க.பாலாசி: ஒருவழிச்சாலை இருவிழிப்பயணம்...

Wednesday, September 9, 2009

ஒருவழிச்சாலை இருவிழிப்பயணம்...


அன்றைய இரவு 9 மணிவாக்கில் எனது அலுவகப்பணி முடிந்து வீட்டிற்கு கிளம்ப தயாரானேன். அலுவலகம் பூட்டுவதற்கும் மின்சாரம் தடைபடுவதற்கும் சில நொடிகளே முன்னும் பின்னுமாய் அமைந்தது. அமாவாசை இரவென்பதால் நான் பார்த்த உலகமே கருப்பு நிற ஆடையில் சாந்தமான முகத்துடன், அமைதியாய் இருந்தது. எனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

வழுக்கைத்தலையில் முடி முளைத்தார்ப்போல ஆங்காங்கே சில மரங்கள் உள்ள சாலையின் வழியேதான் எனது பயணம். இரவு ஒன்பது மணியை தாண்டிவிட்டபடியால் அந்த சாலையில் என்னைத்தவிர யாரும் இல்லை. ஒன்றிரண்டு பறக்கும் பறவைகள் கூட காக்கைகளைப்போலவே காட்சியளித்தன. ஓரங்களில் இருந்த சில மரங்களும் இருளில் நனையாமல் குடைபிடித்தாற்போல் தெரிந்தது. எங்கும் கும்மிருட்டு. ஒரு சில ஒலியைத்தவிர வேறெந்த ஒளியும் அங்கே இல்லை.

எப்போதும் அந்த சாலைவழியே சென்றுகொண்டிருப்பதால், இருளாக இருந்தாலும் வழியினை அனுமானித்து செல்லக்கூடிய தைரியம் எனக்கு. ஏனென்றால் எங்கெங்கெல்லாம் குழிகள், பள்ளங்கள் இருக்கும் என்பது அத்துப்படி.

உள்ளுர எனக்கு கொஞ்சம் பயம்வேறு. ஏனென்றால் எத்தனையோ முறை அந்த சாலையில் சென்றிருந்தாலும் இதுபோன்றதொரு தருணத்தில், அதுவும் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயணிப்பது எனக்கு புது அனுபவம். கொஞ்சம் தைரியத்தினை வரவழைத்துக்கொண்டு செல்கையில், அரை கி.மீ அளவு கடந்திருந்தேன். எதிரே அரை கி.மீ. தொலைவில், அதே சாலையில் ஒரு வெள்ளைநிற உருவம் தொங்கி கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. லேசாக அசைவதுபோலவும் தெரிந்தது. அது ஒரு ஆணின் உருவம்தான் என்பது மட்டும் திண்ணமாக தெரிய, என்னுடைய பாட்டி சொன்ன பேய்க்கதையெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது. அந்த பயத்திலும் கை, காலெல்லாம் இருக்கிறதா என்று உற்றுப் பார்க்கிறேன். தூரம் அதிகமாய் இருந்தாலும் எல்லாம் சரியாக இருப்பதுபோல்தான் தெரிந்தது. ஆனால் கால் இருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் தெரிந்தது.

மெல்ல வீசிய தென்றலின் சப்தம் கூட சற்று அதிகமாகவே கேட்க, நான் பார்த்த பேய்ப்படங்களெல்லாம் விழித்திரையில் வெளிச்சமாக தெரிந்தன. உடல் நடுங்குகிறதா அல்லது மிதிவண்டியின் குலுங்கலா என்று அடையாளம் காணமுடியாமல் தொடர்ந்தது என் பயணம். ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது அந்த உருவத்தை நோக்கியே நான் சென்றுகொண்டிருந்தேன். ஏன் செல்கிறேன்? ஏன் பயத்தால் நான் திரும்பிச்செல்லவில்லை? என்று என்மனதில் எழுந்த கேள்விகளுக்கு என்னிடமே பதில் இல்லை, ஆனாலும் செல்கிறேன். பனியின் சாரம் முகத்தின் வழியே வியர்வையுடன் கலந்து வெளிப்பட அது அப்பனியின் தாக்கமா அல்லது பயத்தின் ஆக்கமா என்பதை அறிந்துகொள்ள அப்போது தோன்றவில்லை.

இப்படியே அந்த உருவத்தை நெருங்க நெருங்க... அதன் அளவும் பெரிதாகிக்கொண்டே போனது. என்னுள் இன்னும் கொஞ்சம் பயம் வரிந்து கட்டிக்கொண்டு வா வா என்றது. நாம் வந்த வழியே திரும்பிவிடலாமா? என்ற எண்ணம் இருந்தாலும், அதை செயல்படுத்த முடியவில்லை. ஆனாலும் அது அசைவின்றி என்னையே பார்ப்பதுபோல் தோன்றியது. கொஞ்சம் வேகம் குறைந்து 200 அடி தூரத்தில் நின்றேன்.

மற்ற எல்லா இடங்களையும் இருள் பிடித்துக்கொண்டிருக்க அந்த உருவம் மட்டுமே எனது கண்ணிற்கு பளிச்சென்று தெரிகிறது. அதன் முகத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. அது நெருப்பினில் நீர்விட்டால் வரும் நிறத்தினை ஒத்தே இருந்தது. ஆனால் தலையில் முடி இல்லை. ஏனென்றால் அந்த பகுதி கொஞ்சம் பளபளப்பாய் தெரிந்தது. மிதிவண்டியை விட்டு இறங்கி தள்ளிக்கொண்டு அதன் அருகினில் நெருங்குகிறேன். இப்போது 100 அடி...50 அடி...20 அடி... எனது செல்லிடப்பேசிக்கு உயிர் கொடுத்து அந்த வெளிச்சத்தில் அந்த உருவத்தினை உற்றுப் பார்க்கிறேன்.....ஒரு 20 அடி உயரத்தில் நமது மின்துறை அமைச்சர் சிரித்துக்கொண்டு நிற்கிறார். இவர் ஏன் இங்கு வந்தார் என்று பார்த்தால்... அந்த விளம்பரத்தட்டியின் அடிப்பகுதியில், மறுநாள் இலவச தொலைக்காட்சிப்பெட்டி வழங்க எங்கள் கிராமத்திற்கு அவர் வருகைத்தரப் போவதாக இருந்தது.

ம்கும்....இது ஒன்று தான் குறை என்று நினைத்தவாரே வியர்வைகளை துடைத்துக்கொண்டு மீண்டும் அதே இருட்டில் பயணமானேன்...

(இது ஒரு கற்பனைக் கதையே...இதனால் யார்மனதேனும் புண்படுமானால் மன்னிக்கவும்)


தமிழ்மணத்திலும், தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினையும் பதிவு செய்யவும் நன்றி...



********

25 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏன் இப்படி? :)

நகைத்துண்டு - புதுசா இருக்கு

ஹேமா said...

பாலாஜி,நானும் பேய்க்கதையாக்கும் என்று நெஞ்சு படபடக்க தொடர்ந்து வாசிப்போமா வேணாமா என்றபடியே வாசித்துக்கொண்டிருக்க....
சிரித்தேவிட்டேன்.

vasu balaji said...

அதெல்லாம் முடியாது. திரும்பத் திரும்ப வழுக்கைத் தலையில் முடி முளைத்தாற்போல்னு சொல்லிட்டு டிஸ்கி போட்டு புண்ணானா மன்னிக்கணுமாம்ல. நல்லா இருக்கு கற்பனை. பூன படம் வேற எபக்டு.

ஈரோடு கதிர் said...

பேய்க்கு ரொம்ப பில்டப் கொடுக்கறப்பவே நினைத்தேன், ஆனால் எதிர்பாராத திருப்பம்...

இறுதி வரை நீங்கள் பயணப் பட்ட இருட்டோடு இருண்டு போயிருந்த முகம், கட் அவுட் என்றவுடன் சிரிப்பில் பொங்கியது


//எதிரே அரை கி.மீ. தொலைவில், அதே சாலையில் ஒரு வெள்ளைநிற உருவம் தொங்கி ண்டிருப்பதுபோல் தெரிந்தது.//

அடேங்கப்பா அந்த இருட்டில் அரை கி.மீ. தூரம் உங்களுக்கு தெரிகிறதா...

பழமைபேசி said...

சிறப்பா வந்திருக்கு...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

குடந்தை அன்புமணி said...

நக்கலா... ஆட்டோ வருதுடி...
(சும்மா லுலுலாயிக்கு...

Cable சங்கர் said...

நல்ல ஐடியா மிஸ் பண்ணிட்டீங்கபாலாஜி.

Sadagopal Muralidharan said...

ரொம்ப நல்லா இருக்கு.

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி, படிக்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருந்தது......ஆனா இப்ப இன்னும் பயமா இருக்குது....

மின் அமைச்சரை இப்படியா கிண்டலடிக்கிறது.....?

அன்புடன்
ஆரூரன்

க.பாலாசி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
ஏன் இப்படி? :)//

சும்ம்ம்ம்மா........

//நகைத்துண்டு - புதுசா இருக்கு//

அதாங்கக்கா காமடி பீஸ்.....

நன்றி தங்களின் வருகைக்கு...

//Blogger ஹேமா said...
பாலாஜி,நானும் பேய்க்கதையாக்கும் என்று நெஞ்சு படபடக்க தொடர்ந்து வாசிப்போமா வேணாமா என்றபடியே வாசித்துக்கொண்டிருக்க....
சிரித்தேவிட்டேன்.//

நன்றி... ஹேமா....

//Blogger வானம்பாடிகள் said...
அதெல்லாம் முடியாது. திரும்பத் திரும்ப வழுக்கைத் தலையில் முடி முளைத்தாற்போல்னு சொல்லிட்டு டிஸ்கி போட்டு புண்ணானா மன்னிக்கணுமாம்ல.//

நீங்க ஒரு ஆளு இருக்குறது எனக்கு ஞாபகமே இல்லை...

//நல்லா இருக்கு கற்பனை. பூன படம் வேற எபக்டு.//

நன்றி...அன்பரே...

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
பேய்க்கு ரொம்ப பில்டப் கொடுக்கறப்பவே நினைத்தேன், ஆனால் எதிர்பாராத திருப்பம்...
இறுதி வரை நீங்கள் பயணப் பட்ட இருட்டோடு இருண்டு போயிருந்த முகம், கட் அவுட் என்றவுடன் சிரிப்பில் பொங்கியது//

நன்றி....

//அடேங்கப்பா அந்த இருட்டில் அரை கி.மீ. தூரம் உங்களுக்கு தெரிகிறதா...//

நோ லாஜிக்....கதைய கதையாதான் பாக்கணும்...

//Blogger பழமைபேசி said...
சிறப்பா வந்திருக்கு...//

நன்றி நண்பரே...

//Blogger உலவு.காம் (ulavu.com) said...
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்//

நன்றி...செய்திடலாம்...

//Blogger குடந்தை அன்புமணி said...
நக்கலா... ஆட்டோ வருதுடி...
(சும்மா லுலுலாயிக்கு...//

நானில்லப்பா....

நன்றி அன்பரே வருகைக்க...

//Blogger Cable Sankar said...
நல்ல ஐடியா மிஸ் பண்ணிட்டீங்க பாலாஜி.//

எதங்க தலைவா?

நன்றி வருகைக்கு...

க.பாலாசி said...

//Sadagopal Muralidharan said...
ரொம்ப நல்லா இருக்கு.//

நன்றி அன்பரே....

//Blogger mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்//

நன்றி தகவல் பகிர்தமைக்கு...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
பாலாஜி, படிக்கும் போது கொஞ்சம் பயமாத்தான் இருந்தது......ஆனா இப்ப இன்னும் பயமா இருக்குது....
மின் அமைச்சரை இப்படியா கிண்டலடிக்கிறது.....?
அன்புடன்
ஆரூரன்//

பயப்படாதிங்க...நாம உண்மையதான சொன்னோம்....

நன்றி தங்களின் வருகைக்கு...

இரும்புத்திரை said...

உண்மையா கட்அவுட்டா இல்ல வேற யாரவது இருந்தாங்களா..
இன்னைக்கும் அந்த வழியா போகணும் அதானே டூப் அடிக்கிறீங்க

ப்ரியமுடன் வசந்த் said...

பேய்க்கதைன்னு படிச்சுட்டு வந்தா
கடைசியில காமெடி பீசப்பத்தி சொல்லி காமெடி பண்ணிட்டீங்களே தலைவா...

இருந்தாலும் சின்ன நறுக்.....

Unknown said...

// எனது மிதிவண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். //

ஏனுங் தம்பி அதுலையாச்சும் கரண்டு இருந்துதுங்குளா.....?




// வழுக்கைத்தலையில் முடி முளைத்தார்ப்போல ஆங்காங்கே சில மரங்கள் உள்ள சாலையின் வழியேதான் எனது பயணம். //


தனியாவா தம்பி.....?? இல்ல......





/// இரவு ஒன்பது மணியை தாண்டிவிட்டபடியால் //


அடங்கொன்னியா.... !! ஒன்பது மநீயா தாண்டுனீங்களா.....? ?? அதேப்புடீங்கோ தம்பி....?





// ஒன்றிரண்டு பறக்கும் பறவைகள் கூட காக்கைகளைப்போலவே காட்சியளித்தன. //

இருட்டுல உங்குளுக்கு... காக்காவேல்லாம் தெருஞ்சுதா..... !! உங்குளுக்கு கழுகு கண்ணு.....!!!






// ஓரங்களில் இருந்த சில மரங்களும் இருளில் நனையாமல் குடைபிடித்தாற்போல் தெரிந்தது. //


மான் மார்க் கொடைங்களா தம்பி........??






// எங்கும் கும்மிருட்டு. //


கும் ' ன்னு வேற கேள்விபட்டுருக்குறேன்....!! அதென்ன கும் ' ன்னு இருட்டு .....??






// ஒரு சில ஒலியைத்தவிர வேறெந்த ஒளியும் அங்கே இல்லை. //


எலி இருந்துதுங்களா......??






// எப்போதும் அந்த சாலைவழியே சென்றுகொண்டிருப்பதால், இருளாக இருந்தாலும் வழியினை அனுமானித்து செல்லக்கூடிய தைரியம் எனக்கு. //


ஆஹா... நெம்ப தெவுரியம்தேன் உங்குளுக்கு....!!

கெவுருமென்டுகிட்ட சொல்லி உங்குளுக்கு " சூப்பர்மேன் சூரப்புலி " பட்டம் குடுத்துபோடலாமுங் தம்பி...!!!






// உள்ளுர எனக்கு கொஞ்சம் பயம்வேறு. //

தெனாலி மாதிரியா.....??






// அதுவும் மின்சாரம் இல்லாத நேரத்தில் பயணிப்பது எனக்கு புது அனுபவம். //


அட... மனசுல விருமாண்டி கமலையும் , அன்ன லட்ச்சுமியையும் நெனச்சுபோட்டு
" உன்ன விட......" அப்புடீன்னு பாட்டு பாடிகிட்டே போக வேண்டியதுதானோ.....!!





// எதிரே அரை கி.மீ. தொலைவில், அதே சாலையில் ஒரு வெள்ளைநிற உருவம் தொங்கி கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. //


யாராவது சமாதான கொடி காட்டுறாங்களோ......??






// லேசாக அசைவதுபோலவும் தெரிந்தது. //


ஏதாவது டேன்ஸ் ப்ரோகிராமா இருக்குமுங்.....!!






// அது ஒரு ஆணின் உருவம்தான் என்பது மட்டும் திண்ணமாக தெரிய, //


அய்யய்யோ..... தம்பி.... கிட்ட போயராதீங்க..... !!

" கூவர ... கோழி.... கூவர... வேல

ராசாத்தி... ராசன் வாராண்டி புள்ள " ன்னு கும்மியடுச்சுற போவுது...!!






// னால் கால் இருப்பதுபோலவும், இல்லாததுபோலவும் தெரிந்தது. //


எல்லாம் மனப் பீரு...... அட..... த்து.... !! மனப் பிராந்தி ....!!







// என்று என்மனதில் எழுந்த கேள்விகளுக்கு என்னிடமே பதில் இல்லை, //


உடுங்க .... அந்த பேயிகிட்டையே.... பிட்டு பேப்பர் வாங்கிக்கலாம்...!!








/// அதன் அளவும் பெரிதாகிக்கொண்டே போனது. //


அப்போ அது ... காம்ப்ளான் பேயா இருக்கும்....!! இன்னும் கிட்ட போங்க... " நான் வளர்கிறேனே பாலாஜி .." ன்னு சொல்லும்...!!







/// என்னுள் இன்னும் கொஞ்சம் பயம் வரிந்து கட்டிக்கொண்டு வா வா என்றது. //

அது என்னோ நமிதாவா.... ?? கட்டிக்கிட்டு வா..வா...ன்னு கூபுடுரதுக்கு.....??








/// நாம் வந்த வழியே திரும்பிவிடலாமா? என்ற எண்ணம் இருந்தாலும், அதை செயல்படுத்த முடியவில்லை. //


ஏனுங் தம்பி...... " சிஸ்டம் டேட்டா யரர்ங்குளா........ "...!!







// கொஞ்சம் வேகம் குறைந்து 200 அடி தூரத்தில் நின்றேன். //


ஓஓ..... இதுல .... மெசரிங் டேப்பெல்லாம் வெச்சு அளந்து பாத்துருக்குறீங்க....!! பலே..பலே...!!






// அந்த உருவம் மட்டுமே எனது கண்ணிற்கு பளிச்சென்று தெரிகிறது. //


அது .... உஜாலாவுக்கு மாரீருக்கும்....!!







// அதன் முகத்தை மட்டும் பார்க்க முடியவில்லை. //


அவ்ளோ .... அட்டு பிகரா .......??







// ஆனால் தலையில் முடி இல்லை. //

" பாலாஜி " கோயிலுக்கு வேண்டி மொட்ட போட்டுருக்கும்...!!








// இப்போது 100 அடி...50 அடி...20 அடி... //


பாலாஜி.... கவுண்டவுன் ... ஸ்டாட்ஸ்........







// ஒரு 20 அடி உயரத்தில் நமது மின்துறை அமைச்சர் சிரித்துக்கொண்டு நிற்கிறார். //


அய்யய்யோ...... நெம்ப பப்பி ... சேம் 'ஆ போச்சே......!!







//(இது ஒரு கற்பனைக் கதையே...இதனால் யார்மனதேனும் புண்படுமானால் மன்னிக்கவும்) //


ம்ம்ம்க்க்ம்ம்.... இதுல ... இது வேறையா .....???

வால்பையன் said...

மின்துறை அமைச்சர் நேர்ல வந்து பயமுறுத்துறாரா!?
அதுவும் இருபது அடி உசரத்துல!

துபாய் ராஜா said...

நல்லா 'பீதி'க்கு பில்டப் கொடுத்துட்டு கடைசில பொசுக்குன்னு சிரிக்க வச்சுட்டிங்க பாலாஜி.

க. தங்கமணி பிரபு said...

நல்லாயிருக்கு பாலாஜி! நல்ல பில்டப்! டக்குனு மறக்கமுடியாத கதை முடிவு! வாழ்த்துக்கள்!!

நாடோடி இலக்கியன் said...

கேபிளாரின் கருத்து தான் எனக்கும்.
சில இடங்களில் வார்த்தை பிரயோகம் அசத்தலா வந்திருக்கு பாலாஜி. வாழ்த்துகள்.

S.A. நவாஸுதீன் said...

தூக்கலான பில்டப்பு. சீரியஸா போயி காமெடியா முடிச்சிட்டீங்க.

க.பாலாசி said...

//Blogger இரும்புத்திரை அரவிந்த் said...
உண்மையா கட்அவுட்டா இல்ல வேற யாரவது இருந்தாங்களா..
இன்னைக்கும் அந்த வழியா போகணும் அதானே டூப் அடிக்கிறீங்க//

ஆமா...நண்பா...மனச தேத்திக்கவேண்டியதுதான்...

நன்றி நண்பா...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
பேய்க்கதைன்னு படிச்சுட்டு வந்தா
கடைசியில காமெடி பீசப்பத்தி சொல்லி காமெடி பண்ணிட்டீங்களே தலைவா...
இருந்தாலும் சின்ன நறுக்.....//

நன்றி வசந்த்....

//Blogger லவ்டேல் மேடி said...
ஏனுங் தம்பி அதுலையாச்சும் கரண்டு இருந்துதுங்குளா.....?
தனியாவா தம்பி.....?? இல்ல......
அடங்கொன்னியா.... !! ஒன்பது மநீயா தாண்டுனீங்களா.....? ?? அதேப்புடீங்கோ தம்பி....?
இருட்டுல உங்குளுக்கு... காக்காவேல்லாம் தெருஞ்சுதா..... !! உங்குளுக்கு கழுகு கண்ணு.....!!!
மான் மார்க் கொடைங்களா தம்பி........??
கும் ' ன்னு வேற கேள்விபட்டுருக்குறேன்....!! அதென்ன கும் ' ன்னு இருட்டு .....??
எலி இருந்துதுங்களா......??
ஆஹா... நெம்ப தெவுரியம்தேன் உங்குளுக்கு....!!
கெவுருமென்டுகிட்ட சொல்லி உங்குளுக்கு " சூப்பர்மேன் சூரப்புலி " பட்டம் குடுத்துபோடலாமுங் தம்பி...!!!
தெனாலி மாதிரியா.....??
அட... மனசுல விருமாண்டி கமலையும் , அன்ன லட்ச்சுமியையும் நெனச்சுபோட்டு
" உன்ன விட......" அப்புடீன்னு பாட்டு பாடிகிட்டே போக வேண்டியதுதானோ.....!!
யாராவது சமாதான கொடி காட்டுறாங்களோ......??
ஏதாவது டேன்ஸ் ப்ரோகிராமா இருக்குமுங்.....!!
அய்யய்யோ..... தம்பி.... கிட்ட போயராதீங்க..... !!
" கூவர ... கோழி.... கூவர... வேல ராசாத்தி... ராசன் வாராண்டி புள்ள " ன்னு கும்மியடுச்சுற போவுது...!!
எல்லாம் மனப் பீரு...... அட..... த்து.... !! மனப் பிராந்தி ....!!
உடுங்க .... அந்த பேயிகிட்டையே.... பிட்டு பேப்பர் வாங்கிக்கலாம்...!!
அப்போ அது ... காம்ப்ளான் பேயா இருக்கும்....!! இன்னும் கிட்ட போங்க... " நான் வளர்கிறேனே பாலாஜி .." ன்னு சொல்லும்...!!
அது என்னோ நமிதாவா.... ?? கட்டிக்கிட்டு வா..வா...ன்னு கூபுடுரதுக்கு.....??
ஏனுங் தம்பி...... " சிஸ்டம் டேட்டா யரர்ங்குளா........ "...!!
ஓஓ..... இதுல .... மெசரிங் டேப்பெல்லாம் வெச்சு அளந்து பாத்துருக்குறீங்க....!! பலே..பலே...!!
அது .... உஜாலாவுக்கு மாரீருக்கும்....!!
அவ்ளோ .... அட்டு பிகரா .......??
" பாலாஜி " கோயிலுக்கு வேண்டி மொட்ட போட்டுருக்கும்...!!
பாலாஜி.... கவுண்டவுன் ... ஸ்டாட்ஸ்........
அய்யய்யோ...... நெம்ப பப்பி ... சேம் 'ஆ போச்சே......!!
ம்ம்ம்க்க்ம்ம்.... இதுல ... இது வேறையா .....???//

ஏணுங்கனா இப்டி....நான் என்ன தப்பு பண்ணேன்... வலிக்குது....ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........

நன்றி அண்ணா உங்களின் முழுநீள கமெண்டிற்கு.....(அப்பாடி தப்பிச்சாச்சு... என்னா வில்லத்தனம்)

க.பாலாசி said...

//வால்பையன் said...
மின்துறை அமைச்சர் நேர்ல வந்து பயமுறுத்துறாரா!?
அதுவும் இருபது அடி உசரத்துல!//

அது நேர்ல இல்ல தல...பிளக்ஸ்ல...

நன்றி...

//Blogger துபாய் ராஜா said...
நல்லா 'பீதி'க்கு பில்டப் கொடுத்துட்டு கடைசில பொசுக்குன்னு சிரிக்க வச்சுட்டிங்க பாலாஜி.//

நன்றி ராஜா...

//Blogger க. தங்கமணி பிரபு said...
நல்லாயிருக்கு பாலாஜி! நல்ல பில்டப்! டக்குனு மறக்கமுடியாத கதை முடிவு! வாழ்த்துக்கள்!!//

நன்றி தங்கமணிசார்...

//Blogger நாடோடி இலக்கியன் said...
கேபிளாரின் கருத்து தான் எனக்கும்.
சில இடங்களில் வார்த்தை பிரயோகம் அசத்தலா வந்திருக்கு பாலாஜி. வாழ்த்துகள்.//

நன்றி அன்பரே...

//Blogger S.A. நவாஸுதீன் said...
தூக்கலான பில்டப்பு. சீரியஸா போயி காமெடியா முடிச்சிட்டீங்க.//

நன்றி நவாஸ்....தங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு....

"உழவன்" "Uzhavan" said...

இன்னமும் அவரை வச்சி காமெடி பண்ணுறது நடந்துக்கிட்டுதான் இருக்கா?? நடக்கட்டும் நடக்கட்டும் :-)

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
இன்னமும் அவரை வச்சி காமெடி பண்ணுறது நடந்துக்கிட்டுதான் இருக்கா?? நடக்கட்டும் நடக்கட்டும் :-)//

என்ன பண்றது... இன்னும் கரெண்ட் கட்டாவுரது தொடர்ந்துகிட்டே இருக்கே...

நன்றி அன்பரே...தங்களின் வருகைக்கு...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO