Tuesday, October 6, 2009
கடன்...
சாதம்
கூட்டு
பொரியல்
சாம்பார்
ரசம்
மோர்
எல்லாம்
முடித்து......
பில்
கொடுப்பவனுக்கு
மிச்ச காசு லாபம்.
எச்சில் இலையை
எடுத்துவிட்டு...
சிந்திய பருக்கை
ஒழுகிய சாம்பார்
சொட்டிய ரசம்
தெரித்த மோர்
எல்லாவற்றையும்
சுத்தமாய்
துடைப்பவனுக்கு
ஒரு நன்றி கூட
கிடைப்பதில்லை கடனாக...
**********
தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
எங்கள் நாட்டுக்கும் எங்கள் மக்களுக்கும் மட்டுமே பொருந்தும் பாலாஜி.இங்கு அப்படியில்லை.
இவர்களிடம் நல்ல விஷயங்கள் நாங்கள் படிக்க நிறையவே இருக்கு.நல்ல சிந்தனைக் கவிதை.
உண்மைதான்
ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. படிக்கறப்பதான் ஆமாம்லன்னு தோணுது. இனிமே முதல்ல அவங்களுக்கு குடுத்துட்டு தான் சர்வருக்கு.
நல்லா குத்திக்காமிச்சிட்டீங்க. இனி நினைவில் இருக்கும்
நல்லதொரு சிந்தனை.
உடன்பாடில்லை!
பரிமாறுவது ஒரு வேலை!
அதற்காக சம்பளம் வாங்குகிறார்!
அப்படி கொடுத்து தான் ஆக வேண்டுமென்றால் நாம் செல்லும் எல்லா இடங்களிலும் சம்பளத்துக்கு வேலை செய்பவர் நிறைய பேர் இருப்பார்கள்!
எல்லாருக்கும் டிப்ஸ் கொடுப்பிங்களா?
நான் டிப்ஸை சொல்லவில்லை, ஒரு நன்றி தான் சொல்ல சொன்னேன் என்றால் ஒகே! அது நிச்சயம் செய்ய வேண்டியது!
(நான் ஒரு முன்னாள் சர்வர்)
//சம்பளத்துக்கு வேலை செய்பவர் நிறைய பேர் இருப்பார்கள்!
எல்லாருக்கும் டிப்ஸ் கொடுப்பிங்களா?//
சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் நிறைய இருப்பார்கள். நம்முடைய எச்சில் இலையை எடுக்க, நாம் சாப்பிடும் இடத்தை சுத்தம் செய்ய ஒருவன்தான் இருப்பான்.
//சம்பளத்துக்கு வேலை செய்பவர்கள் நிறைய இருப்பார்கள். நம்முடைய எச்சில் இலையை எடுக்க, நாம் சாப்பிடும் இடத்தை சுத்தம் செய்ய ஒருவன்தான் இருப்பான். //
ஆக டிப்ஸை தான் சொல்றிங்க!
சம்மதத்தோடு தான் வேலைக்கு வர்றாங்க!
யாரையும் கட்டாயபடுத்துறதில்ல,
மேலும் எச்சில் இலைன்னு சொல்றது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு! பெரும்பாலும் சபபிடுபவர்களையே தான் இலை எடுக்க சொல்றாங்க!
சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?
இல்லை எழுதிட்டோம்னு என்கூட சண்டை போடுறிங்களா!?
எதுவா இருந்தாலும் டிப்ஸ் கட்டாயம் கிடையாது!
வேலை செய்பவனின் திருப்தியும், சாப்பிடவனின் மனநிறைவும் தான் முக்கியம். இந்த திருப்தி, மனநிறைவு ரெண்டையும் மாத்தி போட்டு கூட படிச்சிகலாம்!
//வால்பையன் said...
சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?//
சர்வர் மேல் இரக்கப்பட்டு எழுதிய கவிதையாகத் தெரியவில்லை. சுத்தம் செய்யும் பையன் மேல் இரக்கப்பட்டு எழுதிய கவிதை இது.
நாமே இலை எடுப்பதெல்லாம் சின்ன சின்ன மெஸ்களில்தான்.
பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டவுடன் பரிமாறும் சர்வர்களுக்கு பில்லில் வரும் மீதியை டிப்ஸாக பலர் கொடுக்கின்றனர்.
அதே சமயம் பரிதாபமான விழிகள் கொண்ட, சுத்தம் செய்யும் ஆட்களை யாரும் கவனிப்பதில்லை என்பதுதான் இந்த கவிதையின் கருவாகத் தெரிகிறது.
இது என் புரிதல்...
நல்லதொரு சிந்தனை.
//வால்பையன் said...
ஆக டிப்ஸை தான் சொல்றிங்க!//
டிப்ஸை சொல்லவில்லை.
//மேலும் எச்சில் இலைன்னு சொல்றது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு//
சரி இலைன்னு வச்சிக்குங்க...
//பெரும்பாலும் சபபிடுபவர்களையே தான் இலை எடுக்க சொல்றாங்க!//
பெரும்பாலும் என்பது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு...
//சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?
இல்லை எழுதிட்டோம்னு என்கூட சண்டை போடுறிங்களா!?//
அண்ணா உங்ககூடல்லாம் சண்டை போட முடியுங்களா? இது யூஸ்வலா நடக்கற விஷயம். கொங்கு புரோட்டா கடையில் டேபிள் மற்றும் தரையை சுத்தம் செய்யும் ஒரு சிறுவனை மனதில் வைத்து எழுதினேன். இது ஒரு இறக்கத்தின் வெளிப்பாடு அவ்வளவுதான்.
//எதுவா இருந்தாலும் டிப்ஸ் கட்டாயம் கிடையாது!//
நானும் அப்படி சொல்லலையே. அந்த பையனுக்கும் டிப்ஸ் கொடுக்கணும்னு சொல்லலையே.
பாலாஜி,
நான் க்ளீன் செய்பவருக்கும் சேர்த்துத்தான் டிப்ஸ் கொடுப்பது வழாக்கம்...
அவரவர் பார்வை அப்படி. நன்கு உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..
அருமை.
பிரபாகர்.
நன்று பாலாஜி, நல்லா இருக்கு நண்பா. குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கும் கொடுக்கலாம். ஒரு தேங்க்ஸ் கண்டிப்பா சொல்லலாம்தான்.
பொதுவா எனக்கு டிப்ஸ் கொடுக்குறது பிடிக்காது. ஒருமுறை டிப்ஸ் கொடுக்க சில்லறை இல்லை, அடுத்த முறை கிடைத்த கவனிப்பில் இருந்து அந்த பழக்கத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.
அந்த இடத்தில் அவன் நன்றியை எதிர் பார்ப்பது இல்லை
வெறும் பரிவும் தேவையில்லை
அவனிடம் நாம் பாடம் கற்றாலே அது போதுமானது அவன் அந்த இடத்தில் உழைப்பை போதிக்கும் போதிமரமாய்த்தான் தெரிகிறான்
வசந்த தம்பி சொன்னதுதான்!
அருமை...
பாலாஜி.. ஏதோ ஒரு பரிதாபம் வருவதற்காக எழுதிய கவிதை போல் இருக்கிறது..
டிப்ஸ் கொடுக்காமல் நன்றி சொன்னால் துப்பி விடுவான்..உங்கள் கவிதை அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்..
அன்புடன்
தண்டோரா
//எச்சில் இலையை
எடுத்துவிட்டு...
சிந்திய பருக்கை
ஒழுகிய சாம்பார்
சொட்டிய ரசம்
தெரித்த மோர்
எல்லாவற்றையும்
சுத்தமாய்
துடைப்பவனுக்கு
ஒரு நன்றி கூட
கிடைப்பதில்லை கடனாக...//
ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. நான் எப்போது உணவருந்த சென்றாலும் தண்ணீர் வைப்பவன் முதல் இல்லை எடுப்பவன் வரை அனைவருக்கும் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்.....
//ஹேமா said...
எங்கள் நாட்டுக்கும் எங்கள் மக்களுக்கும் மட்டுமே பொருந்தும் பாலாஜி.இங்கு அப்படியில்லை.
இவர்களிடம் நல்ல விஷயங்கள் நாங்கள் படிக்க நிறையவே இருக்கு.நல்ல சிந்தனைக் கவிதை.//
நன்றி ஹேமா....
//Blogger கதிர் - ஈரோடு said...
உண்மைதான்//
நன்றி அன்பரே...
//Blogger வானம்பாடிகள் said...
ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. படிக்கறப்பதான் ஆமாம்லன்னு தோணுது. இனிமே முதல்ல அவங்களுக்கு குடுத்துட்டு தான் சர்வருக்கு.//
நன்றி அய்யா....
//Blogger S.A. நவாஸுதீன் said...
நல்லா குத்திக்காமிச்சிட்டீங்க. இனி நினைவில் இருக்கும்//
நன்றி நவாஸ்....
//Blogger நாடோடி இலக்கியன் said...
நல்லதொரு சிந்தனை.//
நன்றி அண்ணா....
//வால்பையன் said...
உடன்பாடில்லை!
பரிமாறுவது ஒரு வேலை!
அதற்காக சம்பளம் வாங்குகிறார்!
அப்படி கொடுத்து தான் ஆக வேண்டுமென்றால் நாம் செல்லும் எல்லா இடங்களிலும் சம்பளத்துக்கு வேலை செய்பவர் நிறைய பேர் இருப்பார்கள்!
எல்லாருக்கும் டிப்ஸ் கொடுப்பிங்களா?
நான் டிப்ஸை சொல்லவில்லை, ஒரு நன்றி தான் சொல்ல சொன்னேன் என்றால் ஒகே! அது நிச்சயம் செய்ய வேண்டியது!
(நான் ஒரு முன்னாள் சர்வர்)//
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும்...
//ஆக டிப்ஸை தான் சொல்றிங்க!
சம்மதத்தோடு தான் வேலைக்கு வர்றாங்க!
யாரையும் கட்டாயபடுத்துறதில்ல,
மேலும் எச்சில் இலைன்னு சொல்றது கொஞ்சம் அதிகப்படியா இருக்கு! பெரும்பாலும் சபபிடுபவர்களையே தான் இலை எடுக்க சொல்றாங்க!
சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?
இல்லை எழுதிட்டோம்னு என்கூட சண்டை போடுறிங்களா!?
எதுவா இருந்தாலும் டிப்ஸ் கட்டாயம் கிடையாது!
வேலை செய்பவனின் திருப்தியும், சாப்பிடவனின் மனநிறைவும் தான் முக்கியம். இந்த திருப்தி, மனநிறைவு ரெண்டையும் மாத்தி போட்டு கூட படிச்சிகலாம்!//
மீண்டும் நன்றிகள்...
//கதிர் - ஈரோடு said...
//வால்பையன் said...
சர்வர் மேல இருக்கபட்டு கவிதை எழுதனும்னு எழுதுனிங்களா!?//
சர்வர் மேல் இரக்கப்பட்டு எழுதிய கவிதையாகத் தெரியவில்லை. சுத்தம் செய்யும் பையன் மேல் இரக்கப்பட்டு எழுதிய கவிதை இது.
நாமே இலை எடுப்பதெல்லாம் சின்ன சின்ன மெஸ்களில்தான்.
பெரிய பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டவுடன் பரிமாறும் சர்வர்களுக்கு பில்லில் வரும் மீதியை டிப்ஸாக பலர் கொடுக்கின்றனர்.
அதே சமயம் பரிதாபமான விழிகள் கொண்ட, சுத்தம் செய்யும் ஆட்களை யாரும் கவனிப்பதில்லை என்பதுதான் இந்த கவிதையின் கருவாகத் தெரிகிறது.
இது என் புரிதல்...//
நன்றி அயயா உங்களின் மறுவருகைக்கு....
//T.V.Radhakrishnan said...
நல்லதொரு சிந்தனை.//
நன்றி அன்பரே
//பிரபாகர் said...
பாலாஜி,
நான் க்ளீன் செய்பவருக்கும் சேர்த்துத்தான் டிப்ஸ் கொடுப்பது வழாக்கம்...
அவரவர் பார்வை அப்படி. நன்கு உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.. அருமை. பிரபாகர்.//
நன்றி உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...
//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நன்று பாலாஜி, நல்லா இருக்கு நண்பா. குடுக்குறதுன்னு முடிவு பண்ணிட்டா அவனுக்கும் கொடுக்கலாம். ஒரு தேங்க்ஸ் கண்டிப்பா சொல்லலாம்தான்.//
நன்றி நண்பரே...
//Blogger பட்டிக்காட்டான்.. said...
பொதுவா எனக்கு டிப்ஸ் கொடுக்குறது பிடிக்காது. ஒருமுறை டிப்ஸ் கொடுக்க சில்லறை இல்லை, அடுத்த முறை கிடைத்த கவனிப்பில் இருந்து அந்த பழக்கத்தை வெகுவாகக் குறைத்துக்கொண்டேன்.//
நல்லது. நன்றி உங்களின் வருகைக்கு....
//பிரியமுடன்...வசந்த் said...
அந்த இடத்தில் அவன் நன்றியை எதிர் பார்ப்பது இல்லை
வெறும் பரிவும் தேவையில்லை
அவனிடம் நாம் பாடம் கற்றாலே அது போதுமானது அவன் அந்த இடத்தில் உழைப்பை போதிக்கும் போதிமரமாய்த்தான் தெரிகிறான்//
நன்றியை எதிர்பார்ப்பவர்களிடத்தில் மட்டும்தான் அது செலுத்தப்படுகிறதா? நண்பா....
நன்றி உங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...
//Blogger பழமைபேசி said...
வசந்த தம்பி சொன்னதுதான்!//
நன்றி பழமைபேசி அய்யா....
//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
அருமை...//
நன்றி அன்பரே...
//Blogger Cable Sankar said...
பாலாஜி.. ஏதோ ஒரு பரிதாபம் வருவதற்காக எழுதிய கவிதை போல் இருக்கிறது..//
தங்களின் பார்வையில்தானே?...
வாங்க கேபிளய்யா...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...
//Blogger தண்டோரா ...... said...
டிப்ஸ் கொடுக்காமல் நன்றி சொன்னால் துப்பி விடுவான்..உங்கள் கவிதை அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துக்கள்.. அன்புடன்
தண்டோரா//
மிக்க நன்றி தண்டோரா அண்ணே...
//புலவன் புலிகேசி said...
ரொம்ப நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க பாலாஜி. நான் எப்போது உணவருந்த சென்றாலும் தண்ணீர் வைப்பவன் முதல் இல்லை எடுப்பவன் வரை அனைவருக்கும் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டவன்.....//
நல்லது நண்பா தொடருங்கள்...நன்றி வருகைக்கும்.
பாராட்டுக்கள் பாலாஜி, தமிழ்மணம் மகுடம் இந்த இடுகைக்கு. பிரபாகர் சொல்லிதான் தெரியும். நான் முந்திக்கிட்டேன்.
//வானம்பாடிகள் said...
பாராட்டுக்கள் பாலாஜி, தமிழ்மணம் மகுடம் இந்த இடுகைக்கு. பிரபாகர் சொல்லிதான் தெரியும். நான் முந்திக்கிட்டேன்.//
நன்றி அய்யா உங்களின் தகவல் பகிர்விற்கு...பிரபாகர் அய்யா அவர்களுக்கும்...
நல்ல சிந்தனை நண்பா
அருமையான கவிதை நண்பரே!
நல்லதொரு சிந்தனை.
வாழ்த்துக்கள் பாலாஜி.
பதிவு நல்லா இருக்கு... மனதை பாதித்த கருத்தை பதிவாக... தலைப்பை நன்றி-ன்னு வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
இன்றுதான் முதல் முறையா உங்க வலைப்பக்கம் வந்தேன். அட நம்ம ஊரு பையன்னு ஒரு மகிழ்ச்சியும் கூட... :)
இன்னும் ஒரு அருமையான கவிதை நண்பா! நெஞ்சை தொட்டது!
//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல சிந்தனை நண்பா//
நன்றி அன்பரே...
//Blogger அனுபவம் said...
அருமையான கவிதை நண்பரே!//
நன்றி நண்பரே...
//Blogger துபாய் ராஜா said...
நல்லதொரு சிந்தனை.
வாழ்த்துக்கள் பாலாஜி.//
நன்றி ராஜா
//Blogger அரசூரான் said...
பதிவு நல்லா இருக்கு... மனதை பாதித்த கருத்தை பதிவாக... தலைப்பை நன்றி-ன்னு வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.//
உண்மைதான்...
// இன்றுதான் முதல் முறையா உங்க வலைப்பக்கம் வந்தேன். அட நம்ம ஊரு பையன்னு ஒரு மகிழ்ச்சியும் கூட... :)//
மிக்க நன்றி அன்பரே உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...
//Blogger தமிழ் நாடன் said...
இன்னும் ஒரு அருமையான கவிதை நண்பா! நெஞ்சை தொட்டது!//
நன்றி அன்பரே...
ஒருவேளை நன்றி சொல்லியிந்தால் இந்த கவிதை பிறந்திருக்காதில்லையா???
பலமடங்கு நன்றிக்கு சமன் உங்களின் இதக் கவிதை.
நன்றி என்பது சாலச்சிறந்த ஒன்று,
கற்றுக்கொள்ளவேண்டிய பலக்கம்
மிக்க நன்றி பாலாஜி
//சி. கருணாகரசு said...
ஒருவேளை நன்றி சொல்லியிந்தால் இந்த கவிதை பிறந்திருக்காதில்லையா???
பலமடங்கு நன்றிக்கு சமன் உங்களின் இதக் கவிதை.--
மிக்க நன்றி தோழரே....
//அன்புடன் மலிக்கா said...
நன்றி என்பது சாலச்சிறந்த ஒன்று,
கற்றுக்கொள்ளவேண்டிய பலக்கம்
மிக்க நன்றி பாலாஜி//
நன்றி மலிக்கா....உங்களின் வருகைக்கு...
Post a Comment