க.பாலாசி: அதிகாரம்...

Saturday, November 28, 2009

அதிகாரம்...


அதிகாரம் எனும் ஆளுமையை உட்செலுத்தி எந்த உயிரை இன்புறச்செய்யமுடியும்? இந்த ஆதங்கம் எப்போதும் என் மனதில் இருப்பதுண்டு.

நேற்றுவரை அடிமைத்தனத்தில் அடிபட்டு, இன்று அதை அறுத்தெறிந்த பிறகும், அதே அதிகாரமிட்டு அடிமைப்படுத்தும் எண்ணம் நமக்குள்ளும் எங்கிருந்தேனும் ஆட்கொண்டுவிடுகிறது (விட்டது). காரணமாய் சில காழ்ப்புணர்ச்சிகளும், புழுங்கல்களும் இருக்கலாம். இல்லையென்றால் இதுவரையடைந்த அவமானங்களும்...இன்னும் சில...களும்...

அதிகாரம், ஆணவம், அடிமைபடுத்துதல் இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடாகத்தான் இருக்கவேண்டும். எதிரெதிர் வீடாக இருக்க வாய்ப்பில்லை. பூவுடன் சேர்ந்த நாரைப்போல ஒன்றைவிட்டு ஒன்றகன்றாலும், ஒன்றின் நாற்றம் மற்றொன்றையும் இயல்பாய் தொற்றிவிடுகிறது. எந்த ஓர் உயிரின் மீது தேவையற்ற அதிகாரம் செலுத்தப்பட்டாலும் அந்த உயிர் சிறிது சிறிதாக அடிமைப்படுத்தப்படுகிறதென்றே அர்த்தம். அதன் மூலம் அங்கே ஆணவம் தலைக்கேறுகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.

தன்னுடைய சுதந்திரத்தை அதிகாரத்தினூடே இழந்த மனிதன், வாழ்க்கையின் ஓட்டத்தில் நூறடியோ, அதற்குள்ளாகவோ தாண்டியவுடன் இன்னொருவனிடம் அதே சுதந்திரத்தினை அதிகாரத்தின் வழி பறிக்கிறான். எடுத்துக்காட்டாக இல்லம், இல்லத்தரசி, அலுவலகம், பணியாளர்கள், தொழிலாளர்கள், பிராணிகள் இன்னும்....எங்குவேண்டுமானாலும் மாற்றிப்போட்டுக்கொள்ளலாம்.

பெண்கள் இதில் கொஞ்சம் விதிவிலக்கு. காரணம்...அதிகாரம் அதிகம் மிகைப்பட்டிருக்கும் இடம் ஆண் எனும் ஆணாதிக்கம். பெண்ணாதிக்கம் எனும் வார்த்தையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனலாம் அல்லது இதுவரை நான் அறியாமல் இருக்கலாம்.


எங்கேனும் இழந்த சுதந்திரத்தை சற்றிடவெளியில் வேறொரு இடத்தில் அதிகாரம் மூலமாக, ஒரு மாற்று வெற்றியாக பறித்துக்கொள்ள முயல்கிறவன் இந்த சமுதாயத்தின் சாபக்கேடு என்றே சொல்லலாம். யாம் பெற்ற இவ்வின்பம் பெறுக இவ்வையகம் என்று அதிகாரப் பேயை தேவையற்ற இடங்களில் பிரயோகிக்கும் போது அன்பெனும் அகராதியே அவ்விடத்தில் அழிந்துபோகிறது. இதன் மூலம் சாதித்தது என்னவென்று தேடலைதொடங்கினால் முடிவில் கிடைப்பது அல்லது கிடப்பது மாண்டுபோன மனிதநேயமே.


பறிகொடுத்தவன்

பறிக்கும்போது

பறிகொடுத்தது

பறிக்கப்படுகிறது

பரிவில்லாமல்.


இப்படியே அலையும் அதிகாரத்தின் எல்லை...முற்றடையும் புள்ளிதான் கண்காணும் தூரம்வரை காணவில்லை....


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...

34 comments:

இன்றைய கவிதை said...

பறிகொடுத்தவன்

பறிக்கும்போது

பறிகொடுத்தது

பறிக்கப்படுகிறது

பரிவில்லாமல்.


Super!

-Keyaar

பிரியமுடன்...வசந்த் said...

அருமையா சொன்னீங்க பாலாஜி

//அதிகாரம், ஆணவம், அடிமைபடுத்துதல் இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடாகத்தான் இருக்கவேண்டும். எதிரெதிர் வீடாக இருக்க வாய்ப்பில்லை.//

சில இடங்களில் தவிர்க்க இயலாமல் அமைந்து விடுகிறதே...

வானம்பாடிகள் said...

அருமை பாலாசி. கவிதையும். சரியான ஆணித்தரமான கருத்துகள்.

T.V.Radhakrishnan said...

அருமை பாலாசி

அகல்விளக்கு said...

அருமை நண்பா...

உண்மையான வார்த்தைகள்

கலகலப்ரியா said...

//அதிகாரம் எனும் ஆளுமையை உட்செலுத்தி எந்த உயிரை இன்புறச்செய்யமுடியும்?//

கேடுகெட்ட தன் சொந்த உயிரை வேண்டுமானால் இன்புறச் செய்ய முடியும்... (குரூர திருப்தி என்றும் இதைச் சொல்லலாம்..)

நல்ல பதிவு..

ஹேமா said...

//அதிகாரம், ஆணவம், அடிமைபடுத்துதல் இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்த வீடாகத்தான் இருக்கவேண்டும். எதிரெதிர் வீடாக இருக்க வாய்ப்பில்லை.//

பாலாஜி,சரியான அனுமானம்.

கவிதை நாலு வரியில் அசத்தல்.

தமிழ்மணம் ஓட்டுப் போடமுடியவில்லை.

புலவன் புலிகேசி said...

உண்மை பாலசி இந்த முதலாளித்துவ நாட்டில் இந்த அதிகாரம் தான் அதிகமிருக்கிறது

முரளிகுமார் பத்மநாபன் said...

unmaithaan nanbaa, aanaal athikaaraththai manithanidamirunthu nicacayam pirikka mudiyaathu, than athikaaraththai kaatta yaarumillaavittaalum vilangukalidamaavathu athai kaatti theeerththkollum manitha inam.

(sorry for English)

ரோஸ்விக் said...

//எந்த ஓர் உயிரின் மீது தேவையற்ற அதிகாரம் செலுத்தப்பட்டாலும் அந்த உயிர் சிறிது சிறிதாக அடிமைப்படுத்தப்படுகிறதென்றே அர்த்தம்.//

இது உண்மை...
பதிவு மிக அருமை பாலாசி...வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை. வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

அந்தப்படம் மிகப் பொருத்தம்

அதிகாரம்தான் பலம் பொருந்தியவன், பலவீனமானவன் என்பதை அடையாளப் படுத்துகிறது.

சிந்திக்க வேண்டிய இடுகை

tamiluthayam said...

நேற்றுவரை அடிமைத்தனத்தில் அடிபட்டு, இன்று அதை அறுத்தெறிந்த பிறகும், அதே அதிகாரமிட்டு அடிமைப்படுத்தும் எண்ணம் நமக்குள்ளும் எங்கிருந்தேனும் ஆட்கொண்டுவிடுகிறது இன்றைய அடிமைகளின் வலி- நேற்றைய அடிமைகளுக்கு தெரியவில்லை.

seemangani said...

//பூவுடன் சேர்ந்த நாரைப்போல ஒன்றைவிட்டு ஒன்றகன்றாலும், ஒன்றின் நாற்றம் மற்றொன்றையும் இயல்பாய் தொற்றிவிடுகிறது. //
உண்மைதான்...கண்ணுக்கு தெரியாத கர்வம் என்ற கிரீடம் வைத்து கொள்கிறது...

ஆரூரன் விசுவநாதன் said...

உங்கள் எழுத்துக்களில் அழகு கூடிக் கொண்டே வருகிறது. மிக அருமை...தொடருங்கள்

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

பிரபாகர் said...

சொல்லவந்ததை
சிறிதும் தொய்வின்றி
சொல்லியிருக்கிறீர்கள்
சிறப்பாய்...

பிரபாகர்.

தேவன்மாயம் said...

இதன் மூலம் சாதித்தது என்னவென்று தேடலைதொடங்கினால் முடிவில் கிடைப்பது அல்லது கிடப்பது மாண்டுபோன மனிதநேயமே.
///

மிக நன்று பாலாஜி!!

பூங்குன்றன்.வே said...

மிக அருமை.நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

அதிகாரம்.... “அதி”காரமாக இருக்கிறது.... படம் மிக சிறந்த தேர்வு.... பாராட்டுக்கள்.

தியாவின் பேனா said...

பறிகொடுத்தவன்

பறிக்கும்போது

பறிகொடுத்தது

பறிக்கப்படுகிறது

பரிவில்லாமல்.

//

மிக நன்று பாலாஜி

அன்புடன் மலிக்கா said...

ஆழமான கவிதை வரிகள் அருமை பாலாஜி..

Romeoboy said...

செம கலக்கல் கவிதை ..

Sangkavi said...

//பறிகொடுத்தவன்

பறிக்கும்போது

பறிகொடுத்தது

பறிக்கப்படுகிறது

பரிவில்லாமல்.//

கவிதை அசத்தல்.

க.பாலாசி said...

நன்றி இன்றைய கவிதை

//Blogger பிரியமுடன்...வசந்த்
சில இடங்களில் தவிர்க்க இயலாமல் அமைந்து விடுகிறதே...//

சரிதான்...நன்றி நண்பரே...

நன்றி Blogger வானம்பாடிகள்

நன்றி Blogger T.V.Radhakrishnan

நன்றி Blogger அகல்விளக்கு

க.பாலாசி said...

நன்றி கலகலப்ரியா

நன்றி Blogger ஹேமா

நன்றி Blogger புலவன் புலிகேசி

நன்றி Blogger முரளிகுமார் பத்மநாபன்

நன்றி Blogger ரோஸ்விக்

நன்றி ராமலக்ஷ்மி

நன்றி Blogger ஈரோடு கதிர் said...

நன்றி Anonymous tamiluthayam said...

நனறி Blogger seemangani

நன்றி Blogger ஆரூரன் விசுவநாதன்

க.பாலாசி said...

நன்றி பிரபாகர்

நன்றி Anonymous தேவன்மாயம்

நன்றி Blogger பூங்குன்றன்.வே

நன்றி Blogger சி. கருணாகரசு

நன்றி Blogger தியாவின் பேனா

நன்றி Blogger அன்புடன் மலிக்கா

நன்றி Blogger Romeoboy

க.பாலாசி said...

நன்றி Sangkavi

" உழவன் " " Uzhavan " said...

//பெண்ணாதிக்கம் எனும் வார்த்தையே இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையெனலாம் //
 
இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலயோ?? :-))

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலயோ?? :-))//

கண்டுபிடிச்சிட்டீங்களே தலைவரே...

நன்றி வருகைக்கு...

சந்தான சங்கர் said...

அடிமைப்படுத்தாத
அன்பும்
கட்டுப்படுத்தாத
சுதந்திரமும் மட்டுமே
நிலைத்திருக்கும்..

நன்றி பாலாசி..

கே.பாலமுருகன் said...

அதிகாரம் தன்னை மீறிய/ தனக்கு அப்பாற்பட்ட புறப்பொருள்களின் மீதும் ஆட்களின் மீதும் ஆக்கிரமிப்பு என்கிற வலையைப் பின்னுகிறது. அதிகாரத்திற்கு முன் மண்டியிடாமல் வீரம் காக்க வேண்டும். நல்ல பதிவு. வாழ்த்துகள்

சத்ரியன் said...

//அதிகாரத்தின் எல்லை...முற்றடையும் புள்ளிதான் கண்காணும் தூரம்வரை காணவில்லை....//

பாலாசி,

நச்...!

துபாய் ராஜா said...

நல்லதொரு கருத்துப் பதிவு.

படமும்,கவிதையும் நன்று.

வாழ்த்துக்கள் பாலாசி.

Ammu Madhu said...

நல்லா சொல்லிருக்கீங்க

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO