க.பாலாசி: கனவுகள் பலவிதம்...

Wednesday, June 30, 2010

கனவுகள் பலவிதம்...

நிலவைக்காட்டி
அம்மாவும்

மிட்டாய் ஆசைகள் கூறி
அப்பாவும்

பூச்சாண்டிக்கதைகள் சொல்லி
பாட்டியும்

ஊட்டிஊட்டிவிடும்
எத்தனை ஆசாபாசங்கள்
நிறைத்தாலும்.......

கையேந்திபவனை கடக்கையில்
கலைந்துபோகிறது...

கைகளற்றவனின் கனவு.



•••••••••••••••••



கால்களால் வரைந்த பட்டத்தை

பார்த்தபடியே

துயிலடைந்தாள் அச்சிறுமி


அவளின் இரவுகள் முழுமையும்

வியாபித்திருக்கின்றன

ஆயிரமாயிரம் பட்டங்கள்


இமைகளுக்குள் கண்கள்

அங்கும் இங்கும் அலைந்தபடியே...


தன் பட்டம்

உயரப்பறப்பதில் ஆனந்த கண்ணீர்...


(தூக்கத்தினூடே)

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்

தோள்பட்டைகளால்...




36 comments:

ரிஷபன் said...

கையேந்திபவனை கடக்கையில்
கலைந்துபோகிறது...
கைகளற்றவனின் கனவு.

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்
தோள்பட்டைகளால்...

வரிகளில் வலிகள் வலிமையாக..

அகல்விளக்கு said...

மாற்றுத்திறனாளிகள்...

வரிகளில் வலிகள் வலிமையாக.... வழிமொழிகிறேன்.

vasan said...

இன்றுதான்,எஸ்ரா விக‌ட‌னில் எழுதிய‌
'சிறிது வெளிச்ச‌ம்'முடிவுக் க‌ட்டுரையாய்
'கைக‌ள் இர‌ண்டால்'த‌லைப்பில்,
கைக‌ளின் த‌ன்மையை எழுதி சிற‌ப்பித்திருந்தார்.
இதை ப‌டித்த‌தும் ம‌ன‌சு வேம்பாய்.

செ.சரவணக்குமார் said...

முதல் கவிதை மிகப் பிடித்திருந்தது பாலாசி.

மனதை ஏதோ செய்கிறது.

க ரா said...

என்ன சொல்றதுன்னே புரியாம மனசு கணத்துப்போச்சு பாலாசி படிச்சு முடிச்ச உடனே.

Unknown said...

மாற்று திறனாளிகள் பார்க்கிற போதெலாம் உங்கள் கவிதை வந்து விடும்..

vasu balaji said...

வாரம் ஒரு கரு சுமந்து வலிக்க வலிக்க பிரசவிக்கிறாயா நீ? ம்ம். பேச்சற்றவனின் பாராட்டுன்னு வைத்துக் கொள்.

Unknown said...

நல்லா இருக்குங்க.

r.v.saravanan said...

படித்து முடிக்கையில் மனம் கனக்கிறது பாலாசி

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாசி......ம்ம்ம்ம்......

அன்புடன் அருணா said...

மனம் கனக்க வைத்த கவிதை.

Ashok D said...

முதல் கவிதையின் ’கடைசி வரி’ ட்விஸ்ட் எதிர்பாராதது...

இரண்டாவது முன்னதை வழிமொழிகிறது :)

நல்லாயிருக்கு பாலாசி

அம்பிகா said...

வலியை சொல்கின்றன வரிகள்.

Chitra said...

அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்

தோள்பட்டைகளால்...


..... ம்ம்ம்ம்....... மனதை கனக்க செய்து விட்டீர்கள்.

Paleo God said...

வலி நிறைந்த கனவுகள்!

ஜெயந்தி said...

மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு.

Praveenkumar said...

வலிகள் நிறைந்த வரிகளுடன்..
ஒரு கணம் நம் மனமும் கனத்துத்தான் போகிறது..!

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

வலிகளை வடித்த வரிகள்...
அருமையா எழுதி இருக்கீங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பாலாசி.. கவிதை ஒளிந்திருக்கும் கரிசனம், அனைவருக்கும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

பிரேமா மகள் said...

ஊமை காயங்கள்

பா.ராஜாராம் said...

உங்களின் மனிதநேயம், காருண்யம், எப்பவும் நெருக்கமாக நகர்த்தும்,

உங்களை என்னிடமோ, என்னை உங்களிடமோ.

அது, இந்த முறையும் பாலாசி.

Unknown said...

ரெண்டாவது என் சாய்ஸ்!

சீமான்கனி said...

வலிகளின் மொழியாக வந்த கவிதைகள் கனமாய் இருக்கு வாழ்த்துகள் பாலாசி...

பிரதீபா said...

//அனிச்சையாகவும் துடைத்துகொள்கிறாள்
தோள்பட்டைகளால்...//

மீள வெகுநேரம் ஆனது !!

ஹேமா said...

இரண்டாவது கவிதை முன்னுக்கு வருது பட்டத்தோடு.

கலகலப்ரியா said...

ம்ம்... தூங்கப் போறப்போ... இந்தக் கனவு... :)

ஈரோடு கதிர் said...

அனிச்சையாய் நானும் கை தட்டுகிறேன் கவிதையை ரசித்து

ஈரோடு கதிர் said...

அனிச்சையாய் நானும் கை தட்டுகிறேன் கவிதையை ரசித்து

க.பாலாசி said...

நன்றி ரிஷபன்
நன்றி அகல்விளக்கு ராசா..
நன்றி வாசன்
நன்றி செ.சரவணகுமார்
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி கே.ஆர்.பி.கண்ணன்
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி செல்வராஜ் ஜெகதீசன்
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றி அமைதிச்சாரல்
நன்றி ஆரூரன் அய்யா
நன்றி அருணா
நன்றி அசோக் அண்ணா
நன்றி அம்பிகா
நன்றி சித்ரா
நன்றி ஷங்கர்
நன்றி ஜெயந்தி
நன்றி பிரவின்குமார்
நன்றி ஆனந்தி
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி பிரேமாமகள் லாவண்யா
நன்றி பா.ரா. அய்யா
நன்றி ஆறுமுகம் முருகேசன்
நன்றி சீமாங்கனி
நன்றி பிரதீபா
நன்றி ஹேமா
நன்றி ப்ரியா அக்கா
நன்றி கதிர் அய்யா

பத்மா said...

கைகள் அற்றவனின் கனவு ...இது பெரிய துயரம் பாலா ..மனதுக்குள் ஒரு பாறை வந்து அமர்ந்து ..அதனின்று பல எண்ணங்கள் படர்கிறன .....

இளகிய மனதோடு கூடிய உங்கள் கவிப்பார்வைக்கு ஒரு சபாஷ்

இரண்டாவது அது சிறுமியாய் போனதில் கூடுதல் பாரம்..
வேறெதுவும் படிக்க தோணாமல் திரை வெறித்து அமரத் தோணுகிறது

இன்றிரவு கனவில் தோளிலிருந்து புறப்படும் பட்டம் பறப்பது உறுதி.

கவிதைக்கு பாராட்டு பாலா

ராமலக்ஷ்மி said...

இரண்டும் வலி(மை)யாய், அகல்விளக்கு சொன்னது போல.

"உழவன்" "Uzhavan" said...

முதல் கவிதை சூப்பர் பாலாஜி

'பரிவை' சே.குமார் said...

வரிகளில் வலிகள் வலிமையாக.

அன்புடன் நான் said...

இரண்டும் நல்லாயிருக்கு பாலாசி....
இரண்டான் கவிதையின் கடைசி இரு வரிகள் மிக நுணுக்கமாக பதிந்துள்ளீர்கள்....

க.பாலாசி said...

நன்றி பத்மா மேடம்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி உழவன்
நன்றி ஜெய்லானி
நன்றி சே.குமார்
நன்றி சி. கருணாகரசு

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO