க.பாலாசி: நானும் தீபாவளியும்...

Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...

பதிவுலக மூத்தவரான அன்பர் வானம்பாடிகளின் முதுமுறை அழைப்பிற்கிணங்க இந்த தொடர்பதிவை நானும் தொடுகிறேன்.


1) உங்களைப் ற்றி சிறு குறிப்பு?


சொல்லுமளவிற்கு அறியப்படவில்லை என்று என்னுடைய சுயவிவரத்திலேயே குறிப்பிட்டிருந்தாலும், இது சிறு குறிப்பு என்பதால் சொல்கிறேன். வயது 27. படிப்பு இளம் அறிவியல் கணிதம். சொந்த ஊர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை. பணி நிமித்தமாக தற்போது ஈரோடு.


2) தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு ரும் (க்கமுடியாத‌) ஒரு ம்பம்?


அப்பா குருவி வெடியை ஒவ்வொன்றாக விளக்கில் கொளுத்தி விட்டெரிந்து வெடித்தார். அதையே பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு பாக்கெட்டைமட்டும் எடுத்து விளக்கில் கொளுத்தி வெடித்தேன். பிறகு நடந்தது எனக்குமட்டும் தெரியவில்லை. பாதிப்பு ஒன்றுமில்லாமல் தப்பித்ததாக எனது எழுதப்படாத வரலாற்றில் இருக்கிறது. அப்போது என் வயது 2.


3) 2009 தீபாவளிக்கு எந்தஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?


அப்பா அம்மாவுக்கு...தண்ணீரும் சோறும் போடும் மண்ணில். (செம்பொன்னார்கோயில், மயிலாடுதுறை)


4) ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி ற்றி ஒருசிலரிகள்?


ச்சி...இந்த பழம் புளிக்கும் என்று இப்போதுள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் மட்டைவிளையாட்டில் மூழ்கி முத்தெடுத்தெடுத்து கொண்டிருந்தனர். அந்த வயதுக்கு கீழேயுள்ள சிறுவர்கள் மட்டும் தங்களது சிற்றின்பங்களை, வெடித்து சிதறும் காகிதத்தின் எண்ணிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் பெரிசுகள் இந்த நாளுக்காக சேர்த்துழைத்த வதங்கிய உடலை உறக்கத்தில் மீட்க, வெடியொலியின் சப்தங்களுக்கிடையே முயன்றுகொண்டிருந்தனர்.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா ?


அப்பா வாங்கி கொடுத்தார். தைத்தேன். ஆனால் தீபாவளிக்கு அல்ல.


6) உங்கள் வீட்டில் என்னகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?


அம்மாவிற்கு வீண்வேலை வைக்க எப்போதும் விரும்புவதில்லை.


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?


உறவினர்களும் சரி, நண்பர்களும் சரி...யாரும் என்னிடம் வாழ்த்துக்களை எதிர்பார்த்ததில்லை. என்னிலையும் அப்படியே.


8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா?


தொலைக்காட்சி பார்ப்பது வழக்கமாக இல்லாத காரணத்தினால் முடிந்தவரை வீட்டிற்குள்.....புத்தகங்களை புரட்டுவதிலேயே நேரங்கள் நேராகும்.


9) இந்த இனியநாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் ற்றி ஒருசிலரிகள்? தொண்டு நிறுவங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது லைத்தம் ?


விடுமுறை கிடைக்கும் நாளாக அமைவதால் மட்டும் இனிய நாள் என்று கருதுகிறேன். மற்றபடி அந்த நாளில் நான் உதவி செய்தவர்களுக்கு பெயர், முகவரியைத்தவிர வேறொன்றும் இருந்திருக்காது என்றே எண்ணுகிறேன்.


10) நீங்கள் அழைக்கவிருக்கும் இருவர், அவர்களின் லைத்தங்கள்?


ஓர் அனுபவத்தை அறியும் பொருட்டு நண்பர்களான புலவன் புலிகேசி மற்றும் ஊடகன் அழைப்பை ஏற்பார்கள் என்ற எண்ணத்துடன்


பாசமுடன்,

.பாலாசி

26 comments:

அன்பேசிவம் said...

பாலாஜி, 4,9ஆவது கேள்விக்கான பதில் அருமை. 7ஆவது பதில் என்னமோ செய்கிறது, நண்பா. சும்மா கூப்பிட்டு வாழ்த்தி பாருங்க.... அது நல்லா இருக்கும்.
என்னோட கருத்தை சொல்றேன். தவறாக நினைக்க வேண்டாம்

vasu balaji said...

முதல் வாழ்த்துகளும், அழைப்பை ஏற்றதற்கு நன்றியும்

vasu balaji said...

ஆஆஆ. முரளி பூந்துட்டார்.

vasu balaji said...

/படிப்பு இளம் அறிவியல் கணிதம்/

சிலபஸ்ல பவானி தேனியுமா?

புள்ள டாண் டாண்ணுதான் கேள்விக்கு பதில் சொல்லியிருக்காரு.

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்பா வாங்கி கொடுத்தார். தைத்தேன். ஆனால் தீபாவளிக்கு அல்ல.//

அப்போ எப்போ?

ஹேமா said...

பாலாஜி,உங்கள் தீபாவளி உங்கள் எண்ணங்கள்போலவே அமைதியான தீபாவளியா இருக்கு.உங்கள் பதில்களும் கூட.அப்பவே வந்து என் வரவைப் பதிஞ்சிட்டேன்.

சீமான்கனி said...

//ச்சி...இந்த பழம் புளிக்கும் என்று இப்போதுள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் மட்டைவிளையாட்டில் மூழ்கி முத்தெடுத்தெடுத்து கொண்டிருந்தனர். அந்த வயதுக்கு கீழேயுள்ள சிறுவர்கள் மட்டும் தங்களது சிற்றின்பங்களை, வெடித்து சிதறும் காகிதத்தின் எண்ணிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் பெரிசுகள் இந்த நாளுக்காக சேர்த்துழைத்த வதங்கிய உடலை உறக்கத்தில் மீட்க, வெடியொலியின் சப்தங்களுக்கிடையே முயன்றுகொண்டிருந்தனர்.//

எதிபார்க்காத வரிகள் அருமை அண்ணே...

velji said...

யதார்த்தமான பதிவு.

நான் உதவி செய்தவர்களுக்கு பெயரோ,முகவரியோ இருக்காது...அருமை நண்பா.

பிரபாகர் said...

//6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

அம்மாவிற்கு வீண்வேலை வைக்க எப்போதும் விரும்புவதில்லை.
//
அம்மணி வந்ததுக்கு அப்புறமும் கடைபிடிக்கணும், சொல்லிபுட்டேன், ஆமாம்.

பிரபாகர்.

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல அனுபவ கட்டுரை நண்பா

தீப்பெட்டி said...

:)

ஜெட்லி... said...

//விடுமுறை கிடைக்கும் நாளாக அமைவதால் மட்டும் இனிய நாள் என்று கருதுகிறேன்.//

கரெக்ட்

புலவன் புலிகேசி said...

உங்கள் அழைப்பை நிச்சயம் ஏற்று விரைவில் எழுதுகிறேன் நண்பா.....அழைத்தமைக்கு நன்றி.........

இன்றைய கவிதை said...

//ச்சி...இந்த பழம் புளிக்கும் என்று இப்போதுள்ள 8ம் வகுப்பு மாணவர்களுக்கே தெரிந்திருக்கிறது. அதனால் மட்டைவிளையாட்டில் மூழ்கி முத்தெடுத்தெடுத்து கொண்டிருந்தனர். அந்த வயதுக்கு கீழேயுள்ள சிறுவர்கள் மட்டும் தங்களது சிற்றின்பங்களை, வெடித்து சிதறும் காகிதத்தின் எண்ணிக்கையில் தேடிக்கொண்டிருந்தனர். வழக்கம்போல் பெரிசுகள் இந்த நாளுக்காக சேர்த்துழைத்த வதங்கிய உடலை உறக்கத்தில் மீட்க, வெடியொலியின் சப்தங்களுக்கிடையே முயன்றுகொண்டிருந்தனர்.//

அப்டின்னா என்னங்ணா?!

Kanchana Radhakrishnan said...

:-)))

ஜெயந்தி said...

தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்ய நிறையப் பேர் இருப்பார்கள். பெயரும் முகவரியும் உள்ளவர்களுக்குத்தான் உதவி செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். நீங்கள் செய்தது மிகச் சரி.

ஈரோடு கதிர் said...

//பிறகு நடந்தது எனக்குமட்டும் தெரியவில்லை.//

அட... அப்படி என்னதான் நடந்த்ததுன்னு வரலாறை கொஞ்சம் புரட்டி எழுதுங்க

அன்புடன் நான் said...

ஒட்டுமொத்தத்திற்கு நல்லாயிருக்குங்க பாலாசி.

பழமைபேசி said...

வாசித்தோம்...அறிந்தோம்! வாழ்த்துகள்!!

ஊடகன் said...

தாமதத்திற்கு வருந்துகிறேன்......

இன்றே எழுதிவிடுகிறேன் நண்பரே........

சந்தான சங்கர் said...

பத்தும் மத்தாப்பு

நல்லா இருக்கு நண்பா..

க.பாலாசி said...

நன்றி முரளி....உங்களது கருத்தினை ஏற்கிறேன் நண்பா...

நன்றி வானம்பாடிகள் அய்யா

நன்றி வசந்த். அப்போவுக்கு பதில் இப்போ

நன்றி ஹேமா

நன்றி சீமாங்கனி

நன்றி வேல்ஜி

நன்றி பிரபாகர்

நன்றி வெண்ணிர இரவுகள் நண்பா...

நன்றி தீப்பெட்டி...

நன்றி ஜெட்லி

நன்றி புலிகேசி

நன்றி இன்றைய கவிதை...

நன்றி காஞ்சனா..

நன்றி ஜெயந்தி

நன்றி கதிரய்யா

நன்றி சி. கருணகரசு

நன்றி பழமைபேசி

நன்றி ஊடகன் நண்பா

நன்றி சந்தான சங்கரே...

சந்தனமுல்லை said...

தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன், இங்கே!

http://sandanamullai.blogspot.com/2009/11/blog-post.html

அன்புடன் மலிக்கா said...

அத்தனையும் அருமை அறிந்துகொண்டோம் உம்மை..

கோவி.கண்ணன் said...

//அப்பா குருவி வெடியை ஒவ்வொன்றாக விளக்கில் கொளுத்தி விட்டெரிந்து வெடித்தார். அதையே பார்த்துக்கொண்டிருந்த நான் ஒரு பாக்கெட்டை ‘மட்டும்’ எடுத்து விளக்கில் கொளுத்தி வெடித்தேன். பிறகு நடந்தது எனக்குமட்டும் தெரியவில்லை. பாதிப்பு ஒன்றுமில்லாமல் தப்பித்ததாக எனது எழுதப்படாத வரலாற்றில் இருக்கிறது. அப்போது என் வயது 2.//

அஞ்சாநெஞ்சன் !
:)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

யதார்த்தம் யதார்த்தம் யதார்த்தம்

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO