க.பாலாசி: தண்டவாளங்களும் இன்னபிறவும்...

Wednesday, June 9, 2010

தண்டவாளங்களும் இன்னபிறவும்...

காட்டுக்கருவையையும், காட்டாமணக்கையும் கடந்துபோகையில் மெல்லியதொரு வாசம் அந்த ஒத்தயடிப்பாதையெங்கும் நிரம்பி நெலிந்துகிடக்கும். அநேகமாய் காட்டுமல்லியின் துயிலுடையும் தருணங்களில் இதுபோன்றதொரு மகத்துவம் வாய்க்கப்பெரும். இங்கே ஒத்தையடிப்பாதையென்பது தண்டவாளங்களருகே அமையப்பெற்றது என்பதை நினைவிற்கொள்க. அவ்வழியில் எருக்கம்பூக்கள் எத்தனையெத்தனை ‘மொட்’டென ஒலியுடன் மலர்ந்தாலும் அதன் மணத்தை நாசியுணர நுண்மதி வேண்டும். காட்டு மல்லிகைக்கு அப்படியில்லை. எந்த நரவை நாற்றத்தில் பூத்திருந்தாலும் எல்லாம் மறைத்து மணம்தரும். சில சமயங்களில் மிக நுட்பமாய் சுவாசித்தால் (சப்பாத்தி)கள்ளி பூக்கூட மிகுந்த மணம் பெற்றிருக்கும். நானும் அவ்வப்பொழுது முயன்றிருக்கிறேன், முடியவில்லை.

தண்டவாளங்களொட்டிய வழிதான் எத்தனை மலர்களை அனுதினமும் பெற்றுக்கொள்(ல்)கிறது. கவனித்திருக்கிறீர்களா? விரைந்து ஓடும் தொடர் (அ) புகை வண்டியின் சக்கரங்களுக்கு பழிப்பான் காட்டி தண்டவாள இடுக்குளில் தினம்தினம் மலர்ந்து மடியும் எத்தனையோ பூக்களிருப்பதை. யார் கண்களுக்கு அந்த ருசிதெரியும்? அதை ரசிக்கும் ஒரு இனிமைப்பொழுது எவருக்கேனும் வாய்த்திருக்கிறதா? முடிந்தால் ஒருபொழுதைக் கொடுத்து அதுகளை மகிழ்வுறச்செய்யுங்கள், முயன்றுபாருங்கள்.

நீங்கள் அவ்வாறு கழிக்கும் பொழுதுகளில் அவ்வழியே ஒரு ஓலைப்பாம்போ, கருந்தேளோ, கருவண்டோ, சாரைசாரையாய் கட்டெறும்பொத்த கூட்டங்களோ.....ஏதோவொன்று கடந்துபோகக்கூடும். பயம்வேண்டாம். இருமருங்கிலும் தண்டவாள கட்டைகளுக்கு இடையே நன்றாய் கூர்ந்து கவனியுங்கள். சூரியகாந்திப்பூவின் குழந்தைப்பருவத்தை நினைவுப்படுத்தும் அதேபோன்றேயொரு மலர் தெரியும். அதன் அழகை, மணத்தை அப்படியே உள்ளிழுத்து ஒருமுறை சுவாசியுங்கள் பார்ப்போம். அடடா இதுவல்லவோ வாழ்க்கை. பக்கத்தில் நீண்ட கழுத்துடைய அதேபோன்ற மலரும் இருக்கும். அது பனிரெண்டாம் வகுப்பில் ஹெர்பேரியம் சமர்ப்பிக்க பயன்படும். இது அதுவல்ல.

இதோ இன்னொன்றை பாருங்கள், கொத்தவரங்காய் போன்ற காய்களுடன் ஒரு செடி. அதிலும் மஞ்சள் நிறப்பூ, அதன் நடுவில் மகரந்தம் தாங்கிய நீட்சிகள். அதன் ஒவ்வொரு சிறுகிளை கனுவிலும் உற்றுப்பார்த்தால், எறும்பின் பின்புட்டம் போன்ற முடிச்சிகள்
தெரியும். இங்கேயே போன்சாய் மல்லிகைப்போன்ற மணமட்டுமில்லாமல் மலரும் வெளிர்நிறப்பூவும் இருக்கிறது. அதனுள்ளும் பாருங்களேன் எத்தனையெத்தனை சிறுசிறு பூச்சிகள். இதுகளுக்குகூட பசியென்பது இருக்கும்போல. அட அதென்ன பச்சை நிறத்தில் இந்த வடிவத்தில் ஒரு புழு அந்த புல்லின்மேல் ‘பின்னதை‘ முன்வைத்து ‘முன்னதை’ பின்வைத்து தவழும் குழந்தையாய் நகர்கிறது. அட..அட....

கொஞ்சம் இரண்டு அடிகள் நகர்ந்து வருவீர்களென்றால் எடுத்துக்காட்டுகளுக்கு எப்போதும் பெயர்பெற்ற தும்பைப்பூவை பார்க்கமுடியும். இந்த பூக்களுக்கு யார் சொட்டுநீலம் போட்டிருப்பார்கள் என்ற சந்தேகப்பார்வை உங்களைப்போலவே எனக்கும். அடுத்ததாய் அதோ தெரியும் பூண்டுச் செடிதான். சிறுவயதில் அடிபடும் காயங்களுக்கு அந்த கிளையை ஒடித்து அதிலொழுகும் பாலை தடவியதாய் ஞாபகம். சுர்ரென்று கொஞ்சம் எரிச்சல்லூட்டும், இரெண்டொருநாளில் காயம் பட்டுப்போகும். அதிலும் சின்னஞ்சிறு பூக்களிருப்பதை நீங்களும் கண்கூடாக பார்க்கமுடியும். இந்த பாதையைவிட்டு விலகிப்போகாதீர்கள் ஓரங்களில் சிலஇடங்கில் விளாமரங்களும், இலந்தை மரங்களும்கூட முற்களுடன் இருக்கும்.

கீழே சிந்திக்கிடக்கும் இந்த பூக்களைப்பார்த்துமா தெரியவில்லை இது மகிழம்பூவென்று. அதேதான் இந்த வாசனை முன்னமே உங்களிடம் சொல்லியிருக்குமே. சரிவிடுங்கள். அந்தப்பக்கம் போகவேண்டாம் அங்கேயிருப்பவை தாழம்பூக்கள். அந்தக்காட்டுக்குள் நல்லப்பாம்புகள் இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வெறுமனே காற்றுடன் கலந்துவரும் அந்த வாசத்தைமட்டும் சுவாசத்திற்காக விருந்தளியுங்கள். அதுவேபோதும். இப்படியேப்போனால் நிறைய காணக்கிடைக்கும், க்க்கும் அதற்குள் அந்த பயணியர் தொடர்வண்டி வந்துவிட்டது. போகலாம். ஒருநிமிடம், போகும்போது கொஞ்சம்
பூக்களுடன்கூடிய புஷ்படச்செடிகளை பறித்துச்செல்லுங்கள். அம்மியில் அரைத்து தலையில் தேய்த்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

அந்த கைகாட்டி மரத்தருகே மறைந்துநின்று பார்ப்பது யார்.? உங்களின் குழந்தைகளா!!!, அழைத்துவாருங்கள் அவர்களுக்கும் ஆசையிருக்கத்தானே செய்யும்...


49 comments:

vasu balaji said...

இருப்புப்பாதை இழந்தவை:
பசு மேய்ந்து போன புல்லின் வாசமும், அந்நாளைய கரிஎஞ்சின் சாம்பலின் அவித்த வாடையும் கூட, நனைந்த காலையில் உயர்தேக்கு இணைப்புக் கட்டைக்கும் ஒரு வாசம் வரும். இப்போதோ உன் எழுத்தின் வாசமும் சேர்ந்து! போய்ய்ய்ய்ய்யா:)

Ahamed irshad said...

புகை வண்டியின் சக்கரங்களுக்கு பழிப்பான் காட்டி தண்டவாள இடுக்குளில் தினம்தினம் மலர்ந்து மடியும் எத்தனையோ பூக்களிருப்பதை///

உண்மை..அருமையான இடுகை...

க ரா said...

திகட்டாத செந்தமிழை உங்கள் எழுத்துகளின் மூலம் அள்ளி பருகிக்கொண்டிருக்கிறேன் பாலாசி. உங்கள் நுண்ணிய அவதானிப்புகளில் மயங்கிபோகிறது என் மனசு. நன்றி பாலாசி.

AkashSankar said...

என் கிராமத்து விடுமுறை உணர்வுகளை தட்டி எழுப்பியது...

பிரபாகர் said...

ரொம்ப நல்லா எழுதறீங்க இளவல்...! வர்ணனை உங்களுக்கு சரளமாய் வருகிறது. வாழ்த்துக்கள்.

பிரபாகர்...

சத்ரியன் said...

//காட்டுமல்லியின் துயிலுடையும் தருணங்கள்//

//சிறுகிளை கனுவிலும் உற்றுப்பார்த்தால், எறும்பின் பின்புட்டம் போன்ற முடிச்சிகள் தெரியும்//

பாலாசி,

அழகான சொல்லாடல்கள் கொண்டு தண்டவாளம் ஒட்டிய ஒத்தையடிப் பாதையில் அழைச்சிக்கிட்டே போயி... பாதி வழியில வெட்டி விட்டுட்டு கிளம்பிட்டியே. இது அடுக்குமா உனக்கு!?

ஊருல உலாத்து உட்டுட்ட ராசா. நல்லா இரு.

பத்மா said...

ஆஹா பாலாஜி எத்தனை அருமையான இடுகை ! அந்த பூக்களெல்லாம் சொல்லித்தந்த
வாழ்க்கையல்லவா நாமும் வாழ்கிறோம்.
மீண்டும் ஒரு முறை ஒற்றை அடிப்பாதையில் நடக்க ஆசை வருகிறது.
மேன்மையான தமிழ் நடை .வாழ்த்துக்கள் பாலாசி

ரோகிணிசிவா said...

எப்பூடி சாமீ நீ மட்டும் இப்படி
கலக்கற ???? சூப்பரா இருக்குப்பா

Unknown said...

நல்லதொரு இடுகை பாலாஜி.

/அதுகளை/

இப்படியொரு சொல் உண்டா?

தாராபுரத்தான் said...

வணக்கம்ங்க..இதெயெல்லாம் பார்க்க இப்ப எங்கேங்க நேரம்.

Paleo God said...

//அந்த கைகாட்டி மரத்தருகே மறைந்துநின்று பார்ப்பது யார்.? உங்களின் குழந்தைகளா!!!, அழைத்துவாருங்கள் அவர்களுக்கும் ஆசையிருக்கத்தானே செய்யும்..//

உண்மைதான். கல்வி கற்கும் சுமையில் குழந்தைகள் இழப்பது அதிகமே!

அருமை பாலாசி. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சொல்லாடல்கள் அருமை

தமிழ் அமுதன் said...

கலக்குரே..!பாலாசி...!

Chitra said...

கவித்துவம் மிக்க அருமையான இடுகை...... மிகவும் ரசித்து வாசிக்க வைக்கும் எழுத்து நடை.... பாராட்டுக்கள்!

sathishsangkavi.blogspot.com said...

கலக்கல் நண்பரே....

அசத்தலான வரிகள்.... அசத்தலான கோர்வை..

அம்பிகா said...

மிக நுட்பமான ரசனை.
அருமையான எழுத்து நடை பாலாசி
எங்களையும் உங்களோடு அழைத்து சென்றுவிட்டீர்கள்.
அருமையான பதிவு பாலாசி.

ஈரோடு கதிர் said...

அடடா...

அசத்தல் பாலாசி

எங்கே பயபுள்ள எதுவுமே எழுதலைனு பார்த்தா... ம்ம்ம் கலக்கல்

(ஆமா... இதென்ன ரயில்ல ஊருக்குப் போனப்போ யோசிச்சதா)

Ashok D said...

மனம் மலர்ந்தது பாலாசி... பூ பார்த்தலே எனது பொடிவயதின் பேரின்பமாய் இருந்தது..

மலரினும் மென்மை மனம் பாலாசிக்கு வாய்த்திருக்கிறது :)

Mahi_Granny said...

எப்போதும் போல் ரசித்து வாசித்தேன். மாதம் ஒரு இடுகை என்பது உங்கள் கொள்கையா

dheva said...

இது ஒரு விதமான புரிதல் பாலாசி......! நம்மை சுத்திகரித்துக் கொள்ள..ஓராயிரம் விசயத்தை இயற்கை அள்ளிக் கொடுத்து இருக்கிறது. பாவம் செய்த மனிதர்களின் புலன்கள் அந்த திசை நோக்கி நகர்விதில்லை....

கைப்பிடித்து அழைத்து சென்று சுற்றிக் காண்பித்த ஒரு உணர்வு தோழரே......! உங்கள் எழுத்து.....அப்படியே.... அந்த உணர்வினை வாசிப்பவனின் தேகத்துக்குள் ஊற்ற்விட்டுத்தான் மறு வேலை பார்க்கிறது.

சில இடுகைகளை பொறுமையாய் இரவில் வீடு வந்து உள்வாங்கிக் கொள்கிறேன்....உங்களின் இடுகையும் தான் பாலாசி..... நெஞ்சு நிறைத்திருக்கிறது.... நீங்கள் காட்டிய பூக்களின் வாசம்!


சிம்ப்ளி சூப்பர் பாஸ்!

பிரேமா மகள் said...

ஊருக்கு போய்ட்டு வந்தீங்களோ?


இனி நானும் டிரைனில் போகும் போது, ஒரு ஸ்டேஷன் முன்னாடியே இறங்கி, தண்டவாளத்தில் நடந்து பார்க்கிறேன்...

சீமான்கனி said...

ரசனையை வந்த பகிர்வு நன்றி பாலாசி...பதிவை படிக்கும்போதே கேரளாவில் ஏன் மாமா வீடும் அதை சுட்டி உள்ள அந்த அழகும் ரயில் பயணமும், எனக்கான அந்த ஒத்தையடி பாதையும் கூடவே மாமா பொன்னும் ...நியாபகத்துக்கு வருது...அருமை வாழ்த்துகள் பாலாசி...

ஹேமா said...

பாலாஜி...எத்தனை ரசிப்பு.இயற்கை தொட்டு விளையாடும் உங்கள் விரல்கள்.ஒவ்வொரு வார்த்தைகளில் நின்று ரசித்தே நகரவைக்கிறீர்கள்.
தண்டவாளமும் அருகே வளர்ந்துகிடக்கும் எருக்கம்பூக்கள் கண்களுக்குள் விரிய நாசிவழி வாசனைகூட வருவதாய் ஒரு நினைப்பு.அற்புதம் பாலாஜி.

காமராஜ் said...

பாலாஜீ.....
வேடிக்கை பார்க்க நின்றவர்களையும் இழுத்துக்கொண்டு ஓடுகிறதே.இலைப்புழுவை இப்படி கணினிக்குறியில் கட்டமுடிகிற எழுத்துத்தேடல் ஆஹா..
பாலாஜி..
அப்படியே தண்டவாள ஓரங்களில் லயித்து நடந்துகொண்டே போகிறது எண்ணங்கள்.

புலவன் புலிகேசி said...

//நீங்கள் அவ்வாறு கழிக்கும் பொழுதுகளில் அவ்வழியே ஒரு ஓலைப்பாம்போ, கருந்தேளோ, கருவண்டோ, சாரைசாரையாய் கட்டெறும்பொத்த கூட்டங்களோ.....ஏதோவொன்று கடந்துபோகக்கூடும். பயம்வேண்டாம்// அதானே போட்டா உங்களத்தான போடப் போவுது. என்னா வில்லத்தணம்... நல்ல ரசனை பாலாசி..

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பாலாசி...நிறைவாய் இருக்கின்றது

அண்ணாமலை..!! said...

சும்மா.....!
ரசனையான மனசுங்க உங்களுக்கு!

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு பாலாசி.

நிகழ்காலத்தில்... said...

உங்கள் மனதின் ஆற்றல் அபாரம், சரியான திசையில் பயணிக்கிறது.

வாழ்த்துகள் பாலாசி

க.பாலாசி said...

நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி இர்ஷாத்
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி ராசராசசோழன்
நன்றி பிரபாகர் அண்ணா
நன்றி சத்ரியன்
நன்றி பத்மா
நன்றி ரோகிணிசிவா
நன்றி செல்வராஜ் ஜெகதீசன்
(இருக்கிறது. அவைகளை என்று பொருள்கொள்ளலாம்.)
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி ஷங்கர்
நன்றி டி.வி.ஆர்..சார்..
நன்றி தமிழ் அமுதன்
நன்றி சித்ரா
நன்றி சங்கவி
நன்றி அம்பிகா
நன்றி கதிர் அய்யா
(நேற்று தோன்றியதுதான்)
நன்றி அசோக் அண்ணா
நன்றி Mahi_Granny
நன்றி தேவா
(//பாவம் செய்த மனிதர்களின் புலன்கள் அந்த திசை நோக்கி நகர்விதில்லை....//
உண்மைதான்..)
நன்றி லாவண்யா
நன்றி சீமாங்கனி
நன்றி ஹேமா
நன்றி காமராஜ் அய்யா
நன்றி புலிகேசி நண்பா
(ஹா..ஹா..)
நன்றி ஆரூரன் அய்யா..
நன்றி அண்ணாமலை
நன்றி பா.ரா. அய்யா
நன்றி நிகழ்காலத்தில் சிவா..

ரிஷபன் said...

உங்க கூடவே போயிட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்

யுக கோபிகா said...

அருமையான இடுகை...

குடந்தை அன்புமணி said...

பாலாசி... கலக்கிறீங்க போங்க... ஆழ்ந்த உங்கள் ரசிப்புத்தன்மையூடே நானும் பயணித்தேன்... வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

என்ன ஒரு ரசனை! அருமை பாலாசி.

ஜெய்லானி said...

நல்ல ரசனையான பதிவு...

r.v.saravanan said...

வர்ணனை அருமை பாலாசி உங்கள் பதிவு அருமையாய் மலர்ந்திருக்கிறது

beer mohamed said...

http://athiradenews.blogspot.com/2010/06/blog-post_10.html
விமானத்தில் செல்பவரா நீங்கள் ? எச்சரிக்கை வீடியோ

ராமலக்ஷ்மி said...

மிக அருமை பாலாசி.

//கீழே சிந்திக்கிடக்கும் இந்த பூக்களைப்பார்த்துமா தெரியவில்லை இது மகிழம்பூவென்று. அதேதான் இந்த வாசனை முன்னமே உங்களிடம் சொல்லியிருக்குமே. சரிவிடுங்கள். அந்தப்பக்கம் போகவேண்டாம் அங்கேயிருப்பவை தாழம்பூக்கள். அந்தக்காட்டுக்குள் நல்லப்பாம்புகள் இருக்குமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வெறுமனே காற்றுடன் கலந்துவரும் அந்த வாசத்தைமட்டும் சுவாசத்திற்காக விருந்தளியுங்கள். அதுவேபோதும்.//

எங்களுக்கு இனிய தமிழ் விருந்து. அதுவே போதும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சபாஸ்...

பழமைபேசி said...

மகுடத்தில் மற்றொருமொரு மாணிக்கக்கல்!

க.பாலாசி said...

நன்றி ரிஷபன்
நன்றி யுக கோபிகா
நன்றி குடந்தை அன்புமணி
நன்றி அக்பர்
நன்றி ஜெய்லானி
நன்றி r.v.saravanan
நன்றி beer mohamed said...
(பார்த்தேன்.. நன்றி)
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி பட்டாபட்டி..
நன்றி பழமைபேசி அய்யா..

அன்புடன் நான் said...

உங்க ம(ன)ண வாசம் வியப்புட்டுகிறது... பாலாசி.
பகிவு மிக சிறப்பு.

அன்பேசிவம் said...

பாலாசி, அருமையாக இருக்கிறது உங்கள் பார்வை. தண்டவாளத்தை ஒட்டிய பூக்கள் சரி, தண்டவாளத்தின் இடையே பூத்த பூக்களை முகர்வதென்பது இயல்பாக சாத்தியமில்லை. :-). இருப்பினும் உங்கள் வழி ரசனையோடு அதையும் அனுபவிக்க முடிகிறது, நன்றி.

பூவை யார் பேசினாலும் வண்ணதாசனின் குரலிலேயே கேட்கிறதே?

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப அருமை அனுபவித்து எழுதியிருக்கீங்க பாலாஜி.. ஒவ்வொரு வார்த்தையும் மணக்கிறது.

க.பாலாசி said...

நன்றி கருணாகரசு
நன்றி முரளி
நன்றி உழவன்
நன்றி யுவராஜ்

கோமதி அரசு said...

//சூரியகாந்திப் பூவின் குழந்தைப் பருவத்தை நினைவுப் படுத்தும் அதே போன்றே ஒரு மலர் தெரியும். அதன் அழகை,மணத்தை அப்படியே உள்ளிருந்து ஒரு முறை சுவாசியுங்கள் பார்ப்போம் அடடா இது வல்லவோ வாழ்க்கை.//

மலர் தியானம் செய்த மகிழ்ச்சி கிடைத்தது, இந்த வரிகளை படித்த போது.

நானும் உங்களை மாதிரி பூக்கள்,பூச்சிகள் எல்லாவற்றையும் ரசிப்பேன்.
கடவுளின் அற்புத படைப்பை வியந்து கொண்டு இருப்பேன்.
நல்ல இடுகை.
வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

உங்க வீட்டுக்கு பக்கத்திலேயே தண்டவாளம் ஏதாவது இருக்கா..இவ்வளவு ரசிச்சி எழுதி இருக்கீங்க..வாழ்த்துக்கள்...நன்றாக வந்திருக்கிறது...

அ.முத்து பிரகாஷ் said...

அந்த கைகாட்டி மரத்தருகே பின்னால் நின்று கொண்டிருந்ததால் உங்கள் பதிவை படிக்க சரியான நேரத்தில் வர இயலாது போயிட்டு ...

"ஒரு புழு அந்த புல்லின்மேல் ‘பின்னதை‘ முன்வைத்து ‘முன்னதை’ பின்வைத்து தவழும் குழந்தையாய் நகர்கிறது. அட..அட.... "
தனனம்பிக்கை கொள்ள வைக்கும் வரிகள் !

தண்டவாளங்களில் என் இடைவெளிகள் குறைகின்றன தோழர் !

வருகிறேன் !

க.பாலாசி said...

நன்றி கோமதி அரசு
நன்றி கமலேஷ்
நன்றி நியோ..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO