க.பாலாசி: மாணவ மாணவிகள்தான் பிச்சைப்பாத்திரமா?....

Wednesday, August 26, 2009

மாணவ மாணவிகள்தான் பிச்சைப்பாத்திரமா?....


1996 ம் வருடம் என்பது என்சிந்தையிலிருந்து எப்போதும் நீங்காத வருடம்...

ஏனென்றால் எனது எட்டாம் வகுப்பு ஆரம்பம்தொட்டே எனது கலையார்வம் சற்று மிகுதியான காலம்.நான் பள்ளியின் மாணவத்தலைவனாக இருந்த சமயம் அது. அப்போதைய எனது தொகுதியின் (பூம்புகார்) சட்டமன்ற உறுப்பினர் (பூராசாமி) எங்களது ஊருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகைதந்திருந்தார். அவர் வரும்பொருட்டு ஒரு மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஆடல், பாடல், பேச்சுப்போட்டி போன்றன அடங்கும்.

பேச்சுப்போட்டிக்கு என்னையும் சேர்த்து மூவர் தேர்வு செய்யப்பட்டோம். என்னைவிட திறமைவாய்ந்தவர்கள் மற்ற இருவரும். மூவருக்கும் மூன்று தலைப்பு. எனக்கு அறிஞர் அண்ணா, மற்றொருவனுக்கு காந்தி, இன்னொரு பெண்ணுக்கு காமராஜர். பலமான போட்டி என்றே நினைத்தேன். அதற்காக நிறைய செய்திகளை தொகுத்து 2 பக்க அளவில் மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். எனக்கு போட்டியாக மற்ற இருவரும் இன்னும் அதிகமாக பேச செய்திகளை தொகுத்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

ஒரு மண்டபத்தில் இதற்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நான், நண்பன் மற்றும் அந்த பெண் உட்பட மூவரும் அந்த மண்பத்தின் ஒரு மையப்பகுதியில், சில அரசியல் தலைவர்கள் அருகே அமரவேண்டியிருந்தது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்திருந்தது. அதன்பிறகு மூவரும் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அமர்ந்திருந்தோம். என்ன நிகழ்ச்சி என்றுகூட தெரியவில்லை. எங்களை விட்டுவிட்டு ஆசிரியர்கள் முன்னமே சென்றுவிட்டனர். எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்தது. நானும் மற்ற இருவரும் சிறப்புடன் பேச வேண்டும் என்ற ஆர்வமிகுதியால் மனப்பாடம் செய்துகொண்டிருந்தோம். ஆனாலும் கடைசிவரையில் எங்களை யாரும் பேச அழைக்கவில்லை. இறுதியாக சட்டமன்ற உறுப்பினர் கிளம்பும் முன் யாரோ ஒருவர் நாங்கள் வந்திருப்பதை சொல்ல அப்படியா என்று கேட்டுவிட்டு... கடைசியாக... முதலில் என்னுடன் வந்த பையனை (என் வகுப்பு நண்பன்தான்) அழைத்து முதல் பரிசென்று சொல்லி ஒரு பெரிய பாத்திரத்தைக் கொடுத்தார்கள். பிறகு என்னை அழைத்து இரண்டாம் பரிசென்று சொல்லி, முன்னதை விட சற்றே சிறிதான பாத்திரத்தை கொடுத்தார்கள். மூன்றாவதாக அந்த பெண்ணிற்கு இன்னும் சிறிய அளவிலான பாத்திரத்தை கொடுத்தார்கள்.

பாத்திரம் வாங்கும் போது ஒவ்வொரு பரிசுக்கும் ஒவ்வொரு புகைப்படம்வேறு எடுத்துக்கொண்டார்கள்.

அதன்பிறகு எந்த பேச்சுப்போட்டியிலும் நான் பங்கேற்கவில்லை. எனக்கு அரசியல் வெறுப்பு உண்டானதும் இந்த காலகட்டங்களிலிருந்துதான்.

1. அன்றிலிருந்து இன்றுவரை என்னுடன் ஒட்டிக்கொண்டுள்ள ஆதங்கம் என்னவென்றால் நான் பேசியிருந்தால் ஒருவேளை மூன்றாவது பரிசு வாங்கியிருந்திருக்கலாம். அதேப்போல அந்தப்பெண் பேசியிருந்தால் இரண்டாம் பரிசோ அல்லது முதல் பரிசோ வாங்கியிருந்திருக்கலாம். அந்த நேரத்தில் அவள் ஒரு பெண்ணாக பிறந்ததினால் மட்டுமே மூன்றாம் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டாள் என்றே நினைக்கிறேன். இது அவர்களுக்கே வெளிச்சம்.

2. ஒரு மாணவனுடைய அல்லது மாணவியினுடைய பேச்சுத்திறமையோ அல்லது இன்னபிற திறமைகளோ இவ்வாறான அரசியல் நிகழ்ச்சிகளுக்கு செலவிடப்படுவதில் எவ்வித உபயோகமும் இல்லை, இருக்கப்போவதுமில்லை. அதை ரசிக்கும் நிலைமையிலோ, அல்லது நாம் சொல்லும் கருத்தினை ஏற்றுக்கொள்ளும் பக்குவமோ அவர்களிடம் எப்போதும் இருக்கப்போவதுமில்லை. பிறகு ஏன் இவ்வாறான அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பள்ளி பயிலும், மாணவ சமூதாயத்தை அழைக்கவேண்டும். சாக்கடையில் ஊறும் தவளைகளுக்கு பன்னீர் எதற்கு? பிச்சைக்காரன் பிரியாணிக்கு ஆசைப்படுவதுபோல, தெருபொறுக்கி நாய்களின் ஓட்டாசைக்கு பள்ளி மாணவ மாணவிகள்தான் பிச்சைப்பாத்திரமா?

3. இதைப்போன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தமது பள்ளியில் பயிலும், மாணவ மாணவிகளை ஆசிரியர்கள் எதன்பொருட்டு அனுப்புகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. கட்சி ஊர்வலம்,போராட்டம்,தலைவர்கள் வரவேற்பு...அப்படி இப்படி என்று அரசியல் அரக்கன்களின் பாசாங்கு வேலைகளுக்கு பள்ளிமாணவமாணவிகள் தான் பணமுடிப்பா?. எனது ஊரின் தலைமை ஆசிரியர் ஒருவர் இதைப்போன்ற அரசியல்வாதிகளின் அடிபொடியாகவே இன்றும் இருக்கிறார். அவர் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதை மாணவ சமுதாயமும் பின்பற்றவேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கமுடியும். இன்றும் சில இடங்களில், ஒரு அரசியல் தலைவரின் வருகைக்காக சுட்டு பொசுக்கும் வெயிலில் கால்கடுக்க காத்திருக்கும் மாணவமாணவிகளை பார்க்க நேரிடுகிறது. கொழுப்பெடுத்த அரசியல்வாதியின் கூட்டுப்புழுவா என்ன.. பள்ளிபயிலும் செல்வங்கள்....

ஆசிரியர்கள் இவ்வாறு செய்வதற்கு காரணங்கள் எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதில் பொதுநலன் இருக்க வாய்ப்பில்லை என்பதே என் எண்ணம்...

சக்கரவர்த்தி திருமகன் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று ஞாபகம் வருகிறது....

சீர்காழி கோ.: பரதேசியாய் திரிவது எதனாலே....

என்.எஸ்.கே. : அவன்..... பத்துவீட்டு சோறு ருசி கண்டதாலே.....

குறிப்பு: பத்து வீட்டிலும் பிச்சை போடுபவர்களை உதைத்தால் எல்லாம் சரியாகிவிடும். பூனைக்கு மணிகட்டப்போகும் புண்ணியவான் யார் என்றுதான் தெரியவில்லை.




*******

11 comments:

Unknown said...

ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!! நீ ரொம்ப நல்லவன் தம்பி.....

Unknown said...

mee the first......

சீமான்கனி said...

மிகவும் அருமை நண்பா... மிகவும் ரசித்துப்படித்தேன்...

தொடருங்கள்....வாழ்த்துக்கள்...

ஈரோடு கதிர் said...

உங்கள் கோபமும் வலியும் மனதில் அறைகிறது. பேசி... மூன்றாவது பரிசு கிடைத்திருந்தால் கூட போதும் என்ற கோபமும், பேசாமல் இரண்டாவது பரிசு வாங்கிய அறுவெறுப்பும் தெரிகிறது.


பாலாஜி கோபம் வேறு ரௌத்திரம் வேறு, கோபத்தை ரௌத்திரமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்...

வால்பையன் said...

ஒரு பாத்திரத்துல ஆரம்பிச்சிருக்கு உங்க அரசியல் வெறுப்பு!

ரைட்டு, இனிமே எல்லா போட்டியும் முடிஞ்சா பிறகு அரசியல்வாதிகள் பாத்திரம் கொடுத்தா அரசியல் ஒகேவா!?

செருப்பால அடிக்க வேண்டியது, அந்த அரசியல்வாதிய கூப்பிட்ட உங்க ஸ்கூல் மேனேஜ்மெண்டை!

க.பாலாசி said...

//லவ்டேல் மேடி said...
ஆஆஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!! நீ ரொம்ப நல்லவன் தம்பி.....
mee the first......//

உங்களுக்கு தெரியுது.....

நன்றி வருகைக்கு...

//seemangani said...
மிகவும் அருமை நண்பா... மிகவும் ரசித்துப்படித்தேன்...
தொடருங்கள்....வாழ்த்துக்கள்...//

நன்றி...

க.பாலாசி said...

//கதிர் - ஈரோடு said...
உங்கள் கோபமும் வலியும் மனதில் அறைகிறது. பேசி... மூன்றாவது பரிசு கிடைத்திருந்தால் கூட போதும் என்ற கோபமும், பேசாமல் இரண்டாவது பரிசு வாங்கிய அறுவெறுப்பும் தெரிகிறது.//

ஆமாம்.. இன்றுவரை இது ஒரு உறுருத்தலாகவே மனதில் உள்ளது..

// பாலாஜி கோபம் வேறு ரௌத்திரம் வேறு, கோபத்தை ரௌத்திரமாக மாற்ற முயற்சி செய்யுங்கள்...//

நன்றி தங்களின் கருத்திற்கு... முயற்ச்சிக்கிறேன்..

// வால்பையன் said...
ஒரு பாத்திரத்துல ஆரம்பிச்சிருக்கு உங்க அரசியல் வெறுப்பு!//

அட ஆமா பாருங்களேன்...

//ரைட்டு, இனிமே எல்லா போட்டியும் முடிஞ்சா பிறகு அரசியல்வாதிகள் பாத்திரம் கொடுத்தா அரசியல் ஒகேவா!?//

அதெப்படி...எல்லாரும் நிறுத்தனும்...

//செருப்பால அடிக்க வேண்டியது, அந்த அரசியல்வாதிய கூப்பிட்ட உங்க ஸ்கூல் மேனேஜ்மெண்டை!//

அந்த மேனேஜ்மெண்டே அரசாங்கமாக இருக்கும்போது? எதுவால் அடிப்பது...

நாடோடி இலக்கியன் said...

நல்ல பதிவு நண்பா.இந்த மாதிரி ஆட்களுக்கு கூஜா தூக்குறவனுங்கள சொல்லனும்.

அரசியல் நாடகத்தில் அவர்கள் போடும் கதாபாத்திரத்தைவிட பெருசா சிறுசா நீங்க வாங்கின பாத்திரம்.

துளசி கோபால் said...

அடப்பாவமே (-:

க. தங்கமணி பிரபு said...

விடுங்க பாலாஜி! இவ்வளவு லேட்டா கோவப்படுவது பழைய பிடிக்காத சினிமாவ திரும்ப ஒருதடவை பொறுமையா பார்க்கற மாதிரின்னு சுகபோதானந்தா “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ல சொல்றார். இதைய ஒரு அனுபவமா வச்சு அடுத்த தலைமுறைக்கு உதவி பண்ணலாம்னுதான் தோனுது! தவிர நோ டென்ஷன்..... C O O L !!!

க.பாலாசி said...

//நாடோடி இலக்கியன் said...
நல்ல பதிவு நண்பா.இந்த மாதிரி ஆட்களுக்கு கூஜா தூக்குறவனுங்கள சொல்லனும்.//

ஆமாம்...

//அரசியல் நாடகத்தில் அவர்கள் போடும் கதாபாத்திரத்தைவிட பெருசா சிறுசா நீங்க வாங்கின பாத்திரம்.//

இல்லைதான்...

நன்றி தங்களின் வருகைக்கு...

//Blogger துளசி கோபால் said...
அடப்பாவமே (-://

//Blogger SanjaiGandhi said...

:(//

நன்றி தங்களின் வருகைக்கு....

//Blogger க. தங்கமணி பிரபு said...
விடுங்க பாலாஜி! இவ்வளவு லேட்டா கோவப்படுவது பழைய பிடிக்காத சினிமாவ திரும்ப ஒருதடவை பொறுமையா பார்க்கற மாதிரின்னு சுகபோதானந்தா “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ல சொல்றார். இதைய ஒரு அனுபவமா வச்சு அடுத்த தலைமுறைக்கு உதவி பண்ணலாம்னுதான் தோனுது! தவிர நோ டென்ஷன்..... C O O L !!!//

அப்டியா.. சரி விடுங்க...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO