.......வெட்டிவேரு வாசம்... இந்த வெடலப்புள்ள நேசம்.... பூவுக்கு வாசமுண்டு.... பூமிக்கும் வாசம் உண்டு...... வேருக்கு வாசம் வந்தது ஓஓ.. மானே....
“அடியே........ ஏங்கறன்ங் காலங்காத்தால பாட்டப்போட்டு உசுரெடுக்குறன்ங்..... ”
“ந்ந்ந்த ஏந்திரிய்யா.... மணி ஆறாச்சு...... ”
“ஏ.... என்னைக்குல்லாம இன்னைக்கு என்னாங்கறன்ங்.... ”
“யோ... இன்னைக்கு நம்ம கண்ணால நாளுயா.... ”
“அட....ரெண்டு பெத்தப்பறமுமா நாபவம் வச்சிருக்குறன்ங்..... ”
“ம்ம்க்க்கும்.... எவத்தாளத்துக்கு ஒண்ணு கொறச்சல்ல... ஏந்திரி மொதல்ல.. கொள்ளடுப்புல வெந்நீரு போட்ருக்கன்ங்... தோப்புக்கு போய்ட்டு வந்து குளி.. நாத்தத்தோடவ படுத்துகிட்டு.....”
“ஏங்... காலைல்ல குளிக்க சொல்றங்கறன்ங்... ஏன்ங் எங்கப்போணும்... ”
“வாய்யா.... திருக்கடவூருக்கு போயிட்டு வந்திடுவோம்..... ”
“அடியே...கோயிலுக்குபோறவ கேக்குற பாட்டாடி இது?? அதுவுல்லாம அறுவதாங் கண்ணாலத்துக்கதாங்கறன்ங் அங்கப்போவணும்...”
“ஆமா... இப்ப போனா அந்த சாமீ வேண்டான்னுடுமாக்கும்... ”
“சொல்லிக்கேக்குறவளா நீயி.... இரு..... ”
“யோ... அப்டியே... மஞ்சப்பொட்டியில வேட்டி சட்ட சலவப்போட்டு வச்சிருக்கன்ங்... கட்டிக்க...”
“அட... இதுவேறயா... நமக்கு ஏங்கறன்ங் இந்த சவடாலு.... ”
“....வாயடைக்காத நீ..... யோவ்... நல்லா யோசனப்பண்ணிப்பாரு.... என்னைக்காவது சாக்கட நாத்தமும் இந்த ஊர்க்காரப்பயலுவோ பீநாத்தமுல்லாம உன்ன பாக்க முடியுதா?”
“ம்ம்ங்ங்ங்.... கழுதைக்கு வாக்கப்பட்டா ஒதப்பட்டுதான ஆவ்ணும். புதுசா என்ன ஓசன....சரி... வர்ரப்ப மடப்பொறத்துல பெரியாச்சிய ஒரு எட்டு பாத்துட்டு, பசங்களையும் அனுப்பி ஒருவாரமாச்சி... அதுங்களையும் பாத்துட்டு வந்திடுவம்...கண்ணுலையே நிக்குதுங்க...”
“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்... மொதல்ல கோயிலுக்கு போயிட்டு நேரா வூட்டுக்குதான் வரணும். மதியானம் சமைச்சி சாப்புட்டு மொத ஆட்டம் சிம்லஸ்க்கு படம் பாக்க போவணும்... ”
“அடி... எழவெடுத்தவள... பெரிசா கனவோடத்தான் திரியிறயா நீ... வௌக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் தேவையா....... ம்ம்ம்ம்.........”
•••••••••••••••••••
“ஏ..சின்னாளு..?? .சின்னாளு....?? ”
“ஏக்கா... காலைல ஜோடிச்சிட்டு களம்பிட்ட...??”
“கோயிலுக்கு போயிட்டு... 12 மணிப்போல வந்திடுவன்ங்.. மொட்ட தெருவுக்கு மீனு கொண்டாரும்.... பாற கருவாடும், சதநண்டும் கொண்டார சொல்லிக்கன்ங்.. இந்தா 50 ரூவா இருக்கு... வாங்கி வைய்யி வந்திடுறேன்ங்..”
“எக்கா... கோயிலுக்கு போறங்கறன்.. கருவாடு, நண்டு வாங்கச்சொல்ற.. ”
“அதான் போயிட்டு வந்திடுவன்ல்ல... பிறவென்ன.. வாங்கி வைய்யிந்த...அப்டியே கொள்ளைக்குப்போயீ கொழம்புல போட ரெண்டு வாழக்காவும் பறிச்சி வைய்யி... ”
“ம்ம்ம்... ஒரு மாக்கமாத்த இருக்க... போயிட்டு வா....”
•••••••••••••••••
“நல்லா வேண்டிக்குய்யா..... மொதல்ல இந்த நாத்தம்புடிச்ச வேலய வுட்டுட்டு மேல போவணும்.. ”
“அடியே நானுங் பாக்குறன்ங்... .நாத்தம் நாத்தமுன்னே பேசிட்டு திரியிறன்ங்... போட்டன்னு வைய்யி...”
“நாத்தமுல்லாம பின்ன என்ன... சந்தனத்துலயா டெயிலி முழுவி கெடக்குற நீ.. ”
“ஆமா.. அய்யன்ங் போனப்பறம்... கருணப்பாத்து எனக்கு இந்த வேலய கொடுத்தானுவோ.. இல்லன்னா தெருத்தெருவா குப்பய கூட்டிட்டு எவன்டா எட்டனா ஒர்ரூவா குடுப்பான்னு கையேந்திகிட்டுதான் நிக்கணும் தெரிஞ்சிக்க.”
“இப்ப மட்டும் என்னவான்ங்... எவன் வூட்ல பீத்தக்கொழா அடச்சிக்கெடந்தாலும் உள்ள யெறங்கி நோண்டி வுட்டுட்டு அப்டித்தான செய்யிற... ஒங் மேல வர்ர நாத்தம் பத்தாதுன்னு சாராயமும், பீடியும் வேற...”
“ஏன்டி தெரியாமத்தாங் கேக்குறன்ங் ஒப்பன் உன்ன இந்த நாத்தத்தோடதானடி பெத்தான்ங்...”
“சரி... கோயில்ல நின்னு சத்தம்போடாத... போயிட்டு வந்து வச்சிக்கலாம்ங்....”
••••••••••••••••••••••
“ஏய்.. படமும் பாத்தாச்சு.. சந்தோஷந்தான...?? லைட்ட போடு மொதல்ல.. இருட்டாருக்கு...
“இந்தாய்யா அப்டியே போயி குளிச்சிட்டு வா...”
“ம்ம்ம்........ம்ம்ம்.......என்னா வேக்காலம்....மானம் வேற மூடிக்கெடக்கு.. சரி அந்த துண்ட எடு... ”
••••••••••••••••••••••
“இந்தா இத போட்டுக்க.. ”
“என்னாடியிது... சவ்வாது பவுடறாட்டம்.... ”
“அதான்..”
“இந்நேரத்துல என்னாத்துக்கு?? ”
“யோ... நல்லா நெனச்சிப்பாரு... எப்பவாவது உம்பக்கத்துல மூக்க மூடாம படுக்க முடியுதா? நானும் பொம்பளதான... ஊருல உள்ள மனுஷப்பயலுவோல்லாம் என்னமா சம்முன்னு இருக்கானுங்க. உன்னயும் அந்த மாதிரி பாக்கணும்னு எனக்கும் ஆச இருக்கும்ல.. நீ வந்தப்பறமும் குளிக்கவுமாட்ட.. சாராயப்பாக்கட்ட ஒடச்சி ஊத்திகிட்டு...கொஞ்சமாச்சும் நெனச்ச்....”
“ஏ... வாயமூடு.. எனக்கும் ஆசபாசமுல்லாமயா கெடக்குறன்ங்.... இப்ப என்னங்கற.... ”
“இந்தா இத போட்டுக்க... உம்மாருல கொஞ்சநேரமாச்சும் இந்த வாசத்தோட சாஞ்சிகெடக்கணும்யா...எனக்காவ....”
“ச்ச்சீ... ஏன்டி கண்ணக்கசக்குறன்ங்... ஒனக்காவ்வும், புள்ளைங்களுக்காவுந்தானடி இந்த நாத்தப்பொழப்பு...என்ன பண்ணச்சொல்ற...சரி...வா........”
•••••••••••
70 comments:
பெரும்பாலும் தொடாத ஒரு களம், கரு...
கலக்கல் பாலாசி
ரொம்ப அருமையா வந்திருக்கு பாலாசி. நன்றி.
அருமை பாலாசி.
// ...ஒனக்காவ்வும், புள்ளைங்களுக்காவுந்தானடி... //
.................
.........................
................................
வரேன் தோழர் ......
பாலாசி,
ஒரு எழுத்தாளனா இருந்து,
இவங்களப் பத்தின இலக்கியந்தான்ய்யா இன்னைய உலகத்துக்கு காட்ட வேண்டிய அதி முக்கிய அவசியம்.
என் நண்பா, அத நீ செஞ்சதில எனக்கு பெருமையா இருக்கு.
வறுமைக்கூடாக ஆனாலும் ஒரு பெண்ணில் இயல்பான ஆசைகளை வெளிப்படுத்திய விதம் அருமை பாலாஜி.
"வாங்கி வைய்யிந்த".....
அப்பிடியே நம்ம பாஷை பாலாசி
பெண்ணின் ஏக்கமும் ,ஆணின் கடமையும் கன கச்சிதமாய் ..
அட்டகாசம் பாலாசி
அட்டகாசம் அண்ணா...
ரொம்ப நல்லா வந்திருக்கு...
உரையாடல் நடை கலக்கல் பாலாசி
பெண்ணின் ஆதங்கத்தை வெளிபடுதிருக்கும் விதம் அழகு
கதிர் சொன்னதேதான் படிக்கும்போது எனக்கும் தோன்றியது!
இயல்பா முடிச்சது அருமை.
அருமை பாலாசி.
இவர்கள் வாழ்க்கையின் துன்பங்கள் மனத்தை நெருடும்.
"தோட்டியின் கதை" நாவல் நினைவில் வந்துபோனது.
நல்ல கதை.
எளிமையான நடை. எளிய பெண்ணின் ஆசை நிறைவேறியதில் மகிழ்ச்சி.
இயல்பான உரையாடல்கள்.அந்த கருவாடு வாங்கச் சொல்லுமிடத்தில் இயல்பின் உச்சம்.
உரையாடலிலேயே கதையை முடித்ததும் சிறப்பு.
மிகவும் ரசித்தேன்.
வாழ்த்துகள் பாலாஜி.
Excellent...
கலக்கலுங்... :-)
100%
super....!!!
படமும் அருமை.....
//ஹேமா said...வறுமைக்கூடாக ஆனாலும் ஒரு பெண்ணில் இயல்பான ஆசைகளை வெளிப்படுத்திய விதம் அருமை பாலாஜி//
மேடம் சொல்லறத அப்படியே ரிப்பீட்டு பாலாசி
இப்படியெல்லாமா
ம்ம்ம்ம் அற்புதமான கிராமத்து பாஷைகளை சர்வ சாதாரணமா எழுதுறீங்க
பாராட்டுக்கள்
என்னங்றன்.....பாலாசி...இப்படி கலக்கி எடுக்கிறவ்வோ...! நாத்தம் புடிச்ச மனுசனுக்குள்ளேயும்...அழவான வாக்கை இருக்குன்னு...பொட்டிலடிச்சப்புல சொல்லியிருக்காவோ....!
வாழ்க்கையின் எதார்த்த பக்கங்களை.....எழுத்துக்களாயிருக்க்கும்...பாலாசிக்கு வணக்கம் கலந்த வாழ்த்துக்களுடன் கூடிய.... நமஸ்காரங்கள்
பெண்ணின் ஏக்கமும் ,ஆணின் கடமையும் கன கச்சிதமாய் ..
அட்டகாசம் பாலாசி
//
ஆமாம் பாலாசி .. அருமை.
\\ஈரோடு கதிர் said...
பெரும்பாலும் தொடாத ஒரு களம், கரு...
கலக்கல் பாலாசி\\
:-)))
கலக்கல் அசத்தல். வாழ்த்துக்கள்
இயல்பான நடையில் வரிகள் அருமை.
//நியோ said...//
தங்களின் இரு பின்னூட்டங்கள் நீக்கப்பட்டன. காரணம் அறிவீர்கள் என்று நம்புகிறேன்...
தங்களிடமிருந்து இந்த கதைக்கான விமர்சனங்களை மனதார வரவேற்கிறேன்...
நன்றி நியோ...
MIHA ARUMAI!!
நான் தவறாக புரிந்து கொள்ளப் பட்டதாக நினைக்கிறேன் ...
தவறாக புரிந்து கொள்ளப் பட்டதற்காக வருந்துகிறேன் ...
நன்றி. இனிய இரவு வணக்கங்கள்.
அடங்கொக்கமக்கா... அனுபவஸ்தனாட்டம்ல இருக்கு... அசத்திட்ட போ..
ம்ம்ம்
ஈரோடு சென்று மஞ்சள் வாசத்தில்
மனமொப்பாமல்
பிறந்த மண் வாசத்திலும்
மடப்புரத்திலும்
உன் எண்ணங்கள்...
கதையல்ல இது வாசம்
பாலாசியின் மண் வாசம்
நுகர்ந்தேன்... மகிழ்ந்தேன்.
அவர்களின் வாழ்வியலில் நடக்கின்ற ஒரு நிகழ்வு. அழகா சொல்லிட்டீங்க பாலாசி.....
தம்பீ..என்றும் உங்கள் பார்வை ஒடுக்கபட்ட மக்கள் பக்கமே இருக்கிறது. அருமை.
WoW.. rocking.....
மிக அருமை பாலாசி.
பாலாசி.அழகா சொல்லிட்டீங்க!!!
-tsekar
நல்லாருக்கு பாலாசி
அருமையா இருக்கு பாலாசி
வித்தியாசமான கோணம்...
நல்ல வட்டார தமிழ்... தேர்ந்த எழுத்து...
கலக்குறே அண்ணாச்சி..கலக்குறே...
புத்தனின் மணைவியை நினைத்தல்
புத்தன் ஒளிவட்டம் மறைந்து விடும்.
பெண்ணின் வாசம் நுகரும் கவிஞன்
ஆண்னின் நாத்தம் பகருவதில்லைதான்.
படமும் பதிவிற்கு பாங்காய்.
அருமை நண்பரே....
நன்றி கதிர் அய்யா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி நியோ
நன்றி சத்ரியன்
நன்றி ஹேமா
நன்றி பத்மாக்கா..
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி ஆர்.வி.சரவணன்.
நன்றி ஷங்கர்
நன்றி மாதேவி
நன்றி கோமதி அரசு
நன்றி நாடோடி இலக்கியன் அண்ணா..
நன்றி ரோஸ்விக்
நன்றி முகிலன்
நன்றி பழமைபேசி அய்யா
நன்றி சித்ராக்கா
நன்றி அசோக் அண்ணா
நன்றி யாதவன்
நன்றி ஜில்தண்ணி
நன்றி தேவா
நன்றி முத்துலட்சுமி அக்கா
நன்றி அம்பிகா
நன்றி LK
நன்றி ஜெய்லானி
நன்றி lcnathan
நன்றி கலகலப்பிரியா
நன்றி நசரேயன்
(ம்ம்ம்???)
நன்றி அரசூரான்
நன்றி முருகவேல்
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி பட்டாபட்டி
நன்றி ராமலஷ்மி அக்கா
நன்றி டி.சேகர்
நன்றி அய்யா.. (ஆடுமாடு)
நன்றி அக்பர்
நன்றி பிரேமாமகள்
நன்றி வாசன்
நன்றி இர்ஷாத்...
தமிழ்மணம் மற்றும் தமிலிஸ் ஆகியவற்றில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்...
தமிழ் மண உச்சாணிக் கொம்பில் அமர்ந்து புன்னகைக்கும் கதை சொல்லிக்கு வாழ்த்துக்கள் ...
நான் என்பது...
//க.பாலாசி
சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை.//
இதுதான் அறிதல் பாலாசி!
தேர்ந்த நடை!!!
யோவ்.. என்னையா பண்ணி வச்சிருக்க? எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு......
கைய குடு மக்கா......
:-)
சிறப்பான ஒரு பகிர்வு பாலாசி...ஒரு பெண்ணின் சகிப்பு தன்மையும் அவளின் ஆழ் மனது கோபமும் ஆசையும் அப்படியே வட்டார வழக்கில் கொண்டு வந்திடீங்க...வாழ்த்துகள்...
கைய குடுங்க சார்
வாழ்த்துக்கள்
கலக்கிட்டிங்க பாலாசி
ஒரு சிறுகதை.
வாசித்து பாருங்க மக்கா.
http://saravanakumarpages.blogspot.com/2010/05/blog-post_22.ஹ்த்ம்ல்
பூங்கொத்துப்பா!
கலக்கல் . தலைப்பு . ம்ம் எங்கியோ போயிட்டீங்க
நன்று! தொடர்க! நிறைய!
இன்னுமே இந்த கொடுமையெல்லா இருக்குதுங்களா பாலாசி...
நடை அருமை.
வணங்குகிறேன் பாலாசி.வாழ்த்த வார்த்தைகள் வரவில்லை
பேச்சு நடையை எழுத்தில் கொண்டு வரும் முயற்ச்சியில் ஏதோ தடுமாற்றம் இருப்பது போல் இருக்கின்றது பாலாசி...
எடுத்துக் கொண்ட கரு அருமை...சொன்ன விதமும் அழகு
நன்றி நியோ (மீண்டும்)
நன்றி ப.ரா. அய்யா...
நன்றி முரளி
நன்றி சீமாங்கனி
நன்றி ராஜவம்சம்
நன்றி சபரிநாதன்
நன்றி ஜெய்லானி
நன்றி அருணா மேடம்
நன்றி சின்ன அம்மணி
நன்றி PRINCENRSAMA
நன்றி கும்கி (இதுலென்னங்க கொடுமை இருக்கு...இப்பவும் நம்ம நகராட்சி மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்த வேலையத்தானே செய்கிறார்கள்...)
நன்றி ஜெர்ரி சார்...(எனது வணக்கமும்)
நன்றி ஆரூரன் அய்யா...(சரிதான்.. சற்றே தடுமாற்றம் இருக்கிறது. இனிவரும் பதிவுகளில் சரிசெய்கிறேன்...)
சூப்பர்...
கண்கள் நிறைந்துவிட்டது பாலாசி..
அழ வைத்து விட்டீர்கள்...:((
பாலாசி.. அருமை.. பெரும்பாலும்யாரும் தொடாத களம்.. வைக்கம் முகமது பஷீரின் “பீ” என்று நாவல் என்று ஞாபகம். இக்களத்தை ஒட்டி படித்தது.. சரியாக ஆர்த்தர் பெயர் ஞாபகம் இல்லை.
கேபிள் சங்கர்
மனச பெசஞ்சிருச்சி பாலாசி....
கலக்கல் பாலாசி....
thuppuravu tholilaali kurithu
noolkal tamilil vanthullathu
kurippaaka kazhisadai,salavaan,
thottiyin magan. unkal kathaiyil
antha makkaludaiya vaalvin vali kuritha alutham kuraivaaka iruthaalum moliyaalumai irukkirathu vaalthukkal.
மாறுப்பட்ட கோணத்தில் உங்க சிந்தனை நல்லாயிருக்கு.
நன்றி சௌந்தர்
நன்றி தேனம்மை
நன்றி கேபிள் அய்யா
நன்றி ஜெயசீலன்
நன்றி karuppuveli
நன்றி கருணாகரசு...
வாசம் சுமந்து செல்கிறேன்.....
நல்லாருக்குங்க பாலாசி.
அருமையான கதை... சொல்லிய விதம்... மொழி நடை இன்னமும் அருமை... எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மெல்லிய காதல் இழையோடியது அழகு
நன்றி சிவாஜி
நன்றி ஹுஸைனம்மா
நன்றி அப்பாவி தங்கமணி...
வெட்டிவேரு வாசம் ...வெடலை புள்ள நேசம் ...
Good One...
Post a Comment