க.பாலாசி: ஒரு கதை, ஒரு விதை...

Thursday, October 15, 2009

ஒரு கதை, ஒரு விதை...

‘டேய் மாப்பு வர்ரது நம்ம ஃபர்ஸ்ட் இயர்தான?


‘ஆமான்டா மச்சான்”’


கூப்பிடு, கொஞ்சம் கலாய்ச்சு பாப்போம்.


டேய் வேணாம்டா.


ஏன்டா?


‘அவ நம்ம தெரு ராமசாமி...பொண்ணுடா...


சரி இருக்கட்டுமே, அதனால ரேகிங் பண்ணக்கூடாத என்ன?


‘............?


ஏய்....இங்க வா....என்ன....சீனியர பாத்தா விஸ் பண்ண மாட்டியா?


அப்டில்லாம் இ..ல்...லீ...ங்...க...


அப்ப பண்ணு...


குட்...மார்....னிங்க....


ம்ம்ம்....இதான வேணாங்கறது. எல்லாருக்கும்...

குட்...மார்....னிங்க.... குட்...மார்....னிங்க.... குட்...மார்....னிங்க....


ம்ம்ம்....போ..போ... இனிமே டெயிலி விஸ் பண்ணிட்டுதான் கிளாசுக்கு போவணும். புரியுதா?


சரி....ங்க...


அப்பறம் இந்த பச்ச கலர் தாவணி உனக்கு நல்லால்ல. இனிமே இத போட்டிட்டு வராத. என்ன சரியா?


‘ம்ம்ம்..........


•••••••••••••


‘ஏண்டா காலேஜ் விட்டா நேரா வீட்டுக்கு வரமாட்டியா?


‘ஏன்மா வந்ததும் வராத்துமா கத்துர?


பின்ன என்னடா, நம்ம பிரேமாவ ஒருத்தன் ரேகிங் பண்ணியிருக்கான், டெய்லி அவனுக்கு வணக்கம் சொல்லனுமாம். அது கூட பரவாயில்ல இனிமே செகப்பு கலர் தாவணி போட்டுகிட்டு காலேஜ்க்கு வரக்கூடாதாம்.


ஏய் பிரேமா....யாருடி அவன்?


‘நம்ம தெரு ராமசாமி....மகன்தாண்ணா....


‘................?



**********************************************************


அப்பா..

இனிமே சிகரெட்

பிடிக்காதிங்க

உடம்புக்கு நல்லதில்ல...

அடப்போடா...

எங்கப்பன் சொல்லியே

கேட்கல...


மறுநாள்...

டீக்கடை....

மகன் கையில்

சிகரெட்....


இருவரும்

நிறுத்திக்கொண்டனர்....

புத்தி சொல்வதை...



குறிப்பு: மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் அன்பர்கள் வலைப்பக்கம் வருவது கொஞ்சம் தாமதப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....



25 comments:

நாடோடி இலக்கியன் said...

கலைவாணர் பாணி பாலாஜி.
ரசித்தேன்.

அன்பேசிவம் said...

பாலாஜி தீபாவளி வாழ்த்துகள். என்ஜாய். கவிதை அருமை

தேவன் மாயம் said...

கவிதை சூப்பர்! தீபாவளி வாழ்த்துக்கள்!!

கார்த்திகைப் பாண்டியன் said...

தீபாவளி வாழ்த்துகள் பாலாஜி!!

பிரபாகர் said...

கதை, கவிதைன்னு அசத்துறீங்க பாலாஜி...

இரண்டுமே அருமை.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

முற்பகல் (பச்சைக்கு) செய்யின் பிற்பகல் (சிவப்புக்கு) வரும்

//இருவரும்
நிறுத்திக்கொண்டனர்....
புத்தி சொல்வதை...//

இந்த டீலிங் ரொம்ப பிடிச்சிருக்கு

vasu balaji said...

பச்ச விழுந்தா சிவப்பு விழுந்துதானே ஆவணும். நல்லா இருக்கு கதை.
/விதை/

அட புத்தி சொல்றதை தான் நிறுத்தினாங்களா.

தீபாவளி வாழ்த்துகள் பாலாஜி.

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு கதை..:-)

/இருவரும்

நிறுத்திக்கொண்டனர்....

புத்தி சொல்வதை.../

அவ்வ்வ்!

Radhakrishnan said...

:) வித்தியாசமான எண்ணங்கள். அருமை.

காமராஜ் said...

நல்லாருக்கு பாலாஜி

தமிழ் அமுதன் said...

good post ;;)

தீபாவளி வாழ்த்துகள் பாலாஜி.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி...இது ஏதோ சொந்த அனுபவமாதர தெரியுதே.....


ஹி.....ஹி......


தீபாவளிக்கு ஊருக்கு கிளம்பியாச்சா?


கதிரு பேச்ச கேட்டு, யாருக்கும் வாழ்த்து சொல்றதில்ல. வாழ்த்தும் வாங்கறதில்லை.... அடுத்த வருசம் வாழ்த்திக்குவோம்.

அன்புடன்
ஆரூரன்

velji said...

பட்டாதான் புரியும்கிறீங்க!சரிதான்.

வால்பையன் said...

//மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் அன்பர்கள் வலைப்பக்கம் வருவது கொஞ்சம் தாமதப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். //


பரவாயில்லை தல!

வந்த பிறகு தான் பாத்துகோங்க, யாரும் கோவிச்சிங்க போறதில்ல!

ஹேமா said...

பாலாஜி,தீபாவளிக் கதம்பம் வாசனை அருமை.இனிய மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.நிறைய இனிப்புப் பலகாரம் கொண்டு வாங்க.

அபிஷேகா said...

வாழ்த்துக்கள் பாலாஜி,
நல்லசிந்தனை, தெளிவான நடை

'இருவரும் நிறுத்திக் கொண்டனர் புத்தி சொல்வதை'

வரிகளும் சிந்தனையும் உங்களின் கவித்துவ எல்லையைக் காட்டி நிற்கின்றன.
காத்திருக்கின்றேன் இன்னும் பல கவிக்காக,

Unknown said...

பாலாஜி... முடியல.... ஆவ்வ்வ்வ்.....!!


தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாலாஜி ...!!

தமிழ் நாடன் said...

நல்லாருக்கு சாமி!

விக்னேஷ்வரி said...

நல்ல கதை, நல்ல கவிதை. ரசித்தேன்.

க.பாலாசி said...

இந்த பதிவிற்கு வந்திருந்து வாழ்த்திய வலையுலக நண்பர்கள், நண்பிகள் மற்றும் புதிய அன்பர்கள் என அனைவருக்கும் நன்றியினை நவில்கிறேன். மூன்றுநாட்கள் விடுமுறை முடித்து இன்றுதான் திரும்பியபடியால் பதிலூட்டம் போட தாமதமாகிவிட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் நன்றிகள்......

புலவன் புலிகேசி said...

கதை, கவிதை இரண்டுமே அருமை

க.பாலாசி said...

// புலவன் புலிகேசி said...
கதை, கவிதை இரண்டுமே அருமை//

நன்றி நண்பா....

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

கதை ரிவீட்டு

க.பாலாசி said...

//கிறுக்கல் கிறுக்கன் said...

கதை ரிவீட்டு//

நன்றி நண்பரே....

அன்புடன் நான் said...

இரண்டிற்கும் ஒரே வரி " தன்வினை தன்னைச் சுடும்"

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO