க.பாலாசி: கீர்த்தனாவும் அவளது தங்கையும்.....

Monday, August 24, 2009

கீர்த்தனாவும் அவளது தங்கையும்.....


வேலையே செய்யாமல் பொழுதை போக்கும் ‘வெள்ளி’ முளைத்து
9 மணியாகியும் அலுவலகத்தை பூட்டாத, முதலாளித்துவம் எனும் ‘சனி’ தொலைந்தால்தான்
சரக்குடன் உறவாடும் ‘ஞாயிறு’ பிறக்கும் (அடடே ஆச்சர்ய குறி...)

- எனும் தொ.மு.க. (தொழிலாளர் முன்னேற்றக் கழகம்) தலைவரின் வாக்கிற்கிணங்க சனியன்று இரவு அடித்த சரக்கு மறுநாள் காலை 10 மணிவரை மயக்கத்தை தந்தது.

எழுந்தவுடன் லேசாக தலையை வலிக்க, வண்டியை எடுத்துக்கொண்டு MSM BAKKERY செனறேன். அங்கே எனக்கொரு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. என்னவென்றால் என்காதலி அங்கே முன்னமே வந்து அமர்ந்திருந்தாள். இன்னொன்றை காண்கையில் பேரதிர்ச்சியாய் இருந்தது. ஏனென்றால் அவளின் தந்தையும் கூடவே இருந்தார். உள்ளே நுழைந்தவுடன் அவள் என்னை பார்த்துவிட்டாள். நானும் கண்களாலேயே அவளிடம் பேசிவிட்டு அவளின் பின்னாலிருந்த இருக்கையில் அமர்ந்தேன். முதல்நாள் அடித்த சரக்கின் வாடை கொஞ்சம் எனக்கே ‘இன்பமாய்’ இருக்க, அது அடுத்தவர்களையும் பாதித்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், ஒரு மிட்டாயை வாங்கி சுவைத்துக்கொண்டே, இன்றைக்கு இவள் இங்குவர காரணம் என்ன? ஏன் அவளது தந்தையும் கூட வந்துள்ளார்? என்பன போன்ற கேள்விகளுடன் ஸ்ட்ராங்கா ஒரு டீ சொன்னேன். அதற்குள் இருவரும் எழுந்து சென்றார்கள். அவளது தந்தை டீக்கான பணத்தை cash counter ல் கொடுக்க அவள் என்னை பார்த்தாள். நானும் முளைவிடாத தலைமுடியை தடவியபடியே கொஞ்சம் வழிந்தேன். பின்னர் இருவரும் பைக்கில் கிளம்பினர்.

சொன்ன டீ இன்னும் வரவில்லையே என்ன ஆதங்கத்தில் மறுபடியும் திரும்பி டீ போடுபவரைப்பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது அவளின் HANDBAG-யை அங்கேயே விட்டு சென்றுவிட்டாள் என்று...சரி இப்பதானே செல்கிறார்கள், நாம் டீயைக் குடித்துவிட்டு பிறகு செல்லலாம் என்றிருந்தேன். ஏனென்றால் அவளது தந்தைதையின் அதிகப்பட்ச வேகமே நாற்பது கிலோ மீட்டர்தான் என்று எனக்கு தெரியும். எத்தனை இளைஞர்கள் பின்தொடர்ந்தாலும் அவரின் வேகம் அதுதான், அப்படி ஒரு பொதுசேவைப் புரியும் புண்ணியவான்.

டீயை குடித்துவிட்டு எனது பைக்கை எடுக்க முற்பட்ட போது அந்த பகுதியில் காவல்துறையின் நடமாட்டம் சற்று அதிகமாய் இருந்தது. என்னவென்று தெரியவில்லை. என்னிடமோ ஓட்டுனர் உரிமம் இல்லை. இன்னும் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அவள் வீட்டினை அடைய முக்கிய சாலைகளின் வழியேதான் செல்ல வெண்டும் என்பது நிபந்தனைக்குட்பட்ட விதி. குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை கடந்துதான் செல்லவேண்டும்.
அப்போதே எனக்குள் கொஞ்சம் ஐயம் உண்டானது. எங்காவது மாட்டி, வாயை ஊதச்சொன்னால்... அவ்வளவுதான்...மானம் என்பது மலையேறிவிடுமே என்ற பயம்வேறு.

வேறு வழியில்லாமல் பைக்கை எடுத்துகொண்டு புதிதாய் திருடும் திருடனைப்போல விழித்துக்கொண்டே சென்றேன். சரியாக G.H. SIGNAL வரை சென்றிருந்தேன். பின்னால் போக்குவரத்து காவல்துறையினர் இருவர் வேகமாக தங்களது பைக்கில் வந்துகொண்டிருந்தனர். எனக்கு இன்னும் வியர்க்க தொடங்கிவிட்டது. என்ன செய்வது என்றறியாமல் மிகவும் வேகமாய் ஆட்சியர் அலுவலகத்தை கடந்துவிட்டேன். இன்னும் சற்று தொலைவில்தான் அவளின் வீடு இருக்கும் பகுதி. பயம் சற்றே தொலைந்தது.
நான் சற்று வேகமாக வந்த நேரத்தில் என்காதலியும் அவளது தந்தையும் பின்தங்கிவிட்டனர். இடையிடையே சிக்னலில் வேறு மாட்டியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு அந்த ஞானம் பிறந்தது. என்னவென்றால் அவளுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்று அவள் முன்னமே கூறியிருக்கிறாள். இந்த முறையாவது அவளது தங்கையை பார்த்துவிடவேண்டும் என்று வேகமாக அவளது வீட்டினை அடைந்து, அழைப்பு மணியை அழுத்தினேன். கதவு திறந்தது, நான் நினைத்தபடியே அவளது தங்கைதான் கதவைத்திறந்தாள். நைட்டியில் இருந்தாலும், அவளை விட அழகு. ‘உங்க கீர்த்தனா அக்கா இந்த HANDBAG-யை டீக்கடையில் விட்டுட்டு வந்திட்டாங்க’ன்னு சொன்னேன். அதற்கு அவள் ‘போங்க தம்பி எனக்கு வெட்கமா இருக்கு, கீர்த்தனா என் பொண்ணு’ அப்படி என்றார்.


அடப்பாவி இந்த ஆன்டிய பார்த்தா இவ்வளவு வழிந்தோம் என்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, சரிங்க இந்தாங்க உங்க பொண்ணு BAG என்று நீட்ட, ‘இது என் பொண்ணொடது இல்லையெ’ என்றார்கள்.
ம்கூம்ம்... மொத்தமும் சொதப்பலா? என நினைத்துக்கொண்டே, அப்ப ‘இந்த BAG யாரோடது?’ என்று எண்ணத் தொடங்கினேன்.அப்போதுதான் புரிந்தது, முதல் நாள் அடித்த மதுவின் போதை இன்னும் குறையவில்லை என்று....


*********
படித்துவிட்டீர்களா உங்களது வாக்கினை தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் பதிவிடவும்.***

18 comments:

கதிர் - ஈரோடு said...

//வேலையே செய்யாமல் பொழுதை போக்கும் ‘வெள்ளி’ முளைத்து
9 மணியாகியும் அலுவலகத்தை பூட்டாத, முதலாளித்துவம் எனும் ‘சனி’ தொலைந்தால்தான்
சரக்குடன் உறவாடும் ‘ஞாயிறு’ பிறக்கும் (அடடே ஆச்சர்ய குறி...)//

இரு...இரு.... தமிழினத் தலைவர்கிட்டே சொல்லி வைக்கிறேன்...


என்கியோ தப்பு நடக்குது பாலாஜி...
அன்னிக்கு துபாய்காரர் பொண்ட்டாடிய பார்க்க போனீங்க, இன்னைக்கு காதலியோட அப்பாவோட பொண்ட்டாடிய பார்த்து வகை தொகை இல்லாம வழியறீங்க....


பாத்து தம்பி... இதேமாதிரி தப்பு தண்டா பண்ண வேணாம்...

ஏம்பா... நைட் அடிச்ச சரக்குக்கு அடுத்த நாள் காலையில போலீஸ் புடிக்குதா....

என்னவோ மொட்டபோட்டதுக்கப் புறம் என்னன்னெவோ நடக்குது... ம்ம்ம் நடக்கட்டும்...நடக்கட்டும்

ஹேமா said...

பாலாஜி,கண்ணு மண்ணு தெரியற அளவுக்குத் தண்ணியடிச்சா ஒரு குழப்பமும் வராது இல்ல.

Cable Sankar said...

பாலாஜி.. தண்ணியில எழுதினீங்களா..?

சந்ரு said...

// Cable Sankar said...
பாலாஜி.. தண்ணியில எழுதினீங்களா..?//தண்ணியில எழுதினதாலதான் இப்படி இருக்கு போல...

தண்ணியில எழுதினா நிரந்தரமில்ல...

இருந்தாலும் கலக்கல் இடுகைதான்..

seemangani said...

அன்மை செய்தி:
போதைல யாரோ ஒருத்தரோட பைக் தள்ளிட்டு வந்ததால உங்கள மாமா வந்து வீட்டுக்கு குப்பட்டு போய்ட்டதா கேள்வி போட்டேன் உண்மையா????

பழமைபேசி said...

நடக்கட்டு நடக்கட்டு...இஃகி!

களப்பிரர் - jp said...

super !!where is the second part ?

லவ்டேல் மேடி said...

// இந்த முறையாவது அவளது தங்கையை பார்த்துவிடவேண்டும் //


ஆரம்பிச்சுட்டியா ராசா....

// அதற்கு அவள் ‘போங்க தம்பி எனக்கு வெட்கமா இருக்கு, கீர்த்தனா என் பொண்ணு’ அப்படி என்றார். //


நீயும் வால் பையன் மாதிரி ஆயிட்டியே.. ....??

// அப்ப ‘இந்த BAG யாரோடது?’ என்று எண்ணத் தொடங்கினேன் //


அய்யய்யோ.... அப்போ .. சுட்டுட்டியா......!! உன்கிட்ட கொஞ்சம் உஷாராத்தேன் இருக்கணும்...!!

வால்பையன் said...

சொல்லவேயில்லை!
இது வேற நடக்குதா!?

சப்ராஸ் அபூ பக்கர் said...

ஓஹோ!.... தண்ணியா?... பரவா இல்லையே.... நல்லாத் தான் தண்ணி பாடம் புகட்டுது....

வாழ்த்துக்கள்....

பிரபா said...

பாலு பாலு நீர் நம்ம பையன்யா !!அசதுமையா அசத்தும்...
எங்க ஏரியாவில ... V.S.O.A.

க. பாலாஜி said...

கதிர் - ஈரோடு said...
// இரு...இரு.... தமிழினத் தலைவர்கிட்டே சொல்லி வைக்கிறேன்...//

யாரைத் தமிழினத் தலைவர் என்று கூறுகிறீர்கள்..?

//என்கியோ தப்பு நடக்குது பாலாஜி...
அன்னிக்கு துபாய்காரர் பொண்ட்டாடிய பார்க்க போனீங்க, இன்னைக்கு காதலியோட அப்பாவோட பொண்ட்டாடிய பார்த்து வகை தொகை இல்லாம வழியறீங்க....// பாத்து தம்பி... இதேமாதிரி தப்பு தண்டா பண்ண வேணாம்...//

அப்படியா...எனக்கென்னவோ எல்லாமே சரியா நடக்கிறது மாதிரியாத்தான் தெரியுது..

// ஏம்பா... நைட் அடிச்ச சரக்குக்கு அடுத்த நாள் காலையில போலீஸ் புடிக்குதா....//

சரி விடுங்க..பொதுவாழ்க்கையில இதெல்லாம் சகஜம்...

// என்னவோ மொட்டபோட்டதுக்கப் புறம் என்னன்னெவோ நடக்குது... ம்ம்ம் நடக்கட்டும்...நடக்கட்டும்//

அட ஆமால்ல...

நன்றி தங்களின் வருகை மற்றும் பின்னூட்டப்பகிர்தலுக்கு

//ஹேமா said...
பாலாஜி,கண்ணு மண்ணு தெரியற அளவுக்குத் தண்ணியடிச்சா ஒரு குழப்பமும் வராது இல்ல.//

ஆமா..ஆமா... நன்றி தங்களின் வருகைக்கு...

//Cable Sankar said...
பாலாஜி.. தண்ணியில எழுதினீங்களா..?//

இருக்கலாம்...நன்றி...

க. பாலாஜி said...

//சந்ரு said...
தண்ணியில எழுதினதாலதான் இப்படி இருக்கு போல...
தண்ணியில எழுதினா நிரந்தரமில்ல...
இருந்தாலும் கலக்கல் இடுகைதான்..//

மிக்க நன்றி சந்ரு தங்களின் வருகைக்கு..

//Blogger seemangani said...
அன்மை செய்தி:
போதைல யாரோ ஒருத்தரோட பைக் தள்ளிட்டு வந்ததால உங்கள மாமா வந்து வீட்டுக்கு குப்பட்டு போய்ட்டதா கேள்வி போட்டேன் உண்மையா????//

அது நானில்லைங்கோ...

நன்றி...

//Blogger பழமைபேசி said...
நடக்கட்டு நடக்கட்டு...இஃகி!//

நன்றி..

//Blogger களப்பிரர் - jp said...
super !!where is the second part ?//

thanks your comment...Second part is still processing..

//Blogger லவ்டேல் மேடி said...
// ஆரம்பிச்சுட்டியா ராசா....//

என்ன ராசா பண்றது...

//நீயும் வால் பையன் மாதிரி ஆயிட்டியே.. ....??//

ஏன் இப்படி, குருவொட கம்பேர் பண்றீங்களே..

//அய்யய்யோ.... அப்போ .. சுட்டுட்டியா......!! உன்கிட்ட கொஞ்சம் உஷாராத்தேன் இருக்கணும்...!!//

அப்படியா..

//Blogger வால்பையன் said...
சொல்லவேயில்லை!
இது வேற நடக்குதா!?//

உங்களுக்கு தெரியாதா...

//Blogger சப்ராஸ் அபூ பக்கர் said...
ஓஹோ!.... தண்ணியா?... பரவா இல்லையே.... நல்லாத் தான் தண்ணி பாடம் புகட்டுது....வாழ்த்துக்கள்....//

நன்றி...தங்களின் வருகைக்கு...

ஓஹோ!.... தண்ணியா?... பரவா இல்லையே.... நல்லாத் தான் தண்ணி பாடம் புகட்டுது....

வாழ்த்துக்கள்....

//Blogger பிரபா said...
பாலு பாலு நீர் நம்ம பையன்யா !!அசதுமையா அசத்தும்...
எங்க ஏரியாவில ... V.S.O.A.//

ஓகோ.. அது எப்படி இருக்கும்...

நன்றி உங்களனைவருக்கும்....

வனம் said...

வணக்கம்

சரி சரி தங்கையை பார்க்க போய் அம்மாவா.....

நடக்கட்டும் நடக்கட்டும்

இராஜராஜன்

மந்திரன் said...

தண்ணி , கன்னி ரெண்டுமே போதைதான் ..
ஆனால் உங்களுக்கு ரெண்டு சகவாசமும் கொஞ்சம் அதிகம் போல ...

க. பாலாஜி said...

வனம் said...
வணக்கம்
சரி சரி தங்கையை பார்க்க போய் அம்மாவா.....
நடக்கட்டும் நடக்கட்டும்
இராஜராஜன்//

நன்றி தங்களின் வருகைக்கு.

//Blogger மந்திரன் said...
தண்ணி , கன்னி ரெண்டுமே போதைதான் .. ஆனால் உங்களுக்கு ரெண்டு சகவாசமும் கொஞ்சம் அதிகம் போல .//

அய்யா அப்படில்லாம் இல்லீங்க..

வானம்பாடிகள் said...

ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.:))

க. பாலாஜி said...

// வானம்பாடிகள் said...
ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிருக்கு.:))//

நன்றி அய்யா... தங்களின் வருகைக்கு...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO