க.பாலாசி: நல்லவேளை...

Tuesday, May 4, 2010

நல்லவேளை...
முந்தைய வெள்ளி...

அருள்மிகு அங்காளபரமேஸ்வரி கோவில்,

சென்றவாரம் திருப்பத்தூர் அணேரி,

அமாவாசைதோரும் திருமணஞ்சேரி,

வழக்கம்போல்....

இடையன்குள பிள்ளையாரும், அரசமரமும்....


வாரயிதழில் கண்ணுற்றபடி

மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி...

ஆறுதலுக்காக...

சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட...

பிள்ளை வேண்டி

அவள் தினசரியில் கலந்துவிட்டது...


நல்லவேளை...

எனக்கு மாமனார் மட்டுமே.....
39 comments:

ரோகிணிசிவா said...

ம் , வலி !!!

அகல்விளக்கு said...

ம்ம்ம்ம்

வலி...

ஃபீல் பண்ண வச்சுட்டீங்க..

வானம்பாடிகள் said...

வலிக்கலைன்னு வலி! ஏன் பாலாசி அந்த ஃபோட்டோல இருக்கிறா மாதிரி யோசிச்சா இப்புடி எழுத வருமோ?

இராமசாமி கண்ணண் said...

எப்படி பாலாசி இது. யதார்த்மான வார்த்தகளில் வலியை உணர வைத்திருக்கிறீர்கள். அருமை.

D.R.Ashok said...

அட... நல்லாயிருக்கு பாலாசி.... :)

பிரபாகர் said...

வலியினை அழகாய் நாசுக்காய் வார்த்தைகளின் விளையாடி சொல்லியிருக்கிறீர்கள் இளவல்!

அருமை!

பிரபாகர்...

padma said...

ஏன் பாலாசி மாமனார் ஒண்ணும் சொல்ல மாட்டாரா என்ன ? அவங்களாம் slow killers போல.சொல்லாமலே கொல்லுவார்கள் .(எங்க மாம்ஸ் நல்லவர்பா) .

நல்லா இருக்கு பாலா

VELU.G said...

சில வேதனைகள் அனுபவிப்பவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் இந்த வேதனையை அனுபவிக்கமலே உணர்த்திவிட்ட கவிதை

காமராஜ் said...

அடடா இப்படியும் வலியைச்சொல்லலாமா ?
கனக்கிற கவிதை பாலா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்கு பாலாசி....

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு பாலாசி

ஜில்தண்ணி said...

அருமை அருமை
தொடர்ந்து எழுதுங்கள்

சே.குமார் said...

ம்ம்ம்ம்

வலி...

ஃபீல் பண்ண வச்சுட்டீங்க..

Chitra said...

மன வேதனை, கவிதையில் ......... ம்ம்ம்ம்.....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

ஹும்ம்.. :(

ஜில்தண்ணி said...

நம்ம பக்கம் ஜொஞ்சம் வாங்க

www.jillthanni.blogspot.com

முகிலன் said...

என்னவோ மாமியார் மட்டுமே குழந்தை இல்லை என்று கொடுமைப் படுத்துவது போல இருக்கிறது..

குழந்தை இல்லையென்றால் மாமியார் மட்டுமல்ல சொந்தத் தாயே தள்ளி வைத்துப் பார்க்கும் உலகம் இது..

ஹேமா said...

இரண்டு சிக்கலான பிரச்சனையை "சிக்"கென்று சொல்லியிருக்கீங்க பாலாஜி.
இயல்பான வார்த்தைகளைக் கூட்டிச் சொல்ல முடிகிறது உங்களால் !

seemangani said...

வலிக்காம வழிய சொல்லிடீங்க பாலாசி...நல்லா இருக்கு...

ஜெரி ஈசானந்தன். said...

யதார்த்தம் .......சொல்லும் வரிகள்.

புலவன் புலிகேசி said...

//குழந்தை இல்லையென்றால் மாமியார் மட்டுமல்ல சொந்தத் தாயே தள்ளி வைத்துப் பார்க்கும் உலகம் இது..//

அது மட்டுமில்ல தல..அவங்களுக்கே உள்ளுக்குள் வலி இருக்கும்..பாவம்.. மாமியாரெல்லாம் இரண்டாம் பட்சம்

பட்டாபட்டி.. said...

சூப்பர்ண்ணே...

ஆரூரன் விசுவநாதன் said...

nice one blalasi

Anonymous said...

பெண்ணின் நாடித் துடிப்பை பிடித்து பார்த்து எழுதியது போல இருந்தது....
உங்கள் எழுத்து நடை உங்கள் வரிகளுக்கு மேலும் உயிர் கொடுக்கிறது பாலாசி....

கமலேஷ் said...

கஷ்டமான வரிகள்தான்....

தஞ்சை.வாசன் said...

தன் வயிற்றுக்குள்ளும் கரு வளராதா? என்றும் ஏங்கும் பெண்ணின் மனதையும் வாழ்கையையும் உங்கள் வரிகளில் நன்றாக காட்டியுள்ளீர்கள்....

மிகவும் அருமை...

பிரேமா மகள் said...

மாமியார் மட்டுமல்ல.. குழந்தை இல்லைன்னா.. ஊரே கரிச்சுக் கொட்டும்.....

சந்தனமுல்லை said...

hmm..:-((

க.பாலாசி said...

நன்றி ரோகிணிசிவா...

நன்றி அகல்விளக்கு

நன்றி வானம்பாடிகள் அய்யா....
(அது யோசனை இல்லீங்க...நிம்மதியும் ஏக்கமும்...)

நன்றி இராமசாமி கண்ணன்...
(சும்மாதாங்க...)

நன்றிங்க அசோக் அண்ணா...

நன்றிங்க பிரபாகர் அண்ணா...

நன்றிங்க பத்மா..
(இருக்கலாம்...எல்லோரும் இல்லையே)

வாங்க சார்...வேலுசார்... நன்றி...

நன்றிங்க காமராஜ் அய்யா...

நன்றி.. டி.வி.ஆர்...அய்யா...

நன்றிங்க இர்ஷாத்...

நன்றிங்க கதிர் அய்யா...

நன்றி ஜில்தண்ணி

நன்றி சே.குமார்...

நன்றி சித்ரா...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி... ஆறுதலுக்காக... சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட... பிள்ளை வேண்டி அவள் தினசரியில் கலந்துவிட்டது... ///////

பலரின் வலி உங்களின் வார்த்தைகளில் தெறிக்கிறது . பகிர்வுக்கு நன்றி !

க.பாலாசி said...

நன்றி ♫ஷங்கர்..

நன்றி முகிலன்
(ஆகமொத்தம் பெண்...)

நன்றி Blogger ஹேமா

நன்றி seemangani

நன்றி ஜெரி ஈசானந்தன்.

நன்றி புலவன் புலிகேசி
(ம்ம்ம்...)

நன்றி பட்டாபட்டி..

நன்றி ஆரூரன் விசுவநாதன்

நன்றி தமிழரசி

நன்றி கமலேஷ்

நன்றி தஞ்சை.வாசன்

நன்றி பிரேமா மகள்
(ம்ம்ம்....)

நன்றி சந்தனமுல்லை

நன்றி பனித்துளி சங்கர்....

r.v.saravanan said...

வலி யை உணர வைக்கிறது உங்கள் வரிகள் பாலாசி

அம்பிகா said...

\\மாதமொருமுறை ஒரு மருத்துவச்சி... ஆறுதலுக்காக... சித்த வைத்தியமும், சில லேகியமும்கூட... பிள்ளை வேண்டி அவள் தினசரியில் கலந்துவிட்டது.\\
வலியை சொல்கிறது கவிதை

’மனவிழி’சத்ரியன் said...

பாலாசி,

உன்னைப் புரிந்துக்கொள்ள உன் எழுத்துகளே போதும்.

ஏன்யா, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் யோசிக்குற?

தேவன் மாயம் said...

பாலாசி!!! அழகு!! ரொம்ப இயல்பா இருக்கு!!!

அக்பர் said...

மிக அருமை பாலாசி.

thenammailakshmanan said...

பாலாசி ஒரு காலத்தில் அரச மரமும் இருந்தது. சுற்றச் சொல்லி...மேலும் நாக தேவதைகள்... காளஹஸ்தி போல....:(((

க.பாலாசி said...

//r.v.saravanan said...
வலி யை உணர வைக்கிறது உங்கள் வரிகள் பாலாசி//

நன்றிங்க சரவணன்...

//Blogger அம்பிகா said...
வலியை சொல்கிறது கவிதை//

நன்றிங்க அம்பிகா...

//Blogger ’மனவிழி’சத்ரியன் said...
பாலாசி,
உன்னைப் புரிந்துக்கொள்ள உன் எழுத்துகளே போதும்.
ஏன்யா, கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் யோசிக்குற?//

சும்மாதாங்க... நன்றிங்க சத்ரியன்...

//Blogger தேவன் மாயம் said...
பாலாசி!!! அழகு!! ரொம்ப இயல்பா இருக்கு!!!//

நன்றிங்க டாக்டர்...

//Blogger அக்பர் said...
மிக அருமை பாலாசி.//

நன்றி அக்பர்...

//Blogger thenammailakshmanan said...
பாலாசி ஒரு காலத்தில் அரச மரமும் இருந்தது. சுற்றச் சொல்லி...மேலும் நாக தேவதைகள்... காளஹஸ்தி போல....:(((//

ஓ... நன்றிங்க வருகைக்கும் கருத்திற்கும்....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO