க.பாலாசி: இலைமறை கனி...

Friday, May 14, 2010

இலைமறை கனி...


அம்மன் படத்துடன்
பிச்சைக்கேட்டு வரும் ஒருத்திக்கு
குடிசைக்குள்ளிருந்தவள்
‘இல்லை’யென்ற பதிலையே
வைத்திருந்திருந்தாள்...

பிறகு
மாதா படத்துடன் வந்தாள்...
அதே பதில்தான்....

யாசித்து வந்தவளும்
தடவைக்குத்தடவை வெவ்வேறான
காரணங்களை அவிழ்த்துவிட்டாள்...

ஒருமுறை அப்பா, அம்மா
அடுத்து ஊனமுற்ற தம்பி
அடுத்தடுத்து வேறொன்று....

இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...
அதேபதிலை சொல்லமுடியவில்லை...

உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணியை மறைத்துக்கொண்டு...


.

70 comments:

க ரா said...

அருமை பாலாசி.

நேசமித்ரன் said...

கடைசி வரி கொஞ்சம் கலங்கடிச்சது சார்

ஈரோடு கதிர் said...

வெகு அருமை பாலாசி

vasu balaji said...

பாலாசி.......ம். நடத்து!

கண்ணகி said...

ஒண்ணும் சொல்ல முடியல.

cheena (சீனா) said...

அன்பின் பாலாசி

அருமை அருமை - இறுதியில் கலங்க வைத்து விட்டாய் பாலாசி

நன்று நன்று நல்வாழ்த்துகள் பாலாசி

நட்புடன் சீனா

ராமலக்ஷ்மி said...

உருக்கம்.

தலைப்பும் அருமை பாலாசி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை பாலாசி.

Ashok D said...

அட.... சூப்பருப்பா.... :)

கருகமணி மினுக்குது வைரமாட்டும்...

ஹேமா said...

பாலாஜி...திருமணத்தின் - தாலியின் பெருமையை கவிதையாக்கிவிட்டீர்கள்.அருமை.

பாலாஜி,உங்கள் இதற்கு முதலான பதிவை ஒற்றியெடுத்திருக்கிறேன்.

அன்புடன் நான் said...

கவிஞர் கா.பாலாசிக்கு வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

இலைமறை கனி...கருகமணி,நச்...கவிதை.

நிஜமா நல்லவன் said...

கடைசில இப்படி பண்ணிட்டீங்க...நல்லா இருக்குங்க!

Unknown said...

அட்டகாசம். பின்றயேசாமி. நல்லாரு.

பிரபாகர் said...

எக்ஸலன்ட்!

கலக்கிட்டீங்க இளவல்!

வாழ்த்துக்கள்.

பிரபாகர்...

காமராஜ் said...

வலியறியும் வலி.
பாலாஜி.
கவிதை சின்னச்சின்னசொல்லில்
முளைத்து விருட்சமாகிறது.
ரொம்ம்ம்ப நல்லாருக்கு.

r.v.saravanan said...

கடைசி வரிகளில் கலக்கிட்டீங்க இல்லே கலங்க வச்சுடீங்க
வாழ்த்துக்கள்

பத்மா said...

பாலா இதனை பேர் சொன்ன பிறகு நான் என்ன சொல்ல முடியும் ?
திரும்பி திரும்பி படிக்கிறேன் .நீங்க ரொம்ப பெருமை படக்கூடிய பதிப்பு இது .வாழ்த்துக்கள்

சீமான்கனி said...

ஆஹா...தல நிஜமாவே கடைசி வரியில் கலங்கடிசுடீங்க...அருமை வாழ்த்துகள்...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையாக வந்துள்ளது பாலாசி.

ஒவ்வொரு முறையும் புதிய இடத்தில்.. புதிய மனிதர்கள், புதிய பார்வை. சிறப்பு.

பா.ராஜாராம் said...

கலக்குறீங்க பாலாஜி.

முக்கி, தக்கி தமிழ்மணம் மகுடத்தில் என் பெயர் பார்த்தேன் இன்று.

காலி பண்ணிருவீங்க போல. நீங்களும் கதிரும் பார்க்கிற வேலை. :-))

Paleo God said...

அருமையான கரு! அருமை பாலாசி!

'பரிவை' சே.குமார் said...

வெகு அருமை பாலாசி

கலகலப்ரியா said...

சூப்பரப்பு... எளிமை.. அழகு... நீ எங்கயோ போயிட்ட போ..

ரோஸ்விக் said...

நல்லாயிருக்கு பாலாசி...

தாராபுரத்தான் said...

மாங்கல்ய மகிமை..அருமையா சொல்லியிருக்கீறீர்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள் பாலாசி

சத்ரியன் said...

கவிதை அருமை.

கரு:- பிச்சைக்கேட்பவர்கள் கையாளும் யுக்திகளை நன்றாய் சுட்டியிருக்கின்றீகள்.

”பொருள்” இல்லாதவர்களிடமே இரக்ககுணம் மிகுந்திருப்பதையும்... பகிர்வதையும் அழகாகச் சுட்டியிருக்கின்றீர்கள்.

ஒரு சம்பவம்:-
நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், “ என் கல்யாணத்திற்கு” - என்ற இரக்கம் கலந்த தொனியில்... ஒரு பெண்ணை ஒரு பேருந்து நிலையத்தில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.

நானும் பலமுறை இல்லை என்ற பதிலையே அவளின் பாத்திரத்தில் போட்டேன். ஒருமுறை அவளிடம் ”உதவி செய்ய என்னிடம் பணம் இல்லை. நான் வேண்டுமானால் உன்னைத் திருமணம் செய்துக் கொள்கிறேன்”, என்றேன்.
எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.
(பின்ன, உம்மூஞ்சியப் பாத்தா...ன்னு எகத்தாளம் பண்ணக்கூடாது.)

சில வருடங்கள் கழித்து, குறிப்பிட்ட அந்த பேருந்து நிலையத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் அவள் ”அதே வாசகத்துடன்” ...!

அப்போது ... பணம் கொடுத்தேன். அந்த சொற்ப ரூபாயின் “எண்’ணைக் கண்டு, அவள் கண்களில் ஒரு மலைப்பைக் காண முடிந்தது.

வாழ்வதற்கான வழிமுறைகள் ஆயிரமிருந்தும், நம்மின் “சொற்ப” இரக்க குணத்தால்..., தொடர்ந்து அவர்களை பிச்சைத்தொழிலுக்கே பழக்கிவிடுகிறோமோ என்றொரு உருத்தல் எழாமல் இல்லை.

சத்ரியன் said...
This comment has been removed by the author.
சத்ரியன் said...

இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...
அதேபதிலை சொல்லமுடியவில்லை...

இங்கதான்யா வெச்சிருக்கே அந்த “இலைமறைக் கனி”யை.

//உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணியை மறைத்துக்கொண்டு...//

பிச்சைக் கேட்பதை விடவும் மகா மட்டமான தொழில் “வரதட்சணை” கேட்பது.

பின்குறிப்பு:- இன்னும் மணமாகாத இளைஞ்சர்கள் அந்த கடைசி வரி “கருகமணியை” கவனிக்க. பின் வரதட்சணைப் பற்றி யோசிக்க.

May 15, 2010 8:06 AM

அகல்விளக்கு said...

கவிதையும் தலைப்பும் அருமை அண்ணா...

Vidhoosh said...

அருமைங்க பாலாசி. ரொம்ப அருமை. :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை பாலாசி.

ஆடுமாடு said...

நல்லாருக்கு பாலாசி

சாந்தி மாரியப்பன் said...

அருமை பாலாசி. கடைசி வரியில் மலைச்சுப்போய் நின்னுக்கிட்டிருக்கேன்.

Ahamed irshad said...

நல்வாழ்த்துகள் பாலாசி...

dheva said...

ஏங்க....பாலாசி... ! எப்படிங்க....இப்படி எல்லாம்...! சும்மா சொல்லக் கூடாதுங்க.....சூப்பருங்க!

பிரேமா மகள் said...

ஹே.. பின்னறீங்க அண்ணாச்சி. எல்லாப் பெண்ணுக்கும் தன் கல்யாணம் குறித்து ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும்.. அட்லீஸ்ட் நமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லைன்னு மத்தவங்களுக்காவது உதவி செய்வாங்க இல்ல, அந்த நிகழ்வு மிக அற்புதமானது.. அதை அழகான வரிகளாக்கி வலிகளை தருகிறீர்கள்...

எம் அப்துல் காதர் said...

:))))) அருமை பாலாசி

vasan said...

ஏழைப்பெண்னொன்றால் இன்னும்,
திரும‌ண‌ம் என்ப‌து சாமியைவிட‌ பெரிசுதான் போல‌!
அப்ப‌டியா பாலாஜி?

செ.சரவணக்குமார் said...

மிகப் பிடித்திருக்கிறது பாலாசி. காமராஜ் அண்ணா சொன்னதுபோல சின்ன சின்ன வார்த்தைகள் விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்றன.

@ பா.ரா
கரெக்டா சொல்லிட்டீங்களே மக்கா.. அதான் காலி பண்ணிட்டோம்ல.

க.பாலாசி said...

//இராமசாமி கண்ணண் said...
அருமை பாலாசி.//

நன்றிங்க கண்ணன்..

//Blogger நேசமித்ரன் said...
கடைசி வரி கொஞ்சம் கலங்கடிச்சது சார்//

நன்றிங்க அய்யா...

//Blogger ஈரோடு கதிர் said...
வெகு அருமை பாலாசி//

நன்றி கதிர் சார்...

//Blogger வானம்பாடிகள் said...
பாலாசி.......ம். நடத்து!//

நன்றிங்க அய்யா...

//Blogger கண்ணகி said...
ஒண்ணும் சொல்ல முடியல.//

ம்ம்... நன்றிங்க கண்ணகி...

//Blogger cheena (சீனா) said...
அன்பின் பாலாசி
அருமை அருமை - இறுதியில் கலங்க வைத்து விட்டாய் பாலாசி
நன்று நன்று நல்வாழ்த்துகள் பாலாசி
நட்புடன் சீனா//

நன்றிங்க அய்யா...

//Blogger ராமலக்ஷ்மி said...
உருக்கம்.
தலைப்பும் அருமை பாலாசி.//

நன்றி... ராமலக்ஷ்மி அக்கா...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அருமை பாலாசி.//

நன்றிங்கக்கா...

//Blogger D.R.Ashok said...
அட.... சூப்பருப்பா.... :)
கருகமணி மினுக்குது வைரமாட்டும்...//

நன்றி அசோக் அண்ணா....

க.பாலாசி said...

//ஹேமா said...
பாலாஜி...திருமணத்தின் - தாலியின் பெருமையை கவிதையாக்கிவிட்டீர்கள்.அருமை.
பாலாஜி,உங்கள் இதற்கு முதலான பதிவை ஒற்றியெடுத்திருக்கிறேன்.//

நன்றிங்க ஹேமா... ஒற்றியெடுத்தமைக்கும்...

//Blogger சி. கருணாகரசு said...
கவிஞர் கா.பாலாசிக்கு வாழ்த்துக்கள்.//

ஓ.... நன்றிங்க கருணாகரசு...

//Blogger ஜெரி ஈசானந்தன். said...
இலைமறை கனி...கருகமணி,நச்...கவிதை.//

நன்றிங்க வாத்யாரே....

//Blogger நிஜமா நல்லவன் said...
கடைசில இப்படி பண்ணிட்டீங்க...நல்லா இருக்குங்க!//

நன்றிங்க நல்லவன்...

க.பாலாசி said...

//தாமோதர் சந்துரு said...
அட்டகாசம். பின்றயேசாமி. நல்லாரு.//

நன்றிங்க அய்யா...

//Blogger பிரபாகர் said...
எக்ஸலன்ட்!
கலக்கிட்டீங்க இளவல்!
வாழ்த்துக்கள்.
பிரபாகர்...//

நன்றிங்க அண்ணா...

//Blogger காமராஜ் said...
வலியறியும் வலி.
பாலாஜி.
கவிதை சின்னச்சின்னசொல்லில்
முளைத்து விருட்சமாகிறது.
ரொம்ம்ம்ப நல்லாருக்கு.//

மிக்க நன்றி காமராஜ் அய்யா...

//Blogger r.v.saravanan said...
கடைசி வரிகளில் கலக்கிட்டீங்க இல்லே கலங்க வச்சுடீங்க
வாழ்த்துக்கள்//

நன்றி சரவணன்...

//Blogger padma said...
பாலா இதனை பேர் சொன்ன பிறகு நான் என்ன சொல்ல முடியும் ?
திரும்பி திரும்பி படிக்கிறேன் .நீங்க ரொம்ப பெருமை படக்கூடிய பதிப்பு இது .வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி வாழ்த்துக்களுக்கும்...

//Blogger seemangani said...
ஆஹா...தல நிஜமாவே கடைசி வரியில் கலங்கடிசுடீங்க...அருமை வாழ்த்துகள்...//

நன்றிங்க நண்பா..சீமாங்கனி...

//Blogger ச.செந்தில்வேலன் said...
அருமையாக வந்துள்ளது பாலாசி.
ஒவ்வொரு முறையும் புதிய இடத்தில்.. புதிய மனிதர்கள், புதிய பார்வை. சிறப்பு.//

மிக்க நன்றிங்க செந்தில்....

க.பாலாசி said...

//பா.ராஜாராம் said...
கலக்குறீங்க பாலாஜி.
முக்கி, தக்கி தமிழ்மணம் மகுடத்தில் என் பெயர் பார்த்தேன் இன்று.
காலி பண்ணிருவீங்க போல. நீங்களும் கதிரும் பார்க்கிற வேலை. :-))//

தலைவரே...வணக்கம்..நன்றி....
அப்டில்லாம் இல்லைங்க...

//Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமையான கரு! அருமை பாலாசி!//

நன்றிங்க ஷங்கர்...

//Blogger சே.குமார் said...
வெகு அருமை பாலாசி//

நன்றிங்க சே.குமார்...

//Blogger கலகலப்ரியா said...
சூப்பரப்பு... எளிமை.. அழகு... நீ எங்கயோ போயிட்ட போ..//

வாங்கக்கா...நன்றி...

//Blogger ரோஸ்விக் said...
நல்லாயிருக்கு பாலாசி...//

நன்றிங்க ரோஸ்விக்...

//Blogger தாராபுரத்தான் said...
மாங்கல்ய மகிமை..அருமையா சொல்லியிருக்கீறீர்கள்.//

நன்றிங்க அய்யா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
வாழ்த்துக்கள் பாலாசி//

நன்றி...நன்றி....

க.பாலாசி said...

//’மனவிழி’சத்ரியன் said...
கவிதை அருமை.//

நன்றி...

//கரு:- பிச்சைக்கேட்பவர்கள் கையாளும் யுக்திகளை நன்றாய் சுட்டியிருக்கின்றீகள்.
”பொருள்” இல்லாதவர்களிடமே இரக்ககுணம் மிகுந்திருப்பதையும்... பகிர்வதையும் அழகாகச் சுட்டியிருக்கின்றீர்கள்.//

மீண்டும்...நன்றி...

/// ஒரு சம்பவம்:-
நான் படித்துக்கொண்டிருந்த கால கட்டத்தில், “ என் கல்யாணத்திற்கு” - என்ற இரக்கம் கலந்த தொனியில்... ஒரு பெண்ணை ஒரு பேருந்து நிலையத்தில் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.

நானும் பலமுறை இல்லை என்ற பதிலையே அவளின் பாத்திரத்தில் போட்டேன். ஒருமுறை அவளிடம் ”உதவி செய்ய என்னிடம் பணம் இல்லை. நான் வேண்டுமானால் உன்னைத் திருமணம் செய்துக் கொள்கிறேன்”, என்றேன்.
எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.
(பின்ன, உம்மூஞ்சியப் பாத்தா...ன்னு எகத்தாளம் பண்ணக்கூடாது.)///

ஹா..ஹா...இதுக்காகவே செய்வோம்ல...



//சில வருடங்கள் கழித்து, குறிப்பிட்ட அந்த பேருந்து நிலையத்தில் அவளைப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் அவள் ”அதே வாசகத்துடன்” ...!

அப்போது ... பணம் கொடுத்தேன். அந்த சொற்ப ரூபாயின் “எண்’ணைக் கண்டு, அவள் கண்களில் ஒரு மலைப்பைக் காண முடிந்தது.

வாழ்வதற்கான வழிமுறைகள் ஆயிரமிருந்தும், நம்மின் “சொற்ப” இரக்க குணத்தால்..., தொடர்ந்து அவர்களை பிச்சைத்தொழிலுக்கே பழக்கிவிடுகிறோமோ என்றொரு உருத்தல் எழாமல் இல்லை.//

உருத்தல் எனக்குமிருக்கிறது....

//Blogger ’மனவிழி’சத்ரியன் said...
இந்தமுறை ‘என் கல்யாணத்திற்கு’ என்றவளுக்கு...
அதேபதிலை சொல்லமுடியவில்லை...
இங்கதான்யா வெச்சிருக்கே அந்த “இலைமறைக் கனி”யை.
பிச்சைக் கேட்பதை விடவும் மகா மட்டமான தொழில் “வரதட்சணை” கேட்பது.
பின்குறிப்பு:- இன்னும் மணமாகாத இளைஞ்சர்கள் அந்த கடைசி வரி “கருகமணியை” கவனிக்க. பின் வரதட்சணைப் பற்றி யோசிக்க.//

ம்ம்ம்........ சரிதாங்க....

//Blogger அகல்விளக்கு said...
கவிதையும் தலைப்பும் அருமை அண்ணா...//

நன்றி ராசா...

//Blogger Vidhoosh(விதூஷ்) said...
அருமைங்க பாலாசி. ரொம்ப அருமை. :)//

நன்றிங்க விதூஷ்...

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை பாலாசி.//

நன்றிங்க டி.வி.ஆர்...

//Blogger ஆடுமாடு said...
நல்லாருக்கு பாலாசி//

நன்றி அய்யா...

//Blogger அமைதிச்சாரல் said...
அருமை பாலாசி. கடைசி வரியில் மலைச்சுப்போய் நின்னுக்கிட்டிருக்கேன்.//

நன்றிங்க அமைதிச்சாரல்...

//Blogger அஹமது இர்ஷாத் said...
நல்வாழ்த்துகள் பாலாசி...//

நன்றி இர்ஷாத்..

க.பாலாசி said...

//Blogger dheva said...
ஏங்க....பாலாசி... ! எப்படிங்க....இப்படி எல்லாம்...! சும்மா சொல்லக் கூடாதுங்க.....சூப்பருங்க!//

நன்றிங்க தேவா... (ஏதோ நம்மாள....)

//Blogger பிரேமா மகள் said...
ஹே.. பின்னறீங்க அண்ணாச்சி. எல்லாப் பெண்ணுக்கும் தன் கல்யாணம் குறித்து ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும்.. அட்லீஸ்ட் நமக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லைன்னு மத்தவங்களுக்காவது உதவி செய்வாங்க இல்ல, அந்த நிகழ்வு மிக அற்புதமானது.. அதை அழகான வரிகளாக்கி வலிகளை தருகிறீர்கள்...//

அதேதாம்மா... நன்றி....

//Blogger அன்புடன் அருணா said...
பூங்கொத்து!//

மகிழ்ச்சி..நன்றி...

//Blogger எம் அப்துல் காதர் said...
:))))) அருமை பாலாசி//

நன்றிங்க காதர்...

//Blogger vasan said...
ஏழைப்பெண்னொன்றால் இன்னும்,
திரும‌ண‌ம் என்ப‌து சாமியைவிட‌ பெரிசுதான் போல‌!
அப்ப‌டியா பாலாஜி?//

ம்ம்ம்... உண்மைதான்... நன்றிங்க வாசன்...

//Blogger செ.சரவணக்குமார் said...
மிகப் பிடித்திருக்கிறது பாலாசி. காமராஜ் அண்ணா சொன்னதுபோல சின்ன சின்ன வார்த்தைகள் விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்றன.
@ பா.ரா
கரெக்டா சொல்லிட்டீங்களே மக்கா.. அதான் காலி பண்ணிட்டோம்ல.//

நன்றிங்க செ.சரவணக்குமார்...

Unknown said...

கடைசி வரியில் நிற்கும் வலி

நாடோடி இலக்கியன் said...

எக்ஸ்லெண்ட் பாலாஜி.

கடைசி வரி நிறைய பேசுகிறது..அருமை அருமை.

சிநேகிதன் அக்பர் said...

மனதை தொட்ட கவிதை. நன்று பாலாசி

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

ஹுஸைனம்மா said...

நல்லாருக்குங்க.

ரிஷபன் said...

இந்த கூட்டத்துல நான் “நல்லா இருக்கு” சொல்றது காதுல விழுமான்னு தெரியல.. அசத்திட்டிங்க பாலாசி..

பனித்துளி சங்கர் said...

கோர்க்க இயலாத வார்த்தைகளின் வலியை உங்கள் கவிதையின் இறுதியில் அவள் மறைத்த அந்த கோர்த்த கருகமணியில் உணர்ந்தேன் . மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !

Thenammai Lakshmanan said...

எப்படிக் கேட்டால் கிடைக்குமென தெரிந்து வைத்திருக்கிறார்கள்..

க.பாலாசி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
கடைசி வரியில் நிற்கும் வலி//

வாங்க செந்தில் முதல்வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்...

//Blogger நாடோடி இலக்கியன் said...
எக்ஸ்லெண்ட் பாலாஜி.
கடைசி வரி நிறைய பேசுகிறது..அருமை அருமை.//

மிக்க நன்றிங்கண்ணா..

//Blogger அக்பர் said...
மனதை தொட்ட கவிதை. நன்று பாலாசி//

வாங்க அக்பர்...நன்றி..

//Blogger ஹுஸைனம்மா said...
நல்லாருக்குங்க.//

நன்றிங்க....

//Blogger ரிஷபன் said...
இந்த கூட்டத்துல நான் “நல்லா இருக்கு” சொல்றது காதுல விழுமான்னு தெரியல.. அசத்திட்டிங்க பாலாசி../

அதெப்படிங்க விழாமப்போகும்... நல்லாவே கேட்குதுங்க.. நன்றி ரிஷபன்...

//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
கோர்க்க இயலாத வார்த்தைகளின் வலியை உங்கள் கவிதையின் இறுதியில் அவள் மறைத்த அந்த கோர்த்த கருகமணியில் உணர்ந்தேன் . மிகவும் அருமை . வாழ்த்துக்கள் நண்பரே !//

நன்றிங்க நண்பரே...

//Blogger thenammailakshmanan said...
எப்படிக் கேட்டால் கிடைக்குமென தெரிந்து வைத்திருக்கிறார்கள்..//

ம்ம்ம்...அதுவும் சரிதான்..... நன்றிங்க தேனம்மை....

Admin said...

மிக மிக அருமை

Admin said...

மிக மிக அருமை

Admin said...

மிக மிக அருமை

ரோகிணிசிவா said...

superb dear , minute details well presented

கா.பழனியப்பன் said...

//உள்ளே சென்று
சில்லரையுடன் வந்தாள்...
தன் கருகமணியை மறைத்துக்கொண்டு..//

எதார்த்த கவிதை

அன்பேசிவம் said...

அருமை, வெகு எதார்த்தம், :-)

பாம்பின் கால்

அண்ணாமலை..!! said...

ஒத்தை வார்த்தையில சொல்லனும்னா..
"அருமை!!!!!!!!!!"..
வேறென்ன சொல்ல நண்பரே..!!

க.பாலாசி said...

//சந்ரு said...
மிக மிக அருமை//

நன்றி சந்ரு...

//Blogger ரோகிணிசிவா said...
superb dear , minute details well presented//

நன்றிங்கா...

//Blogger கா.பழனியப்பன் said...
எதார்த்த கவிதை//

நன்றிங்க கா.பழனியப்பன்...

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
அருமை, வெகு எதார்த்தம், :-)
பாம்பின் கால்//

ஆம்... நண்பரே...நன்றி...

//Blogger அண்ணாமலை..!! said...
ஒத்தை வார்த்தையில சொல்லனும்னா..
"அருமை!!!!!!!!!!"..
வேறென்ன சொல்ல நண்பரே..!!//

நன்றிங்க நண்பரே...

//Blogger Minmini said...
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..//

ம்ம்ம்... நன்றி....

கமலேஷ் said...

கவிதை மிகவும் உருக்கமாக வடிதிருக்ரீர்கள் தோழரே...

அம்பிகா said...

மிக அருமை பாலாசி.

பனித்துளி சங்கர் said...

மிகவும் அருமை நண்பரே . இறுதியில் உள்ளம் கானத்து விட்டது

க.பாலாசி said...

//கமலேஷ் said...
கவிதை மிகவும் உருக்கமாக வடிதிருக்ரீர்கள் தோழரே...//

நன்றிங்க கமலேஷ்...

//Blogger அம்பிகா said...
மிக அருமை பாலாசி.//

நன்றிங்க அம்பிகா..

//Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
மிகவும் அருமை நண்பரே . இறுதியில் உள்ளம் கானத்து விட்டது//

நன்றிங்க நண்பரே....

சிவாஜி said...

கவிதையின் தலைப்பும், புடவையின் தலைப்பில் மறைத்துக்கொண்ட கருகமணியும், மனசுக்குள் மறைத்துக்கொண்ட உணர்வுகளை மின்னல் போல ஊடுருவி படம் பிடித்துக் காட்டுகிறது.... அருமை! வாழ்த்துக்கள் பாலாசி.....

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

மிகவும் அருமை நண்பா...

வாழ்த்துகள்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO