க.பாலாசி: ஈழத்தமிழனுக்காக 20 நொடிகள்....

Friday, September 11, 2009

ஈழத்தமிழனுக்காக 20 நொடிகள்....

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.

இலங்கையில் மழைக்காலம் நெருங்கிவிட்டது. வெட்டவெளியில் மிக மோசமான ஆரோக்கியமற்ற சூழலில் அடைபட்டுள்ள நம் தமிழர்களின் நிலை மழை வெள்ளத்தால் தொற்றுநோய் தொடங்கி பல்வேறு விதமாக ஏற்படக்கூடிய இடர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியவருகிறது! அவர்களின் உயிரையும் வாழ்வையும் இலங்கை அரசு ஒரு பொருட்டாக கருதப்போவதில்லை! நம் தமிழ் சகோதரர்கள் இன்னலுற்று சாவதை வேடிக்கை பார்த்து ரசிக்கவே சிங்கள அரசு காத்திருக்கிறது!

இது நம் முறை!

நம் ஈழ சகோதரர்களுக்காகாக குரல் கொடுக்கும் Sri Lanka Peace Campaign என்கிற அமைப்பு, முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள நம் தமிழினம் இயற்கை கொடூரங்களால் இலங்கையில் அழிபடுவதை முன்கூட்டியே தடுப்பது உட்பட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஐநா சபைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி எண்ணற்ற ஈமெய்ல்கள் அனுப்புமாறு நம்மை கோருகிறது!

நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

ஈழமக்களுக்கான நம் கோரிக்கைகள் அந்த இணையப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் அனுப்பும் ஈமெய்ல்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாதியாலும், இயற்கை சீரழிவாலும், ராணுவ துண்புறுத்தல்கள்லாலும் மனம் நொந்தும் மரணத்தை நோக்கிப் பயணப்படும் நம் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற தயவுசெய்து 20வினாடிகள் செலவழியுங்கள்!

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm


இந்த தகவல் சிந்தனி (தங்கமணிபிரபு) என்ற வலைப்பூவில் இருந்து பெறப்பட்டது. அவருக்கு நன்றி...


*********


16 comments:

கதிர் - ஈரோடு said...

மின்னஞ்சல் செய்துவிட்டேன்

வானம்பாடிகள் said...

நானும். தகவலுக்கு நன்றி

கதிர் - ஈரோடு said...

என்னிடம் இருந்த 500 மின்னஞ்சல் முகவரிகளுக்கு இந்தத் தகவலை மின்னஞ்சல் செய்துள்ளேன்

பிரியமுடன்...வசந்த் said...

mail பண்ணிட்டேன் பாலாஜி தகவலுக்கு நன்றி

லவ்டேல் மேடி said...

மின்னஞ்சல் செய்துவிட்டேன் பாலாஜி..!! தகவலுக்கு நன்றி...!!

சந்ரு said...

நன்றிகள்

SHELPOUR said...

மிக்க நன்றி... நான் wesite address ஐ மறந்து தவித்துக்கொண்டிருண்டேன்

gayathri said...

மின்னஞ்சல் செய்துவிட்டேன் பாலாஜி..!! தகவலுக்கு நன்றி...!!

kumar said...

Please write the Information In English, We can send to other (Language) People also.

Thanks Mr. Balaji

From S.Gerald

Sadagopal Muralidharan said...

நன்றிகள் பல.

ஹேமா said...

நன்றி பாலாஜி,இணைந்த கைகளோடு இயன்றதைச் செய்வோம்.

Sadagopal Muralidharan said...

"kumar said...
Please write the Information In English, We can send to other (Language) People also.

Thanks Mr. Balaji

From S.Gerald"

Please find here

http://samuraiosho.blogspot.com/2009/09/let-us-take-action-for-saving-300000.html

ஹேமா said...

பாலாஜி,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.

க.பாலாஜி said...

நன்றி...கதிர் - ஈரோடு

நன்றி...வானம்பாடிகள்

நன்றி...பிரியமுடன்...வசந்த்

நன்றி...லவ்டேல் மேடி

நன்றி...சந்ரு

நன்றி...SHELPOUR

நன்றி...gayathri

//Blogger kumar said....
Please write the Information In English, We can send to other (Language) People also.
Thanks Mr. Balaji
From S.Gerald//

Dear Mr. Kumar,

please visit http://samuraiosho.blogspot.com/2009/09/let-us-take-action-for-saving-300000.html

thanks,
ka. balaji

நன்றி...Sadagopal Muralidharan

நன்றி...ஹேமா

க.பாலாஜி said...

//ஹேமா said...
பாலாஜி,வந்திடுங்கோ குழந்தை நிலாவுக்கு பத்து வரங்கள் எடுக்க.//

அழைப்புக்கு நன்றி ஹேமா...வந்துவிடுகிறேன்...

PEACE TRAIN said...

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்,yes we do it.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO