க.பாலாசி: மானம்...

Tuesday, April 13, 2010

மானம்...




வீட்டுக்கு பின்னாடிதான்
சத்தியான் வாய்க்கா....

ஆனாலும்....சேகரு பொண்டாட்டிக்கு
எப்பவும் அவரைக்கொளம்தான்...
துணி தொவைக்கறதுக்கும்
, குளிக்கறதுக்கும்...

அந்த சக்காளத்தி சிறுக்கி
கொண்டாரதும்....
பொன்வண்டு சோப்புதானான்னு பாக்கணுமாம்.

பேச்சுவாக்குல
அவ கொண்டார பனியன
இவ எடுத்துக்குவா....

இவ கொண்டார அன்ட்ராயர
அவ எடுத்துக்குவா...

அந்த மனுஷனோட...
மானங்காக்குற வேஷ்டிய மட்டும்
விட்டுக்கொடுக்க மாட்டாளுங்க....



•••••••••••••



அவளுக்கு மஞ்ச கனகாம்பரம்னா

இவளுக்கு அதே கலரு திசம்பர் பூவு...


அங்க திருபுவனம் பட்டுன்னாக்கா

இங்க காஞ்சிபுரம்....


ஏதாவது நோய்நொடின்னாலும்

அவ மாதவன் டாக்டருகிட்ட..

இவ வாசுதேவங்கிட்ட...


என்னதான் வேத்தும இருந்தாலும்....


அவனோட வெள்ளச்சட்டைக்கு மட்டும்....

ரெண்டுபேரும் உஜாலாத்தான்.....




58 comments:

க ரா said...

அய்யா பாலாசி சொல்லாம சொல்றீங்க நெரைய வெசயத்த. கலக்குங்கப்பு

Ahamed irshad said...

ரெண்டு பொண்டாட்டிக்காரனை பற்றிய உங்கள் பார்வை அருமை..

இயல்பான எழுத்து அசத்தல்...

ரோகிணிசிவா said...

என்னவோ போ சாமீ,
பொறவு வந்து கேக்குறேன்,
நீ என்னென்னமோ பேசற,
நான் தொவைக்க போறேன்,
நல்ல வேளை அவுளுக இல்ல!

சத்ரியன் said...

//என்னதான் வேத்தும இருந்தாலும்....


அவனோட வெள்ளச்சட்டைக்கு மட்டும்....

ரெண்டுபேரும் உஜாலாத்தான்..... //

பாலாசி,

ம்ம்ம்ம்...! எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.

அகல்விளக்கு said...

ஹைய்யா....

சூப்பரு.....

இதுல எதுனா உள்குத்து இருக்கா.....

Sadagopal Muralidharan said...

இன்னாதிது. எதுக்கு. என்னமோ போங்க.

என்ன ஒண்ணு. எழுத்து நடை நல்லாருக்கு.

ஆடுமாடு said...

நல்லாருக்கு பாலாசி.

vasu balaji said...

அப்ப சிறுக்கி கொண்டு வாரது பொன்வண்டு சோப்பில்லியா? உன்ன தொவைக்க ஒருத்தி சீக்கிரம் வரணும். உஸ்ஸுக்கொட்ட நானும் கதிரும் ரெடி:))

பிரபாகர் said...

உஸ்ஸுக்கொட்ட நானும் ரெடி அய்யா! நம்மளையும் சேத்துக்குங்க!

பிரபாகர்...

பத்மா said...

நல்லா இருக்கு பாலாசி

Unknown said...

//அப்ப சிறுக்கி கொண்டு வாரது பொன்வண்டு சோப்பில்லியா? உன்ன தொவைக்க ஒருத்தி சீக்கிரம் வரணும். உஸ்ஸுக்கொட்ட நானும் கதிரும் ரெடி:))//

நானும் ரெடிங்கோ சாமிகளா.

தேவன் மாயம் said...

ரெண்டு பெண்டாட்டிக்காரன் கதை சூப்பரு சாமி!!

மணிஜி said...

கொஞ்சம் ராஜாராம் வாசனை..நல்லாயிருக்கு...

ஈரோடு கதிர் said...

சேகரு போட்டுருக்குற
கலர் சட்டைக்கும் உஜாலா போடுறாங்களா என்ன?

Chitra said...

இரண்டு மனைவிகள் வைத்து இருப்பது, illegal இல்லையா? ஹி,ஹி,ஹி,ஹி....
கலக்கல் கவிதை.

அரசூரான் said...

வேட்டியும் சட்டையும் கிழியலாயா? எல்லாம் சரி
சாமி எங்க தூங்குவாரு? கீழ முக்கூட்டு குமரன் கோவிலும் கடைத்தெரு பிள்ளையார் கோயிலிலுமா?

அம்பிகா said...

\\ரெண்டு பொண்டாட்டிக்காரனை பற்றிய உங்கள் பார்வை அருமை..

இயல்பான எழுத்து அசத்தல்...\\

:-))

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு பாலாசி

Unknown said...

//அப்ப சிறுக்கி கொண்டு வாரது பொன்வண்டு சோப்பில்லியா? உன்ன தொவைக்க ஒருத்தி சீக்கிரம் வரணும். உஸ்ஸுக்கொட்ட நானும் கதிரும் ரெடி:))///

எழுதுன கவிதையப் பாத்தா ஒன்னில்ல ரெண்டு வேனும் போலயே?

உஸ்ஸுக்கொட்ட நானும் நானும்..

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு பாலாசி.

'பரிவை' சே.குமார் said...

ம்ம்ம்ம்...! எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.

சூப்பரு..!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பல விசயங்களைத் தெரிஞ்சு / பார்த்து வச்சிருக்கீங்க போல...

சொல்லிய விதம் அழகு.

சீமான்கனி said...

சின்ன வீடு பெரிய வீடு ஜூப்பர்...பாலாசி...பயங்கரமா இருக்கு...

ஹேமா said...

ம்ம்ம்...பாலாஜி !

நிறைவான இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு பாலாசி..

பா.ராஜாராம் said...

மிக அருமை பாலாஜி!

தனித்துவம்.

தாராபுரத்தான் said...

மானங்காக்குற வேஷ்டிய//ரொம்ப யோசித்து உள்ளீர்கள்.

புலவன் புலிகேசி said...

கிராமத்து தினசரியை அழகா சொல்லிட்டீங்க பாலாசி...புத்தாண்டு வாழ்த்துக்கள்

Nathanjagk said...

ஓ..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அசத்தல்...பாலாசி

சைவகொத்துப்பரோட்டா said...

க(தை)விதை நல்லா இருக்கு பாலாசி.

Vidhoosh said...

கொடுத்து வச்ச மகராசன்...:))

கவிதை நல்லா இருக்கு பாலாசி.

பிரேமா மகள் said...

உன் போக்கே சரியில்லையே அண்ணாச்சி..

முதல்ல ஓடிப் போற கல்யாணம்..

அப்புறம்.. மனைவியின் அருமை..

இப்போ ரெண்டு பொண்டாட்டியா?

அண்ணாச்சி... தங்கச்சி.. ரெண்டு பேருக்கு சீர் செய்ய முடியாது.. பார்த்துக்கங்க ஆமாம்..

Paleo God said...

வெளுத்த மானம்
அருமை..:))

காமராஜ் said...

தனித்துவமா இருக்கு நல்லா இருக்கு பாலாஜி

Radhakrishnan said...

எத்தனை நுணுக்கமான அரசியல் இது, அருமை பாலாசி.

ராஜ நடராஜன் said...

இப்படியெல்லாம் சொன்னா எனக்கு கவிதை புரியும்.

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்லா இருக்கு கவுஜை :)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல மொழி!

-ப்ரியமுடன்
சேரல்

க.பாலாசி said...

//இராமசாமி கண்ணண் said...
அய்யா பாலாசி சொல்லாம சொல்றீங்க நெரைய வெசயத்த. கலக்குங்கப்பு//

நன்றிங்க கண்ணன்...

//Blogger அஹமது இர்ஷாத் said...
ரெண்டு பொண்டாட்டிக்காரனை பற்றிய உங்கள் பார்வை அருமை..
இயல்பான எழுத்து அசத்தல்...//

வாங்க அஹமது... நன்றிங்க...

//Blogger ரோகிணிசிவா said...
என்னவோ போ சாமீ,
பொறவு வந்து கேக்குறேன்,
நீ என்னென்னமோ பேசற,
நான் தொவைக்க போறேன்,
நல்ல வேளை அவுளுக இல்ல!//

அட...பாத்து சூதானமா இருங்க... .. நன்றி...

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
ம்ம்ம்ம்...! எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.//

ஆமங்க... நமக்குத்தான் கொடுத்துவைக்கல... நன்றிங்க..

//Blogger அகல்விளக்கு said...
ஹைய்யா....
சூப்பரு.....
இதுல எதுனா உள்குத்து இருக்கா.....//

உள்குத்தா நீங்கவேற ராசா....

நன்றி...

//Blogger Sadagopal Muralidharan said...
இன்னாதிது. எதுக்கு. என்னமோ போங்க.
என்ன ஒண்ணு. எழுத்து நடை நல்லாருக்கு.//

வாங்க ரொம்ப நாளைக்குப்பெறவு பாக்குறேன்... நன்றிங்க...

//Blogger ஆடுமாடு said...
நல்லாருக்கு பாலாசி.//

வாங்க தலைவரே... நன்றி...

//Blogger வானம்பாடிகள் said...
அப்ப சிறுக்கி கொண்டு வாரது பொன்வண்டு சோப்பில்லியா? உன்ன தொவைக்க ஒருத்தி சீக்கிரம் வரணும். உஸ்ஸுக்கொட்ட நானும் கதிரும் ரெடி:))//

அதான் எப்பவும் ரெடியா இருக்கீங்களே....

நன்றி...

//Blogger பிரபாகர் said...
உஸ்ஸுக்கொட்ட நானும் ரெடி அய்யா! நம்மளையும் சேத்துக்குங்க!
பிரபாகர்...//

நீங்களுமா... வாங்க... நன்றி....

க.பாலாசி said...

//padma said...
நல்லா இருக்கு பாலாசி//

நன்றிங்க பத்மா...

//Blogger தாமோதர் சந்துரு said...
நானும் ரெடிங்கோ சாமிகளா.//

ஆகமொத்தம் செட்டு சேந்திட்டீங்க... நன்றி... வாங்க..

//Blogger தேவன் மாயம் said...
ரெண்டு பெண்டாட்டிக்காரன் கதை சூப்பரு சாமி!!//

நன்றிங்க டாக்டர்...

//Blogger மணிஜீ...... said...
கொஞ்சம் ராஜாராம் வாசனை..நல்லாயிருக்கு...//

நன்றிங்க ஜீ...

//Blogger ஈரோடு கதிர் said...
சேகரு போட்டுருக்குற
கலர் சட்டைக்கும் உஜாலா போடுறாங்களா என்ன?//

விடமாட்டீங்களே... போட்டோ கிடைக்கலைங்க.... நன்றி...

//Blogger Chitra said...
இரண்டு மனைவிகள் வைத்து இருப்பது, illegal இல்லையா? ஹி,ஹி,ஹி,ஹி....
கலக்கல் கவிதை.//

என்னாது இல்லீகலா... இது நல்லாயிருக்கே... நன்றி...

//Blogger அரசூரான் said...
வேட்டியும் சட்டையும் கிழியலாயா? எல்லாம் சரி
சாமி எங்க தூங்குவாரு? கீழ முக்கூட்டு குமரன் கோவிலும் கடைத்தெரு பிள்ளையார் கோயிலிலுமா?//

வாங்க தலைவரே... குமரனா இருந்துகிட்டு ஏங்க கடைத்தெரு புள்ளையார் கோயிலுக்கு போகப்போறாரு....

நன்றிங்க... ஞாபகம் இருக்குங்களா... அவரக்கொளத்து மாரியம்மன்...??

//Blogger அம்பிகா said...
:-))//

நன்றிங்க அம்பிகா...

//Blogger நேசமித்ரன் said...
நல்லா இருக்கு பாலாசி//

நன்றிங்க நேசமித்ரன் அய்யா...

//Blogger முகிலன் said...
எழுதுன கவிதையப் பாத்தா ஒன்னில்ல ரெண்டு வேனும் போலயே?
உஸ்ஸுக்கொட்ட நானும் நானும்..//

ம்ம்... வாங்க... என்னடா ஒருகை கொறையுதேன்ன பாத்தேன்... நன்றிங்க...

க.பாலாசி said...

//நாடோடி இலக்கியன் said...
நல்லாயிருக்கு பாலாசி.//

நன்றிங்க அண்ணா.... வணக்கமும்...

//Blogger சே.குமார் said...
ம்ம்ம்ம்...! எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேணும்.
சூப்பரு..!//

ஆமங்க... நன்றி...

//Blogger ச.செந்தில்வேலன் aid...
பல விசயங்களைத் தெரிஞ்சு / பார்த்து வச்சிருக்கீங்க போல...
சொல்லிய விதம் அழகு.//

நன்றிங்க செந்தில்....

//Blogger seemangani said...
சின்ன வீடு பெரிய வீடு ஜூப்பர்...பாலாசி...பயங்கரமா இருக்கு...//

பயங்கரமாவா... அவ்ளவு கொடூரமாவா இருக்கு... நன்றிங்க நண்பரே...

//Blogger ஹேமா said...
ம்ம்ம்...பாலாஜி !
நிறைவான இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.//

நன்றிங்க உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

//Blogger கலகலப்ரியா said...
நல்லாருக்கு பாலாசி..//

வாங்கக்கா... நன்றி...

//Blogger பா.ராஜாராம் said...
மிக அருமை பாலாஜி!
தனித்துவம்.//

நன்றிங்கய்யா...

//Blogger தாராபுரத்தான் said...
மானங்காக்குற வேஷ்டிய//ரொம்ப யோசித்து உள்ளீர்கள்.//

ம்ம்ம்... வாங்க அய்யா... நன்றி....

//Blogger புலவன் புலிகேசி said...
கிராமத்து தினசரியை அழகா சொல்லிட்டீங்க பாலாசி...புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றிங்க நண்பரே...உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

//Blogger ஜெகநாதன் said...
ஓ..!//

ம்ம்ம்... நன்றிங்க...

க.பாலாசி said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
அசத்தல்...பாலாசி//

நன்றிங்க ராதாகிருஷ்ணன் அய்யா...

//Blogger சைவகொத்துப்பரோட்டா said...
க(தை)விதை நல்லா இருக்கு பாலாசி.//

நன்றிங்க நண்பரே...

//Blogger Vidhoosh(விதூஷ்) said...
கொடுத்து வச்ச மகராசன்...:))
கவிதை நல்லா இருக்கு பாலாசி.//

நன்றிங்க அக்கா...

//Blogger பிரேமா மகள் said...
உன் போக்கே சரியில்லையே அண்ணாச்சி..
முதல்ல ஓடிப் போற கல்யாணம்..
அப்புறம்.. மனைவியின் அருமை..
இப்போ ரெண்டு பொண்டாட்டியா?
அண்ணாச்சி... தங்கச்சி.. ரெண்டு பேருக்கு சீர் செய்ய முடியாது.. பார்த்துக்கங்க ஆமாம்..//

வணக்கம் தங்கச்சி... பரவாயில்ல பிரிச்சி செய்யுங்க..

//Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வெளுத்த மானம்
அருமை..:))//

நன்றிங்க ஷங்கர்..

//Blogger காமராஜ் said...
தனித்துவமா இருக்கு நல்லா இருக்கு பாலாஜி//

நன்றிங்க காமராஜ் அய்யா...

//Blogger V.Radhakrishnan said...
எத்தனை நுணுக்கமான அரசியல் இது, அருமை பாலாசி.//

உண்மைதானுங்க... நன்றி வி.ராதாகிருஷ்ணன்...

//Blogger ராஜ நடராஜன் said...
இப்படியெல்லாம் சொன்னா எனக்கு கவிதை புரியும்.
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

எனக்கும்தாங்க... நன்றி... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

//Blogger சின்ன அம்மிணி said...
நல்லா இருக்கு கவுஜை :)//

வாங்க சின்னவங்களே...வணக்கம்...நன்றி....

//Blogger சேரல் said...
நல்ல மொழி!
-ப்ரியமுடன்
சேரல்//

மிக்க நன்றி சேரல்....

Priya said...

//அவனோட வெள்ளச்சட்டைக்கு மட்டும்....

ரெண்டுபேரும் உஜாலாத்தான்.....//....ம்ம் ... நல்லா இருக்கு!!!

ரிஷபன் said...

பிரமாதம்.. நல்லா ரசிச்சேன்

ரோஸ்விக் said...

பலாசீ.... ஒரு பொண்டாட்டிக்காரன, அவன் தான் பொண்டாட்டி துணியெல்லாம் துவைக்கனும்னு கிண்டல் பண்ணுவாங்க...

இந்த ரெண்டு பொண்டாட்டி டீலு நல்லா இருக்கே... :-))

ராமலக்ஷ்மி said...

:))!

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு பாலாஜி.

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

மானம் - அருமை - நடை - சொற்கள் - கருத்து அத்தனையும் அருமை - கிராமப்புற இயல்பான வாழ்க்கையை விவரித்த விதம் நன்று - ஆனால் இக்கால கட்டத்தில் கொஞ்சம் கடினம் இல்லையா இப்படி வாழ்க்கை நடத்துவது .....

நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா

Sadagopal Muralidharan said...

<>

என்ன விளையாடறீங்களா? பிச்சுப்போடுவேன் பிச்சு.

திராட்சைக்கடனுக்குப்பாராட்டுனதை மறந்துட்டீங்களா?
அடிக்கடி பாராட்டுவிழா நடத்துனா இதான் பிரச்னை.

Anonymous said...

யோசிக்க ஆரம்பிச்சிட்ட பாலாசி யோசிக்க ஆரம்பிச்சிட்ட...

"உழவன்" "Uzhavan" said...

எளிமையா சொன்னாலும் அருமையா சொல்லிடீங்க பாலாஜி

க.பாலாசி said...

//Priya said...
....ம்ம் ... நல்லா இருக்கு!!!//

வாங்க பிரியா... நன்றி...

//Blogger ரிஷபன் said...
பிரமாதம்.. நல்லா ரசிச்சேன்//

நன்றிங்க ரிஷபன்...

//Blogger ரோஸ்விக் said...
பலாசீ.... ஒரு பொண்டாட்டிக்காரன, அவன் தான் பொண்டாட்டி துணியெல்லாம் துவைக்கனும்னு கிண்டல் பண்ணுவாங்க...
இந்த ரெண்டு பொண்டாட்டி டீலு நல்லா இருக்கே... :-))//

ஓ.. உங்களுக்கு பிடிச்சா சரிதாங்க... நன்றி...

//Blogger ராமலக்ஷ்மி said...
:))!//

நன்றிங்க அக்கா...

//Blogger செ.சரவணக்குமார் said...
ரொம்ப நல்லாயிருக்கு பாலாஜி.//

நன்றி செ.சரவணக்குமார்...

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
மானம் - அருமை - நடை - சொற்கள் - கருத்து அத்தனையும் அருமை - கிராமப்புற இயல்பான வாழ்க்கையை விவரித்த விதம் நன்று - ஆனால் இக்கால கட்டத்தில் கொஞ்சம் கடினம் இல்லையா இப்படி வாழ்க்கை நடத்துவது .....
நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா//

இப்டியான வாழ்க்கை இப்பவும் எங்கூர்ல இருக்குங்க அய்யா... அதன் தாக்கம்தான் இது.... நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger Sadagopal Muralidharan said...
என்ன விளையாடறீங்களா? பிச்சுப்போடுவேன் பிச்சு.
திராட்சைக்கடனுக்குப்பாராட்டுனதை மறந்துட்டீங்களா?
அடிக்கடி பாராட்டுவிழா நடத்துனா இதான் பிரச்னை.//

ஓ.. சரிங்க...சரிங்க... மீண்டும் நன்றிகள்...

//Blogger தமிழரசி said...
யோசிக்க ஆரம்பிச்சிட்ட பாலாசி யோசிக்க ஆரம்பிச்சிட்ட...//

வாங்கக்கா..அப்டில்லாம் இல்லீங்க... நன்றி...

//"உழவன்" "Uzhavan" said...
எளிமையா சொன்னாலும் அருமையா சொல்லிடீங்க பாலாஜி//

மிக்க நன்றி உழவன்...

சென்னைத்தமிழன் said...

நம்ம பக்கம் கொஞ்சம் பாருங்க....
www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்

எல் கே said...

balaji

ithu anubavama illai futurela unga valkaila nadakaporatha

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

நல்லா இருக்குங்க... ரொம்ப இயல்பா இருக்கு..
படிக்கும் போதே மனசில படமா தெரியுது..

r.v.saravanan said...

இயல்பான எழுத்து

நல்லாஇருக்கு

க.பாலாசி said...

//சென்னைத்தமிழன் said...
நம்ம பக்கம் கொஞ்சம் பாருங்க....
www.egathalam.blogspot.com
- சென்னைத்தமிழன்//

வர்ரனுங்க...நன்றி...

//Blogger LK said...
balaji
ithu anubavama illai futurela unga valkaila nadakaporatha//

பதில் சொல்லிட்டன்னு நினைக்குறனுங்க... நன்றி...

//Blogger Ananthi said...
நல்லா இருக்குங்க... ரொம்ப இயல்பா இருக்கு..
படிக்கும் போதே மனசில படமா தெரியுது..//

நன்றி ஆனந்தி...

//Blogger r.v.saravanan kudandhai said...
இயல்பான எழுத்து
நல்லாஇருக்கு//

நன்றிங்க சரவணன்..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO