யாதொரு பிணியுமில்லாத மனிதனுக்கும் சுலபமாய் ஏதோவொன்றை ஏவிவிடும் வேலையை அவ்வப்போது ஒருதின மட்டை விளையாட்டு போட்டிகளே செய்துவிடுகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய, பாகிஸ்தான் அல்லது ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஒருதின போட்டியென்றால் எல்லா வயதினரும் தொலைக்காட்சிப்பெட்டியின் முன் பருவமடைந்த பெண்ணைப்போல் பக்குவமாய் அமர்ந்துவிடுகின்றனர்.
இவ்வாறான தொடர் போட்டிகளில் ஏதோவொன்றில் இறுதியில் இந்திய அணி வெற்றிபெரும் வாய்ப்பை இழக்கும்போது, நம்ப ராஜாவோ, கூஜாவோ சலித்துக்கொள்கின்றனர். காரணம் தான் அந்த போட்டியினை பார்த்ததினால்தான் இந்தியா தோற்றுவிட்டதாக எண்ணி. கிடக்கட்டும் கழுதையென்றால் நம் வீட்டில் பல்போன பாட்டிக்குகூட இரவில் தூக்கம் வருவதில்லையாம், இரண்டு அல்லது மூன்று ஒட்டங்கள் வித்தியாசத்தில் அப்போட்டியின் வெற்றிவாய்ப்பு விலகிப்போனால்.
இதைவிட கொடுமை யாதெனில் கடைசிநேர பதைபதைப்பில், அதாவது ஆறு பந்துக்கு எட்டு ஓட்டங்கள் தேவைப்படும்போது ஏற்படும் மாரடைப்பில் வீரமரணம் எய்துபவர்களும், இரண்டு ஓட்டங்கள் தேவைப்படும் வெற்றியின் விளிம்பில் ஆசிஸ் நெக்ரா வெளியேறினால் விற்பனைக்குள்ள தொ.கா.பெட்டியொன்றை பார்வையாளன் விட்டெரியும் கல்லுக்கு பலிகொடுத்து பரிதாபமாய் கடைமூடும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்னதான் நான் யோக்கியனென்று வீரவசனம் பேசினாலும் அந்நேர ஆர்வமிகுதியில் இணையதளத்திலாவது ஓட்டங்களை சரிபார்த்துக்கொள்ள என் மனமும் ஏங்கத்தான் செய்கிறது. என்ன செய்ய...நானும் 2003 வரையில் கல்லூரியின் கணிதத்துறை மட்டைவிளையாட்டு குழுவின் உறுப்பினனாகவே இருந்தேன். 2003ல் உலககோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா வெல்லவேண்டுமென எங்கள் ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கடவூர் அமிர்தகடேசுவரருக்கும், அபிராமி அம்மையாருக்கும் ஒரு ரூபாய்க்கு சூடம் வாங்கி ஏற்றி வேண்டுகோள் விடுத்தேன். ஒருரூபாய் சூடம் ஒருநிமிடம்தான் எரிந்திருக்கும்போல, 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாறுகண்ட தோல்வியை தொட்டுப்பார்த்தது. பிறகு மட்டைவிளையாட்டு என்றாலே வெறுப்பூன்றிவிட்டது. ஒரு போதிமரத்தின் கீழில்லாவிட்டாலும், ஒரு புளியமரம் அல்லது வேப்பமரத்தின் அடியிலாவது எனக்கு இந்த ஞானம் பிறந்திருக்கவேண்டும்.
இப்போது இவ்விளையாட்டில் அர்ப்பணிப்புடன் விளையாடும் வீரர்கள் மைதானாத்தில் இருந்தாலும், அதைவிடுத்து மற்றவிடங்களில் இவ்விளையாட்டினை மையப்படுத்தி கதராடையில்லா அரசியல் நடக்கிறது. வருங்காலத்தில் இதுவும் கொடியுடன் கூடிய ஒரு அ.இ.ம.வி.கழகமாக மாறலாம்.
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...
32 comments:
இது மட்டை விளையாட்ட இருந்த காலம் போச்சி பாலாசி. மட்கா மாதிரி இது ஒரு சூதாட்டம். அதுக்காகவே நடத்துறானுவளோன்னு தோணும். அ.இ.ம.வி கழகமா மாறினாலும், கூடிய விரைவில், அ.இ.ம.கழகம், அ.இ.ப.வீ.கழகம், அ.இ.வி.கீ.கழகம்னு உடைஞ்சிடும்.
ஆண்டவனால் கூட முடியாதது இருக்கிறது எனத் தெரிகிறது
//அ.இ.ம.வி.கழகமாக மாறலாம்//
அ.இ.ம.சூ. கழகமாக மாறி ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப நாளச்சுங்கோஓஓஓஓஓஓ சாமி
டிஸ்கி: சூ-சூதாட்டம்
வரிக்கு வரி சிரிப்பும் கோபமுமாக
விளாசித்தள்ளுகிறது இந்த பதிவு. நெடுநெரம் சிரித்தேன்.
பாலாசி......இந்த விளையாட்டின் மீது எனக்கு அதிக ஆர்வம் இல்லை....எனவே இதைப் பற்றி அதிகம் எழுத வில்லை....
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை....
க்ரக்ட்டு பாலாசி :(
mattai vilayaattaa..:-ss... gneh..!
அட கட்சி பேரு நல்லா இருக்கே....உண்மைதான் நண்பா இந்தியாவைப் பொறுத்த வரை மட்டைப் பந்தும் ஒரு அரசியல் விளையாட்டுதான்.
வெறித்தனமாய் பார்த்து இன்று வெற்றி பெற்றால் மட்டும் வியப்பாய் இருக்கிறது பாலாசி.
பிரபாகர்.
//இதைவிட கொடுமை யாதெனில் கடைசிநேர பதைபதைப்பில், அதாவது ஆறு பந்துக்கு எட்டு ஓட்டங்கள் தேவைப்படும்போது ஏற்படும் மாரடைப்பில் வீரமரணம் எய்துபவர்களும்//
"CRICKET" ஒரு வியாபாரம் என தெரியாமல் இன்னும் வளராத சின்ன பசங்க இருக்குற வரைக்கும் இதை தடுக்க முடியாது..............
வணிகம் போல் ஆகிவிட்டது விளையாட்டு ............................................
இதைப் பார்த்தல் தான் இந்தியன் என்று சொல்கின்றனர்
இதனாலேயே இந்த விளையாட்டு வெறுத்துப் போகிறது. (விளையாடிப் பழக்கமில்லை என்பது வேறு விஷயம். )
எவ்வளவு அழகான தமிழ் நடை.. ஆங்கிலம் இல்லாமல்.. வாழ்த்துக்கள் தலைவா..
உங்கள் எழுத்து நடை பிடிச்சிருக்கு
அழகான தமிழில் அடிசிருகிங்க நெத்தியடி....அருமையான பதிவு...இந்த கிரிக்கெட்டை நான் மறந்து ரெம்ப நாள் ஆச்சு நண்பா.....உங்கள் தமிழ் அழகாய் இருக்கு
இதுக்குத்தான் நாங்கலெல்லாம் இதபார்பதே இல்லை..[அச்சோ]
தோழரே உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html
//இதுவும் கொடியுடன் கூடிய ஒரு அ.இ.ம.வி.கழகமாக மாறலாம்.//
கரெக்ட்டுப்பா...
நல்ல நடையில் எழுத்து.... வாழ்த்துக்கள் பாலாஜி..
நானும் இன்னும் சில பதிவர்களும் சேர்ந்துதான் பார்த்தோம் அந்த கடைசி நிமிடங்களை. விட்றா அடுத்த மேட்சுல பாத்துக்கலாமுன்னு மனச தேத்திகிட்டவுங்க நாங்க.. என்ன பண்றது, பாலாஜி...:-)
//Blogger வானம்பாடிகள் said...
இது மட்டை விளையாட்ட இருந்த காலம் போச்சி பாலாசி. மட்கா மாதிரி இது ஒரு சூதாட்டம். அதுக்காகவே நடத்துறானுவளோன்னு தோணும். அ.இ.ம.வி கழகமா மாறினாலும், கூடிய விரைவில், அ.இ.ம.கழகம், அ.இ.ப.வீ.கழகம், அ.இ.வி.கீ.கழகம்னு உடைஞ்சிடும்.//
சரிதான். இன்னொரு கிளைகழகம் உருவாகாம இருந்தா சரிதான். நன்றி அய்யா...
//Blogger T.V.Radhakrishnan said...
ஆண்டவனால் கூட முடியாதது இருக்கிறது எனத் தெரிகிறது//
ஆமாண்ணே....நன்றி
//Blogger கதிர் - ஈரோடு said...
அ.இ.ம.சூ. கழகமாக மாறி ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப நாளச்சுங்கோஓஓஓஓஓஓ சாமி
டிஸ்கி: சூ-சூதாட்டம்//
அப்படியா.....நன்றி அய்யா வருகைக்கு...
//காமராஜ் said...
வரிக்கு வரி சிரிப்பும் கோபமுமாக
விளாசித்தள்ளுகிறது இந்த பதிவு. நெடுநெரம் சிரித்தேன்.//
நன்றி தோழரே...வருகைக்கும் கருத்திற்கும்...
//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
பாலாசி......இந்த விளையாட்டின் மீது எனக்கு அதிக ஆர்வம் இல்லை....எனவே இதைப் பற்றி அதிகம் எழுத வில்லை....
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை....//
நன்றி அன்பரே வருகைக்கு கருத்திற்கும்...
//Blogger D.R.Ashok said...
க்ரக்ட்டு பாலாசி :(//
நன்றி அசோக் அய்யா....
//Blogger கலகலப்ரியா said...
mattai vilayaattaa..:-ss... gneh..!///
நன்றிக்கா.....
//புலவன் புலிகேசி said...
அட கட்சி பேரு நல்லா இருக்கே....உண்மைதான் நண்பா இந்தியாவைப் பொறுத்த வரை மட்டைப் பந்தும் ஒரு அரசியல் விளையாட்டுதான்.//
உண்மைதான் நண்பா...நன்றி வருகைக்கு...
//Blogger பிரபாகர் said...
வெறித்தனமாய் பார்த்து இன்று வெற்றி பெற்றால் மட்டும் வியப்பாய் இருக்கிறது பாலாசி.
பிரபாகர்.//
சரிதான்.... நன்றி அய்யா....
//Blogger ஊடகன் said...
"CRICKET" ஒரு வியாபாரம் என தெரியாமல் இன்னும் வளராத சின்ன பசங்க இருக்குற வரைக்கும் இதை தடுக்க முடியாது..............//
உண்மைதான்..... புரிந்துகொள்ளும் காலம் வரும்....நன்றி நண்பா...
//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
வணிகம் போல் ஆகிவிட்டது விளையாட்டு ........
இதைப் பார்த்தல் தான் இந்தியன் என்று சொல்கின்றனர்//
கொடுமை....என்ன சொல்வது அதைப்போன்றோரிடம்....
நன்றி நண்பா...
//மகேஷ் said...
இதனாலேயே இந்த விளையாட்டு வெறுத்துப் போகிறது. (விளையாடிப் பழக்கமில்லை என்பது வேறு விஷயம். )//
அப்படியா...வாழ்த்துக்கள். நன்றி மகேஷ்....
//Blogger SanjaiGandhi™ said...
எவ்வளவு அழகான தமிழ் நடை.. ஆங்கிலம் இல்லாமல்.. வாழ்த்துக்கள் தலைவா..//
நன்றி தலைவா....மிக்க நன்றி...
//Blogger தியாவின் பேனா said...
உங்கள் எழுத்து நடை பிடிச்சிருக்கு//
நன்றி தியா...
//Blogger seemangani said...
அழகான தமிழில் அடிசிருகிங்க நெத்தியடி....அருமையான பதிவு...இந்த கிரிக்கெட்டை நான் மறந்து ரெம்ப நாள் ஆச்சு நண்பா.....உங்கள் தமிழ் அழகாய் இருக்கு//
மிக்க நன்றி நண்பா...வருகைக்கும் கருத்திற்கும்...
//அன்புடன் மலிக்கா said...
இதுக்குத்தான் நாங்கலெல்லாம் இதபார்பதே இல்லை..[அச்சோ]//
நன்றி...
// தோழரே உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html//
மிக்க நன்றி பெற்றுக்கொண்டேன்...
//Blogger பிரியமுடன்...வசந்த் said...
கரெக்ட்டுப்பா...
நல்ல நடையில் எழுத்து.... வாழ்த்துக்கள் பாலாஜி..//
நன்றி நண்பா...
//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
நானும் இன்னும் சில பதிவர்களும் சேர்ந்துதான் பார்த்தோம் அந்த கடைசி நிமிடங்களை. விட்றா அடுத்த மேட்சுல பாத்துக்கலாமுன்னு மனச தேத்திகிட்டவுங்க நாங்க.. என்ன பண்றது, பாலாஜி...:-)//
சரிதான். நீங்களும் பாத்தீங்களா....நன்றி நண்பா...
//வருங்காலத்தில் இதுவும் கொடியுடன் கூடிய ஒரு அ.இ.ம.வி.கழகமாக மாறலாம்.
பாலாசி,
பாவம். அவங்க யோசிக்கலேன்னாலும் நீங்க சொல்லிக்குடுப்பீங்க போல!
enna anna.. sema sooda ezhuthi irukeenga...
cricket eppavume enoda favorite game... :) :)
cricket, arasiyal apram cinema.. ithu moonathayum namma naatu makkal vazkaila irundhu eduthu paarunga... oru periya vetridam uruvaayidum :)
ஆர்வம் குறைந்து விட்டாலும் நீங்கள் சொன்னது போல இடைஇடையே பார்க்கத்தான் செய்கிறேன்.நமது நேர விரயம்தான் iplஐ பணக்கார விளையாட்டாக மாற்றியிருக்கிறது.
மொழி நடை சிறப்பாக உள்ளது.
அன்னைக்கு மட்டைக்கும்
பந்துக்கும் இருந்த பந்தம்
இன்று குட்டைய குழப்பி
அரசியல் சாக்கடை வரை..
பந்து உருளத்தான் செய்யும்
விளையாட்டு மட்டைய போடும்வரை..
//Blogger சத்ரியன் said...
பாலாசி,
பாவம். அவங்க யோசிக்கலேன்னாலும் நீங்க சொல்லிக்குடுப்பீங்க போல!//
ச்சுசு....சொல்லிடாதிங்க....நன்றி நண்பரே...
//Blogger kanagu said...
enna anna.. sema sooda ezhuthi irukeenga...
cricket eppavume enoda favorite game... :) :) cricket, arasiyal apram cinema.. ithu moonathayum namma naatu makkal vazkaila irundhu eduthu paarunga... oru periya vetridam uruvaayidum :)//
ம்ம்ம்...நல்ல அடிச்சி ஆடுங்க....நன்றி
//Blogger velji said...
ஆர்வம் குறைந்து விட்டாலும் நீங்கள் சொன்னது போல இடைஇடையே பார்க்கத்தான் செய்கிறேன்.நமது நேர விரயம்தான் iplஐ பணக்கார விளையாட்டாக மாற்றியிருக்கிறது.
மொழி நடை சிறப்பாக உள்ளது.//
நன்றி வேல்ஜி அண்ணா....
//Blogger சந்தான சங்கர் said...
அன்னைக்கு மட்டைக்கும்
பந்துக்கும் இருந்த பந்தம்
இன்று குட்டைய குழப்பி
அரசியல் சாக்கடை வரை..
பந்து உருளத்தான் செய்யும்
விளையாட்டு மட்டைய போடும்வரை..//
நன்றி நண்பா...உண்மைதான்....
அது என்னமோ கிரிக்கெட்னாலே எல்லார்க்கும் ஒரு இது தான்
//" உழவன் " " Uzhavan " said...
அது என்னமோ கிரிக்கெட்னாலே எல்லார்க்கும் ஒரு இது தான்//
சரிதான்...நன்றி அன்பரே வருகைக்கு....
Post a Comment