க.பாலாசி: பகிர்தல் அறம்...

Tuesday, April 20, 2010

பகிர்தல் அறம்...

குறுக்காக சுமார் எட்டு மைல் கல் தொலைவு இருக்கலாம் எங்களுரிலிருந்து. மேலும்சில என் குடும்ப உறவினர்களையும் பெற்றிருக்கும் கிராமம் அது. தொடர்ச்சியாக மூன்று வருடங்கள், விடுமுறை நாட்கள் நீங்களாக, அந்தச் சாலையையும் அவ்விடத்தினையும் என் கண்கள் நிரப்பியுள்ளன. அங்கே குழுமியிருக்கும் பூச்செடிகளுக்கும் அதனூடாக முளைத்திருக்கும் புற்பூண்டுகளுக்கும் நடுவே எழுப்பப்பட்டுள்ள மணிமண்டபம் எனக்குள் ஒரு காட்சிப் பொருளாகப்பட்டதேயொழிய வேறெந்த பிரமிப்பினையும் ஏற்படுத்தியதாக நினைவிலில்லை. அப்பகுதி மக்களுக்கும் அவ்வாறே இருக்க அல்லது இருந்திருக்கவேண்டும்.

காலை 6.30 க்கு பழையச்சோறும், பச்சைமிளகாயும் கொடுத்த இனிமையை பவானிக்காக நான் ருசித்திருக்கலாம். வேறெந்த காரணகாரியங்களிருப்பதாய் தோன்றவில்லை. 6.45க்கு மயிலாடுதுறையிலிருந்து பொறையார் வரை அப்பேருந்து தினமும் செல்லும்வழிதான். இடையில் திருக்கடையூரைக் கடந்தால் 3 மைல்கள். தில்லையாடி. மாபெரும் வரலாற்றுக்கு சொந்தமான கிராமம். பேருந்தின் படிக்கட்டுக்கட்டுகளையும், சன்னலோரத்தையும் தாண்டி கடந்து செல்லும் அவ்விடம் வேறெந்த தாக்கதினையும் என்னுள் ஏற்படுத்தாமல் போனதற்கு அதன் முழுவரலாறு அறியா மூடனாக நான் வளர்ந்ததே காரணமாயிருக்கும்.



தில்லையாடி வள்ளியம்மையின் முழு வரலாறு இங்கே.. சாதனைப் பெண்கள்.

இன்னொருவர் காந்தியடிகளுக்கு துணையாகவும் நண்பராகவும். தமிழர் நலனில் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு போராடிய, பல போராட்டங்களுக்கு காந்தியடிகளுக்கு பக்கபலமாகவும் இருந்த தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆச்சாரியார்... இவரைப்பற்றின முழுத்தகவல்கள் கிடைக்கபெறவில்லை. ஆயினும் அவர் தாயார் உடல் நலமில்லாமலிருந்தபோது காந்திஜி அவர்கள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவியுடன், சுப்பிரமணிய ஆச்சாரியாருக்கு தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். அக்கடிதம் கீழே.....


இந்நேரம் உணர்கிறேன், இனியும் அங்கு செல்லவேண்டிய தருணங்கள் நிறைய இருக்கின்றது. பிறகொருமுறையும் வெறுமனே கடந்து வருவதை விரும்பவில்லை.



45 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

சிறந்த பகிர்வுக்கு நன்றி.

அகல்விளக்கு said...

சிறந்த பகிர்வு அண்ணா....

r.v.saravanan said...

இந்நேரம் உணர்கிறேன், இனியும் அங்கு செல்லவேண்டிய தருணங்கள் நிறைய இருக்கின்றது. பிறகொருமுறையும் வெறுமனே கடந்து வருவதை விரும்பவில்லை.


என் சொந்த ஊருக்கு அருகில் உள்ளதால்
நானும் உணர்கிறேன்

பதிவுக்கு நன்றி

ஈரோடு கதிர் said...

அருமையா பகிர்வு

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

Paleo God said...

