க.பாலாசி: உணர்ந்தேன் உன் அப்பன் புத்தியை...

Thursday, September 10, 2009

உணர்ந்தேன் உன் அப்பன் புத்தியை...


என் வயிற்றில் உன் கால்தெரிய
தொட்டுப்பார்த்த தருணங்களில்
எட்டி உதைத்தாய் உணர்ந்தேன்
உன் வேகத்தை...

உன் தங்கையை நான் சுமக்க
அவளைக் கொஞ்சுவதாய்
என் வயிற்றில் முத்தமிட்டாய்... உணர்ந்தேன்
உன் பரிதவிப்பை...

நீ நடந்து பழகிய போது
கால் மிதித்த கசடுகளை என்னிடம்
காட்டி துடைக்கச்சொன்னாய்...உணர்ந்தேன்
உன் அறுவருப்பை...

பள்ளி சென்ற நாட்களில்
மதிப்பெண் குறைவாய் வாங்கியதற்காக
என் மார்பினில் சாய்ந்து அழுதாய்...உணர்ந்தேன்
உன் அறியாமையை...

கல்லூரி சென்ற நாட்களில்
அழகாய் ஒருத்தியுடன் ஊர்சுத்த
இவள் தான் என் காதலி என்றாய்...உணர்ந்தேன்
உன் வாலிபத்தை...

காதலியை கைப்பிடித்த நாளில்
என் காலில் விழுந்து ஆசிபெற
உன் கண்ணீரும் சேர்ந்து விழுந்தது...உணர்ந்தேன்
உன் மனதினை...

நின் மனைவிக்கும் எனக்கும் சண்டைவர
இடையிருந்த நீ தடுப்பதாய் நினைத்து
அவளை அடித்து விட்டாய்...உணர்ந்தேன்
உன் கோபத்தை...

எங்களிருவருக்கும் தினமும் போர்க்களமாக
செய்வதறியாது மௌனித்திருந்த நீ
என்னை முதியோர் இல்லம் அனுப்பினாய்...உணர்ந்தேன்
உன் அப்பன் புத்தியை....

********

தமிழ்மணத்திலும், தமிழிஸ்ஸிலும் உங்களது வாக்கினை பதிவிடவும்...நன்றி....




31 comments:

ஐந்திணை said...

Superb....

Jerry Eshananda said...

உணர்கிறேன் வரிகளின் வலிகளை.சபாஸ் பாலாஜி, அந்த போட்டோ லுக் சோ ரியல்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை பாலாஜி...........

கவிதையை படித்தவுடன் மனம் கனக்கிறது வாழ்த்துக்கள் ............

ஈரோடு கதிர் said...

//என் வயிற்றில் முத்தமிட்டாய்... உணர்ந்தேன்
உன் பரிதவிப்பை...//

//உன் கண்ணீரும் சேர்ந்து விழுந்தது...உணர்ந்தேன்
உன் மனதினை//

அற்புதமான வரிகள்

இதயம் கனக்கும் கவிதை

நிழற்படமே ஆயிரம் வலிகளை உணர்த்துகிறது

பாராட்டுகள் பாலாஜி

லோகு said...

எத்தேச்சையாக உங்கள் தளத்தை பார்த்தேன்.. அட்டகாச கவிதை.. கரு சிறப்பு.. நடையும் அருமை..

பின் தொடர்கிறேன் இப்பொழுதிலிருந்து..

வால்பையன் said...

உனக்கொரு மகன் பிறப்பான்!
அவன்
உன்னைப் போலவே இருப்பான்!

vasu balaji said...

அசத்திட்டீரையா! ஒரு தாய் வாழ்ந்து மரிக்கிறாள் வரிகளில். அருமை! அருமை பாலாஜி. பாராட்டுக்கள்

கலகலப்ரியா said...

நல்லா இருக்குங்க..

ஆரூரன் விசுவநாதன் said...

பாலாஜி...

வலிக்குது......எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதர நடிக்கறது......

ஹி....ஹி......

அருமையான பதிவு.
வலிமையான வரிகள்
வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

உங்கள் தோழி கிருத்திகா said...

romba super :)
epdi si ithellam thonuthu???

ஹேமா said...

இன்றைய வாழ்வியல் இயல்பாய் கவிதையில்.படமே கவிதை சொல்கிறது பாலாஜி.

Ashok D said...

யப்பா பாலாஜி.. நீ சிருசு
எழுதர விஷயமெல்லாம் பெருசு.

நீ வளர்க.. நல்ல புள்ளையாக..

அன்புடன்

D.R.அஷோக்

க. தங்கமணி பிரபு said...

ஆஹா, வாங்க வாங்க பாலாஜி! பிரமாதம்!!

Ashok D said...

அந்த பாட்டி போட்டோ.. மனச பிழைதுப்பா...

பழமைபேசி said...

பாராட்டுகளும் வாழ்த்துகளும்... தொடருங்கள் அன்பா!

Cable சங்கர் said...

அஹா..பிரமாதம்.. பாலாஜி..

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை பாலாஜி

வாழ்த்துக்கள்

//உணர்ந்தேன்
உன் அப்பன் புத்தியை....//

ம்ம்

:(

voted 9/9

Anonymous said...

//கவிதையை படித்தவுடன் மனம் கனக்கிறது//

YES... VERY NICE...

வாழ்த்துக்கள் .......

யாசவி said...

gud one

க.பாலாசி said...

// ஐந்திணை said...
Superb....//

நன்றி....

//Blogger ஜெரி ஈசானந்தா. said...
உணர்கிறேன் வரிகளின் வலிகளை.சபாஸ் பாலாஜி, அந்த போட்டோ லுக் சோ ரியல்//

நன்றி அன்பரே...

//Blogger உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
அருமை பாலாஜி...........
கவிதையை படித்தவுடன் மனம் கனக்கிறது வாழ்த்துக்கள் ............//

நன்றி....உலவு.காம்...

//Blogger கதிர் - ஈரோடு said...
அற்புதமான வரிகள்
இதயம் கனக்கும் கவிதை
நிழற்படமே ஆயிரம் வலிகளை உணர்த்துகிறது
பாராட்டுகள் பாலாஜி//

நன்றி அன்பரே....

க.பாலாசி said...

//லோகு said...
எத்தேச்சையாக உங்கள் தளத்தை பார்த்தேன்.. அட்டகாச கவிதை.. கரு சிறப்பு.. நடையும் அருமை..
பின் தொடர்கிறேன் இப்பொழுதிலிருந்து..//

நன்றி அன்பரே...உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...

//Blogger வால்பையன் said...
உனக்கொரு மகன் பிறப்பான்!
அவன் உன்னைப் போலவே இருப்பான்!//

கவிதையும் அப்படியே...நன்றி தல...

//Blogger வானம்பாடிகள் said...
அசத்திட்டீரையா! ஒரு தாய் வாழ்ந்து மரிக்கிறாள் வரிகளில். அருமை! அருமை பாலாஜி. பாராட்டுக்கள்//

நன்றி பாமரன் அய்யா....பாராட்டுதலுக்கு...

//Blogger கலகலப்ரியா said...
நல்லா இருக்குங்க..//

நன்றிங்க....

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
பாலாஜி...
வலிக்குது......எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதர நடிக்கறது......ஹி....ஹி......
அருமையான பதிவு.
வலிமையான வரிகள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்//

மிக்க நன்றி அன்பரே...

க.பாலாசி said...

//Kiruthiga said...
romba super :)
epdi si ithellam thonuthu???//

நன்றி கிருத்திகா...சில இடங்களில் நடக்கும் அவலங்களால்...

//Blogger ஹேமா said...
இன்றைய வாழ்வியல் இயல்பாய் கவிதையில்.படமே கவிதை சொல்கிறது பாலாஜி.//

நன்றி ஹேமா...

//Blogger D.R.Ashok said...
யப்பா பாலாஜி.. நீ சிருசு
எழுதர விஷயமெல்லாம் பெருசு.
நீ வளர்க.. நல்ல புள்ளையாக..
அன்புடன்
D.R.அஷோக்//

மிக்க நன்றி அசோக் அய்யா...

//Blogger க. தங்கமணி பிரபு said...
ஆஹா, வாங்க வாங்க பாலாஜி! பிரமாதம்!!//

வாங்க தங்கமணி சார்..மிக்க நன்றி...

//Blogger D.R.Ashok said...
அந்த பாட்டி போட்டோ.. மனச பிழைதுப்பா...//

அப்படியா நன்றி...(அதுவும் உண்மையே..)

க.பாலாசி said...

//பழமைபேசி said...
பாராட்டுகளும் வாழ்த்துகளும்... தொடருங்கள் அன்பா!//

நன்றி நண்பரே...

//Blogger Cable Sankar said...
அஹா..பிரமாதம்.. பாலாஜி..//

நன்றி கேபிளய்யா...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
அருமை பாலாஜி
வாழ்த்துக்கள்
//உணர்ந்தேன்
உன் அப்பன் புத்தியை....//
ம்ம்
:(
voted 9/9//

மிக்க நன்றி நண்பா....

//Blogger Sachanaa said...
//கவிதையை படித்தவுடன் மனம் கனக்கிறது//

YES... VERY NICE...
வாழ்த்துக்கள் .......//

நன்றி SACHANAA.....

//Blogger யாசவி said...
gud one//

thanks for your comment.

கார்த்திகைப் பாண்டியன் said...

கனமான கவிதை.. கடைசி வரிகளில் மட்டும் ஏதோ ஒரு சின்ன நெருடல்..

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது எறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

க.பாலாசி said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
கனமான கவிதை.. கடைசி வரிகளில் மட்டும் ஏதோ ஒரு சின்ன நெருடல்..//

நன்றி அன்பரே...

//க. தங்கமணி பிரபு said...
இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது எறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து
http://www.srilankacampaign.org/form.htm
அல்லது
http://www.srilankacampaign.org/takeaction.htm
என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!//

நன்றி தகவல் பகிர்ந்தமைக்கு....(அனுப்பிவிட்டேன்...)

Radhakrishnan said...

அற்புதமான கவிதை. ஒவ்வொரு வரியும் பெரிய கதையை சொல்லியது. படமும் வெகு சிறப்பு.

க.பாலாசி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அற்புதமான கவிதை. ஒவ்வொரு வரியும் பெரிய கதையை சொல்லியது. படமும் வெகு சிறப்பு.//

நன்றி அன்பரே...தங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு....

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அருமையா எழுதி இருகீங்க பாலாஜி. 12/12 போட்டாச்சு

"உழவன்" "Uzhavan" said...

போகிற போக்குல ஒரு கனமான வார்த்தையை வீசிவிட்டு போகிறீர்களே பாலாஜி..

க.பாலாசி said...

//S.A. நவாஸுதீன் said...
ரொம்ப அருமையா எழுதி இருகீங்க பாலாஜி. 12/12 போட்டாச்சு//

நன்றி அன்பரே...

//" உழவன் " " Uzhavan " said...
போகிற போக்குல ஒரு கனமான வார்த்தையை வீசிவிட்டு போகிறீர்களே பாலாஜி..//

மிக்க நன்றி அன்பரே....

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO