பிடறியில் விழும் காலத்தின் அடி ஒவ்வொன்றும் வலுவாகவே இருக்கிறது. குன்றினில் ஏறியபின் மதிப்பற்றுப்போகும் கட்டாந்தரையை போலவே எல்லாமும் வளர்‘சிதை‘ ஆகிவிட்டது. கடந்ததை அசைத்துப்பார்ப்பதில் இருளடர்ந்த கனவுகள்கூட அள்ளிப்பருகொத்த அமிர்தம்தான்.
‘செத்த இரு ஆத்தா தோ போட்டுக்கொண்டாறேன், கால்‘ல வெந்நீரயா ஊத்தியாந்த?’,
‘அட பொருடா, அதுக்குள்ள வந்தடமாட்டாங்கொப்பன்’,
‘யப்பா பிரவு கொஞ்சம் மணித்தாத்தாவுக்கு சட்ணி ஊத்துப்பா’,
‘வா மாப்ள ஊர்ல இருக்கியா!!?, இப்பலாம் ரோட்டுக்கடத்தான் கண்ணுக்கு தெரியுதானொக்கு’,
‘வாங்க சார், எதோ கெடக்கன், இது யாரு பேரனா?, பய அப்டியே ஒங்களயே உரிச்சி வச்சிருக்கானே’,
‘இரும்மா அம்மா வந்திடுவா, தாத்தா ஒண்டியா இருக்கன்ல, நிறைய பேரு சாப்டுட்டிருக்காங்க, எல்லாம் போனப்பின்னாடி நீக் கேட்டத வாங்கியாறேன் என்ன’,
‘என்ன பட்டாமணியாரே, பையனுக்கு எதோ வேணுமாமே துரைக்ட்ட சொல்லி வாங்கித்தர்ரது?’,
‘எய்யா செயா அங்காடியில என்னைக்குயா மண்ணன்ன போடுவ? பத்து தேதியாச்சுய்யா......’,
‘என்னத்த சொல்றது மாமா, நாம படுறது நம்மளோட போவட்டும்னுதான் மொவனையாவது வேற வேலைக்கு அனுச்சிட்டு ஒண்டியாவே பாத்துக்கிறேன்‘ என கிராமங்களில் குடிசைக்குளியங்கும் சின்னச்சின்ன உணவு விடுதிகளும், டீக்கடைகளும் உறவுகளுக்குள்ளும், உரிமையெடுப்பிலும் வாழ்ந்துகொண்டிருக்கும். புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்.
தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம். அப்பாவின் பெரியவராயின் பெரியப்பாவாகவோ, அம்மாவுக்கு அண்ணனாக்கி மாமாவாகோ, வயதின் மிகை அண்ணனாகவோ ஏதோவொரு முறையில் உறவாகிவிடுவார் அதன் உரிமையாளர். இன்றும் கீத்துக்கொட்டகையில் டீக்கடைகளையும், சின்ன உணவு விடுதிகளையும் சில இடங்களில் காணும்பொழுது நெஞ்சினில் உருளும் நினைவுகள் மலரவே செய்கின்றன.
‘சித்தப்பா நீ படிச்சிப்படிச்சு சொன்னன்னுதான் அத்துப்போன ஒறவ ஒட்டலாம்னு பொண்ணு கேட்க வந்தேன். ஆனா அவன் என்னடான்னா முறுக்கிகிட்டுல்ல போறான்.‘
‘அட இரு மோனே.. நாங்பேசிப் பாக்குறேன். ஒடனேவா கோச்சிக்கறது. எதார்ந்தாலும் பொறும வேணும்பா. இந்தா, டீய குடிச்சிட்டுப்போ நான் பேசுறேன் அவர்ட, நாஞ்சொன்னா மனுஷன் கேப்பான்யா.‘ என்று பிரிந்திருக்கும் உறவுகளை சேர்ப்பதில் தொடங்கி வாய்க்கால் வரப்பு தகராறு வரை தீர்த்துவைக்கப்படும் இவ்விடங்களில் ‘அரசியல் பேசாதீர்’ என்ற வாசகம் மட்டும் அழுத்தம் திருத்தமாக மாவுக்கட்டிகளால் தெரியும். எவரும் உறவாகவும், எல்லாம் இயல்பாகவும் மனிதம் சொட்டும் மலர்களாய் எப்படித்தான் நடக்கிறதோ இந்தக் கடைகள் என்று எண்ணத்தோன்றும் இவ்வேளையில், பளபளக்கும் கண்ணாடி மாளிகைக்குள் இயங்கும் தற்போதைய நவநாகரீக உணவு விடுதிகள் செங்கல்லும், சிமெண்டும் கலந்த புதர்களாகத்தான் காட்சித்தருகின்றன.
அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.

36 comments:
சொல்ல வார்த்தைகள் இல்லை , பாலாசி ., ரொம்ப அழகு
அழகு பாலாசி. சிறி வயதில் தாயினும் பரிந்தூட்டும் மாதிரி, இலைபார்த்து பரிமாறுவது கண்டிருக்கிறேன். பிறகு கேட்டதும் யாரோ ஒருவர் பரிமாரியும் பார்த்திருக்கிறேன். இப்போதோ, பசியோடு வருபவனை, அந்த டேபிள்ள சர்வீஸில்லை. ஆர்டர் கொடுத்தால் அரட்டையோடு பரிமாரல். ப்ளாஸ்டிக் தட்டு, இலை போய் காகிதம். எரிச்சலுடனே விசாரிப்பு.ஹூம். கான்க்ரீட் காட்டில் பசுமைக்கு இடமேது?
அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.
.......பட்டண வாசத்துக்கும், கிராமத்து மண் வாசனைக்கும் வித்தியாசம் வேணுமே! அருமையான படமும் இடுகையும் மனதில் பதிந்தன. நன்றி.
பாராட்டக்கூடிய வகையில் இருந்தாலும் பாலாசி நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு. கடைசி பத்து வரிகள் என்னிடம் உள்ள சிறப்பு வியாதிகளில ஒன்றான பெரிய பெரிய வாக்கியங்கள். சரிதானா?
அருமை பாலாசீ.. என்ன சொல்லி பாராட்டறதுன்னு தெரியல இந்த எழுத்த.. ஊரு நியாபகம் கண்ணுல வந்து போது.. வந்து சாப்பிட உடகாரவன,., வாங்க தம்பி எப்படி இருக்கீக.. ஏய் யாரு அங்க தம்பிக்கு இன்னும் தண்ணி வைக்கல பாரு... ஏய் என்னா பரிமாறற நீ... தம்பி நம்மாளுய்யா நல்லா வையி.. என்னா தம்பி அதுக்குள்ளாற எந்திரிச்சுட்டீங்க.. வளர புள்ள நல்லா தீங்க வேண்டாமா.. தம்பிக்கு இன்னும் நாலு இட்டிலி வைச்சு சட்னி சாம்பார் ஊத்து... சாப்டு முடிச்சு வரையில.. அண்ணே எவ்வளவ்வுனே ஆச்சு.. 20 ருபா தம்பி.. அண்ணே ஒரு அஞ்சு ரூபா குறச்சலா இருக்குண்ணே இன்னும் ஒரு பத்து நிமிசத்துல வந்து தாரேன்.. என்னா தம்பி உங்கள தெரியாதா.. நீங்க நிதானாம வந்து தாங்க.. இல்லேன்னா அடுத்த தரவ வரப்ப பாத்துக்கலாம்.. சாப்டுட்டு போன உடனே சொல்லுவாங்க வரவனுக்கு வயிறு நிரைஞ்சா போதுமா.. மனசு நிரையனுமப்பா.. இம்ம இவிங்கல்லாம் மனுசங்க கிடையாது .. தெய்வம்.. நன்றி பாலாசி.. பழைய நியாபகத்த கிளறி விட்டதுக்கு...
முதல் வரியே அசத்தல் ரகம் பாலா..
அப்பழக்கற்ற வாழ்க்கையை வார்த்தைகளில் கொண்டு வந்துட்டீங்க பாலாசி. அருமை வாழ்த்துக்கள்..
மவனே..... பின்றீங்க...
பாலாசி, என்ன ரயிலடி (இராவணன்) நைனா கடை நினைவுகளா? அழகாய் வந்திருக்கு.
உண்மையா பாலாசி இதுமாதிரி கடைகள்ள சாப்பிடணும்ன்னு ரொம்ப ஆசை தான் ..ஒருக்க மதுரை கையேந்தி பவன்ல சாப்பிட்டா தான் கட்டை வேகும்..
உறவில்லா உறவுகளின் பெருமையை இதை விட அருமையாய் சொல்ல முடியாது ..
பெருமையாய் இருக்கு பாலாசி
//அரசூரான் said...
பாலாசி, என்ன ரயிலடி (இராவணன்) நைனா கடை நினைவுகளா? அழகாய் வந்திருக்கு.//
சரிதாங்க... எங்கப்பாகிட்டையும் சரி, எங்கிட்டவும் சரி அவர் காட்டின அன்பையும்,பண்பையும் காலேஜ் படிக்கிறவரைக்கும் அனுபவிச்சிருக்கேன்...ப்ப்ச்... அதுக்கப்பறம் இப்ப செல்லையன் கடை மட்டும்தான் இருக்கு...
மனிதநேயம்ன்னு கூட சொல்லாம மனிதம்னு தலைப்பு வச்சிருக்கீங்க... ச்சே... வாழ்வின் மீது நம்ப்பிக்கை வலுக்கிறது... வலிக்கும் ஆறுதலாய் இருக்கிறது... இத விட நான் சொல்ல ஒன்றுமில்லை.
தலைப்பும் அருமை படமும் இடுகையும்
அருமை பாலாசி
பாலாசி, முதல் பத்திய முதல்ல படிச்சப்ப என் புரிதல் வேறாக இருந்தது. அடுத்த பத்திக்கு செல்லாமலேயே மூன்று தடவ படிச்சேன். ஆனா முழுசா படிச்சு முடிக்கும் போது இன்னொரு கோணம் பிடிபட்டது. ஆனாலும் முதல் பத்தி கவிதை போல! தனியா பிரிச்சா படிக்கிறவங்க மனநிலைக்கு தன்னை தன்னை ஆட்படுத்திக்கும் போல...
\\புலரும் ஒவ்வொரு பொழுதும் கொஞ்சலும், குலாவலுமாகவே எல்லாவற்றிற்கும் விடையும் விடிவாகவும் கரைந்துகொண்டிருப்பதை அனுபவித்தவனுக்குத்தான் தெரியும்\\
நிஜம்தான்.
அருமையான பகிர்வு. படமும் மிக அழகு.
வந்து படிக்கறேன்..
மிக அழகாக வந்திருக்கிறது உங்கள் இடுகை........இன்றைய நவ நாகரீக உலகின் போக்கைத் துல்லியமாக உணர்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வார்த்தைகள் இல்லை பாலாஜி. அப்படியே ஊருக்கு போய்ட்டு வந்தா மதிரி இருக்கு.இட்லி அவியற நீராவியின் வாசமும்,வெல்லம் போட்ட காப்பியின் மணமும் முகத்தைச்சுத்துது.
கடங்கேக்கிறவன் கூடுதலா ரெண்டு ஆத்து ஆத்துவான்.கடக்காரன் கத்துவான்.கைப்பிள்ளைகாரியையோ கூப்பிட்டுக்கடங்குடுப்பாக.அந்த இட்லிச்சட்டியின் ஆவியாய் மிதந்துவரும் மனிதாபிமானம்.விலை விலைஅற்றாதாகும் அங்கே.
ஆன்மாவைத்தேடும் வரிகள்!
கிராமத்து / குறு நகரத்து உணவகங்களில் பரிமாறப்படுவது உணவு மட்டுமல்ல என்பதை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள் தோழர் ...
அழகிய நடை...
அருமையா எழுத்து...
ரொம்ப நல்லாயிருக்கு.
சொல்ல வார்த்தைகளற்று மனம் கசங்கிப்போகிறது பாலாஜி !
அருமை...!
பாலாசி,
நேசம் மிக்க மனிதர்களைப் பார்ப்பது அரிதாகி வரும் வேளையில்.. இடுகைகளிலாவது நினைவுகளைப் பதிந்து வைப்போம்.
அருமையான நடை..
அருமை பாலாசி..
பாலாசி,
படிக்க வந்தவர்களை, இறந்த காலத்தில் உலாவ வைக்கும் உன்னத கலைஞன் நீ.
வாடிப்போன கீரை கட்டுக்கு, தண்ணி தெளித்து வைக்கும் கடைக்காரன் போல், வாசகர்களின் காய்ந்து போன நினைவுகளுக்கு தண்ணீர் தெளித்து விடுகிறாய்.
அப்பழுக்கில்லா மனங்கள் இன்னும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன..இங்கு மனிதம் பரிமாறப்பட்டு இருக்கிறது பாலாசி...
நல்ல பதிவுங்க தம்பி.
//தெருத்தெருவுக்கு விடியலைப் பார்த்து எழுந்து அன்பொழுக பறிமாறப்படும் எந்த உணவிலும் பறக்கும் ஆவியுடன் எதோவொரு மனம் மற்றும் மண் சுவை இருக்கத்தான் செய்தது. அன்போ, பண்போ, பரிவோ, மனிதமோ, உறவு முறையுடன் வந்துவிழும் வார்த்தைகளோ ஏதோவொன்றின் மூலம்//
உண்மை. மிக அருமையான இடுகை.
எல்லாம் நகரமயம் அண்ணா...
பத்துப்பனிரெண்டு கல் தொலைவில் இருந்தாலும், "எம்மாமனோட ஒன்னுவிட்ட சித்தி வீட்டுகாரர் தம்பியோட மருமகன் இவரு" என்று இனி யாராவது சொல்வோமா...???
//அடுத்தவீட்டு முகவரியறியா இக்காலத்தில் எல்லா ‘நகரீய’ மாற்றங்களையும் இழுத்துக்கொண்டு, சீக்குவந்த கோழியாய் சிறுத்துப்போய்த்தான் கிடக்கிறது மனிதநேயமும் மற்றசிலவும்.//
நச் வரிகள்.
உங்கள் வார்த்தைகளின் கோர்வை பிரமாதம் பாலாசி.
புது டெம்ப்ளேட் நல்லா இருக்குங்க.
நன்றி ரோகிணிசிவா
நன்றி வானம்பாடிகள் அய்யா
நன்றி சித்ரா
நன்றி ஜோதிஜி
(சரிதானுங்க)
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி அசோக் அண்ணா
நன்றி இர்சாத்
நன்றி பழமைபேசி அய்யா
நன்றி அரசூரான்
நன்றி பத்மா மேடம்
நன்றிங்க சிவாஜி
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றி அம்பிகா
நன்றி கலகலப்பிரியா
நன்றி நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றி காமராஜ் அய்யா
நன்றி வேல்ஜி
நன்றிங்க நியோ
நன்றி சே.குமார்
நன்றி ஹேமா
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி முகிலன்
நன்றி சத்ரியன்
நன்றி தமிழரசி
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி அன்பரசன்
ஊர் நினைவு வந்து விட்டது பாலாசி
அருமை
Post a Comment