க.பாலாசி: கதம்பம்....

Saturday, August 22, 2009

கதம்பம்....

ஒரு கவிதை....


ஆதரவாய் உன் தோள் சாய
ஆயிரம் தலைகள் இருந்தாலும்,
நான் விம்மிய பொழுதுகளில்...
ஓய்ந்துகொள்ள உன் மார்பினைத் தந்தாய்...
வீழ்ந்தே கிடந்தேன் உன் விழிதனில்...
தெள்ளிய நீரோடையில்
அடிபடிந்த கசடுகள் போல்....


********
ஒரு விளக்கம்....


இந்த இடுகையினூடே எனது முந்தைய இடுகையின் தலைப்புதனை சற்று விரிவுப்படுத்த விரும்புகிறேன்.

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்த நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா.... என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளிலிலிருந்து நான் உருவகப்படுத்துவது யாதெனில்....

அதுபோல அன்பே வடிவான பெண்களின்* (மாறுதலுக்குட்பட்டது) வாழ்வினில் வரதட்சனை எனும் அகந்தை கொண்ட குரங்கு தாவும், அதனால் பெண்ணின்* வாழ்வு குலைந்து போகி இறுதியில் அந்த குரங்கும் இறந்து போகும்.....இப்படியாக....உருவகப்படுத்தியே இந்த தலைப்பினை எடுத்தேன்...

இதை சொல்ல வேண்டிய தேவை இல்லையென்றாலும் கடமை உள்ளதென்பதால் சொல்கிறேன்.

*********

ஒரு சிந்தனை...

1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)

**********

ஒரு குறுநகை...

சர்தார்: 5 white paper கொடுங்க...

கடைக்காரர்: 1 paper தான் இருக்கு சார்...

சர்தார்: பரவாயில்ல குடுங்க, நான் XEROX எடுத்துக்கிறேன்.


********

இந்த இடுகை பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிலிஸ்லும் தங்களது வாக்குகளை செலுத்தவும்.********

13 comments:

கதிர் - ஈரோடு said...

//அடிபடிந்த கசடுகள் போல்....//
ஆஹா மிகச்சரியான உவமை

குறுநகை...
பெரு நகை தான்

பிரியமுடன்...வசந்த் said...

//
1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)//

கண்டிப்பா நடக்கும் .....

வானம்பாடிகள் said...

முதல் முறை வருகிறேன். கலக்குறீங்க.

லவ்டேல் மேடி said...

// ஆதரவாய் உன் தோள் சாய
ஆயிரம் தலைகள் இருந்தாலும்,
நான் விம்மிய பொழுதுகளில்...
ஓய்ந்துகொள்ள உன் மார்பினைத் தந்தாய்...
வீழ்ந்தே கிடந்தேன் உன் விழிதனில்...
தெள்ளிய நீரோடையில்
அடிபடிந்த கசடுகள் போல்.... //


ம்ம்ம்...ம்ம்ம்.... எப்புடி எடுத்துகிரதுன்னு தெரியல......!! கவித நெம்ப சூப்பர்....!!

// இந்த இடுகையினூடே எனது முந்தைய இடுகையின் தலைப்புதனை சற்று விரிவுப்படுத்த விரும்புகிறேன். //
இது வேறையா.....// 1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future) //

எங்கீங்கோ தம்பி .... பாலாஜி கடையிலையா.....?

பிரபா said...
This comment has been removed by the author.
பிரபா said...

//ஒரு சிந்தனை...

1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)

**********

ஒரு குறுநகை...

சர்தார்: 5 white paper கொடுங்க...

கடைக்காரர்: 1 paper தான் இருக்கு சார்...

சர்தார்: பரவாயில்ல குடுங்க, நான் XEROX எடுத்துக்கிறேன்.
//
சுப்பர் அப்பு சுப்பர் ,,, இதனை கட்டாயம் எனது வானொலி நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்வேன். என்ன அனுமதி உண்டா?

குடந்தை அன்புமணி said...

கவிதை நல்லாருக்குங்க...
நல்ல செய்தி, கெட்ட செய்தி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சர்தார் சோக்கு சூப்பரு.

க. பாலாஜி said...

//Blogger கதிர் - ஈரோடு said...
// ஆஹா மிகச்சரியான உவமை
குறுநகை...
பெரு நகை தான்//

மிக்க நன்றி அன்பரே..

//Blogger பிரியமுடன்...வசந்த் said...

கண்டிப்பா நடக்கும் .....//

நானும் அப்படிதான் நினைக்கிறேன். நன்றி அன்பரே...

//Blogger வானம்பாடிகள் said...
முதல் முறை வருகிறேன். கலக்குறீங்க.//

நன்றி சார் உங்களின் முதல் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கு..

க. பாலாஜி said...

//Blogger லவ்டேல் மேடி said...
ம்ம்ம்...ம்ம்ம்.... எப்புடி எடுத்துகிரதுன்னு தெரியல......!! கவித நெம்ப சூப்பர்....!!//

அப்டியா, நன்றி...

// இது வேறையா.....//

எல்லாம் ஒரு விளம்பரம்தான்..

//எங்கீங்கோ தம்பி .... பாலாஜி கடையிலையா.....?//

அப்படியும் வச்சிக்கலாம்ங்னா..

//Blogger பிரபா said...
சுப்பர் அப்பு சுப்பர் ,,, இதனை கட்டாயம் எனது வானொலி நிகழ்ச்சிகளில் சேர்த்துக்கொள்வேன். என்ன அனுமதி உண்டா?//

மிக்க நன்றி.. அனுமதி என்பது உங்களுக்கில்லாததா...

Blogger குடந்தை அன்புமணி said...

கவிதை நல்லாருக்குங்க...
நல்ல செய்தி, கெட்ட செய்தி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சர்தார் சோக்கு சூப்பரு.

மிக்க நன்றி அன்பரே.. தங்களின் வருகை மற்றும் பின்னூட்டத்திற்கு..

ஹேமா said...

பாலாஜி,கவிதை,விளக்கம்,சிந்தனை அத்தனையும் சிந்திக்க வைக்கக்கூடியது.

க. பாலாஜி said...

//ஹேமா said...
பாலாஜி,கவிதை,விளக்கம்,சிந்தனை அத்தனையும் சிந்திக்க வைக்கக்கூடியது.//

நன்றி ஹேமா...தங்களின் வருகைக்கு

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு நண்பா.

க. பாலாஜி said...

//நாடோடி இலக்கியன் said...
நல்லாயிருக்கு நண்பா.//

நன்றி அன்பரே...தங்களின் வருகைக்கு..

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO