என் முதல் எதிரியாய் தெரிந்தது.//

பாலாசி,

எனக்கு அப்பவே தெரியாம போச்சே ராசா. என்னைய மாதிரியே ஒருத்தன் இருந்திருக்கானே....!

பாடப்புத்தகம் கொடுத்து பட்டாணி வாங்கித்திண்ண அனுபவம் அடியேனுக்கும் உண்டு.

தியாவின் பேனா said...

ஆஹா....
அருமை

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO