க.பாலாசி: அவனல்லால் நண்பன் யாதொருவன்??

Tuesday, December 29, 2009

அவனல்லால் நண்பன் யாதொருவன்??



காதலிக்கு எழுதிய கவிதையை
படித்து ஆசிகூறி அனுப்பிவைத்த நண்பன்
புறமுதுகில் காரித்துப்பியதையும்
காதில் வாங்கிபடியேச் சென்று....
அவள் அண்ணா என்றவுடன்
ஆற்றாமையில் அறைக்கு திரும்பும் நேரத்தில்
அரைகுடுவை சாராயத்துடன் காத்திருப்பான் அதே நண்பன்.

**********

மெழுகு காகிதத்தில் சுற்றப்பட்ட மேரி ரொட்டியை
சரிபாதியாய் பிரித்து, அதிலொன்று எச்சமடைய
இரண்டாய் ஒடித்துப் பகிர்ந்துகொண்டதுஉம்....
பின்னாளில் கல்லூரிவாசல் பெட்டிக்கடையில்
ஒரு புகைக்குழலுக்காய் சண்டையிட்டாலும்
தேர்வறையில் துண்டுச்சீட்டினைப் பரிமாறக்கொடுத்து
தேர்ச்சிபெறச்செய்ததுஉம்....நட்பன்றி வேறென்ன??

**********

தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்.

**********

‘தருதலைங்க உருப்படவாப்போகுது’
என்று அம்மா திட்டியது தெரிந்தும்
சளைக்காமல் வந்து எதிர்வீட்டு பெண்ணை
எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??

**********


36 comments:

கடைக்குட்டி said...

எல்லாமே நல்லா இருந்தாலும்...
மூனாவது பத்தி எனக்கு புடிச்சு இருக்கு... :-)

முனைவர் இரா.குணசீலன் said...

நட்பின் நலம் பாராட்டும் கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

சிவாஜி சங்கர் said...
This comment has been removed by the author.
சிவாஜி சங்கர் said...

//ஆற்றாமையில் அறைக்கு திரும்பும் நேரத்தில்
அரைகுடுவை சாராயத்துடன் காத்திருப்பான் அதே நண்பன்.//

சரக்குக்கு சைடு டிஷ் இல்லாத போது முறுக்கு வாங்க
3 ரூவா கொடுக்குமாம் நட்பு..!!


//தேர்வறையில் துண்டுச்சீட்டினைப் பரிமாறக்கொடுத்து
தேர்ச்சிபெறச்செய்ததுஉம்....நட்பன்றி வேறென்ன??//

இது அல்வா சாரி அல்லவா நட்பு..!


//தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்.//

கிகிகிகி... கிகிகிகி...

//அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??//

Ashok D said...

:) நட்பூ

ஈரோடு கதிர் said...

//அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும் தெரியாததுபோல் //

நல்லத்தான் பாக்குறேப்பா...

அகல்விளக்கு said...

வாவ்...

எல்லாமே சொந்த அனுபவமா அண்ணா...

சூப்பர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்

மகா said...

//தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்.//

அற்புதமாக உள்ளது பாலாசி..... தொடரட்டும் உங்கள் இனிய கவிதைகள் ....

Unknown said...

நல்லா வரிகள்.., ஆனால் இன்னும் எதிர் பார்க்கிறேன்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லாருக்கு பாஸ்.

பிரபாகர் said...

//‘தருதலைங்க உருப்படவாப்போகுது’
என்று அம்மா திட்டியது தெரிந்தும்
சலைக்காமல் வந்து எதிர்வீட்டு பெண்ணை
எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??//

இளவல்! இது அடுக்குமா? அய்யோ அய்யோ...(ஆரூரன் சொன்ன அர்த்தமுங்க, தப்பா நினைக்க வேண்டாம்)

பிரபாகர்.

Kodees said...

எப்படி பாலாசி இப்படி?

காமராஜ் said...

இந்த நட்பு,காதல்,தாய்ப்பாசம் இதிலேதாவது ஒன்னு கூடவே வரணும் இல்லே உலகம் சூன்யமாகிப் போகும். நட்பைப்பற்றி சொல்லித் தீராது. கவிதை அழகு.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி....எல்லாஞ்சரி.....இது நீங்க எழுதுன மாதர தெரியலையே....
உங்களப் பார்த்து வேறு யாரோ எழுதுன மாதரயல்ல இருக்குது.....


என்ன சரிதானே......


வரிகள் ரசிக்கும்படி இருந்தது

Anonymous said...

ஹ்ஹஹஹா நல்லாயிருக்கு பாலாசி
நட்பின் பரிமாணத்தின் மேலும் பல கோணங்கள்...

vasu balaji said...

அய்யோ அய்யோ. இப்பத்தான் ஈரோட்டுக்கு போய் லவ்வுக்கு புது அர்த்தம் தெரிஞ்சிகிட்டேன். பய புள்ள இப்போ நட்புக்கு புது இலக்கணம் சொல்றானே.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

Romeoboy said...

\\தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்//


என்ன அனுபவமா ???

Rajakamal said...

"காதலிக்கு எழுதிய கவிதையை
படித்து ஆசிகூறி அனுப்பிவைத்த நண்பன்
புறமுதுகில் காரித்துப்பியதையும்
காதில் வாங்கிபடியேச் சென்று...."


பெரிய மனசு பாலசி உங்களுக்கு - கவிதை நல்லாயிருக்கு

புலவன் புலிகேசி said...

//தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்.//

இது சூப்பரு..அனைத்தும் அருமை பாலாசி...

ப்ரியமுடன் வசந்த் said...

மூன்றாவதுதான் டாப் நட்பூ...!

ஹேமா said...

நட்பின் கதை சொல்கிறது அத்தனை கவி வரிகளும்.

பாலாஜி...என்னமோ மரமண்டைன்னு சொன்னமாதிரி இருக்கு !

சீமான்கனி said...

//தருதலைங்க உருப்படவாப்போகுது’
என்று அம்மா திட்டியது தெரிந்தும்
சளைக்காமல் வந்து எதிர்வீட்டு பெண்ணை
எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??//


அவனல்லால் நண்பன் யாதொருவன்??
போலாம் ரைட்டு...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...நண்பரே...

வெண்ணிற இரவுகள்....! said...

//எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
//
இந்த வரிகள் மிக அருமை
எழுதுவதற்கு தகுதியான ஆள் நீ தான் ..................நண்பா ............

பாலா said...

wow balaji ellamum superb

க.பாலாசி said...

//Blogger கடைக்குட்டி said...
எல்லாமே நல்லா இருந்தாலும்...
மூனாவது பத்தி எனக்கு புடிச்சு இருக்கு... :-)//

நன்றி கடைக்குட்டி

//Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

நட்பின் நலம் பாராட்டும் கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..//

நன்றி இரா. குணசீலன் அய்யா...

//Blogger Sivaji Sankar said...
சரக்குக்கு சைடு டிஷ் இல்லாத போது முறுக்கு வாங்க
3 ரூவா கொடுக்குமாம் நட்பு..!!
இது அல்வா சாரி அல்லவா நட்பு..!
கிகிகிகி... கிகிகிகி...

நன்றி சிவாஜி...

//Blogger D.R.Ashok said...
:) நட்பூ//

நன்றி அண்ணா..

//Blogger ஈரோடு கதிர் said...
நல்லத்தான் பாக்குறேப்பா...//

நன்றி அய்யா...

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...
வாவ்...
எல்லாமே சொந்த அனுபவமா அண்ணா...
சூப்பர்.//

அனுபவமல்லாம் இல்லை தம்பி... நன்றி..

//Blogger T.V.Radhakrishnan said...
சூப்பர்//

நன்றி டி.வி.ஆர்...

//Blogger மகா said...
அற்புதமாக உள்ளது பாலாசி..... தொடரட்டும் உங்கள் இனிய கவிதைகள் ....//

நன்றி மகா...

//Blogger பேநா மூடி said...
நல்லா வரிகள்.., ஆனால் இன்னும் எதிர் பார்க்கிறேன்...//

ம்ம்ம்.. நடக்கும் நன்றி நண்பா...

//Blogger ஸ்ரீ said...
நல்லாருக்கு பாஸ்.//

நன்றி தலைவரே...

க.பாலாசி said...

//பிரபாகர் said...
இளவல்! இது அடுக்குமா? அய்யோ அய்யோ...(ஆரூரன் சொன்ன அர்த்தமுங்க, தப்பா நினைக்க வேண்டாம்)
பிரபாகர்.//

ஹா..ஹா... புரிஞ்சிடுச்சா... சரிதான். நன்றி அண்ணா..

//Blogger ஈரோடு கோடீஸ் said...
எப்படி பாலாசி இப்படி?//

அது அப்டித்தான் கண்டுக்காதிங்க தலைவா...

//Blogger காமராஜ் said...
இந்த நட்பு,காதல்,தாய்ப்பாசம் இதிலேதாவது ஒன்னு கூடவே வரணும் இல்லே உலகம் சூன்யமாகிப் போகும். நட்பைப்பற்றி சொல்லித் தீராது. கவிதை அழகு.//

மிக்க நன்றி தோழரே...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
பாலாசி....எல்லாஞ்சரி.....இது நீங்க எழுதுன மாதர தெரியலையே....
உங்களப் பார்த்து வேறு யாரோ எழுதுன மாதரயல்ல இருக்குது.....
என்ன சரிதானே......
வரிகள் ரசிக்கும்படி இருந்தது//

எப்டிவேணும்னாலும் மாத்திக்கலாம். இரண்டும் ஒன்றுதான். நன்றி அய்யா...

க.பாலாசி said...

//தமிழரசி said...
ஹ்ஹஹஹா நல்லாயிருக்கு பாலாசி நட்பின் பரிமாணத்தின் மேலும் பல கோணங்கள்...//

நன்றி தமிழரசி அக்கா...

//Blogger வானம்பாடிகள் said...
அய்யோ அய்யோ. இப்பத்தான் ஈரோட்டுக்கு போய் லவ்வுக்கு புது அர்த்தம் தெரிஞ்சிகிட்டேன். பய புள்ள இப்போ நட்புக்கு புது இலக்கணம் சொல்றானே.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))//

அவ்வ்வ்வ்வ்வ்..... நன்றி காதல் வானம்பாடிகள்...

//Blogger Romeoboy said...
என்ன அனுபவமா ???//

ம்ம்ம்... அதைத்தான் யோசிக்கிறேன். நன்றி நண்பா..

//Blogger Rajakamal said...
பெரிய மனசு பாலசி உங்களுக்கு - கவிதை நல்லாயிருக்கு//

நன்றி ராஜ்

//Blogger புலவன் புலிகேசி said...
இது சூப்பரு..அனைத்தும் அருமை பாலாசி...//

நன்றி நண்பா...

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
மூன்றாவதுதான் டாப் நட்பூ...!//

நன்றி வசந்த்...

//Blogger ஹேமா said...
நட்பின் கதை சொல்கிறது அத்தனை கவி வரிகளும்.
பாலாஜி...என்னமோ மரமண்டைன்னு சொன்னமாதிரி இருக்கு !//

ஹி..ஹி.. உங்களுக்கு ஞாபக சக்தி அதிகமா இருக்கு...நன்றி ஹேமா...

//Blogger seemangani said...
அவனல்லால் நண்பன் யாதொருவன்??
போலாம் ரைட்டு...
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...நண்பரே...//

நன்றி நண்பரே....

//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
இந்த வரிகள் மிக அருமை
எழுதுவதற்கு தகுதியான ஆள் நீ தான் ..................நண்பா ............//

நாம் அனைவரும்தான் நண்பா...நன்றி...

//Blogger பாலா said...
wow balaji ellamum superb//

நன்றி பாலா...

கார்த்திகைப் பாண்டியன் said...

எனக்கு என்னமோ இது பகடி மாதிரித்தான் தெரியுது நண்பா..

சத்ரியன் said...

இங்க பார்ர்ரா....!

என் நண்பன் பழசையெல்லாம் கிளறி விடறத...!

ம்ம்ம்ம்....மறக்க முடியாதுதான்!

நல்ல நினைவுறுத்தல் ‘கவிதை’ நண்பா.

"உழவன்" "Uzhavan" said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா :-)

திவ்யாஹரி said...

"அவள் அண்ணா என்றவுடன்
ஆற்றாமையில் அறைக்கு திரும்பும் நேரத்தில்
அரைகுடுவை சாராயத்துடன் காத்திருப்பான் அதே நண்பன்."

ஹா ஹா ஹா..

"தேர்வறையில் துண்டுச்சீட்டினைப் பரிமாறக்கொடுத்து
தேர்ச்சிபெறச்செய்ததுஉம்....நட்பன்றி வேறென்ன??"

உண்மையெல்லாம் வெளியில வருது..

"தான் பார்க்கும் பெண்ணை
அவனும் பார்க்கிறான் என்றறிந்ததும்
தயக்கமின்றி அவளை தங்கையாக்கிக்கொண்டு
அடுத்தவளைத் தேடிச்சென்றுவிடும் நண்பனுக்கு
தன் காதலையும் தியாகம் செய்து
காதலே வேண்டாமென்று அறிவுறுத்தும்
அதுவும்கூட நட்புதான்."

இது அருமையா இருக்கு நண்பா.. நல்ல நட்பு..

" ‘தருதலைங்க உருப்படவாப்போகுது’
என்று அம்மா திட்டியது தெரிந்தும்
சளைக்காமல் வந்து எதிர்வீட்டு பெண்ணை
எனக்கு தெரியாமலே கண்ணடிக்கும் அவனுக்கு...
அவன் தங்கையை நான் பார்ப்பது தெரிந்தும்
தெரியாததுபோல் மறந்துப்பழகும்
அவனல்லால் நண்பன் யாதொருவன்??"

கண்டிப்பா..
நல்லா எழுதியிருக்கிறீர்கள் நண்பா.

க.பாலாசி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
எனக்கு என்னமோ இது பகடி மாதிரித்தான் தெரியுது நண்பா..//

நன்றி தலைவரே...

//Blogger சத்ரியன் said...
இங்க பார்ர்ரா....!
என் நண்பன் பழசையெல்லாம் கிளறி விடறத...!
ம்ம்ம்ம்....மறக்க முடியாதுதான்!
நல்ல நினைவுறுத்தல் ‘கவிதை’ நண்பா.//

நன்றி நண்பரே...

//Blogger " உழவன் " " Uzhavan " said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா :-)//

நன்றி உழவன்...

//Blogger திவ்யாஹரி said...
ஹா ஹா ஹா..
உண்மையெல்லாம் வெளியில வருது..
இது அருமையா இருக்கு நண்பா.. நல்ல நட்பு..
கண்டிப்பா..
நல்லா எழுதியிருக்கிறீர்கள் நண்பா.//

வாங்க தோழியே... மிக்க நன்றி...

Sadagopal Muralidharan said...

நட்பிற்கு இப்படியும் ஒரு பரிமாணம். இலக்கணத்தாக்கம் ”துஉம்” காட்டுகிறது. விரைவில் ஒரு மரபுக்கவிதை வருமோ. வாழ்த்துக்கள் - கவிதைக்கும் ஆங்கிலப்புதிய ஆண்டுக்கும்.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO