1990 - வரை கிராமத்து கோயில் திருவிழாக்கள் என்றால் பனிப்படரும் இரவு நேரத்தில் வாழ்வியலின் சத்தியத்தை சந்தடிகளுக்கும் பரப்பிவிடும் வள்ளித்திருமணம், அரிச்சந்திரா மற்றும் என் ஞாபகமறதியின் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இன்னும் சில நாடகங்கள் என்றும் கலையிழக்கா காவியமாக நிகழ்ந்துகொண்டிருந்தன. இவற்றிற்கு சொந்த ஊரிலிருந்தும், அருகே சுத்தியுள்ள கிராமங்களிலிருந்தும் மக்கள் சாப்பாட்டு மூட்டையுடன் கூட்டம் கூட்டமாயும், வண்டிக்கட்டி வந்தும் நாடகமேடை முன்னே சமுக்காளத்தின்மேல் குடும்பம் சகிதம் அமர்ந்து கண்டு மகிழ்ந்தனர். இடையே தாகம் தணிக்க தண்ணீர்ப்பந்தல், டீக்கடை, பட்சணம் போன்றவையும் எளிதாய் கிடைக்கும் வகையில் அக்கம்பக்கத்தார் கடைவிரித்து காத்திருப்பர். விடியும்வரை ஓடும் நாடகத்தில் இடையிடையே உறக்கம் கலைத்து, களைப்பு நீங்க நகைச்சுவையுடன் கலந்து நாடகம் அரங்கேறும். இரவு 11மணியளவில் ஆரம்பித்து காலை 5 மணிவரையாவது நடக்கும். மக்களும் சலிப்பில்லாமல் கண்டிருந்தனர். அரிச்சந்திராவில் மயானகாண்டத்தில் சந்திரமதி புத்திரசோகத்தில் புலம்பியழும்போது அவளழுக ஆற்றாது சிறுவர்கள்கூட சேர்ந்தழுவர் (என் சிந்தை இப்போதும் மறக்காத நிகழ்வு)
பின்னர் நீண்ட வரிசையில் நாடகக்கலைகள் காத்திருக்க என்று தொலைந்தது, எங்கே விட்டகன்றது என்றறியாவண்ணம் நேரம்பார்த்து இடைபுகுந்த தொலைக்காட்சி பெட்டியின் வன்மை ஒளி, ஒலியில் எல்லாம் தொலைந்து, நாடகமேடை மேசையாகி தொலைக்காட்சிப்பெட்டியின் தொல்லையை அதிலே நிலைநிறுத்தி இரவு முழுதும் நான்கைந்து படங்களை புதிய கலாச்சாரமாக இடையிட்டனர். பிறகொரு நாளில் 16mm திரையமைத்து திரைப்படக்கவர்ச்சியினை பெரிதாக்கி அதையே மலிவுவிலை மதுவென்றாக்கி சுமையில்லா சுகம் காண செய்தனர். இந்நேரங்களில் நாடகம் காண வந்த குடும்ப கூட்டங்கள் குறைந்துபோய் வயோதிகர்கள் வாலிபத்திமிரில் கூட்டம் கூடி ஆட்டமாடும் கூடாறமாகிப் போயின நாடகத்திடல்கள்.
பிறகு திரைப்பட இசைநிகழ்ச்சி. அதில் முதலும் முடிவுமாய் சில சாமிப்பாடல்கள். மற்றநேரங்களில் சௌந்தர்ராஜன் குரலையும், பாலசுப்ரமணியன் குரலையும் கொலைசெய்யும் பாடல்கள். அடுத்த தெருவாசியையும் இம்சிக்கும் இசைநிகழ்ச்சியாய் காலைவரை தொடர்ந்திருக்கும் தொல்லையாகவே நடக்கும்.
அதுவே இன்று இன்னும் குன்றிப்போய் திரைப்பட ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று மேலும் நேரடியாய், திரையில்லா மேடையமைத்து கலிகாலத்தின் கவர்ச்சி என்பதை கவிச்சடிக்க காட்டும் கன்றாவியாகிவிட்டது.
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...
31 comments:
back with bang, welcome
100% உண்மை.
வங்க பாலாஜி...உங்கப் பணியத் தொடருங்க. நீங்க சொனது போலத்தான் எனக்குப் பிடித்த பொம்மலாட்டமும் காணாமற் போயிற்று...
ரொம்பத் தொலைச்சிட்டோம் பாலாஜி. கிண்டிக் கெளறி உட்டுட்டீங்க ஏக்கத்தை.
எங்க பகுதில இத கூத்துனு சொல்லுவோம்
வெடிய வெடிய பார்த்தெல்லாம் ஒரு காலம்....
//நாடகமேடையருகே குடும்பங்கள் இல்லை//
ஏம்பா... இப்போ இவனுங்க நடத்துற கூத்துக்கு பக்கத்தில குடும்பம் இருக்க முடியுமா என்ன?
ஆமாம் பாலாசி ... அது போன்ற நாடகங்களை பார்க்க போர்வையை போட்டு இடம் பிடிப்போம்.... எல்லாம் போச்சி ... அது ஒரு காலம்.
என்ன செய்ய...வெகுதூரம் வந்து விட்டோமே!
உங்க கட்டுரையில் நேர்மையான ஆதங்கம் இருக்கு.
பழைய ஞாபகங்கள் வந்து முட்டி மோதுது
ஆம் பாலாசி, எல்லாம் இழந்து நாகரிகத்தின் பிடியில் சிக்கி நவீனம் எனும் நாற்றம் பிடித்த சாக்கடையில் இருக்கிறோம்....
பிரபாகர்.
Good Old Times...
Rombave miss pandrom.
திரு பாலாஜி சார்
உங்களின் இந்த பதிவை படித்து என் சிறுவயசு நினைவுகள் மனதில் வட்டமிடுகிறது.
உங்கள் ஊரில் நாடகம் என்றால் எங்களூரில்
கிராமிய கலைநிகழ்ச்சிகள்., அருகே உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பாய், போர்வையுடன்
வந்து விடிய விடிய பார்த்து ரசித்து போவார்கள்.,
எல்லாம் மாறிப்போயாச்சு..
நான் பதிவுலகத்துக்கு புதியவன்., உங்களின் சில பதிவுகளை படித்தேன் இன்று.
ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்
வாஸ்த்தவம் பாலாஜி..எங்கே போச்சு அந்த காலங்கள் எல்லாம்..ஏக்கம் நிறைந்த பதிவு.
எத்தனையோ இழப்புகளில் இவையும் ஒன்று.......
மிக அழகான, அவசியமான பதிவு
வாழ்த்துக்கள் பாலாசி
பாலாஜி,இனிக் கனவில்கூட இப்படியான சந்தர்ப்பங்கள் வரச் சாத்தியமே இல்லை.அதோடு இன்றைய தலமுறையினருக்கு பிடிக்கவும் இல்லையே !
ஹ்ம்ம்.. !
நல்லா சொல்லி இருக்கீங்க...
//வானம்பாடிகள் said...
ரொம்பத் தொலைச்சிட்டோம் பாலாஜி. கிண்டிக் கெளறி உட்டுட்டீங்க ஏக்கத்தை.
//
கிளறியா? கெளறியா?
பழமைபேசி said...
/கிளறியா? கெளறியா?/
கி கி கி கி கி கி. நேத்து தான் கதிருக்கு சொன்னேன். இன்னைக்கு எனக்கு ஆப்பு.=))
well balaji
நல்ல நினைவு திரும்பல்..
நான் இதுலாம் பத்தது இல்லை...
ஆனால் பார்த்த அனுபவம் குடுதுடிங்க....அருமை...
நாடகம் இல்லை ,கலாச்சாரம் இல்லை,நண்பா மனிதர்களே தொலைந்து போகும் அபாயம் உள்ளது நண்பா ................
தொலைத்து தேடுகிறோமா இல்லை தொலைந்ததை தேடுகிறோமா, தெரிந்தும் தெரியாமலே நாம்
நல்லாயிருக்கு பாலாஜி
மிக அழகான அருமையான பதிவு
பழைய நினைவுகளை மறுபடியும்
கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள்.
ஆனால் நான் இதெல்லாம் பார்த்ததில்லை கேள்விப் பட்டு இருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி பாலாஜி!
கவலைப்பட வேண்டிய விஷயம்..:-(((
நன்றி முரளிகுமார் பத்மநாபன்
நன்றி Blogger ♠ ராஜு ♠
நன்றி Blogger புலவன் புலிகேசி
நன்றி Blogger வானம்பாடிகள் அய்யா...
நன்றி Blogger கதிர் - ஈரோடு said...
// எங்க பகுதில இத கூத்துனு சொல்லுவோம்//
அப்படியா....நானும் ஈரோட்டில் இந்த கூத்தை இன்னும் பார்க்கவில்லை.
// ஏம்பா... இப்போ இவனுங்க நடத்துற கூத்துக்கு பக்கத்தில குடும்பம் இருக்க முடியுமா என்ன?//
சரிதான்.
நன்றி அய்யா...
// சி. கருணாகரசு said...
என்ன செய்ய...வெகுதூரம் வந்து விட்டோமே!//
ஆமாம்..
// உங்க கட்டுரையில் நேர்மையான ஆதங்கம் இருக்கு.//
நன்றி....அன்பரே...
நன்றி Blogger தியாவின் பேனா
நன்றி Blogger பிரபாகர்
நன்றி Blogger மகேஷ்
//Blogger மலரகம்(நாகங்குயில்)
திரு பாலாஜி சார்
உங்களின் இந்த பதிவை படித்து என் சிறுவயசு நினைவுகள் மனதில் வட்டமிடுகிறது.
உங்கள் ஊரில் நாடகம் என்றால் எங்களூரில்
கிராமிய கலைநிகழ்ச்சிகள்., அருகே உள்ள கிராமங்களில் உள்ளவர்கள் பாய், போர்வையுடன்
வந்து விடிய விடிய பார்த்து ரசித்து போவார்கள்.,
எல்லாம் மாறிப்போயாச்சு..
நான் பதிவுலகத்துக்கு புதியவன்., உங்களின் சில பதிவுகளை படித்தேன் இன்று.
ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி...
நன்றி பா.ராஜாராம்
நன்றி Blogger ஆரூரன் விசுவநாதன்
நன்றி Blogger ஹேமா
//அதோடு இன்றைய தலமுறையினருக்கு பிடிக்கவும் இல்லையே !//
உண்மைதான்.
நன்றி Blogger கலகலப்ரியா
நன்றி Blogger பழமைபேசி
நன்றி Blogger பிரியமுடன்...வசந்த் நண்பா
நன்றி logger seemangani நண்பா
நன்றி Blogger வெண்ணிற இரவுகள்....!
நன்றி Blogger அன்புடன் மலிக்கா
மிக்க நன்றி RAMYA
நன்றி Blogger கார்த்திகைப் பாண்டியன்
//கூத்தடிக்கும் இளைய, சில வயதான கூட்டங்களும், திரைப்பட இசையில் அடித்தொடைகாட்டும் ஆடலை ஆடம்பரமாய் அரங்கேற்றும் கூத்தாடிகளின் ஜாக்கெட்டுக்குள் ஒன்றிரண்டு ரூபாய் நோட்டுக்களை சொருகி சுகம்காணும் குறைகுணம் கொண்ட கூட்டமுமே கூடிநிற்கின்றன. மதுவின் மயக்கம், புகைக்குழலின் புகைமூட்டம் என சிற்றின்பத்தில் சிறைபடும் இளைதலைமுறையின் தலையை முறையாக வாரிவிடத்தான் அங்கு ஆளில்லை//
என்னத்தச் சொல்ல?!
-கேயார்
இன்னமும் எங்கள் ஊர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் மேடை நாடகங்கள் நடைபெறுகிறது பாலாஜி. ஆனால் என்ன பார்வையாளர்கள் எல்லாம் வயதானவர்கள். இளைஞர்கள், குழந்தைகள் என ஒருவரும் இல்லை.
கூத்து அருமை.............
//இன்றைய கவிதை said...
என்னத்தச் சொல்ல?!
-கேயார்//
நன்றி கேயார்....
//நாகா said...
இன்னமும் எங்கள் ஊர் சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவில் மேடை நாடகங்கள் நடைபெறுகிறது பாலாஜி. ஆனால் என்ன பார்வையாளர்கள் எல்லாம் வயதானவர்கள். இளைஞர்கள், குழந்தைகள் என ஒருவரும் இல்லை.//
உண்மைதான் நாகாண்ணே....நன்றி வருகைக்கு...
//ஊடகன் said...
கூத்து அருமை.............//
நன்றி நண்பா....
Post a Comment