க.பாலாசி: திருப்பதி - விமர்சனம்

Wednesday, August 5, 2009

திருப்பதி - விமர்சனம்

திருப்பதி விமர்சனம்னு மேல போட்டுட்டு கீழ லட்டு படம் போட்டா எப்படின்னு கேட்குறவங்களுக்கு, என்னோட பதில் இது அந்த திருப்பதி இல்ல, இந்த திருப்பதி.

புது பொண்டாட்டி வந்தா இப்படில்லாம் வாழனும், அப்படில்லாம் வாழனும்னு பேராசைப்பட்டு, கடைசியா.. ச்ச..ச்ச.. முதல்லையே ஏமாந்து போகும் கணவான்கள் போல... திருப்பதி போகப்போற பஸ் சும்மா ஜம்முன்னு புஸ்பேக் சீட்டு, இல்லன்னா செமி சிலிப்பர், சைடுல பேன் இந்த மாதிரில்லாம் இருக்கும்னு ஈரோடு பஸ் ஸ்டான்டுல சாயங்காலம் 6.3௦ மணியிலெர்ந்து காத்திருந்து 7.3௦க்கு வந்த பஸ்ஸ பாத்தவுடனே எல்லாக்கனவும் கலைஞ்சிடுச்சு.


பின்ன மேல உள்ள பஸ் கணக்கா ஒன்னு வந்தா எப்படி இருக்கும். அப்பதான் தெரிஞ்சது உரலுக்கு ஏத்த உலக்கதான்னு. ஏன்னா குடுத்த காசு 173 . இதுக்கு என்ன பிளைட்டா வரும்.

சரி எல்லாம் போகட்டும்னு ஏறி பஸ்ல உட்காந்தா நமக்கு குடுத்த சீட்டு பின்னாடி டயருக்கு மேல. என்ன கொடும சார் இது. ஏழே முக்காலுக்கு எடுத்த பஸ்சு காலைல ஆறு மணிக்கு போய் சேந்துடுச்சி. ஒரே ஆச்சரியம் எனக்கு. பாக்க பழசா இருந்தாலும் பில்டிங்தான் கொஞ்சம் வீக். ஆனா பேஸ் மட்டம் ஸ்ட்ராங்கு. நாம குடுத்த காசுக்கு இவ்வளவு தூரம் கொண்டாந்து விட்டாங்களேன்னு, திருப்பதி அழகை ரசிக்கலாம்னு பஸ்ஸ விட்டு இறங்குன இடமே சேறுசகதியுமா இருந்துச்சு. அடப்பாவிகளா இங்கயும் நம்ம அரசியல்வாதிகள் மாதிரிதானோன்னு நினைச்சுக்கிட்டே ஆட்டோ பிடிச்சு மலைஅடிவாரத்துக்கு போயி பல்லு வௌக்க எங்கடா இடம்னு பாத்தா, அங்க உள்ள நுழைவாயில்ட பைப்பு, லெட்டின் பாத்ரூம்லாம் கட்டி நீட்டா வைச்சிருந்தாங்க. இந்த இடம்லாம் மட்டும் இவ்வளவு நீட்டா இருக்கே எப்படின்னு விசாரிச்சா பக்கத்துல ஒரு போர்டு. அதுல திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களை வரவேற்கிறது என்று. ஒருவேள அவங்களோட பராமரிப்பால நல்லா இருக்குதுன்னு நினைக்கிறேன். நல்லவேல திருப்பதி நம்ம ஆளுக கையில கிடைக்காம போனது. ஏன்னா கூறுபோட்டு வித்துருப்பாய்ங்க. ஏழு மலையையும் ஆளுக்கு ஒன்னுன்னு ஒவ்வொரு பொண்டாட்டி புள்ளைகளுக்கும் பிரிச்சி குடுத்துருப்பாய்க. எம கிராதகனுங்க.

பதினஞ்சு பேருல யூத்துங்க எல்லாரும் பல்லு வௌக்க பிரஸ் எடுத்துகிட்டு போனோமே ஒழிய யாரும் பேஸ்ட் எடுத்துகிட்டு போகல. அப்பறம் என்ன இருக்கவே இருக்காங்க நம்ம ஆபிஸ் பெருசுங்க. அவங்க எல்லாரும் பெர்பெக்ட்டா வந்திருந்தாங்க. நமக்கு என்ன ஓசியில பிளிச்சிங் பவுடர் கெடைச்சா கூட பிரஸ்ல வைச்சு பீலா வுட்டுகிட்டே தேய்ப்போம்ல.

அதுக்கப்பறம் ஏற்கனவே பண்ன பிளான் படி கீழ்திருப்பதிலேர்து படியேறி மேல் திருப்பதிக்கு போக புறப்பட்டோம். மொத்த படிகளோட எண்ணிக்கை என்னவோ முவாயிரத்து ஐநூறு. மொவனே ஏறிப்பாத்தா தான தெரியும்.

முதல் படிய தொட்டு கும்பிட்டு ஏற ஆரம்பிச்சோம். கொஞ்ச தூரம் நல்லாதான் போனுது. அப்பறம் என்னமோ கொஞ்சம் கால்ல லேசா வலி. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு வேகமா நடந்து வந்ததுனால வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஏதோ இடையில சில பச்சை, மஞ்ச, நீலம்னு பாத்துகிட்டே போனதால கொஞ்சம்.. கொஞ்சம் கால்வலி தெரியல. ஆத்தாடி எத்தன கூட்டம் நடந்தே போவுது. எத்தனையோ மனுஷனுங்க, வயசானவங்க, வயசுக்கு வந்தவங்க, இளம் ஜோடிக இப்படி சொல்லிகிட்டே போவலாம். எல்லோருக்கும் ஏழுமலையான் மேல உள்ள பக்தியா, இல்ல வேறவொன்னான்னு தெரியல. ஆனா நடந்து போவனும்ங்கற ஆர்வம் மட்டூம் தெரிஞ்சுது. பரவால்ல பல பேர் கோவிந்தா, கோவிந்தான்னு கோஷம் போட்டுகிட்டே நடந்து போனாங்க. நானும் அப்பப்ப அவங்கல்லாம் சொல்றப்ப சேந்து சொல்லிகிட்டே போனேன்.

கொஞ்ச தூரம் படிகள் செங்குத்தா இருக்கும், கொஞ்ச தூரம் சமதளமான படிகளா இருக்கும். சுமாரா பஸ்ல மேல போனா ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஆகும். ஆனா நடந்து போனா போரவங்களோட உடல் ஆரோக்கியம், வயசு, நடை வேகம் இதைப்பொறுத்து கொஞ்சம் மாறுபடும். குறைந்தது ஐந்து மணிநேரம் ஆகும். அதிகபட்சம் எட்டு மணிநேரம் எடுத்துக்கலாம். அதுக்கு மேல ஆகும்னு நெனைக்குறவங்க நடந்து போகக்கூடாது. இடையிடையே ஐந்நூறு படிகளுக்கு ஒரு இடத்துல, கடைகள் இருக்கும். நமக்கு தேவையான உணவுப்பண்டங்கள், நொறுக்குத் தீனி, டீ, காபி, சில இடங்கள்ல டிபன் கூட கிடைக்கும். இதெல்லாம் சாப்பிட்டு வயித்துல சில மாற்றங்கள் வந்துச்சுன்னா அதற்கான வசதியும் (கழிப்பிடம்) இருக்கு. நமக்கு கலைப்பு தெரியாம இருக்க இதுபோல இடங்கள்ல (அதாவது கடைகள்ல) உட்காந்து போகலாம்.


அப்படி நடந்து போகும்போது 2ஆயிரத்து100 படிகளைக் கடந்தவுடன் குருவமண்படத்தை அடுத்து "காலி கோபுரம்' உள்ளது. இந்த இடத்துல தான் பாதசாரிகளுக்கான டோக்கன் ஒன்னு கொடுக்குறாங்க. அந்த டோக்கன் வாங்க கொஞ்சம் க்யூல நிக்கனும் கூட்டம் அதிகமா இருந்தா. அப்படி வாங்குறப்ப அவங்க நம்மளோட ஆட்காட்டி விரல்ரேகையை கம்யூட்டர்ல பதிவு பண்ணிப்பாங்க. அந்த டோக்கன் இருந்தா நமக்கு சில சலுகை கிடைக்கும். என்னன்னா மொட்டை போட எல்லோரோட போய் நிக்கனும் அவசியம் இல்ல. இப்படி பாதசாரிகளா வரவங்க மொட்ட போட்டுக்க தனி இடம் இருக்கு. அவங்களுக்குன்னே தனி லாக்கர் வசதி, சாப்பாடு வசதி எல்லாம் செஞ்சு குடுத்திருக்காங்க.

அதுக்கப்புறம் சாமி தரிசனம் செய்ய பொது தரிசன வழியில நிக்கனும்னு அவசியம் இல்ல. ஏன்னா பாதசாரிகளுக்குன்னு தனியா ஒரு வழி. அந்த வழியில போகும் போது கூட்டம் அதிகமா இருந்தா கொஞ்சநேரம் ஒரு பெரிய கூண்டுல அடைச்சு போட்டுருவாங்க. அப்பறம் தெரந்து விட்டுடுவாங்க. அதுக்கப்புறம்தான் நமக்கு லட்டு டோக்கன் கொடுப்பாங்க. நடந்து போறவங்களுக்க ஒரு லட்டு டோக்கன் சேத்து கொடுப்பாங்க. அதாவது தானா கிடைக்கிறது ஒன்று. நடந்துபோனா ஒன்னு. மொத்தம் ரெண்டு.

குறிப்பா சாமி தரிசனம் செய்ய போற எல்லாரும் செல்போன் கொண்டுகிட்டு போகக்கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லிடுறாங்க. அப்படி கொண்டுபோறவங்க செல்போன இடையிலேயே வாங்கி வச்சிப்பாங்க. சாமி கும்பிட்டு திரும்பி வந்துதான் வாங்கிக்கனும். எனக்கு தெரிஞ்சு பத்து வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு கட்டுபாடுகள் இல்லன்னு நினைக்குறேன். ஏன்னா அப்ப செல்போனே நம்மகிட்ட இல்ல.

அதையும் வாங்கிகிட்டு க்யூல நிக்க ஆரம்பிச்சம்னா சரியா ஒருமணிநேரத்துல சாமி பாத்துடலாம். கோயில் உள்ளர போனதுக்கு அப்பறம் கூட்டம் இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி கொஞ்சம் நெரிசல் அதிகமா இருக்கும்.



ஆனா ஏழுமலையானை ஒரு ௨0 செகன்ட் நல்லா பாக்கலாம். நான் இன்னும் கொஞ்சம் கூடுதலாவே பாத்தேன். இவ்வளவு கஷ்டங்களையும் மீறி ஏழுமலையானை பாக்கும்போது நமக்கு கிடைக்கிற பரவசமே தனிதான். அந்த நேரத்துல நம்ம மனசுக்கு கிடைக்கிற ஆனந்தத்துக்கு அளவே இல்லன்னுதான் சொல்லனும். இன்னும் கொஞ்ச நேரம் பாக்க முடியாதான்னு மனசுல ஒரு ஏக்கம் உண்டாயிடும்.

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே



•••••••••••••

19 comments:

வால்பையன் said...

//ஏழு மலையையும் ஆளுக்கு ஒன்னுன்னு ஒவ்வொரு பொண்டாட்டி புள்ளைகளுக்கும் பிரிச்சி குடுத்துருப்பாய்க. எம கிராதகனுங்க.//


அப்படியும் முடியாம அரசியல் பேசிட்டிங்களே தல!

வால்பையன் said...

//மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா//

ட்ரெஸ் போட்டு போனிங்களா இல்லையா!?
வரும்போது எல்லாம் பத்திரமா இருந்ததா!?

***
ஒரு நாத்திகனால வேற என்ன கேட்க முடியும் சொல்லுங்க!

Unknown said...

ஏழு கொண்டல வாடா... வேங்கட ரமணா.... கோயிந்தா.... கோயிந்தா.....

priyamudanprabu said...

அப்பதான் தெரிஞ்சது உரலுக்கு ஏத்த உலக்கதான்னு. ஏன்னா குடுத்த காசு 173 . இதுக்கு என்ன பிளைட்டா வரும்.


////

ஹா ஹா
நல்லாயிருக்கு உங்க புதுமொழி

சரவணகுமரன் said...

உங்க அனுபவத்தை நல்லா சொல்லி இருக்கீங்க... :-)

சரவணகுமரன் said...

தலைப்ப பார்த்து அஜித் படம்ன்னு பயந்திட போறாங்க

க. தங்கமணி பிரபு said...

அழகான பதிவு பாலாஜி! நடந்தே போன உங்கள் வீரத்துக்கு ஒரு வீர இளைஞன் ப்ளாக் விருது! பக்தி பாட்டெல்லாம் கலக்கறீங்க பக்தி ப்ளாக்கர் விருது ஒன்று! லட்ட படமா மட்டும் போட்டதால அல்வா ப்ளாக்கர் விருது ஒன்று! பதிவு நல்ல flow, அப்பிடியே வாங்க! வாழ்த்துக்கள்.

Cable சங்கர் said...

தரிசனமெல்லாம் நல்லா இருந்திச்சு போலருக்கு..:)

ஈரோடு கதிர் said...

//ஏதோ இடையில சில பச்சை, மஞ்ச, நீலம்னு பாத்துகிட்டே போனதால கொஞ்சம்.. கொஞ்சம் கால்வலி தெரியல.//

ம்ம்ம்ம் தெரியாது.. தெரியாது...

சாமி கண்ண குத்திடும்...

பாலாஜி அது என்ன சந்தடி சாக்கிலே
நம்மூரு பாலிடிக்ஸ போட்டு பின்னி பெடலெடுக்கறது.

மொத்த பதிவும் எக்சலண்ட் பாலாஜி...
அருமையான பதிவு
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

தமிழ்மண ஓட்டுப்பட்டையை இணையுங்கள்

James Rajendran said...

(ஒரு நாத்திகனால வேற என்ன கேட்க முடியும் சொல்லுங்க!)

Ha Ha Ha Ha Ha

SAME BLOOD

-James Rajendran / CBE

க.பாலாசி said...

வால்பையன் said...
அப்படியும் முடியாம அரசியல் பேசிட்டிங்களே தல!

என்ன பண்றது தலைவா, ஜென்மத்தோட பொறந்தது எதால அடிச்சாலும் போகாதும்பாங்களே. அதுமாதிரிதான்.

வால்பையன் said...
// ட்ரெஸ் போட்டு போனிங்களா இல்லையா!?
வரும்போது எல்லாம் பத்திரமா இருந்ததா!?
***
ஒரு நாத்திகனால வேற என்ன கேட்க முடியும் சொல்லுங்க!//

ட்ரெஸ்சோட தான் வந்தேன், ஆனா பாக்கெட்லதான் ஒன்னுமில்ல.

நன்றி தங்களின் வருகைக்கு.

க.பாலாசி said...

லவ்டேல் மேடி said...
// ஏழு கொண்டல வாடா... வேங்கட ரமணா.... கோயிந்தா.... கோயிந்தா.....//

நன்றி தங்களின் வேண்டுதலுக்கு.

பிரியமுடன் பிரபு said...
// ஹா ஹா
நல்லாயிருக்கு உங்க புதுமொழி//

ஹி ஹி எல்லாம் அனுபவம்தான்.

சரவணகுமரன் said...
// உங்க அனுபவத்தை நல்லா சொல்லி இருக்கீங்க... :-)//

நன்றி தங்களின் முதல் வருகைக்கு.

//தலைப்ப பார்த்து அஜித் படம்ன்னு பயந்திட போறாங்க//

அதனாலதான் மேலேயே லட்டு படத்தை போட்டுட்டேன்.

க.பாலாசி said...

K. Thangamani Prabu / க. தங்கமணி பிரபு said...//அழகான பதிவு பாலாஜி! நடந்தே போன உங்கள் வீரத்துக்கு ஒரு வீர இளைஞன் ப்ளாக் விருது! பக்தி பாட்டெல்லாம் கலக்கறீங்க பக்தி ப்ளாக்கர் விருது ஒன்று! லட்ட படமா மட்டும் போட்டதால அல்வா ப்ளாக்கர் விருது ஒன்று! பதிவு நல்ல flow, அப்பிடியே வாங்க! வாழ்த்துக்கள்.//

வாருங்கள் அன்பரே. இத்தன விருத கொடுத்தா எப்புடி. விருது, விருதுன்னு சொல்லிட்டு கடைசில நீங்களும் அல்வா கொடுத்துட்டீங்களே தல.


Cable Sankar said...
//தரிசனமெலலாம் நல்லா இருந்திச்சு போலருக்கு..:)//

ஆமா, தலைவா, நல்ல தரிசனம், எல்லாமே. நீங்க மட்டூம், பெங்களுரு, குற்றாலம்னு போயி எல்லா கலரையும் கவர் பண்றீங்கல்ல.

க.பாலாசி said...

கதிர் - ஈரோடு said...
//ம்ம்ம்ம் தெரியாது.. தெரியாது...
சாமி கண்ண குத்திடும்...//

ஹா..ஹா... அதான் மொட்ட போட்டோம்ல. அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு.


//பாலாஜி அது என்ன சந்தடி சாக்கிலே
நம்மூரு பாலிடிக்ஸ போட்டு பின்னி பெடலெடுக்கறது.//

என்னசார் பண்றது. முதல்ல அவங்கள நிறுத்த சொல்லுங்க, நான் நிருத்துறேன்.

//மொத்த பதிவும் எக்சலண்ட் பாலாஜி...
அருமையான பதிவு
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.//

நன்றிங்க சார், எல்லாம் தங்களின் உந்துதல்தான்.

//தமிழ்மண ஓட்டுப்பட்டையை இணையுங்கள்//

தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழி. இரண்டொரு நாளில் இணைத்துவிடுவேன்.


James Rajendran said...
// (ஒரு நாத்திகனால வேற என்ன கேட்க முடியும் சொல்லுங்க!)
Ha Ha Ha Ha Ha
SAME BLOOD
-James Rajendran / CBE//

நன்றி James Rajendran / CBE உங்களின் வருகைக்கு.

குடந்தை அன்புமணி said...

பாலாஜியை பார்த்து வந்த பாலாஜி...

திருப்பதி போய் வந்தா திருப்பம்னு பாட்டு கேட்டேன்... திருப்பம் வந்தா சொல்லுங்க...

Jawahar said...

"நல்லவேல திருப்பதி நம்ம ஆளுக கையில கிடைக்காம போனது. ஏன்னா கூறுபோட்டு வித்துருப்பாய்ங்க. ஏழு மலையையும் ஆளுக்கு ஒன்னுன்னு ஒவ்வொரு பொண்டாட்டி புள்ளைகளுக்கும் பிரிச்சி குடுத்துருப்பாய்க."

மேற்சொன்ன வரிகளை ரொம்ப ரசித்தேன். திருப்பதிக்கு இதுவரை நடந்து போனதே இல்லை. அப்படிப் போகிறவர்களுக்கு சிறப்பு தரிசன டோக்கன் தருகிறார்கள் என்பதும் இப்போதான் தெரிந்தது. நல்ல கட்டுரை, நன்றி.

http://kgjawarlal.wordpress.com

க.பாலாசி said...

குடந்தை அன்புமணி said...
// பாலாஜியை பார்த்து வந்த பாலாஜி...
திருப்பதி போய் வந்தா திருப்பம்னு பாட்டு கேட்டேன்... திருப்பம் வந்தா சொல்லுங்க...//

கண்டிப்பா. போகிற வழியில்(நேர்வழி) திரும்பாம இருந்தா சரிதான்.

நன்றி தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

Jawarlal said...
//மேற்சொன்ன வரிகளை ரொம்ப ரசித்தேன். திருப்பதிக்கு இதுவரை நடந்து போனதே இல்லை. அப்படிப் போகிறவர்களுக்கு சிறப்பு தரிசன டோக்கன் தருகிறார்கள் என்பதும் இப்போதான் தெரிந்தது. நல்ல கட்டுரை, நன்றி.//

மிக்க நன்றி தோழரே. தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்தினால் மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்...உள்ளவருக்கு..
அத்தனை படி ஏறி
அல்லல் தொல்லை பட்டு..
அம்மா நேரம் வரிசேலே(நெறைய பேர் எவ்ளோ நேரம்)..
சில விநாடி சிலை பாத்து..
ஒந்து ஒந்துன்னு தள்ளூ தள்ளூன்னு தள்ளி..
கடைசிலே ரெண்டு லட்டு..

நாத்திகமே பரவாயில்லே...

க.பாலாசி said...

//Anonymous said...
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்...உள்ளவருக்கு..
அத்தனை படி ஏறி
அல்லல் தொல்லை பட்டு..
அம்மா நேரம் வரிசேலே(நெறைய பேர் எவ்ளோ நேரம்)..
சில விநாடி சிலை பாத்து..
ஒந்து ஒந்துன்னு தள்ளூ தள்ளூன்னு தள்ளி..
கடைசிலே ரெண்டு லட்டு..
நாத்திகமே பரவாயில்லே...//

தங்களின் நோக்கம் லட்டு என்பதாய் இருந்தால் உங்களின் பின்னூட்டத்தை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

சிறிய விண்ணப்பம், குறைந்தபட்சம் தங்களின் பெயரிலேயே பின்னூட்மிடலாமே.

நன்றி தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO