‘ஐயோவெனின் யான் புலி அஞ்சுவலே;
அணைத்தனன் கொளினே, அகன்மார்பு - எடுக்கல்லேன்!
என்போற் பெருவிதிர்ப் புறுக. நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி -
வரைநிழற் சேர்க- நடந்திற் சிறிதே’
(புறநானூற்றில் 255வது பாடல்; பாடியவர் வண்பரணர்)
பாடல் விளக்கம்
ஐயோவென்று கூக்குரலிடின், புலி வந்துவிடுமோவென்று அஞ்சுகிறேன்.உன்னைச் சுமந்து செல்லலாம் என்றால் ரொம்ப கனமாக இருக்கிறாய். உன்னை இந்த கதிக்கு ஆளாக்கிய நியாயமற்ற கூற்றுவன் என்னைப்போலவே பெரிதாக வருத்தப்படட்டும். தூரத்தில், மலையடிவாரத்தில் நிழல் உள்ளது. என் வளைக்கையைப் பற்றிக்கொள், கொஞ்சம் நடப்போம். (போர் நிலத்தில் காயமுற்று மரணமெய்ய காத்திருக்கும் தலைவனைக் கண்ட தலைவி, தன்னிலையெண்ணி புலம்புவதாக அமையப்பெற்றது)
இங்கே என்மொழிக்காக என்னுள் அன்றாடம் ஒலித்திடும் வரிகள். இச்சூழ்நிலை வழியில் நம் கரங்களும், குரல்களும் இடையறாமல் இம்சிக்கும் என் தமிழை, நான் சுமந்தோடும் வழியில் கால்களையேனும் இடறாமல் இருக்கவேண்டுகிறேன்.
இருமனச்சரம் கோர்க்கும் திருமண நிகழ்வில் ஓர் ஆண்மகன் விரும்புது ஒரு பதிவிரதையாகத்தான் இருக்கவேண்டும். அவளுக்கும் அப்படியே. இருபாலிலும் யாரோவொருவர் முன்னமே புணர்ச்சியடைந்திருப்பின் முகச்சுளிப்பிற்கு ஆளாக நேரிடும். அதை இச்சமூகம், என்சமூகம் விரும்புவதுமில்லை. பிறகெப்படியிங்கே வன்புணர்ச்சிகளொத்து என்மொழி மட்டும் இடையறாது கற்பிழக்கிறது என்றுதான் தெரியவில்லை. பிறன்மொழிக் கொண்டு என்மொழியில் பாலினக்கலப்பை புகுத்துவது எவ்வகையில் சிறப்பினையெய்த வழிக்கொணரும்.
நம் வீட்டு தோட்டம் எழிலடைய நாமே விரும்பபாவிடின், அதன் தொண்மையை எத்துணை தலைமுறைவரை நம்மால் கொண்டுச் செல்லமுடியும்? பெற்றவளை புறந்தள்ளி, என் பூவனத்தைப் பயிர்மேயும் வேலியாக ஆட்கொண்ட கள்ளிச்செடியின் முலைகளில் வழிந்ததை, இதுவரையும் தாய்ப்பாலாக அருந்துவது சரிதானோ?
பள்ளியில் I am suffering from fever ல் தொடங்கிவைத்த இக்காய்ச்சலை எம்மருத்திட்டு குணப்படுத்த? என்பின் வரும் தலைமுறைக்கு எந்த மொழியை இதுவென் செம்மொழியாக சுட்டிவிட்டு போகப்போகிறேன். என்வீட்டில் நான் அடைகாத்த குஞ்சுகளுக்கு நிழல்தர கூரைகளுக்குப்பதில் சிலந்திப் பூச்சிகளின் எச்சங்களான ஒட்டடைகளையா விட்டுச்செல்லமுடியும்? கொட்டிக்கிடக்கும் இத்தனையெழுத்துக்களைவிடுத்து வேறெந்த மொழியுருவில் நான் என் மனதை, என் உணர்ச்சிகளை, என் மகிழ்ச்சி மற்றும் கண்ணீரை அடையாளப்படுத்திவிட முடியும். நிச்சயம் முடியாது.
இன்றையநாளில் தமிழ்நாட்டு பள்ளிகளில் 5ம் வகுப்பில் ஆங்கிலமொழி படிப்புத்திறன் 81 சதம் மாணாக்கர்களுக்கு இல்லையென்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதே ஆய்வோர் எத்துணை மாணாக்கர்களிடம் தமிழ் மொழியின் படிப்புத்திறனை சோதித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியாயின் 90 சதத்திற்குமேல் என்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழினை இலக்கணப்பிழையின்றி எழுதப்படிக்க தெரியாது என்பதை உணரலாம். இது என்சமுதாயத்தின் அடித்தளமிழந்த நிலை. அவரவற்கு வாழ்நிலை ஏற்றங்களின்பால் கொண்ட ஈர்ப்பும், நாகரீகத்தின்மிகை கொண்ட நாட்டமும் மற்றுமின்னபிற பொருளாதாரமெனும் ஆடையிழந்த கவர்ச்சியும் என்மொழியை துச்சமென மதிக்கச்செய்துவிட்டது..விடுகிறது...விடும். இப்படியாயின் என்வாழ்காலத்திற்குள் என்மொழியினை நானே எரித்துவிட்டு சாம்பலாவேன்.
பார்ப்போம் எவ்வளவுதூரம் ஊன்றுகோலினை காலெனயெண்ணி ஊனமாய் வாழ்வோமென்று...
**************
குறிப்பு:
1. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 23வதுஆண்டு விழா மலரில் வெளியான என் கட்டுரை.
2. தேர்ந்தெடுத்த விழாமலர் குழுவினருக்கும், ஊக்குவித்த பதிவர் வானம்பாடிகள் அய்யா அவர்களுக்கும் நன்றி.
3. அன்பு பதிவர்கள் பழமைப்பேசி, ஈரோடு கதிர், வானம்பாடிகள் ஆகியோரின் கட்டுரையும் இம்மலரில் வெளியாகியுள்ளது. அதுசமயம் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

32 comments:
வாழ்த்துகள் பாலாசி
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் அண்ணா...
படைப்புகள் அனுப்பிய நண்பரிகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!!!!
வாழ்த்துகள் பாலாசி:)
வாழ்த்துகள் பாலாசி..
வாழ்த்துகள் பாலாசி..
வாழ்த்துகள் பாலாசி.
|| ஊன்றுகோலினை காலெனயெண்ணி ||
நிஜமானை காலைவிட இதில் டக் டக் என்று சப்தம் வருமே அதனாலே காலை மடக்கிக் கட்டிக்கொண்டு கோல் ஊன்றி நடப்போர் நிறைய
பூங்கொத்து!
வாழ்த்துக்கள் பாலாசி.
வாழ்த்துகள் பாலாசி
மகிழ்ச்சி..மகிழ்ச்சி..மகிழ்ச்சி
வாழ்த்துகள் பாலாசி! :))
ஆஹா பாலாஜி,கதிர்,பாலாண்ணா. இன்னும் எத்தனைபேர்தான் ??? வாழ்த்துக்கள் பாலாஜி.
சந்தோசம் மக்கா...
முன்னமே கதிர் அண்ணா பதிவில் படிச்சேன் உங்கள் கட்டுரை அருமை...வாழ்த்துகள்...பாலாசி...
வாழ்த்துக்கள்!
கட்டுரைகளில் தமிழை நிரப்பிய அனைவர்க்கும் என் வாழ்த்துக்கள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துகள் பாலாஜி.சந்தோஷம்.
ரொம்ப சந்தோசமாய் இருக்கு. வாழ்த்துகள் பாலாசி!
வாழ்த்துக்கள் நண்பா...
ரொம்ப சந்தோசம் பாலாசி அண்ணே
வாழ்த்துக்கள்
தங்கள் வருத்தத்தை தெளிவாக பகிர்ந்து விட்டிர்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பாலாசி
முதலில் வாழ்த்துக்கள் பாலாசி..
இன்றையநாளில் தமிழ்நாட்டு பள்ளிகளில் 5ம் வகுப்பில் ஆங்கிலமொழி படிப்புத்திறன் 81 சதம் மாணாக்கர்களுக்கு இல்லையென்று ஒரு ஆய்வு கூறுகிறது. அதே ஆய்வோர் எத்துணை மாணாக்கர்களிடம் தமிழ் மொழியின் படிப்புத்திறனை சோதித்தார்கள் என்று தெரியவில்லை. அப்படியாயின் 90 சதத்திற்குமேல் என்தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழினை இலக்கணப்பிழையின்றி எழுதப்படிக்க தெரியாது என்பதை உணரலாம்//
மிகச் சரியாகச் சொன்னீர்கள்..
இதை நான் வழிமொழிகிறேன்.. ஏனெனில் எங்கள் இல்லங்களுக்கு அருகில் உள்ள பொருளாதார வசதியற்ற .,அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒரு பெண் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கில இலக்கணத்தில் தோல்வி யடைந்து விட்டாள் ..இதை என்ன சொல்ல??
வாழ்த்துகள் பாலாசி.
வாழ்த்துக்கள் பாலாசி
வாழ்த்தின அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி...
என் மனமார்ந்த வாழ்த்துகள்...
அருமையான கட்டுரை.. வாழ்த்துக்கள்.. :-))
உங்க கட்டுரையில்.... வெளிப்படும் ஆதங்கமும் ஆசையும் ... தமிழ் மீது உங்களுக்குள்ள பிடிப்பை காட்டுகிறது. மொழிழை இன்னும் பல நூறாண்டுகள் சிதைவின்றி கொண்டு செல்ல வேண்டுமாயின்.. சில தூண்டுதல்கள்தேவை மாணவரிடதே....
ஆக்க பூர்வ கட்டுரை மிக்க மகிழ்ச்சி!
(இது வரை நான் எழுதிய ஒரு கவிதையிலும் ஒரு ஆங்கில சொல்லையும் பயன் படுத்தியதில்லை)
தமிழ்நாடு அரசு கல்வித்துறை படித்து தெரிந்து கொள்ள வேண்டிய ஆய்வுக் கட்டுரை இது. அருமை.
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துகள் பாலாசி
Post a Comment