அருமை பாலாசி. சாதனைப் பெண்கள் பக்கமும் அருமை.

தின வாழ்வில் நிறைய தவற விடுகிறோம்!!

vasu balaji said...

நல்ல பகிர்வு நண்பா:)

தமிழ் அமுதன் said...

அருமையான பகிர்வு..!நன்றி.!

Ahamed irshad said...

காந்தி எழுதிய கடிதத்துடன் அதுவும் தமிழில். ஆகச் சிறந்த, அரிதான பதிவு பாலாசி. கலக்கிட்டீங்க. பிடியுங்கள் பாராட்டை....

ஹேமா said...

அருமையானதும் ஆணவப்படுத்த வேண்டிய பதிவும் கூட.நன்றி பாலாஜி இப்படியொரு அனுபவத்தைப் பதிவில் கொண்டு வந்தமைக்கு.

ராஜ நடராஜன் said...

மிகவும் அரிதான பொக்கிசமாகப் பாதுகாக்க வேண்டிய பதிவு.இந்த கடிதம் குறித்த உங்கள் அறிமுகம் எப்படி என்பதை மறுமொழியாகவோ அல்லது இன்னுமொரு இடுகை இட வேண்டுகிறேன்.

க ரா said...

நல்ல பகிர்வுக்கு நன்றி பாலாசி.

ராஜ நடராஜன் said...

காந்தி ஜி!ஜே! தான் தெரியுமா?

Jaleela Kamal said...

அருமையானதொரு பகிர்வு.

க.பாலாசி said...

//ராஜ நடராஜன் said...
மிகவும் அரிதான பொக்கிசமாகப் பாதுகாக்க வேண்டிய பதிவு.இந்த கடிதம் குறித்த உங்கள் அறிமுகம் எப்படி என்பதை மறுமொழியாகவோ அல்லது இன்னுமொரு இடுகை இட வேண்டுகிறேன்.//

அந்த கடிதத்தினைப்பற்றி http://www.facebook.com/note.php?note_id=176354404709

http://tamildebate.blogspot.com/2008/10/blog-post_4588.html

இந்த தளங்களில்தான் அறிந்துகொண்டேன். மற்றதெதுவும் முழுமையாக கிடைக்கபெறவில்லை. டி.சுப்பிரமணியத்தைப்பற்றின தகவல்களும் கிடைக்கவில்லை.

நன்றி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்...

பத்மா said...

எங்க ஊரா நீங்களும்? அருகில் இருக்கும் குராவடி முருகன் கோவிலில் தான் என் தாயும் தந்தையும் கல்யாணம் செய்து கொண்டார்களாம். வரும் போது சொல்லுங்கள்

பா.ராஜாராம் said...

அருமை பாலாஜி!!!

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பகிர்வு. சாதனைப் பெண்கள் சுட்டிக்க்கும் நன்றி.

//பிறகொருமுறையும் வெறுமனே கடந்து வருவதை விரும்பவில்லை.//

இப்படி எத்தனை விஷயங்களை கவனிக்காமல் கடந்து விடுகிறோம்?!

காமராஜ் said...

நல்ல செழிம்பான காட்லருந்தான் வந்திருக்கா ?
அதானே பாத்தேன்.

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

பகிர்வு அருமை......

கலகலப்ரியா said...

பகிர்வுக்கு நன்றி பாலாசி..

நேசமித்ரன் said...

நல்லதொரு பகிர்வு

அன்பேசிவம் said...

அருமையான் பதிவு, பகிர்வு. வாழ்த்துக்கள் நண்பா!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான பகிர்வு பாலாசி.. அதே தேர்ந்த நடையில்..

Chitra said...

அருமையான இடுகை. பாராட்டுக்கள்!

செ.சரவணக்குமார் said...

மிகச் சிறந்த பகிர்வு பாலாசி சார். ரொம்ப நன்றி.

சீமான்கனி said...

சிறப்பான வரலாற்று பதிவு பலே பாலாசி...பகிர்வுக்கு நன்றி

ராஜ நடராஜன் said...

பாலாசி!எனது முந்தைய பின்னூட்டத்துக்கு நீங்கள் கொடுத்த சுட்டி எனக்கு திருப்தியளிக்கவில்லை.இதன் மூலம் எங்கிருந்து என்பதை ஆவணத்துடன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

பள்ளி,கல்லூரிகளில் தெரியாத ஒன்று இணையம் மூலம் பயணிக்கிறது.அதன் ஆதாரங்களை காப்புரிமைப் படுத்துவது மிக முக்கியமான ஒன்று.இல்லையெனில் கையெழுத்து வரலாற்றுப் பிழை என்ற பழி வந்து சேரும்.

எனது ஆதங்கம் புரியுமென நினைக்கிறேன்.நன்றி.

Anonymous said...

பாலாசிக்கே உரிய கைவண்ணத்தில் மீண்டும் ஒரு சிறந்த பகிர்வு...

க‌ரிச‌ல்கார‌ன் said...

அருமையான பகிர்வு

க.பாலாசி said...

நன்றி சைவக்கொத்துப்பரோட்டா...

நன்றி அகல்விளக்கு ராசா

நன்றி ஆர்.வி. சரவணன்

நன்றி கதிர் அய்யா..

நன்றி பனித்துளி சங்கர்

நன்றி வானம்பாடிகள் அய்யா..

நன்றி பலாபட்டரை ஷங்கர்

நன்றி ஜீவன்...

நன்றி அஹ்மது இர்ஷாத்

நன்றி ஹேமா...

நன்றி ராஜநடராஜன்...

க.பாலாசி said...

நன்றி Jaleela

நன்றி பத்மா...
(ம்ம்...கண்டிப்பா சொல்றேனுங்க..)

நன்றி பா.ராஜாராம் அய்யா...

நன்றி ராமலக்ஷ்மி அக்கா...

நன்றி காமராஜ் அய்யா...

நன்றி அக்பர்

நன்றி Sangkavi

நன்றி கலகலப்ரியா

நன்றி நேசமித்ரன்

நன்றி முரளிகுமார் பத்மநாபன்

நன்றி ச.செந்தில்வேலன்

நன்றி Chitra

நன்றி Blogger நசரேயன்

நன்றி செ.சரவணக்குமார்

நன்றி seemangani

//Blogger ராஜ நடராஜன் said...
பாலாசி!எனது முந்தைய பின்னூட்டத்துக்கு நீங்கள் கொடுத்த சுட்டி எனக்கு திருப்தியளிக்கவில்லை.இதன் மூலம் எங்கிருந்து என்பதை ஆவணத்துடன் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
பள்ளி,கல்லூரிகளில் தெரியாத ஒன்று இணையம் மூலம் பயணிக்கிறது.அதன் ஆதாரங்களை காப்புரிமைப் படுத்துவது மிக முக்கியமான ஒன்று.இல்லையெனில் கையெழுத்து வரலாற்றுப் பிழை என்ற பழி வந்து சேரும்.
எனது ஆதங்கம் புரியுமென நினைக்கிறேன்.நன்றி.//

புரிகிறது.. அதற்கான ஆவணங்களை செகரித்து வருகிறேன்... அடுத்தமுறை ஊருக்குச்சென்று திரும்பும்பொழுது அதற்கான ஆதாரங்களுடன் வருகிறேன்... நன்றி...

நன்றி தமிழரசி

நன்றி க‌ரிச‌ல்கார‌ன்

சத்ரியன் said...

இது தெரியாம இத்தன நாளா நானும் மூடனாத்தான் இருந்தனா?

ரிஷபன் said...

நிறைய விஷயங்கள் இப்படித்தான் அருகில் இருப்பதால் கவனிப்பு இன்றி விட்டு விடுகிறோம்.. நல்ல பதிவு.. விழிப்பூட்டும் வகையில்..

'பரிவை' சே.குமார் said...

சிறந்த பகிர்வுக்கு நன்றி.

Sadagopal Muralidharan said...

நல்லதொரு பதிவு.
தில்லையாடி வள்ளியம்மை, காந்தி, நமது வரலாறு இவையெல்லாம் தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கும், தேர்தலில் ஓட்டுப்பெறுவதற்கு மட்டுமே என்ற நிலையிருக்கையில், இந்தப்பதிவு பாராட்டப்படவேண்டிய செயல்.

கவிதன் said...

காந்தி தமிழில் எழுதியதா.... ? நம்பவே முடியவில்லை! பெருமையாக இருக்கிறது... அருமையான பதிவு பாலாஜி அண்ணா.

நாடோடி இலக்கியன் said...

நல்ல பகிர்விற்கு நன்றி தம்பி.

அம்பிகா said...

அருமையான பகிர்வு.

தாராபுரத்தான் said...

அருமை..

க.பாலாசி said...

//சத்ரியன் said...
இது தெரியாம இத்தன நாளா நானும் மூடனாத்தான் இருந்தனா?//

ஓ... நீங்களும் நம்மாளுதான்... நன்றிங்க...

//Blogger ரிஷபன் said...
நிறைய விஷயங்கள் இப்படித்தான் அருகில் இருப்பதால் கவனிப்பு இன்றி விட்டு விடுகிறோம்.. நல்ல பதிவு.. விழிப்பூட்டும் வகையில்..//

ஆமங்க.. ரிஷபன்... நன்றி...

//Blogger சே.குமார் said...
சிறந்த பகிர்வுக்கு நன்றி.//

நன்றிங்க சே. குமார்..

//Blogger Sadagopal Muralidharan said...
நல்லதொரு பதிவு.
தில்லையாடி வள்ளியம்மை, காந்தி, நமது வரலாறு இவையெல்லாம் தேர்வில் மதிப்பெண் பெறுவதற்கும், தேர்தலில் ஓட்டுப்பெறுவதற்கு மட்டுமே என்ற நிலையிருக்கையில், இந்தப்பதிவு பாராட்டப்படவேண்டிய செயல்.//

நன்றிங்க சடகோபன்...

//Blogger கவிதன் said...
காந்தி தமிழில் எழுதியதா.... ? நம்பவே முடியவில்லை! பெருமையாக இருக்கிறது... அருமையான பதிவு பாலாஜி அண்ணா.//

எனக்கும்தான்.... நன்றிங்க கவிதன்...

//Blogger நாடோடி இலக்கியன் said...
நல்ல பகிர்விற்கு நன்றி தம்பி.//

நன்றிங்க அண்ணா...

//Blogger அம்பிகா said...
அருமையான பகிர்வு.//

நன்றிங்க அம்பிகா...

//Blogger தாராபுரத்தான் said...
அருமை..//

நன்றிங்க அய்யா....

Anonymous said...

//காலை 6.30 க்கு பழையச்சோறும், பச்சைமிளகாயும் கொடுத்த இனிமையை பவானிக்காக நான் ருசித்திருக்கலாம்.//
தில்லையாடி வள்ளியம்மை சரி யார் இந்த பவானி???

Anonymous said...

//காலை 6.30 க்கு பழையச்சோறும், பச்சைமிளகாயும் கொடுத்த இனிமையை பவானிக்காக நான் ருசித்திருக்கலாம்.//
தில்லையாடி வள்ளியம்மை சரி யார் இந்த பவானி???

ரோகிணிசிவா said...

//இந்நேரம் உணர்கிறேன், இனியும் அங்கு செல்லவேண்டிய தருணங்கள் நிறைய இருக்கின்றது. பிறகொருமுறையும் வெறுமனே கடந்து வருவதை விரும்பவில்லை.//
- பிறகொருமுறையும் வெறுமனே கடந்து செல்லமாட்டாய் பாலாசி,இனி நாங்களும் .

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO