க.பாலாசி: பாருக்குள்ளே பாண்டிச்சேரி...

Thursday, September 24, 2009

பாருக்குள்ளே பாண்டிச்சேரி...

இளமை விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு


எனது சமீபத்திய சாதனைகளில்(?!!!) ஒன்றாக பாண்டிச்சேரி என்றழைக்கப்படுகின்ற புதுச்சேரிக்கு சென்று வந்த நிகழ்வினை குறிப்பிடலாம். எனது நண்பரின் பகுத்தறிவு திருமணத்திற்காக அங்கே செல்ல நேரிட்டது.


மாலையில் திருமணம் என்பதால் முதல்நாள் இரவு புறப்பட்டோம் (அலுவலக தோழர்கள் உட்பட) மறுநாள் காலை புதுவையின் மண்ணில் எங்கள் காலடி பதித்தக் காலம், கீழ் விழுந்த கதிரவன் ஒளியதில் கால் படும் நேரமாக அமைந்தது என்றால் மிகையாகாது. கொஞ்ச நேரம் ஓய்வுறக்கம். பின்னர் 12 மணிவாக்கில் கிழக்கு கடற்கரையின் வாசம் நுகர சென்றோம்.


பெருகிவரும் அலைகளின் வீரியத்தினை குறைக்க பெருங்கற்கள் போடப்பட்ட கரையுடைய கடலின் அழகு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் கரை நுழையும் அன்பர்களை தடியோடு வரவேற்கும் காந்தியடிகளின் மணிமண்டபமே கூறும் புதுவையின் சொச்ச அழகினை.


உச்சிதொடும் வெயிலின் வெக்கை மிகையாகத்தான் இருந்தது. ஆயினும் வேகமாய் வீசிய கடற்காற்று எல்லாம் மறைத்து அதன் அழகினை ரசிக்க இடம் கொடுத்தது. கொஞ்ச நேரம் உலாத்திவிட்டு திரும்புகையில் கடந்து வந்த சாலையில் புதுச்சேரியின் வரலாற்றை அறிந்துகொள்ள அவசியம் காணவேண்டிய இடமாக திகழும் புதுவை அருங்காட்சியகத்தை தற்செயலாக காணும் வாய்ப்பு நேர்ந்தது. இது புதுவை ஆளுநர் இல்லம் அருகே உள்ள ஒரு வளைவில் உள்ளது. பல்லவர், சோழ காலச் செப்புச்சிலைகள், கற்சிலைகள், பிரஞ்சுக்காரர்களின் பழம்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு சிற்ப அரங்கு, பிரெஞ்சு அரங்கு, தொல்லியல் அரங்கு, நில இயல் அரங்கு, ஆயுத அரங்கு, ஓவிய அரங்க எனப் பல பகுதியாக அமைந்துள்ளது (புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை).

இதில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இந்த அருங்காட்சியகம் பாரதி பூங்காவிற்கு வடக்கில், ரோமன் ரோலண்டு நூலகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளதாக அதன் வரைபடத்தில் உள்ளது. அருங்காட்சியகத்தை வெளியே வருகையில் முன்புறம் இருந்த அறிவிப்பு பலகையில், இந்த பழம்பெரும் (அதாவது பிரஞ்சுக்காரர்கள் பயன்படுத்திய) மாளிகையை 1999-ல் கருணைக்கொலை செய்யவிருந்ததாகவும், அப்போதைய சமூக ஆர்வலர்கள் சிலரின் முயற்சியால் தப்பித்து இப்போது அருங்காட்சியகமாக செயல்பட்டுவருவதாகவும் கூறப்பட்டுள்ளது. திங்கள் கிழமை விடுமுறை நாள். எங்களால் அன்றைய நாள் பார்க்கமுடிந்தது அவ்வளவுதான்.


ஆயினும் பிறகொருமுறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்தால் காணவேண்டும் என்று எனது மனக்குறிப்பேடின் நடுப்பக்கத்தில் குறித்து வைத்துள்ள இடங்கள் கீழ்கண்ட பெயரில் உள்ளன....

ரோமன் ரோலண்டு நூலகம்

காந்தியடிகளின் நண்பராக விளங்கிய பிரெஞ்சு அறிஞர் ரோமன் ரோலண்டு என்பவரின் பெயரால் இந்நூலகம் செயல்பட்டு வருவதாக செய்தி. 1827 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சிக்காலத்தில் துவங்கபட்டபோது, முதன்முதலில் புதுவை ரயில் நிலையம் அருகில் இருந்தது என்றும் 1974 ஆம் ஆண்டு முதல் ராஜ்பவனுக்கு அருகில் செயல்பட்டு வருகிறது என்றும் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன.

அரவிந்தர் ஆசிரமம்

உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் இங்கு வந்து ஆசிரமவாசிகளாக உள்ளனராம். ரோமிலுள்ள வாடிகன் போல, புதுச்சேரி அரசுக்குள்ளே ஒரு தனி ராஜ்யம், தனி உலகில் இயங்கிவருவதாக இவ்வூரின் அடுத்த புத்தகத்தில் உள்ளது.

இவைகள் தவிர பாரதியார் அருங்காட்சியகம், பாரதிதாசன் அருங்காட்சியகம் மற்றும் இன்னம் சில முக்கிய இடங்கள் உள்ளதாக அறியப்பெற்றேன். வாய்ப்பு நேரும்போது அந்த கடலிலும் நீச்சலடிக்கவேண்டும் என்ற ஆவல் உள்ளது.

நாங்கள் திரும்பி வருகையில் (அதாவது திருமணம் முடிந்து மறுநாள் காலை) தற்பெருமை கொள்ளத்தக்க வகையில் பேருந்தின் சாளரம் அருகே அமரும் வாய்ப்பு கிடைத்தது (!!). புதுச்சேரியின் புறநகர் என்று சொல்லமுடியாத ஓர் இடத்தின் சாலையோரம்... மதுவின் மயக்கத்தில் ஒரு மாதுவே அச்சாலையின் நீள அகலங்களை துல்லியமாக தன் கால்களாலேயே அளந்துகொண்டிருக்க....உணர்ந்துகொண்டேன்.....பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...




25 comments:

பிரபாகர் said...

//.பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...//

அருமை பாலாஜி...

நானும் சென்று வந்திருக்கிறேன், இதுபோன்ற கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. கலக்குகிறீர்கள் பாலாஜி!...

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

நிறைய எழுதுவீர்கள் என நினைத்தேன்

//BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை//

எல்லா ஊரும் BAR-ருக்குள்ளே தானே இருக்கு...

//மாதுவே அச்சாலையின் நீள அகலங்களை துல்லியமாக தன் கால்களாலேயே அளந்துகொண்டிருக்க//

ஓகே... அந்த மாது மூலம்தான் தெரிந்ததா?

அப்போ! நீங்க யாரும் பார் பக்கம் போகலையா?

vasu balaji said...

கதிர் - ஈரோடு said...
/ஓகே... அந்த மாது மூலம்தான் தெரிந்ததா?

அப்போ! நீங்க யாரும் பார் பக்கம் போகலையா?/

ம்க்கும். இது வேற. அந்தம்முனியாவது அளந்துச்சி. இவங்க கெடந்தபடி பார்துண்டிருந்தாங்களோ என்னாமோ.
என்னைக்கு போனோம் என்னைக்கு வந்தோம்னே மறந்து போய் குறிப்பிடாம ஒரு இடுகை போடுறாங்க. கேள்வியப் பாரு.
நெம்பத்தான் லொல்லு.

க.பாலாசி said...

///என்னைக்கு போனோம் என்னைக்கு வந்தோம்னே மறந்து போய் குறிப்பிடாம ஒரு இடுகை போடுறாங்க.///

அவ்வ்வ்வ்வ்........இவ்வளவு கஷ்டபட்டு எழுதியிருக்கானேன்னு இல்லாம...என்னைய வச்சு காமெடியா பண்றீங்க....

இப்ப சொல்றேன் நோட் பண்ணிக்கங்க....ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பதாம் வருடத்திற்கு பிறகு பத்து வருடம் கழித்து சரியாக 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாசத்துக்கு அடுத்த மாசம் ஆங்கிலத்தேதி 11க்கு அப்பறம் வர்ர 12ம் தேதி போயிட்டுவந்தேன். யாரப்பாத்து மூக்குமேல வெரல வச்சி பின்னூட்டம் போட்டீங்க...

vasu balaji said...

/இப்ப சொல்றேன் நோட் பண்ணிக்கங்க....ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி ஒன்பதாம் வருடத்திற்கு பிறகு பத்து வருடம் கழித்து சரியாக 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாசத்துக்கு அடுத்த மாசம் ஆங்கிலத்தேதி 11க்கு அப்பறம் வர்ர 12ம் தேதி போயிட்டுவந்தேன்./

:)). அது செரி. இன்னும் தேரு நிலைக்கு வரல போல.

/யாரப்பாத்து மூக்குமேல வெரல வச்சி பின்னூட்டம் போட்டீங்க.../

இன்னுமா நெடி போகலை?:))

12ம் தேதி போய்ட்டு வந்து 24ம் தேதி இடுகைய போட்டு அலப்பறை வேற.

இருங்க மேடி வர்றாரு!

பழமைபேசி said...

சாயுங்காலம் வந்து படிக்கணும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல விவரணை நண்பா.. பார்க்க வேண்டிய இடங்கள்..

ஆரூரன் விசுவநாதன் said...

நான் மிக ரசிக்கும் தென்னிந்திய நகரம். பகலைவிட பாண்டிச்சேரி நள்ளிரவிலும், விடியலிலுமே மிக அழகாக இருக்கும்.

பாண்டிக்கு பொருத்தமான பாட்டு.....

"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்......"

வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்.

பா.ராஜாராம் said...

அருமையான நடை பாலாஜி.விவரணை சொக்குது.அப்புறம்,உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.வாய்க்கிறபோது
தளம் வாங்களேன்..அன்பு நிறைய.

vasu balaji said...

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

பாராட்டுகள் பாலாஜி

தேவன் மாயம் said...

பாண்டிச்சேரியின் சில இடங்கள் நினைவுகளை விட்டு அகலாதவை!!

thiyaa said...

நான் புதுச்சேரி போனதில்லை.
உங்கள் படைப்பு போகத் தூண்டுது
வாழ்த்துகள்

ஹேமா said...

பாலாஜி நீங்க சொல்லியிருக்கும் விதமே அந்த இடங்களைப் பார்ர்க்கத் தூண்டுகிறது.அழகான இடங்கள்.

நாகா said...

சென்னையில் 2-3 மூன்று ஆண்டுகள் வசித்திருந்தாலும் அருகிலிருக்கும் பாண்டிக்கு சென்று அனுபவிக்கும் பாக்கியம் கிட்டவேயில்லை. அலுவல் காரணமாக ஓரிருமுறை சென்று உடனே திரும்பியதோடு சரி..

Unknown said...

தலைப்பு தவறா இருக்கே......!! " பாண்டிச்சேரிக்குள்ளே நெறியா பாரு..." ன்னுதான இருக்கணும்..... தவறுதலா "பாருக்குள்ளே பாண்டிச்சேரி... " ன்னு போட்டுட்டியே பாலாஜி...!!


நல்ல பதிவு..... நன்றிங்க வரலாற்று ஆசிரியரே.....!!!

புலவன் புலிகேசி said...

எனக்கு பிடித்த ஊர் பாண்டிச்சேரியை பற்றி எழுதியமைக்கு நன்றி........ நீங்கள் திருமணத்திற்கு சென்று குடிக்காமலா வந்தீர்கள்................

Sadagopal Muralidharan said...

நல்லா இருக்கு பாலாஜி.
சிறிய மாநிலமானாலும், சீரிய மாநிலம்.
நல்ல தகவல்கள். தொடர்க. நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படும் செம்மண் காடு / குழிகள் கூட அங்கு தான் உள்ளது.
அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.

வரதராஜலு .பூ said...

//பாண்டிச்சேரி பாருக்குள் மட்டுமில்லை...BAR-ருக்குள்ளும் இருக்கிறதென்பதை...//

பாண்டிச்சேரியை பற்றி யார் எழுதினாலும் இத்தகைய குறிப்புகள் இடம் பெறாமல் இருப்பதில்லை. எனக்கு மிகவும் வருத்தம் தரும் இத்தகைய குறிப்புகள், உண்மையே ஆனாலும்.

ஏனென்றால் பாண்டிச்சேரி எனது சொந்த ஊர்.

பாண்டிச்சேரியை பிடிக்காது என்று யாராலும் சொல்லமுடியாது. அமைதியான அழகான, திட்டமிட்டு கட்டப்பட்ட நகர் பகுதி உள்ள ஊர்.

பி.கு. - (1) எனக்கு குடிப்பழக்கம் இல்லை. (2) நீங்கள் பாண்டிச்சேரிக்கு வந்து குடிக்காமல் வந்தது உண்மையானால் பாராட்டுதலுக்குரியது உங்கள் செயல்.

க.பாலாசி said...

//அருமை பாலாஜி...
நானும் சென்று வந்திருக்கிறேன், இதுபோன்ற கண்ணோட்டத்தில் பார்த்ததில்லை. கலக்குகிறீர்கள் பாலாஜி!...பிரபாகர்.//

மிக்க நன்றி அன்பரே

//Blogger கதிர் - ஈரோடு said...
நிறைய எழுதுவீர்கள் என நினைத்தேன்//

நான் பார்த்ததே இரண்டு இடங்கள்தான்....

// எல்லா ஊரும் BAR-ருக்குள்ளே தானே இருக்கு...//

அப்படியில்லை எல்லா ஊருக்குள்ளும் bar தான் இருக்கிறது....

// ஓகே... அந்த மாது மூலம்தான் தெரிந்ததா?//

இல்லை...அந்த மாதுவின் மூலமே தெரிந்தது...

// அப்போ! நீங்க யாரும் பார் பக்கம் போகலையா?//

இல்லை....

சார் ஒண்ணு தெரிஞ்சிக்கங்க...கேள்வி கேட்கிறது ஈஸி...ஆனா பதில் சொல்றதுதான் கஷ்டம்....ஆவ்வ்வ்வ்வ்வ்..........

நன்றி வருகைக்கு...

//Blogger வானம்பாடிகள் said...
// ம்க்கும். இது வேற. அந்தம்முனியாவது அளந்துச்சி. இவங்க கெடந்தபடி பார்துண்டிருந்தாங்களோ என்னாமோ.
என்னைக்கு போனோம் என்னைக்கு வந்தோம்னே மறந்து போய் குறிப்பிடாம ஒரு இடுகை போடுறாங்க. கேள்வியப் பாரு.
நெம்பத்தான் லொல்லு.//

இதுக்கெல்லாம் முன்னாடியே பதில் போட்டுட்டதால....

உங்களின் வருகைக்கு நன்றி...

க.பாலாசி said...

//பழமைபேசி said....
சாயுங்காலம் வந்து படிக்கணும்!//

நீங்க எப்பவேணும்னாலும் படிக்கலாம்...ஆனால் சாயாமல் படியுங்கள்...நன்றி வருகைக்கு...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் aid...
நல்ல விவரணை நண்பா.. பார்க்க வேண்டிய இடங்கள்..//

நன்றி அன்பரே...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
நான் மிக ரசிக்கும் தென்னிந்திய நகரம். பகலைவிட பாண்டிச்சேரி நள்ளிரவிலும், விடியலிலுமே மிக அழகாக இருக்கும்.
பாண்டிக்கு பொருத்தமான பாட்டு...
"இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம், இதுதான் எங்கள் உலகம்......"
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்.//

அந்த பாடலை பகலினில் பாட்டில், இரவினில் வாந்தி என்றிருந்தால் பொருத்தமாக இருக்கிதும்...

//Blogger பா.ராஜாராம் said...
அருமையான நடை பாலாஜி.விவரணை சொக்குது.அப்புறம்,உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.வாய்க்கிறபோது
தளம் வாங்களேன்..அன்பு நிறைய.//

மிக்க நன்றி தோழரே...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp
பாராட்டுகள் பாலாஜி//

மறுமுறையும் நன்றி உங்களுக்கு....

//Blogger தேவன் மாயம் said...
பாண்டிச்சேரியின் சில இடங்கள் நினைவுகளை விட்டு அகலாதவை!!//

உண்மைதான் அன்பரே...நன்றி...

//Blogger தியாவின் பேனா said...
நான் புதுச்சேரி போனதில்லை.
உங்கள் படைப்பு போகத் தூண்டுது
வாழ்த்துகள்//

கண்டிப்பாய் பாருங்கள்....நன்றி தியா அவர்களே...

//Blogger ஹேமா said...
பாலாஜி நீங்க சொல்லியிருக்கும் விதமே அந்த இடங்களைப் பார்ர்க்கத் தூண்டுகிறது.அழகான இடங்கள்.//

நன்றி ஹேமா....

//Blogger நாகா said...
சென்னையில் 2-3 மூன்று ஆண்டுகள் வசித்திருந்தாலும் அருகிலிருக்கும் பாண்டிக்கு சென்று அனுபவிக்கும் பாக்கியம் கிட்டவேயில்லை. அலுவல் காரணமாக ஓரிருமுறை சென்று உடனே திரும்பியதோடு சரி..///

அப்படியா...வாய்ப்பு நேரும்போது அவசியம் செல்லுங்கள்...

க.பாலாசி said...

//லவ்டேல் மேடி said...
தலைப்பு தவறா இருக்கே......!! " பாண்டிச்சேரிக்குள்ளே நெறியா பாரு..." ன்னுதான இருக்கணும்..... தவறுதலா "பாருக்குள்ளே பாண்டிச்சேரி... " ன்னு போட்டுட்டியே பாலாஜி...!!//

நன்றி தலைவா வந்திட்டீங்களா? வாங்க வாங்க....

//Blogger புலவன் புலிகேசி said...
எனக்கு பிடித்த ஊர் பாண்டிச்சேரியை பற்றி எழுதியமைக்கு நன்றி........ நீங்கள் திருமணத்திற்கு சென்று குடிக்காமலா வந்தீர்கள்................//

நான் குடிக்காமதான் வந்தேன் நண்பரே....நன்றி உங்கள் வருகைக்கு...

//Blogger Sadagopal Muralidharan said...
நல்லா இருக்கு பாலாஜி.
சிறிய மாநிலமானாலும், சீரிய மாநிலம்.
நல்ல தகவல்கள். தொடர்க. நிறைய திரைப்படங்கள் எடுக்கப்படும் செம்மண் காடு / குழிகள் கூட அங்கு தான் உள்ளது.
அடுத்த முறை முயற்சி செய்யுங்கள்.//

நன்றி அன்பரே உங்களின் தகவலுக்கு...முயற்சிக்கிறேன்....

க.பாலாசி said...

//Varadaradjalou .P said....
பாண்டிச்சேரியை பற்றி யார் எழுதினாலும் இத்தகைய குறிப்புகள் இடம் பெறாமல் இருப்பதில்லை. எனக்கு மிகவும் வருத்தம் தரும் இத்தகைய குறிப்புகள், உண்மையே ஆனாலும்.//

ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷம் இருந்தாலும் அதுவும் விஷம்தானே அன்பரே...

//ஏனென்றால் பாண்டிச்சேரி எனது சொந்த ஊர்.//

நானும் அதிலுள்ள நல்ல விஷயங்களை சொல்லியிருக்கிறேனே...

//பாண்டிச்சேரியை பிடிக்காது என்று யாராலும் சொல்லமுடியாது. அமைதியான அழகான, திட்டமிட்டு கட்டப்பட்ட நகர் பகுதி உள்ள ஊர்.//

உண்மைதான்...பாண்டியின் சாலைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்....

// பி.கு. - (1) எனக்கு குடிப்பழக்கம் இல்லை. (2) நீங்கள் பாண்டிச்சேரிக்கு வந்து குடிக்காமல் வந்தது உண்மையானால் பாராட்டுதலுக்குரியது உங்கள் செயல்.//

நானும் இதுவரை குடித்ததில்லை...பாண்டி சென்றாலும் அப்படித்தான்....

நன்றி தோழரே உங்களின் வருகைக்கு....

வால்பையன் said...

பாண்டிக்கே போயிட்டு வந்தாமாதிரி ஆயிருச்சு!

க.பாலாசி said...

//வால்பையன் said...
பாண்டிக்கே போயிட்டு வந்தாமாதிரி ஆயிருச்சு!//

நன்றி அண்ணா...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO