க.பாலாசி: ஒரு குழந்தையின் குமுறல்... (2)

Thursday, November 12, 2009

ஒரு குழந்தையின் குமுறல்... (2)


வீடேறி வந்தவனுக்கு...

முதலாய் பணம்பெற்று

வட்டியென வாக்களித்தேன்...

இன்று....அவன்மாத்திரம்

ஊழல்வாதியாம்.வீட்டிற்கொரு கண்ணகி

வீதிக்கொரு கோவலன்

மாதவியின்

பட்டம் மட்டும்

பரத்தையென்பர்.பசியென்பவனுக்கு

பக்கத்துவீடு....

பஞ்சனையில் தூங்கும்

நாய்க்கு

பால்சோறு.வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.கடன்சுமை

தற்கொலை

குழந்தையுடன் மனைவி

புகைப்படத்திலும்

புன்னகையுடன் கணவன்.தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

47 comments:

சுந்தரா said...

சொல்லச்சொல்லத் தீராத சமூக அவலங்கள்...

சுளீரென்று சொல்லுது கவிதை!

Sivaji Sankar said...

//வீட்டிற்கொரு கண்ணகி
வீதிக்கொரு கோவலன்
மாதவியின்
பட்டம் மட்டும்
பரத்தையென்பர்.//
உண்மைதானுங்கோ..

கலகலப்ரியா said...

நச் நச்-ன்னு இருக்கு பாலாசி... அசத்தல்..!

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் சாட்டையடி!

//கடன்சுமை

தற்கொலை

குழந்தையுடன் மனைவி

புகைப்படத்திலும்

புன்னகையுடன் கணவன்.//

வலி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கடைசி கவிதை .. ரொம்ப உண்மை பாலாஜி.. அப்பறம் ஆரம்பிகுது கஷ்டம் அவ்ங்க இரெண்டு பேருக்கும்.. அவருக்கு புன்னகைதானே..

ஹேமா said...

குற்றம் செய்பவனுக்கு மட்டும்தானே தண்டனை சட்டப்படி.குற்றம் செய்யத் தூண்டுபவனுக்கு !

சூர்யா ௧ண்ணன் said...

அசத்தல்!...

ஆரூரன் விசுவநாதன் said...

சமூக அவலங்களை பட்டியலிடும் அழுத்தமான பதிவு.........

வாழ்த்துக்கள் பாலாசி.....

T.V.Radhakrishnan said...

நச்-ன்னு இருக்கு

இன்றைய கவிதை said...

//பசியென்பவனுக்கு

பக்கத்துவீடு....

பஞ்சனையில் தூங்கும்

நாய்க்கு

பால்சோறு.
//

வரிகள் நச்!

அத்தனையும் அருமை!

-கேயார்

வானம்பாடிகள் said...

போட்டு தாக்கிட்ட பாலாஜி. பளார் பளார்னு விழுது. மேல தூக்கி புடி (கீப் இட் அப்)

மகா said...

//கடன்சுமை

தற்கொலை

குழந்தையுடன் மனைவி

புகைப்படத்திலும்

புன்னகையுடன் கணவன்.// excellent boss...

மகேஷ் said...

// பசியென்பவனுக்கு
பக்கத்துவீடு....
பஞ்சனையில் தூங்கும்
நாய்க்கு
பால்சோறு. //

Super thala,

புலவன் புலிகேசி said...

//பசியென்பவனுக்கு

பக்கத்துவீடு....

பஞ்சனையில் தூங்கும்

நாய்க்கு

பால்சோறு.////வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.

//

அருமை பாலாஜி...நல்ல சிந்தனை...

kanagu said...

/*வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.
*/

indha naalu variya thavira vera eduvume naku puriyala anna :(

andha naalu variyum super :)

வானம்பாடிகள் said...

முதல் கவிதை முழுசா யூத்விகடனில் காண்க. பாராட்டுகள் பாலாசி:))

Rajakamal said...

வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை

யதார்த்தத்தை சித்தரிக்கும் வரிகள் அருமை பாலாசி

கதிர் - ஈரோடு said...

//
வீடேறி வந்தவனுக்கு...
முதலாய் பணம்பெற்று
வட்டியென வாக்களித்தேன்...
இன்று....அவன்மாத்திரம்
ஊழல்வாதியாம்.
//

அருமை பாலாஜி

விகடன் வெளியீட்டிற்கு பாராட்டுகள்

வெண்ணிற இரவுகள்....! said...

//வீட்டிற்கொரு கண்ணகி
வீதிக்கொரு கோவலன்
மாதவியின்
பட்டம் மட்டும்
பரத்தையென்பர்.
பசியென்பவனுக்கு
பக்கத்துவீடு....
பஞ்சனையில் தூங்கும்
நாய்க்கு
பால்சோறு
//
அடுத்தவனுக்கு உதவி செய்தால் நீயும் தோழரே .......சே சொன்னது போல ...
நண்பா உனக்குள் ஒரு போராளி படைப்பாளி ஆகி இருக்கிறான் ....அழுத்தமாய் பதிவு செய்து இருக்கிறாய்

பிரபாகர் said...

அற்புதமான சாடல்கள், அழாகான வார்த்தைக் கோர்வைகளுடன். மிகவும் நன்றாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

velji said...

குழந்தையின் வழி, ஈரமனம்கொண்ட மனிதர்களின் குமுறல்களாய் ஒலிக்கிறது கவிதைகள்.அருமை.

கார்த்திகைப் பாண்டியன் said...

சமூக அவலங்களை பொட்டில் அறைந்த மாதிரி சொல்லும் உங்கள் நடை பிடிச்சிருக்கு நண்பா

முரளிகுமார் பத்மநாபன் said...

பாலாஜி ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். நீங்க தேர்ந்தெடுக்கிற படங்களும் கவிதையே!
பாலாஜியின் குமுறல் - நன்று :-)

seemangani said...

ஓவொன்றும் அருமை...கடைசி மூன்றும்...மிக சரியான உன்மை......
வழக்கம் போல் தூள்...

துபாய் ராஜா said...

சிறப்பான சிந்தனைகள்.

வாழ்த்துக்கள் பாலாசி.

பிரியமுடன்...வசந்த் said...

//வறுமையை
சித்தரிக்கும் திரைப்படம்
திரையரங்கில்
நுழைவுக்கட்டணம்
ஐம்பதுக்கு குறைவில்லை.//

இதுதான் அசத்தல் நெத்தி அடி..

அசத்திட்டீங்க போங்க...

ஊடகன் said...

//வறுமையை

சித்தரிக்கும் திரைப்படம்

திரையரங்கில்

நுழைவுக்கட்டணம்

ஐம்பதுக்கு குறைவில்லை.//

ரொம்ப அழகான, உண்மையான வரிகள்...........
நல்ல சிந்தனை............. வாழ்த்துக்கள்.................

லெமூரியன் said...

நல்ல இருக்கு நண்பா...! அருமையான வார்த்தை தேர்ந்தெடுப்பு... வாழ்த்துக்கள்.

சூர்யா ௧ண்ணன் said...

யூத்ஃபுல் விகடனில் உங்க கவிதை "அவன் மட்டுமா..?" சூப்பர்

வாழ்த்துக்கள்!

தமிழ் நாடன் said...

நிதர்சன கவிதைகள்! வாழ்த்துக்கள்!

சத்ரியன் said...

//வீடேறி வந்தவனுக்கு...

முதலாய் பணம்பெற்று

வட்டியென வாக்களித்தேன்...

இன்று....அவன்மாத்திரம்

ஊழல்வாதியாம்.//

பாலாசி,

பணம் வாங்கிகிட்டு ஓட்டு போட்டா இப்படித்தான் "...ருப்பால' அடிப்பீங்களா? இது தெரியாம நிறைய பேரு வாங்கிட்டாய்ங்களெ...!

" நச்"

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

பாலாசி.. எல்லாமே முத்துக்கள். நாமும் ஊழல்வாதிகள் தான் என்பது சுடும் உண்மை.

காமராஜ் said...

இடைவெளிவிட்டு விதைத்த ஆங்கார விதைகள். அருமை பாலஜி

க.பாலாசி said...

//Blogger சுந்தரா said...
சொல்லச்சொல்லத் தீராத சமூக அவலங்கள்...
சுளீரென்று சொல்லுது கவிதை!//

நன்றி சுந்தரா....

//Blogger Sivaji Sankar said...
உண்மைதானுங்கோ..//

ஆமாங்கோ....நன்றிங்கோ...

//Blogger கலகலப்ரியா said...
நச் நச்-ன்னு இருக்கு பாலாசி... அசத்தல்..!//

நன்றிக்கா....

//Blogger ராமலக்ஷ்மி said...
அத்தனையும் சாட்டையடி!
வலி.//

நன்றிங்கக்கா....

க.பாலாசி said...

//Blogger முத்துலெட்சுமி/muthuletchumi said...
கடைசி கவிதை .. ரொம்ப உண்மை பாலாஜி.. அப்பறம் ஆரம்பிகுது கஷ்டம் அவ்ங்க இரெண்டு பேருக்கும்.. அவருக்கு புன்னகைதானே..//

உண்மைதாங்கக்கா....நன்றி வருகைக்கு...

//Blogger ஹேமா said...
குற்றம் செய்பவனுக்கு மட்டும்தானே தண்டனை சட்டப்படி.குற்றம் செய்யத் தூண்டுபவனுக்கு !//

அதே தண்டனை இருந்தால் நன்றாயிருக்கும்....நன்றி தோழி...

//Blogger சூர்யா ௧ண்ணன் said...
அசத்தல்!...//

நன்றி சூர்யா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
சமூக அவலங்களை பட்டியலிடும் அழுத்தமான பதிவு.........
வாழ்த்துக்கள் பாலாசி.....//

மிக்க நன்றி விசு அய்யா...

//Blogger T.V.Radhakrishnan said...
நச்-ன்னு இருக்கு//

நன்றி ராதாண்ணே....

க.பாலாசி said...

//இன்றைய கவிதை said...
வரிகள் நச்!
அத்தனையும் அருமை!
-கேயார்//

நன்றி கேயார்....

//Blogger வானம்பாடிகள் said...
போட்டு தாக்கிட்ட பாலாஜி. பளார் பளார்னு விழுது. மேல தூக்கி புடி (கீப் இட் அப்)//

மிக்க நன்றி அய்யா....

//Blogger மகா said...
excellent boss...//

நன்றி மகா...

//Blogger மகேஷ் said...
Super thala,//

நன்றி மகேஷ்...

க.பாலாசி said...

// புலவன் புலிகேசி said...
அருமை பாலாஜி...நல்ல சிந்தனை...//

நன்றி நண்பா...

//Blogger kanagu said...
indha naalu variya thavira vera eduvume naku puriyala anna :(
andha naalu variyum super :)//

நன்றி கனகு....

//Blogger வானம்பாடிகள் said...
முதல் கவிதை முழுசா யூத்விகடனில் காண்க. பாராட்டுகள் பாலாசி:))//

மிக்க நன்றி அய்யா தெரிவித்தமைக்கு....

//Blogger Rajakamal said...
யதார்த்தத்தை சித்தரிக்கும் வரிகள் அருமை பாலாசி//

நன்றி ராஜ்....

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
அருமை பாலாஜி
விகடன் வெளியீட்டிற்கு பாராட்டுகள்//

மிக்க நன்றி அய்யா....

//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
அடுத்தவனுக்கு உதவி செய்தால் நீயும் தோழரே .......சே சொன்னது போல ... நண்பா உனக்குள் ஒரு போராளி படைப்பாளி ஆகி இருக்கிறான் ....அழுத்தமாய் பதிவு செய்து இருக்கிறாய்//

மிக்க நன்றி நண்பா....தங்களின் கருத்திற்கு...

//Blogger பிரபாகர் said...
அற்புதமான சாடல்கள், அழாகான வார்த்தைக் கோர்வைகளுடன். மிகவும் நன்றாய் வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
பிரபாகர்.//

நன்றி அண்ணா....

//Blogger velji said...
குழந்தையின் வழி, ஈரமனம்கொண்ட மனிதர்களின் குமுறல்களாய் ஒலிக்கிறது கவிதைகள்.அருமை.//

நன்றி வேல் அண்ணா.....

க.பாலாசி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
சமூக அவலங்களை பொட்டில் அறைந்த மாதிரி சொல்லும் உங்கள் நடை பிடிச்சிருக்கு நண்பா//

நன்றி நண்பரே....

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
பாலாஜி ஏற்கனவே சொல்லியிருக்கேன்னு நினைக்கிறேன். நீங்க தேர்ந்தெடுக்கிற படங்களும் கவிதையே! பாலாஜியின் குமுறல் - நன்று :-)//

நன்றி நண்பா...

//Blogger seemangani said...
ஓவொன்றும் அருமை...கடைசி மூன்றும்...மிக சரியான உன்மை......
வழக்கம் போல் தூள்...//

நன்றி நண்பா...

//Blogger துபாய் ராஜா said...
சிறப்பான சிந்தனைகள்.
வாழ்த்துக்கள் பாலாசி.//

நன்றி அன்பரே....

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
இதுதான் அசத்தல் நெத்தி அடி..
அசத்திட்டீங்க போங்க...//

நன்றி நண்பா வருகைக்கு...

//Blogger ஊடகன் said...
ரொம்ப அழகான, உண்மையான வரிகள்...........
நல்ல சிந்தனை............. வாழ்த்துக்கள்.................//

நன்றி நண்பரே....

//Blogger லெமூரியன் said...
நல்ல இருக்கு நண்பா...! அருமையான வார்த்தை தேர்ந்தெடுப்பு... வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி லெமூரியன்....தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்...

க.பாலாசி said...

//Blogger சூர்யா ௧ண்ணன் said...
யூத்ஃபுல் விகடனில் உங்க கவிதை "அவன் மட்டுமா..?" சூப்பர்
வாழ்த்துக்கள்!//

மீண்டும் நன்றிகள் சூர்யா....

//Blogger தமிழ் நாடன் said...
நிதர்சன கவிதைகள்! வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பா...வருகைக்கு...

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
பணம் வாங்கிகிட்டு ஓட்டு போட்டா இப்படித்தான் "...ருப்பால' அடிப்பீங்களா? இது தெரியாம நிறைய பேரு வாங்கிட்டாய்ங்களெ...!
" நச்"//

மிக்க நன்றி சத்ரியன் வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பாலாசி.. எல்லாமே முத்துக்கள். நாமும் ஊழல்வாதிகள் தான் என்பது சுடும் உண்மை.//

நன்றி அண்ணா...வருகைக்கு...

//Blogger காமராஜ் said...
இடைவெளிவிட்டு விதைத்த ஆங்கார விதைகள். அருமை பாலஜி//

மிக்க நன்றி தோழரே....வருகைக்கும் கருத்திற்கும்....

சந்தான சங்கர் said...

//வீட்டிற்கொரு கண்ணகி
வீதிக்கொரு கோவலன்
மாதவியின்
பட்டம் மட்டும்
பரத்தையென்பர்.//


சபாஷ் பாலாசி

க.பாலாசி said...

//சந்தான சங்கர் said...
சபாஷ் பாலாசி//

நன்றி நண்பா.....

" உழவன் " " Uzhavan " said...

இதுதான் உலகம் :-)

அன்புடன் மலிக்கா said...

sariyaana saattaiyadi.. super palaji..

ஆதிமூலகிருஷ்ணன் said...

கிரிஸ்ப்பான கவிதைகள்.!

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
இதுதான் உலகம் :-)//

நன்றி உழவன்

//Blogger அன்புடன் மலிக்கா said...
sariyaana saattaiyadi.. super palaji..//

நன்றி மலிக்கா..

//Blogger ஆதிமூலகிருஷ்ணன் said...
கிரிஸ்ப்பான கவிதைகள்.!//

நன்றி ஆதி அண்ணா...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO