க.பாலாசி: திராட்சை என்றும் இனிப்புதான்....

Thursday, March 25, 2010

திராட்சை என்றும் இனிப்புதான்....

திராட்சை என்றும் இனிப்புதான் அதன் நற்பலன்களையும் சேர்த்து. அதிலும் குறிப்பாய் பச்சை திராட்சை. இந்த வெய்யிலின் வெம்மைக்கு உகந்ததாய்கூட, உடற்சூட்டினை கொஞ்சமே தணிப்பதாகக்கூட இருக்கலாம். இவைத்தவிர அதன் ருசியில் சப்புக்கொட்ட நாவென்றும் தயங்கியதில்லை. முதலியார் மளிகைக்கடையில் சப்பாத்திக்கு மாவு வாங்கியபோது அங்கே ஓரமாய் பல்லிளித்துக்கொண்டிருந்த அதன் மீதான ஈர்ப்பு இன்னும்கொஞ்சம் என்னுடன் சேர்ந்திருக்கவேண்டும். வாங்கி சுவைத்துப்பார்க்க ஆசை. இருபதுரூபாய்க்குள் அதனையும் மஞ்சள் பைக்குள் அடைக்கமுடியாதென்பது தெரியும். சட்டைப்பைக்குள் முன்பிருந்த இருபது ரூபாயுடன் நான்காய் மடிக்கப்பட்ட ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும், இருபது ரூபாய்நோட்டும் சொன்னது போன்ற உணர்வு, அதையும் ‘என்’னறைக்கு அழைத்துச்செல்ல.

வாங்கிவந்து இரண்டைப்பறித்து வாய்க்குள் செருகி சுவைத்துண்கையில் நினைத்ததைவிட இருமடங்கினும் அதிகமாகவே அந்த பரவசத்தில் லயித்துப்போகவேண்டியிருந்தது. ஆனால் நினைவலைகளின் அசைவு 70 ரூபாயின் பின்னணியில்.

நான்காய் மடிக்கப்பட்டு மண்ணின் வாசத்துடன் என் மேல்சட்டைப் பைக்குள் அமிழ்ந்துகிடந்த அது, இரவு உணவருந்திவிட்டு சாப்பாட்டுக்கடையிலிருந்து திரும்பும்போது ஒரு சிறிய மருத்துவமனையின் வாசலொட்டிய சாலையில் கிடந்தது. நற்பண்பிற்கும், நடைமுறை வாழ்விற்குமுள்ள வித்யாச மனப்பான்மையில் கட்டப்பட்டிருந்த என்கைகள் கொஞ்சமும் கூச்சமில்லாமல், எவர்கண்ணும் கொத்திக்கொள்ளும்முன் பறித்து சட்டைக்குள் திணித்தது. பின்னணி இதுதான்.

அந்த பணம்....

ஓருடலின் உழைப்பில், ஒருகுடும்பத்தின் இரவுநேர உலைக்காக காத்திருந்திருக்கலாம். அல்லது ஒருவயிற்றின் பசியாற்ற பதுக்கப்பட்டு... வழிதவறியிருக்கலாம்.

குடும்பச்சண்டைக்குள் தலையிட்டு ஒரு உழைக்கும் கணவானின் ஆளுமையை அரங்கேற்ற பயணப்பட்டிருக்கவும் வாய்ப்பதிகம்.

இல்லையேல் ஏதோவொரு சுமைதூக்கியின் உடல்வலியை, மதுவாடையில் ஓரிரவு மறைத்துவைக்க உதவியிருக்கும்.

ஒரு ஏழையன் மனைவிக்கு உடற்பிணிவிரட்ட ஊசியாகவோ, அல்லது மாத்திரைக்கட்டிகளாகவோ மாறியிருக்கலாமென்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், எடுத்தவிடம் மருத்துவமனை வாசல்.

வேறெந்த காரணத்தினையும், கால் கிலோவில் 100 கிராம் உட்செல்வதற்குள் என் சிறுமூளை உண்டாக்கவில்லை. அந்த 100 கிராமில் கடைசியொன்றை மென்றுகொண்டிருந்தபோது புளிப்பா, கசப்பா, உவற்பா என்றறியமுடியவில்லை. சுவை மாறிவிட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.

••••••••••

பக்கத்துவீட்டு அக்காவிடம் அவசரமாக 20ரூபாய் கடன் வாங்கி (20ரூபாய் திராட்சை போக ரூ.50 என்னிடம்), மிதிவண்டியுடன் மீண்டும் அவ்விடம் சென்று அதை தூக்கியெறிய நினைத்தபொழுது பறிகொடுத்தவரின் கண்கள் அதற்காக காத்திருந்தது.

‘அய்யா... என்ன தேடுறீங்க..???’

‘ஒண்ணுமில்ல கண்ணு.. பணம் ஒரு 70ரூவா வச்சிருந்தேன். மளிகக்கடயாண்ட போயிப்பாத்தா காணல. அதான் வாங்குன எடத்துலயே பாக்குறேன். இங்கத்தான் வாங்கி, மடிச்சு வேட்டிக்குள்ள சொருவுனேன்.’

‘அப்டியா... இங்க வாங்க... என்கிட்டதான் இருக்கு.’

‘ஏ... அப்டியா கண்ணு. எங்கிருந்துகண்ணு எடுத்த?’

‘இங்கதாங்க... சாப்டு முடிச்சிட்டு ரூமுக்கு போயிட்ருந்தேன். கண்ணுல அம்புட்டுது. அதான்.... ம்ம்... இந்தாங்க...’

‘ரொம்ப நல்லதுப்பா.. கடஞ்சொல்லி வாங்க மனசில்ல...வாங்குன அரிசிய கடைலேயே வச்சிட்டு வந்திட்டேன்.’

‘பாத்து வைச்சிக்குங்க...மறுபடியும் தொலைஞ்சிடப்போவுது...’.

••••••••••

நினைத்த காரணங்களில் முதல் ஒன்று பலித்திருந்தது.

பெருமிதமாய் அறைக்கு வந்தேன். கடங்காரனாய் திராட்சையை எடுத்தேன், சுவைத்தேன்....

திராட்சை என்றும் இனிப்புதான்..........






44 comments:

நசரேயன் said...

முத துண்டு

மணிஜி said...

நல்ல சைட்டிஷும் கூட..(புத்தி வேறெங்கே போகும்)

பழமைபேசி said...

எழுத்து மெருகேறிட்டே போகுதுங்க...

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
நேசமித்ரன் said...

பாலாசி எழுத்தில் நல்ல மாற்றம்

vasu balaji said...

இடுகை போட உக்காந்தா சாமி வருதோ உனக்கு பாலாசி.. பேச்சு வரமாட்டீங்குது.

தாராபுரத்தான் said...

ஈன்ற பொழுதினினும் பெரிதுவக்கும்...என தொடங்கும் குறள் ஏனோ உடனே ஞாபகம் வருகிறது.

அகல்விளக்கு said...

அவ்விடத்தில் நானிருந்தால் அவ்வாறு யோசித்திருப்பேனா என்பது சந்தேகம்தான்...

//ஈன்ற பொழுதினினும் பெரிதுவக்கும்...என தொடங்கும் குறள் ஏனோ உடனே ஞாபகம் வருகிறது.//

அதேதான்....

Radhakrishnan said...

மிகவும் நன்றாக இருக்கிறது.

பா.ராஜாராம் said...

பழமைபேசி said...

//எழுத்து மெருகேறிட்டே போகுதுங்க...//

உண்மை பாலாஜி.வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

அடே... ராசா...

என்ன்ன்ன்ன்ய்யா என்னென்னவோ எழுதறே... கையக்குடு மொதல்லே..

Chitra said...

பெருமிதமாய் அறைக்கு வந்தேன். கடங்காரனாய் திராட்சையை எடுத்தேன், சுவைத்தேன்....

திராட்சை என்றும் இனிப்புதான்..........


........ very nice! நீங்கள் சொல்லிய விதம், வித்தியாசமாக அருமையாக இருந்தது.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

//திராட்சை என்றும் இனிப்புதான்..........//

ஆரம்பம் போல முடிவும் இனிப்பே.

ஈரோடுவாசி said...

உங்களுக்கு ரொம்ப நல்லமனசு அண்ணா....

சீமான்கனி said...

உங்கள் திராட்சை மனதின் ஆழம் வரை போயும் இனிக்கிறது...
அருமை...
நேரம் இருந்தால் கொஞ்சம் இங்கு வாங்க...
http://ganifriends.blogspot.com/2010/03/blog-post_25.html

பத்மா said...

நல்லா இருக்கு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

திராட்சையைப் பற்றிய பதிவென்றாலும் பல சுவைகளும் சேர்ந்து.. கடைசியில் மனதில் நிற்பது இனிப்பு தான் :)

Unknown said...

நல்லா இருக்கு திராட்சை

க ரா said...

நல்லா இருக்கு.

திவ்யாஹரி said...

நல்ல அருமையான பதிவு..

ரோஸ்விக் said...

உலை கொதித்தது... உளம் குளிர்ந்தது... :-)

புலவன் புலிகேசி said...

திராட்சையின் சுவை திராட்சையிடம் மட்டுமல்ல அதற்கு செலவு செய்த பணத்திடமும்...ஒருவர் வீட்டில் உலைக் கொதிக்க உதவியிருக்கிறீர்கள். மகிழ்ச்சி

Paleo God said...

அசத்தல்..:))

கண்மணி/kanmani said...

நீங்க யோசித்ததில் நடந்து கொண்டதில் பாகலாக இருந்தாலும் இனித்திருக்கும்.திராட்சை ஜுஜூபி.
புனைவோ நிஜமோ அருமை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கலக்கல் பதிவு..
ரொம்பவே ரசிச்சேன் பாலாசி சார்...

பிரேமா மகள் said...

இல்லையே நம்பற மாதிரி இல்லையே....

"உழவன்" "Uzhavan" said...

//கடஞ்சொல்லி வாங்க மனசில்ல...வாங்குன அரிசிய கடைலேயே வச்சிட்டு வந்திட்டேன்.’//
 
மனுசன்யா அவன்..

பாற்கடல் சக்தி said...

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் சகா...

விக்னேஷ்வரி said...

மனதிற்கு இதமாக உள்ளது எழுத்து.

ursula said...

nanraaga irukkirathu balaci!
vazhthukkal.


anbudan
ursualragav

க.பாலாசி said...

நன்றி நசரேயன்

நன்றி மணிஜீ

நன்றி பழமை அய்யா...

நன்றி நேசமித்ரன்

நன்றி வானம்பாடிகள் அய்யா

நன்றி தாராபுத்தான் அய்யா

நன்றி அகல்விளக்கு...

நன்றி வி. ராதாகிருஷ்ணன்.

நன்றி பா.ரா....

நன்றி ஈரோடு கதிர் அய்யா.

நன்றி Blogger Chitra

நன்றி Blogger ராமலக்ஷ்மி

நன்றி Blogger T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி Blogger ஈரோடுவாசி

நன்றி Blogger seemangani

நன்றி Blogger padma

க.பாலாசி said...

நன்றி ச.செந்தில்வேலன்

நன்றி Blogger முகிலன்

நன்றி Blogger இராமசாமி கண்ணண்

நன்றி Blogger திவ்யாஹரி

நன்றி Blogger ரோஸ்விக்

நன்றி Blogger புலவன் புலிகேசி

நன்றி Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றி Blogger கண்மணி/kanmani
(நிஜம்)

நன்றி Blogger பட்டாபட்டி.

நன்றி Blogger பிரேமா மகள்
(நீங்க நம்பவே வேண்டாந்தாயீ..)

நன்றி Blogger "உழவன்" "Uzhavan"
(உண்மைங்க... )


நன்றி Blogger sakthi

நன்றி Blogger விக்னேஷ்வரி

நன்றி Blogger ursula

மாதேவி said...

திராட்சை இனிக்கிறது.

அம்பிகா said...

திராட்சையை விடவும் பதிவு இனிப்பு.
பறிகொடுத்தவனுக்கு ஒரே நினைப்பு; எடுத்தவனுக்கோ பல நினைப்பு
என்பதை அருமையா சொல்லியிருக்கீங்க.

திவ்யாஹரி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் பாலாசி..

ஆடுமாடு said...

நல்லா எழுதறீங்க பாலாசி.

வாழ்த்துகள்.

Ahamed irshad said...

ரொம்ப இனிப்பு..... நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.

நீச்சல்காரன் said...

நல்லாயிருக்கு பாலாஜி அவர்களே

க.பாலாசி said...

//மாதேவி said...
திராட்சை இனிக்கிறது.//

நன்றி மாதேவி...

//Blogger அம்பிகா said...
திராட்சையை விடவும் பதிவு இனிப்பு.
பறிகொடுத்தவனுக்கு ஒரே நினைப்பு; எடுத்தவனுக்கோ பல நினைப்பு
என்பதை அருமையா சொல்லியிருக்கீங்க.//

நன்றி அம்பிகா....

//Blogger திவ்யாஹரி said...
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்றுக் கொள்ளுங்கள் பாலாசி..//

மிக்க நன்றி திவ்யா...

//Blogger ஆடுமாடு said...
நல்லா எழுதறீங்க பாலாசி.
வாழ்த்துகள்.//

மிக்க நன்றி அய்யா...

//Blogger அஹமது இர்ஷாத் said...
ரொம்ப இனிப்பு..... நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.//

நன்றி அஹமது...

//Blogger நீச்சல்காரன் said...
நல்லாயிருக்கு பாலாஜி அவர்களே//

நன்றி நீச்சல்காரன்... முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...

Gracy said...

நல்ல பதிவு

Sadagopal Muralidharan said...

மனிதனேயமும், உண்மையும், உள்ளமும் உள்ள ஒரு மனிதனால் மட்டுமே உணர்ந்து செய்யப்பட்ட ஒரு காரியம். இக்காலத்தில் மிக அரிதானது. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.

ராஜ நடராஜன் said...

திராட்சையெல்லாம் சாப்பிடுறீங்க.தரிபூசணியும் சாப்பிடலாமே?பின்னூட்டத்தில் ஒரு லிங்க் இருக்குது:)

க.பாலாசி said...

//Gracy said...
நல்ல பதிவு//

நன்றிங்க கிரேஸி...

//Blogger Sadagopal Muralidharan said...
மனிதனேயமும், உண்மையும், உள்ளமும் உள்ள ஒரு மனிதனால் மட்டுமே உணர்ந்து செய்யப்பட்ட ஒரு காரியம். இக்காலத்தில் மிக அரிதானது. நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.//

நன்றிங்கய்யா...

//Blogger ராஜ நடராஜன் said...
திராட்சையெல்லாம் சாப்பிடுறீங்க.தரிபூசணியும் சாப்பிடலாமே?பின்னூட்டத்தில் ஒரு லிங்க் இருக்குது:)//

பாத்தேனுங்க...நன்றி ராஜ நடராஜன்....

r.v.saravanan said...

இனிப்பான பதிவு நன்றி

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO