இம்மாபெரும் நிகழ்வினை எனது கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லையென்றே சொல்லவேண்டும். ஆரம்பத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது 30 நபர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று தெரிகிறது என்றே பேசினோம். பிறகு நாட்கள் நகர நகர எங்களுக்கே கொஞ்சம் பயம் எடுக்கத்தான் செய்தது. எங்களது ஏற்பாடுகள் அனைவரையும் திருப்திப்படுத்துமா என்ற அளவிலும் சந்தேகங்கள் இருந்தன. இப்போது வருகைதந்தோர் ஒவ்வொருவரும் கூறும் போது ஓரளவிற்கேனும் எங்களது உழைப்பு பயனுள்ளதாகிவிட்டது என்ற திருப்தியும் ஒட்டிக்கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெற தங்களது முழு ஒத்துழைப்பினையும் மற்றும் எங்களுக்கான பதிவர் சந்திப்பு பட்டையினை தங்களது வலைதளத்தில் வெளியிட்டு அனைவருக்கு இதுபோன்றதொரு இனிமையான தருணம் அமைய வாய்ப்பு நல்கிய தமிழ்மணம் திரட்டி காசி அய்யா அவர்களுக்கு எங்களது நன்றிகளை எப்படி சொல்வதென்றே தெரியவில்லை. ஈரோட்டில் பதிவர்கள் சந்திப்பு என்றவுடனே வருகைதர ஒப்புக்கொண்ட சீனா அய்யா, மற்றும் புலவர் முனைவர். இராசு அவர்களுக்கும் நாங்கள் நன்றிகளை நவில கடமைப்பட்டுள்ளோம்.
எங்களது உழைப்பு என்பது இந்நிகழ்வில் மிக மிக குறைவுதான். ஏனெனில் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றார்கள் பெரியோர்கள். ஆனால் திரைகடல் தாண்டியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அய்யா பழமைபேசி, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காம் சிதம்பரம் போன்றோர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?. மகிழ்கிறோம் அன்பர்களே....
ஏதோவொரு சந்திப்பு நடைபெறுகிறது நமக்கென்ன என்றில்லாமல் இந்த சந்திப்பில் அவசியம் கலந்துகொள்ளவேண்டும் என்று சிரத்தையெடுத்துக்கொண்டு வருகைபுரிந்த சென்னை, திருப்பூர், கோவை, மதுரை, கரூர் உடுமலைப்பேட்டை, திருச்செங்கோடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதி பதிவர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
சங்கமம் குறித்து முகப்பு பக்கத்தில் வெளியிட்ட தமிழ்மணம், சங்மத்தின் முழுக் காணொளியைவெளியிடவிருக்கும் சங்கமம் லைவ் இணையதளம், படப்பதிவு செய்த ஸ்டார் வீடியோஸ்ஆகியோருக்கும் நன்றிகள்.
குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
நன்றி..நன்றி...நன்றி....
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.
சில நயம்மிகு நிழற்படங்களைக் காண இந்தச் சுட்டியை அழுத்துங்கள்
சங்கமம் குறித்த மேலதிக தகவல்களுக்கு....
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
43 comments:
//குறிப்பாய் இம்மாபெரும் விழாவிற்கு வருகைதந்த பெண் பதிவர்கள் அனைவருக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.//
இது முக்கியம்
அனைவருக்கும் நன்றி
நிறைவாக நடந்து முடிந்த நிகழ்வினை நினைவு கூர்ந்து நன்றி கூறியிருக்கும் சிறப்பான இடுகை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டியவிதம் அருமை....பாலாசி
மிகவும் நன்றி பாலாஜி. விருந்தோம்பலில் திணறடித்துவிட்டீர்கள்.
சொன்ன மாதிரியே அசத்தீட்டீங்க, வாழ்த்துக்கள். கலந்துகொள்ள முடியாத வருத்தம் ஒவ்வொருவர் பதிவைப் பார்க்கும்போதும் ஏற்படுகிறது.
//கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா? என்று வாசுகி (க/பெ. வள்ளுவன்) //
சொன்னது வாசுகியா?
//நிறைவாக நடந்து முடிந்த நிகழ்வினை நினைவு கூர்ந்து நன்றி கூறியிருக்கும் சிறப்பான இடுகை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//
அதே!
அன்புடன்
அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி பாராட்டியவிதம் அருமை
பதிவர்களை எல்லாம் நீங்கள் வரவேற்று கொங்கு மண்ணிற்கே உரித்தான அன்பையும், உபசரிப்பையும் அழகாக செய்ததற்கு
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுவிற்கு எனது கோடான கோடி நன்றிகள்...............
//திரைகடல் தாண்டியும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அய்யா பழமைபேசி, நாகா, செந்தில்வேலன், உடுமலை.காம் சிதம்பரம் போன்றோர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?//
மத்தவங்க சரி பாலாசி..ஆனால் கடல் தாண்டி வரவில்லை. சில ஊர் மட்டுமே தாண்டி வந்தேன் பாலாசி..உங்களின் விருந்தோம்பலில் மகிழ்தோம் நன்றி
அட அட! அசத்தல் பாலாசி. கடைசி வரைக்கும் பள்ளிபாளையம் கோழிய கண்ணுலயே காட்டலையே நீயி! அவ்வ்வ்
//வானம்பாடிகள் said...
அட அட! அசத்தல் பாலாசி. கடைசி வரைக்கும் பள்ளிபாளையம் கோழிய கண்ணுலயே காட்டலையே நீயி! அவ்வ்வ்//
கோழியத்தான் வருத்துட்டோமே அப்பறம் எப்டி கண்ணுலக்காட்ட முடியும் தலைவரே...
விழா வெகுசிறப்பாக நடந்துமுடிந்தது ரொம்ப சந்தோசம்
பாலாஜி வாழ்த்துக்கள். கலந்துகொள்ள முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்!!
பாலாசி எனக்குக் கொடுத்துவைக்கலையேப்பா.... :-(
சிறப்பாக நடத்தி முடித்த உங்களுக்கு என் அன்புகளும், வாழ்த்துகளும்.
சந்திப்பு நினைவில் நிற்கும் விதமாக அமைந்தது நண்பரே...
ஈரோடு பதிவர்கள் சாதித்துக்காட்டியிருக்கிறீர்கள்..
இப்பணி தொடரவேண்டும்..
குழுமத்தின் அடுத்த பணி திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படவேண்டும்..
குழும வலைப்பதிவை அடிக்கடி இற்றைப்படுத்தவேண்டும்..
குழுமம் வளர வாழ்த்துக்கள்..
அசத்திவிட்டீர்கள்! சங்கமத்தை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துகள்! :-)
//மிகவும் நன்றி பாலாஜி. விருந்தோம்பலில் திணறடித்துவிட்டீர்கள்.//
நிச்சயமாக.மறக்க முடியாத நிகழ்வு.
//ஈரோடு கோடீஸ் said...
//கொக்கென்று நினைத்தாயோ கொங்கனவா? என்று வாசுகி (க/பெ. வள்ளுவன்) //
சொன்னது வாசுகியா?//
அப்படித்தான் நினைக்கிறேன். ஆதாரம் இங்குள்ளது (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D). இது தவறு என்றால் தங்களது கருத்தினையும் தெரிவிக்கவும்.
பதிவர் சந்திப்பில் பங்குகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பாலாசி கலக்கிட்டீங்கலாமே...
நன்றி!
சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தாக அறிகிறேன்.... பாராட்டுக்கள்..,
நன்றி பாலாசி
நைனாவையும் உங்களையெல்லாம் பார்த்தது மிக்க சந்தோசம்
கதிர் போட்டோ கிச்சு கிச்சு...!
:)))
நெகிழ்சியான பதிவு கொடுத்துவைக்காத எங்களுக்கு புகைப்படத்தில் பார்க்க ஆசை பாலாஜி எங்கே இருக்கிறார்.
நண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை இச் சங்கமம் ஏற்படுத்தியதற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் பாலாசி
வாழ்த்துகள்
உங்கள் உழைப்பும் மிக முக்கியமானது நண்பரே!
இது நம்ம நிகழ்ச்சி நண்பா.. எதுக்கு நன்றி எல்லாம்.. அப்படிப் பார்த்தா எல்லாரையும் ஒண்ணாப் பார்த்து சந்தோஷப்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்.. விடுங்க பாலாஜி..
அன்பின் பாலாஜி
ஈரோட்டுக்காரர்களின் ஈடுபாடு உழைப்பு ஆர்வம் விருந்தோம்புதல் அத்தனையும் பாராட்டுக்குரியது.
நல்வாழ்த்துகள் பாலாஜி
வாழ்த்துகள்... பாராட்டுகள்... =)... (எல்லா இடமும் சொல்லி சொல்லி வாய் வலிக்குது அவ்வ்வ்வ்... =))
வழக்கமான உங்களின் பாணியில் அருமையாய் ஒரு நன்றி நவிலல்....
சந்திப்போம் வெகு விரைவில்... காத்திருக்கிறேன் அந்த பொன்னாளை...
பிரபாகர்.
நன்றி நவிலல் நன்று...அடுத்த சந்திப்பில் நிச்சயம் நானும் உங்களுடன்.
நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம்.
சாதனைக்கு வாழ்த்துக்கள்.
அருமையாய் நடத்தினீர்கள் நண்பர்களே..
ஆகா அருமை
பாலா! எனக்கும் தெரியாமல்தான் கேட்டேன். சுட்டிக்கு நன்றி!
ஆகா...ஆகா..
நன்றி கதிர்
நன்றி ராமலஷ்மி
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி ஈரோடு கோடீஸ்
நன்றி T.V.Radhakrishnan
நன்றி Sangkavi
நன்றி சிதம்பரம்
நன்றி வானம்பாடிகள்
நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி தேவன் மாயம்
நன்றி ரோஸ்விக்
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
நன்றி சந்தனமுல்லை
நன்றி Blogger ஸ்ரீ
நன்றி துபாய் ராஜா
நன்றி D.R.Ashok
நன்றி பேநா மூடி
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி காமராஜ் அய்யா
// நெகிழ்சியான பதிவு கொடுத்துவைக்காத எங்களுக்கு புகைப்படத்தில் பார்க்க ஆசை பாலாஜி எங்கே இருக்கிறார்.//
நான் புகைப்படத்தில் இருக்கமாட்டேன்.
நன்றி நிகழ்காலத்தில்...
நன்றி வால்பையன்
//உங்கள் உழைப்பும் மிக முக்கியமானது நண்பரே!//
நமது உழைப்புதான்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி cheena (சீனா) அய்யா
நன்றி கலகலப்ரியா
//எல்லா இடமும் சொல்லி சொல்லி வாய் வலிக்குது அவ்வ்வ்வ்... =))//
வாய் வலிக்குதா?? லாஜிக்கே இல்லையே...கையில்ல வலிக்கனும்.
நன்றி பிரபாகர்
நன்றி புலவன் புலிகேசி
நன்றி அப்பன் அய்யா...
நன்றி சி. கருணாகரசு
நன்றி Cable Sankar
நன்றி தியாவின் பேனா
//Blogger ஈரோடு கோடீஸ் said...
பாலா! எனக்கும் தெரியாமல்தான் கேட்டேன். சுட்டிக்கு நன்றி!//
மீண்டும் நன்றி..
நன்றி Sivaji Sankar
MISS PANNITTEN...NEXT TIME KALAKKUROM
Post a Comment