ஒவ்வொருமுறை படிக்கும்போதும் சிந்தனைகளையும் கருத்துக்களையும் புதிய தகவல்களையும் உணர்த்துவன மிகச்சிறந்த நூல்களாம். அதுபோல பண்புடைய நல்லோர்களின் சுற்றத்தை விரும்பி, நட்பாக உறவாடும் ஒவ்வொருமுறையும் அந்த சுற்றத்தின் அருமை கூடும். அந்த உறவின் பெருமை மிகும் என்பது மேற்சொன்ன குறளின் மூலம் வள்ளுவன் எடுத்தியம்பும் வாழ்வியலின் நியதி.
இக்குறளினை சிரமேற்கொண்டு ஈரோடு மாநகரில் பதிவர்களின் சங்கமத்தினை அரங்கேற்ற வரும் 20.12.09 ஞாயிறு அன்று மதிமயங்கும் மாலை 3.30 மணியளவை, மதிபெறும் மாலையாக மாற்ற ஈரோட்டு பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுசமயம் பதிவர்களும் வாசகர்களும் திரளாக பங்குபெற்று இனிய அனுபவத்தினை பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடனும், பண்புடனும் அழைக்கிறோம்.
இச்சங்கமத்தில் முக்கிய அம்சங்களாக நாங்கள் தெரிவுசெய்வது...
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு * இன்னும் சில.....
தங்களது வருகையினை கீழ்கண்ட பதிவர்களின் அலைபேசி எண்களுக்கு அழைத்து உறுதிபடுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சந்திப்புநடைபெறும்இடம் : பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி) லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பெருந்துறை சாலை, ஈரோடு - 11 நாள் : 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை நேரம்: சரியாக மாலை 3.30 மணியளவில்.
எனது சமீபத்திய சாதனைகளில்(?!!!) ஒன்றாக பாண்டிச்சேரி என்றழைக்கப்படுகின்றபுதுச்சேரிக்கு சென்று வந்த நிகழ்வினை குறிப்பிடலாம். எனது நண்பரின்பகுத்தறிவு திருமணத்திற்காக அங்கே செல்ல நேரிட்டது.
மாலையில் திருமணம் என்பதால்முதல்நாள் இரவு புறப்பட்டோம் (அலுவலக தோழர்கள் உட்பட) மறுநாள் காலைபுதுவையின் மண்ணில் எங்கள் காலடி பதித்தக் காலம், கீழ் விழுந்த கதிரவன்ஒளியதில் கால் படும் நேரமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கொஞ்ச நேரம்ஓய்வுறக்கம். பின்னர் 12 மணிவாக்கில் கிழக்கு கடற்கரையின் வாசம் நுகரசென்றோம்.
பெருகிவரும் அலைகளின் வீரியத்தினை குறைக்க பெருங்கற்கள்போடப்பட்ட கரையுடைய கடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் கரைநுழையும் அன்பர்களை தடியோடு வரவேற்கும் காந்தியடிகளின் மணிமண்டபமே கூறும் புதுவையின் சொச்ச அழகினை.
உச்சிதொடும் வெயிலின் வெக்கை மிகையாகத்தான் இருந்தது. ஆயினும் வேகமாய் வீசிய கடற்காற்று எல்லாம் மறைத்து அதன் அழகினை ரசிக்க இடம் கொடுத்தது. கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு திரும்புகையில் கடந்து வந்த சாலையில் புதுச்சேரியின் வரலாற்றை அறிந்துகொள்ள அவசியம் காணவேண்டிய இடமாக திகழும் புதுவை அருங்காட்சியகத்தை தற்செயலாக காணும் வாய்ப்பு நேர்ந்தது. இது புதுவை ஆளுநர் இல்லம் அருகே உள்ள ஒரு வளைவில் உள்ளது. பல்லவர், சோழ காலச் செப்புச்சிலைகள், கற்சிலைகள், பிரஞ்சுக்காரர்களின் பழம்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு சிற்ப அரங்கு, பிரெஞ்சு அரங்கு, தொல்லியல் அரங்கு, நில இயல் அரங்கு, ஆயுத அரங்கு, ஓவிய அரங்க எனப் பல பகுதியாக அமைந்துள்ளது (புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை).
இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இந்த அருங்காட்சியகம் பாரதி பூங்காவிற்கு வடக்கில், ரோமன் ரோலண்டு நூலகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளதாக அதன் வரைபடத்தில் உள்ளது. அருங்காட்சியகத்தை வெளியே வருகையில் முன்புறம் இருந்த அறிவிப்பு பலகையில், இந்த பழம்பெரும் (அதாவது பிரஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய) மாளிகையை 1999-ல் கருணைக்கொலை செய்யவிருந்ததாகவும், அப்போதைய சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் தப்பித்து இப்போது அருங்காட்சியகமாக செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை விடுமுறை நாள். எங்களால் அன்றைய நாள் பார்க்கமுடிந்தது அவ்வளவுதான்.
ஆயினும் பிறகொருமுறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் காணவேண்டும் என்று எனது மனக்குறிப்பேடின் நடுப்பக்கத்தில் குறித்து வைத்துள்ள இடங்கள் கீழ்கண்ட பெயரில் உள்ளன....
ரோமன் ரோலண்டு நூலகம்
காந்தியடிகளின் நண்பராக விளங்கிய பிரெஞ்சு அறிஞர் ரோமன் ரோலண்டு என்பவரின் பெயரால் இந்நூலகம் செயல்பட்டு வருவதாக செய்தி. 1827 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கபட்டபோது, முதன்முதலில் புதுவை ரயில் நிலையம் அருகில் இருந்தது என்றும் 1974 ஆம் ஆண்டு முதல் ராஜ்பவனுக்கு அருகில் செயல்பட்டு வருகிறது என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.
அரவிந்தர் ஆசிரமம்
உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் இங்கு வந்து ஆசிரமவாசிகளாக உள்ளனராம். ரோமிலுள்ள வாடிகன் போல, புதுச்சேரி அரசுக்குள்ளே ஒரு தனி ராஜ்யம், தனி உலகில் இயங்கிவருவதாக இவ்வூரின் அடுத்த புத்தகத்தில் உள்ளது.
இவைகள் தவிர பாரதியார் அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் இன்னம் சில முக்கிய இடங்கள் உள்ளதாக அறியப்பெற்றேன். வாய்ப்பு நேரும்போது அந்த கடலிலும் நீச்சலடிக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது.
நாங்கள் திரும்பி வருகையில் (அதாவது திருமணம் முடிந்து மறுநாள் காலை) தற்பெருமை கொள்ளத்தக்க வகையில் பேருந்தின் சாளரம் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது (!!). புதுச்சேரியின் புறநகர் என்று சொல்லமுடியாத ஓர் இடத்தின் சாலையோரம்... மதுவின் மயக்கத்தில் ஒரு மாதுவே அச்சாலையின் நீள அகலங்களை துல்லியமாக தன் கால்களாலேயே அளந்துகொண்டிருக்க....உணர்ந்துகொண்டேன்.....பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
இலங்கையில் மழைக்காலம் நெருங்கிவிட்டது. வெட்டவெளியில் மிக மோசமான ஆரோக்கியமற்ற சூழலில் அடைபட்டுள்ள நம் தமிழர்களின் நிலை மழை வெள்ளத்தால் தொற்றுநோய் தொடங்கி பல்வேறு விதமாக ஏற்படக்கூடிய இடர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியவருகிறது! அவர்களின் உயிரையும் வாழ்வையும் இலங்கை அரசு ஒரு பொருட்டாக கருதப்போவதில்லை! நம் தமிழ் சகோதரர்கள் இன்னலுற்று சாவதை வேடிக்கை பார்த்து ரசிக்கவே சிங்கள அரசு காத்திருக்கிறது!
இது நம் முறை!
நம் ஈழ சகோதரர்களுக்காகாக குரல் கொடுக்கும் Sri Lanka Peace Campaign என்கிற அமைப்பு, முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள நம் தமிழினம் இயற்கை கொடூரங்களால் இலங்கையில் அழிபடுவதை முன்கூட்டியே தடுப்பது உட்பட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஐநா சபைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி எண்ணற்ற ஈமெய்ல்கள் அனுப்புமாறு நம்மை கோருகிறது!
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!
முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்
ஈழமக்களுக்கான நம் கோரிக்கைகள் அந்த இணையப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் அனுப்பும் ஈமெய்ல்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாதியாலும், இயற்கை சீரழிவாலும், ராணுவ துண்புறுத்தல்கள்லாலும் மனம் நொந்தும் மரணத்தை நோக்கிப் பயணப்படும் நம் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற தயவுசெய்து 20வினாடிகள் செலவழியுங்கள்!