Saturday, October 9, 2010
இன்றிரவும்...
எல்லோருக்கும் தெரியும்
யார்தான் அறியாதவர்
காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்
எங்கும் கிடைக்காமற்போனால்
எப்போதுமில்லாத அக்ரஹாரம்
கடைத்தெரு செல்லும்போது மட்டும்
கிடைத்துவிடவாப்போகிறது....
யாசிப்பவளின் இடுப்பெலும்பில்
வெறித்திருக்கும் சிசுவிற்கு
இன்றிரவும் கிடைக்கலாம்....
வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.
.
Subscribe to:
Post Comments (Atom)
41 comments:
மனதை அதிர செய்கிறது பாலாசி இந்த கவிதை
படம் பார்த்து கவிதை எழுதுன்னு எங்க படிச்ச சாமி. கவிதை அவலம் முழுசும் அந்தப் பெண்ணின் முகத்தில். :((. மாடி மாடியா தாண்டுற மக்கா. நல்லா வா:))
அந்த புகைப்படம் வரிகளுக்கு வலி சேர்க்கிறது.
முதலில் போட்டோ பார்த்து மிரண்டு போய் விட்டேன் பாலாசி....! என்னன்னவோ உணர்வுகளை கிளறி விடுகிறது கையிலிருக்கும் சிசுவின் மிரட்சிப் பார்வை...மனசை ஏதோ செய்யும் படத்தை விட்டு முதலில் நகர மறுத்த மனதை இழுத்துப் பிடித்து வரிகளுக்குள் என்னை செலுத்தினால்.....
மனம் முழுதும் பரவிப்போன வலியை என்ன செய்ய பாலாசி?
எழுத்தாளான் தனக்குள் வாங்கிய வலியை வார்த்தைகளுக்குள் கொண்டு வந்து அதை வாசகனுக்கு பரவ செய்ய வேண்டும்.
பாலாசி....சர்வ நிச்சயமாய் உங்களின் எழுத்துகளில் கட்டுப்பட்டு நிற்கும் ஒரு வாசகனாய் பிரமித்து நிற்கிறேன்....!
//மாடி மாடியா தாண்டுற மக்கா. நல்லா வா:))//
repeat
இயலாமையின் வெளிப்பாடாய் ஒரு ஆழ்ந்த மூச்சு தவிர என்னால் ஏதும் இயலவில்லை
கவிதை சமூகத்தை எள்ளி நகையாடுகிறது ...
கவிதைக்கான படமா...
இல்ல..
படத்திற்கான கவிதையா..
அசத்தறீங்கப்பா...
//வேப்பெண்ணை வாசமும்
அதே உதிரமும்.//
varuntha seikirathu. kavithai arumai. vaalththukkal.
அற்புதமாய் இருக்கு அண்ண
புகைப்படம் வலிமை சேர்க்குது
எங்கோ இல்ல இங்கேயும் வலிச்சுக்கொண்டிருக்கிறது
பாலாசி,
சமூகத்தின் பிம்பம் உனது கவிதைக் கண்ணாடியால் உலகறிகிறது
குழந்தையின் மிரளும் பார்வைக்கு, வரிகள் வலு (வலி)சேர்க்கின்றன.
அருமையா இருக்கு பாலாசி.
மனதை நெகிழ வைத்த கவிதை...
கவிதைக்கேத்த புகைப்படம்......சமூக அவலத்தைப் படம் பிடித்திருக்கிறது உங்கள் கவிதை.....வாழ்த்துக்கள் பாலாசி.
சமூகத்தின் அவலத்தை வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் கவிதையாக
வார்த்தைகள் வதைக்கின்றன பாலாசி
ம்ம்ம்...வாழ்த்துக்கள் பாலாசி
ம்ம்...
பாலா நல்லா வந்துருக்கு ...
அவலம் எப்போது மாறும்?
கவிதையின் வலியை படம் உணர்த்துகிறது நண்பரே...
நல்லா இருக்கு பாலாசி
வறுமை கொடுமை.படமே கவிதையாயிருக்கு பாலாஜி !
படமும் கவிதையும், மனதை கனக்க வைக்கின்றன.
அன்பின் பாலாசி
கவிதை மனதின் வலியினைக் கூட்டுகிறது. படமோ மேன் மேலும்.
வேப்பெண்ணை வாசமும் அதே உதிரமும் ..... அடடா - வலிமை வாய்ந்த வரிகள்
நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா
அய்யா சொன்னதை ரிப்பீட்டறேன்.... அருமை பாலாசி.
பிரபாகர்...
மிக உருக்கம்.
Nice choice of words well written
அருமையான கவிதை மனதை அசைக்கும் வரிகள்!
ரொம்பவே வலிக்கிறது. பாலாசி
பாலாசி .... குழந்தையோடு இருக்கும் பெண்ணுற்கு உணவளிக்க மறுக்கும் தேசத்திலா(ஊரிலா) நாம் இருக்கிறோம்... ?
படம் ரொம்பப் பாதிக்குது. அந்தப் பெண்ணின் முகத்தில் தெரியும் பால்யம்..
கவிதையும் படமும் மனசை என்னவோ செய்கிறது.மிஞ்சுவது இயலாமையும் பெருமூச்சும் மட்டுமே.
அருமை பாலாசி!
ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்
நல்லா இருக்குது.. கவிதைப்படம்.!
அருமையான கவிதை. படிச்சப்புறம் ரொம்ப கஷ்டமா இருந்திச்சுங்க.
//காலையில் தோப்புத்தெரு
அடுத்து மேலவீதியும்
கலைஞர் காலனியும்//
பாலாசி,
நச்...கவிதை.
தமிழ்நாடே "கலைஞரின் காலனி" ஆட்சியில்
தானே இருக்கிறது.
ஒவ்வொரு இரவும்... கவிதை வலி சுமக்கிறது.
வலி!
படிக்கும்போது வலித்தது மனது
வந்திருந்து வாழ்த்திய, பாராட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..
மனம் முழுதும் ரணம்போல் உணர்ந்தேன்.
அதிரவைத்த கவிதை மனதை.
Post a Comment