ஒண்ணும் பெரிசா இல்லீங்க. ஒழுங்கா ஓரமா உட்காந்து ஆபிஸ் வேலய பார்த்துகிட்டு இருந்தேனுங்க. என்னையப்போயி மெயில் செக்ஸனுக்கு மாத்தினாங்க. அய்யோ அங்கண வேல பாக்கனும்ணா நமக்கு இங்கிலீஸ்காரன்ல நண்பனா இருக்கணும். என்னடா பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டே உட்காந்தப்பதான் ஒரு ஐடியா வந்துச்சு. இங்கண இருக்கிற ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ்க்கு போகலாம்னு. சரின்னு போயி ஜாயிண்ட்டும் பண்ணியாச்சு. அங்கணயிருந்த ஒரு அம்மாவுக்கு தமிழ் சுத்தமா வராது. ஏன்னா அவிங்க ஊட்டி கான்வெண்ட்ல படிச்சாங்கலாம். நமக்கும் ரொம்ப வசதியாப்போச்சுன்னு அவங்களுக்கு தமிழ நல்லா சொல்லிக்குடுத்துட்டு வந்தேனுங்க. இது வரலாறுங்க. நெக்ஸ்ட் வலைப்பூவியல் பாக்கலாங்க.
கொஞ்ச நாளு கம்பேனி மெயிலு அதுஇதுன்னு கலிகாலத்திலேயே சுத்திகிட்டு இருந்த என்னோட சுழி சும்மா இருந்துதா? அதான் இல்ல. புதுசா வர படத்துக்கு எங்கடா விமர்சனம் படிக்கலாம்னு கூகில் சர்ச்ல நோண்டி பாத்தேனா... அங்கணதான் கெடச்சுது கேபிள் சங்கரோட லிங்க். அது ஏதோ வெப்சைட்னு நெனச்சுகிட்டே ரொம்ப காலமா ஓட்டிகிட்டிருந்தனுங்க. ஆனா பாருங்க என்னோட மூளையில இது என்னா பிளாக்ஸ்பாட்டுன்னு ஒரு யு.ஆர்.எல் அப்டின்னு அதே கூகிள் சர்ச்ல தோண்டி தொழாவி கண்டுபுடிச்சனுங்க இந்த பிளாக்கர்.காம்ம. புடிடா பாலாசின்னு நல்லா இருக்கமா ஒரு ரெஜிஸ்ட்டர் பண்ணி எங்கணயாவது கெடைக்கிற சேதிங்கள பொறுக்கிப்போட்டு ஒரு பத்து போஸ்ட் பண்ணிருப்பன்னு நெனக்கிறேன். அதுக்குள்ள பாருங்க நம்ம வால் அண்ணணும், கேபிள் அண்ணணும் நமக்கு பாளோயர் ஆயிட்டாங்க. அப்பறமா கதிர் அய்யாவும், லவ்டேல்மேடியும் வந்துட்டாங்க. பார்றா நம்மளயும் பாக்குறாங்கன்னு நெம்ப சந்தோஷமாயிடுச்சுங்க. அதுக்கப்புறம் ஆரம்புச்சுதுங்க இந்த கிறுக்கு. இன்னும் ஓஞ்சபாடில்ல. பூவோட சேந்த நாரும் மணக்கும்னு சொல்லுவாங்களே அதுமாதிரி கதிரய்யாவோட சேந்துகிட்டு நானும் ஏதாவது நல்லது கெட்டது எழுதிகிட்டே இருக்கணுங்க.
கூட சுத்துர சேக்காளிங்க சரியில்ல, அதனாலத்தான் பயபுள்ள வீணாப்போயிட்டுன்னு ஆபிஸ் மேனேஜர் கத்திகிட்டு இருப்பாருங்க. இங்கண பாருங்க அவரையும் ஒரு பிளாக் ஆரம்பிக்க வைச்சிட்டனுங்க. கூடிய சீக்கிரமே அவரும் நம்மள மாதிரி பிளாக் லோகமே புண்ணியலோகம்னு ஆயிடுவாருன்னு நம்பிக்க மட்டும் இருக்குங்க. இதாங்க நம்ம பூவுலகவியல்.
இங்கணப் பாருங்க முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரின்னு சொல்லுவாங்க. அதுமாதிரி கூட்டாளிங்க புலிகேசிகிட்டேயிருந்தும், திருப்பூர்ல இருக்குற முரளிக்குமார் பத்மநாபன்டேயிருந்தும் நமக்கொரு விருது வந்திருக்குங்க. நான் முல்லையில்லாம் இல்லீங்க. ஆனாலும் முள்ளும்மில்லீங்க. மனசுக்குள்ள எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுங்களா? நானும் பிரிண்ட் எடுத்துக்கூட பாத்தேன். அந்த கோல்ட் கலர்தான் வருதே ஒழிய கோல்ட் வரமாட்டங்குது. சரி விடுங்க. ஆனாலும் பாருங்க நாம எழுற எழுத்துக்கு இப்டி விருதுல்லாம் வருதேன்னு சந்தோசமாதானுங்க இருக்கு. அதுவொரு இனம்புரியாத இனிமைங்க. நமக்கு விருதுகொடுத்த எல்லா மக்களுக்கும் நன்றிய சொல்லிக்கிறனுங்க. எத்தன நாளைக்குதாங்க சேட்டு கடையில இருக்குற நகையாட்டம் சும்மா வைச்சிக்கறது. அதனால எனக்கு கெடச்ச இந்த விருத கீழ உள்ளவங்களுக்கு நானும் குடுக்கிறனுங்க. வாங்கிக்குங்க சாமியோவ்...
நெம்ப நன்றிங்க...
41 comments:
ம்..விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
ஏம்பா.... உம்பட அலும்புக்கு அளவேயில்லையா...
அந்தம்மாவுக்கு போயி தமிழ் கத்துக்குடுத்தியே... பிளாக் எழுதக் கத்துக்குடுத்தியா!!!???
//பூவோட சேந்த நாரும் மணக்கும்னு சொல்லுவாங்களே //
அடங்கொண்ணியா......
இதுலா யாரு பூவு.... யாரு நாரு
ஆனாலும் விருதெல்லாம் வாங்கியிருக்கீங்க.... இன்னும் ட்ரீட்தான் வைக்கல....
ஆனாலும் வாழ்த்த சொல்லீருவோம்
:-) சுவாரசியம்! விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
ரசிக்கும்படியான பதிவு, வாழ்த்துக்கள்
நல்ல...பகிர்வுங்கோ...விருது குடுப்பவருக்கும்...வாங்குனவங்களுக்கும்...வாழ்துங்கோ...நான்
'கோ'றேங்கோ...
அன்பின் பாலாசி
அருமையான அறிமுக இடுகை - உன்னைப்பற்றி அறிந்து கொண்டேன் - நல்ல இடுகைகள் தொடரலாமே ! மேன்மேலும் விருதுகள் பெறவும் - வெற்றி பெறவும் நல்வாழ்த்துகள் பாலாசி
கொங்கு மணக்குதுங்க.
நல்லாருக்கு... உங்களுக்கும் விருது கிடைக்கப் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்..
ஓ இது பெரிய வரலாறே இருக்கே.. :) வாழ்த்துக்கள்..
பதக்கம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். மொத்தக் குசும்பையும் மூட்ட கட்டி வச்சிருக்க பாலாசி. :)). பாராட்டுகள்.
நல்ல ஐடியாவா இருக்கே? மேனேஜரயும் பிளாக்குல இழுத்துவிட்டுடா கும்மாளம்தான். ஆனா கம்பனிதான் பாவம்.
பாலாசி, நானும் இங்கிலீஸ் சொல்லித் தரட்டுமா? (ஹி, ஹி.... தமிழ் கத்துக்கத்தான்...)
இங்கண அங்கணன்னு உங்க அழும்பு தாங்கல சாமியோவ்...
பிரபாகர்.
//கூட சுத்துர சேக்காளிங்க சரியில்ல, அதனாலத்தான் பயபுள்ள வீணாப்போயிட்டுன்னு ஆபிஸ் மேனேஜர் கத்திகிட்டு இருப்பாருங்க. இங்கண பாருங்க அவரையும் ஒரு பிளாக் ஆரம்பிக்க வைச்சிட்டனுங்க. கூடிய சீக்கிரமே அவரும் நம்மள மாதிரி பிளாக் லோகமே புண்ணியலோகம்னு ஆயிடுவாருன்னு நம்பிக்க மட்டும் இருக்குங்க. இதாங்க நம்ம பூவுலகவியல். //
தனித்த மொழியில்..கலக்கி இருக்கீங்க பாலாஜி!வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் நண்பர்களுக்கும்!
வாழ்த்துக்கள் நண்பரே, விருது பெற்ற உங்களுக்கும் நீங்கள் விருது அளித்த பிற நண்பர்களுக்கும்.
ரொம்ப நல்லா இருக்குதுங்கோவ்
நானும் பதிவுலகிற்கு புதிய வரவுங்கோவ்!!!!!!!!!!!
ப்ளாக் எப்படி ஆரம்பிக்கரதுன்னு கொஞ்சம் எனக்கும் சொல்லுங்கோவ்.
எனது முகவரி
shachipar2008@gmail.com-ங்கோவ்.
விருதுக்கு வாழ்த்துக்களுங்கோவ்.
பார்த்திபன்.
விருது வாங்கியவருக்கும், பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.
வரலாறு நல்லாருக்கு பாலாஜி.
விருது பெற்ற உங்களுக்கும்,
உங்களால் கிடைக்கப்பெற்ற மக்களுக்கும்
அன்பு.
என் கதையும் இதேதானுங்க,என்ன உங்களுக்கு பூவு...கிடைத்தது,,எனக்கு கிடைக்கவில்லை,,
வாழ்த்துக்கள் நண்பரே
பாலாஜி விருது குடுக்கிற சாட்டில சொந்தக் கதையைச் சொல்லி ரசிக்க வச்சிட்டீங்க.
விருது வாங்கிறவங்களுக்கு வாழ்த்துக்கள்.
பாலாசி விருது தனக்கு உரியவரிடம் தான் சேர்ந்திருக்குது.
நல்லா எழுதியிருக்கீங்க பாலாசி.
//கொஞ்ச நாளு கம்பேனி மெயிலு அதுஇதுன்னு கலிகாலத்திலேயே சுத்திகிட்டு இருந்த என்னோட சுழி சும்மா இருந்துதா? அதான் இல்ல. புதுசா வர படத்துக்கு எங்கடா விமர்சனம் படிக்கலாம்னு கூகில் சர்ச்ல நோண்டி பாத்தேனா... அங்கணதான் கெடச்சுது கேபிள் சங்கரோட லிங்க். அது ஏதோ வெப்சைட்னு நெனச்சுகிட்டே ரொம்ப காலமா ஓட்டிகிட்டிருந்தனுங்க.//
பல பேர் வாழ்க்கையை பாழாக்கும் கேபிள் ஒழிக.
இப்படிக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள்
வாழ்த்துக்கள்...
வாங்கியதற்கும்...
வழங்கியதற்கும்.
நன்றி நண்பா,
அக நாழிகையின் பின்னுட்டத்திற்கு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.
நானும் பிரிண்ட் எடுத்துக்கூட பாத்தேன். அந்த கோல்ட் கலர்தான் வருதே ஒழிய கோல்ட் வரமாட்டங்குது. //
எப்படி நண்பா தங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோன்றுகிறது?
விருது பெற்ற நண்பா்களுக்கு நல்வாழ்த்துக்கள்...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
விருது வந்த வாக்குல சொந்த சரக்கையும் கலந்து கட்டி அடிச்சாச்சா...
நல்லாருக்குமைய்யா உம்ம எழுத்து நடை.
கலக்குங்க.
நானும் விருது வாங்கிட்டேன்.. வாங்கிட்டேன்... நன்றி நண்பா....
நன்றி புலவன் புலிகேசி
நன்றி ஈரோடு கதிர்
நன்றி சந்தனமுல்லை
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி seemangani
நன்றி T.V.Radhakrishnan
நன்றி cheena (சீனா) அய்யா
நன்றி பாலகுமார்
நன்றி கலகலப்ரியா
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi
நன்றி வானம்பாடிகள்
நன்றி பிரபாகர்
நன்றி பா.ராஜாராம் அய்யா...
நன்றி செ.சரவணக்குமார்
நன்றி PARTHIPAN
நன்றி butterfly Surya
நன்றி காமராஜ்
நன்றி அப்பன் அய்யா..
// என் கதையும் இதேதானுங்க,என்ன உங்களுக்கு பூவு...கிடைத்தது,,எனக்கு கிடைக்கவில்லை,,//
நீங்களே பூதானுங்களே அய்யா...
நன்றி தாமோதர் சந்துரு அய்யா..
நன்றி ஹேமா
நன்றி Cable Sankar
நன்றி அகநாழிகை
நன்றி சி. கருணாகரசு
நன்றி முரளிகுமார் பத்மநாபன்
நன்றி முனைவர்.இரா.குணசீலன்
நன்றி ஸ்ரீ
நன்றி கும்க்கி முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
நன்றி பேநா மூடி
அந்த கோல்ட் கலர்தான் வருதே ஒழிய கோல்ட் வரமாட்டங்குது//
இதுதாங்க கோல்ட்
அருமைங்க
விருதுபெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்..
(கொஞ்ச நாளா உங்கள் வலைப்பக்கம்
வர இயலவில்லை வேலைபளுவால்)
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்:-)))
விருது வாங்கிய உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..
நானும் பிரிண்ட் எடுத்துக்கூட பாத்தேன். அந்த கோல்ட் கலர்தான் வருதே ஒழிய கோல்ட் வரமாட்டங்குது.
ஹா ஹா ஹா.. எதுக்கும் நீங்க உங்க கணிப்பொறியில் விருது உள்ள இடத்தை பிளேடு போட்டு சுரண்டி பாருங்க.. தங்கம் வருதான்னு பார்க்கலாம்..
நன்றி சந்தான சங்கர்
// கொஞ்ச நாளா உங்கள் வலைப்பக்கம்வர இயலவில்லை வேலைபளுவால்//
பரவாயில்ல அன்பரே...
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி " உழவன் " " Uzhavan "
நன்றி divyahari
// ஹா ஹா ஹா.. எதுக்கும் நீங்க உங்க கணிப்பொறியில் விருது உள்ள இடத்தை பிளேடு போட்டு சுரண்டி பாருங்க.. தங்கம் வருதான்னு பார்க்கலாம்..//
மாயவரத்து குசும்பு.... இருக்கட்டும்...இருக்கட்டும்... :-))
விருது வாங்கிய உங்களுக்கும் உங்களிடமிருந்து வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்....
நன்றி முகிலன்
நன்றி மகா
Post a Comment