இன்றைய நாட்களில் செய்தித்தாள்களில் அறியப்படும் செய்திகளைவிட அதிகமாக பாமர மக்களையும் சென்றடைவது தொலைக்காட்சிகளில் வர்ணிக்கப்படும் (???!!!) செய்திகள் தான் என்பதில் மாற்று கருத்தேதும் இருக்க வாய்ப்பில்லை.
ஊரடங்கி, ஓய்வெடுக்கும் நேரமுன்னே கிளர்ந்தெழும் பேய்களைப்போல் மாலை ஏழுமணித்துளியில் ஆரம்பித்து ஒவ்வொரு அலைவரிசையாக என் வீட்டுக்காரனும் கச்சேரிக்கு செல்கிறான் என்பதுபோல் தொகுத்தளிக்கப்படும் செய்திகள் நமக்கு கற்றுக்கொடுத்த தமிழ் வார்த்தைகள்...வணஃக்கம் இன்ட்றைய முக்ஃகிய செய்ஃதிகள்.
நான்தான் அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் எனும் பதமாக தனது அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்ப்ப்பு...இவைகளின் காரணமாக செய்திகளின் உட்கருத்துக்களை திரித்து கூறும் அரசியல் சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகள்தான் இதில் முன்நிற்கின்றன. ஒரு சாரார்தான் இப்படியென்றால் இன்னொரு தரப்பினர் நானும் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரன்தான் எனும்விதமாக அதே செய்தியை அவர்களுக்கு சாதகமாக மணலை கயிறாக்கி நமது காதிலேயே சுற்றுகின்றனர்.
ஒரு செய்தியில்... பேரிடர் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று அறிவிக்கப்பட்டால் மற்றொன்றில் தமிழக அரசின் மெத்தனப்போக்கினால் மீட்புப்பணி மிக தாமதமாக நடந்து வருகிறது என்று வரும். ஆகமொத்தம் எந்த தனியார் தொலைக்காட்சி செய்தியும் உண்மையை சொல்வதில்லை.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம்.
தன் வீட்டைச்சுற்றியுள்ள சாக்கடை நாற்றத்தையே சரிசெய்ய இயலாத நிலையில் அடுத்தவர் வீட்டு அடுப்பங்கரையை அவதூறாய்க் காட்டும் இதைப்போன்ற சுயநல சுண்ணாம்புகளை வெற்றிலைக்கு தடவினால் வெந்துபோவது நமது நாக்கேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?.
தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...
44 comments:
//தன் வீட்டைச்சுற்றியுள்ள சாக்கடை நாற்றத்தையே சரிசெய்ய இயலாத நிலையில் அடுத்தவர் வீட்டு
அடுப்பங்கரையை அவதூறாய்க் காட்டும் இதைப்போன்ற சுயநல சுண்ணாம்புகளை வெற்றிலைக்கு தடவினால்
வெந்துபோவது நமது நாக்கேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?.//
நச்!பாலாஜி!!
//தன் வீட்டைச்சுற்றியுள்ள சாக்கடை நாற்றத்தையே சரிசெய்ய இயலாத நிலையில் அடுத்தவர் வீட்டு அடுப்பங்கரையை அவதூறாய்க் காட்டும் இதைப்போன்ற சுயநல சுண்ணாம்புகளை //
அப்படிப் போடுங்க..! அசத்தல் வரிகள் (அநேகமான மனிதரின் நிலை இதுதான்..)
அருமை பாலாஜி..தமிழ் கொலை செய்யும் இது போன்ற தொலைக்காட்சிகள் தமிழ் பற்று கொண்ட தமிழருடயது...சாக்கடை அரசியல்வாதிகள் தொலைகாட்சி நடத்தினால் இதுதான் கதி..
நியாயமான கோபத்தைக் காட்ட வார்த்தைகளை கட்டமைத்த விதம் அழகு
சுண்ணாம்பு நல்ல நீலம் கலக்கி, தண்ணியுடன் கலந்து நாடெங்கும் பூசினாலும் நாடு வெள்ளையாகாது. கருப்பு மையைக்காயில் வாங்கி, கருப்பு மையால் நாமே சுண்ணாம்புகளுக்கு வாக்கிடும்வரை.
அந்த ஜோக் தெரியுமா பாலாஜி,
சித்திரகுப்தனின் முன்னிருக்கும் மானிட்டரில் ஒரு சிகப்பு விலக்கெரிந்தால்
பூலோகில் ஒருத்தர் ப்ய் சொல்லுகிறார் என்று கணக்காம்.
சாயங்காலம் ஏழரை மணிக்கு மானிட்டர் மொத்தமாக எரிந்ததாம்.
எதுக்கு ?
அப்போது பூல்லொகத்தில் தொலைக்காட்சி செய்திகளாம் .
செய்திய எப்படி நம்ப கூடாதோ, சினிமா விளம்பரத்தையும் நம்பக்கூடாது தானே. அப்புறம் ஏன் தியேட்டருக்கு போறது? தொலைக்காட்சி என்பது கட்சியின் ஊடகமா போச்சே பாலாசி. இதில செய்தி எங்க வரும்? அருமையாய்ச் சொன்ன ஆதங்கம். கீப் இட் அப்.
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாலாஜி.பிடித்திருந்தது.
பாலாசி,
சுருங்க சொன்னால் ஊடக விபச்சாரம். கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்கு மிக நல்லது...
பிரபாகர்.
நச்!
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம்.//
உண்மைத்தான்...ஊடகத்தில் இதைவிட வேறு அசிங்கம் வரபோவதில்லை!
காசுக்காக எதையும் செய்வார்கள்.
ஊடகத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என நானும் நினைத்திருந்தேன்.
உங்களது பார்வைதான் எனது பார்வையும்...
வாழ்த்துக்கள் தோழரே...
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம்.//
உண்மைத்தான்...ஊடகத்தில் இதைவிட வேறு அசிங்கம் வரபோவதில்லை!
காசுக்காக எதையும் செய்வார்கள்.
நல்லா இருக்கு
உண்மை உண்மை
உண்மையான அக்கரையுடன் எழுதியிருக்கீங்க பாலாஜி!!
பாலாஜி,ஊடகங்களெல்லாம் இப்போ வியாபாரப் போட்டியாகிவிட்ட நிலைதானே !அழகாய்த் திட்டி முடிச்சிருக்கீங்க.
என்ன சொல்ல வர்றீங்க ஸார்?!
-பருப்பு ஆசிரியர்
நாளுக்கு நாள் தங்கள் எழுத்து மெருகேறி வருகிறது!
தமிழ்நாட்டு செய்தி ஊடகங்கள் பற்றிப் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நன்று!
-கேயார்
செய்திதாள்களிலும் இதே கதைதான்.. நாமதான் எல்லா செய்தியையும் படிச்சு ஒரு மாதிரி தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.. :-(
நச்சுன்னு கேட்டீங்க...
நமக்கு புரியுது...
ஆனா...
//இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம்//
உண்மையா எழுதியிருக்கீங்க பாலாஜி!!வாழ்த்துக்கள்
இவங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம்./////////////////////////
இதுலேருந்தே தெரிஞ்சுக்கலாம் எவ்வளோ டுபாக்கூர் படம் அதுன்னு...நல்ல படத்துக்கு ஓரளவு விளம்பரம் போதும்...பில்ட்-அப் விட்டாலே தெரிஞ்சுக்கணும் அது ப்லேட் நம்பர்-1 அப்டின்னு...நல்ல இடுகை பாலா
சாமன்யன் மண்டையப் பிச்சுக்க வேண்டியதுதான்!
அன்று சம்பவத்தை
உணர்ந்து செய்தியிட்டார்கள்
இன்று சம்பவம் பண்ணி
அதை சம்பந்தப்படுத்தி
நம்மையும் படுத்துகிறார்கள்..
நன்றி பாலாசி..
//இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம்.
//
சன் குழுமம் பற்றி நெத்தி அடி
//நான்தான் அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரன் எனும் பதமாக தனது அச்சம், மடம், நாணம், பயிர்ப்ப்ப்ப்பு...இவைகளின் காரணமாக செய்திகளின் உட்கருத்துக்களை திரித்து கூறும் அரசியல் சார்ந்த தொலைக்காட்சி அலைவரிசைகள்தான் இதில் முன்நிற்கின்றன. ஒரு சாரார்தான் இப்படியென்றால் இன்னொரு தரப்பினர் நானும் அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரன்தான் எனும்விதமாக அதே செய்தியை அவர்களுக்கு சாதகமாக மணலை கயிறாக்கி நமது காதிலேயே சுற்றுகின்றனர்//
உண்மை
என்ன கொடுமை என்றால் ...................ஒரு ஆங்கில தொலைக்காட்சி பிரபகரன் செத்ததை ஒரு கொடூரன் செத்தது போல காண்பித்தது...இது ஒரு ஊடக விபச்சாரம் இல்லையா .....
குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும் போது இவர்கள் எங்கு இருந்தார்கள் ....
//இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக தலைப்பு செய்தியில் அவ்வப்போது சில கொடுமைகள் அரங்கேறும். அதாவது தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக.//
கருணாநிதி குடும்பத்தை ஒழித்தால் எல்லாம் தீற்ந்துவிடும்........
ஊடகத்தில் இருக்கும் இந்த அலங்கொலங்களை ஒழிப்பதே, இந்த ஊடகனின் தலையாய கடமை.......
என்ன செயவது காலை முதல் மாலைவரை தொலைக்காட்சியே கதியாக கிடக்கும் மக்கள் மாறினால்தான் உண்டு!
//பா.ராஜாராம் said...
நச்!பாலாஜி!!//
நன்றி ராசாராம்...
//Blogger கலகலப்ரியா said...
அப்படிப் போடுங்க..! அசத்தல் வரிகள் (அநேகமான மனிதரின் நிலை இதுதான்..)//
சரிதான் ப்ரியா...நன்றி
//Blogger புலவன் புலிகேசி said...
அருமை பாலாஜி..தமிழ் கொலை செய்யும் இது போன்ற தொலைக்காட்சிகள் தமிழ் பற்று கொண்ட தமிழருடயது...சாக்கடை அரசியல்வாதிகள் தொலைகாட்சி நடத்தினால் இதுதான் கதி..//
நன்றி நண்பா கருத்திடலுக்கு..
//Blogger ஈரோடு கதிர் said...
நியாயமான கோபத்தைக் காட்ட வார்த்தைகளை கட்டமைத்த விதம் அழகு//
மிக்க நன்றி கதிரய்யா....
//Sadagopal Muralidharan said...
சுண்ணாம்பு நல்ல நீலம் கலக்கி, தண்ணியுடன் கலந்து நாடெங்கும் பூசினாலும் நாடு வெள்ளையாகாது. கருப்பு மையைக்காயில் வாங்கி, கருப்பு மையால் நாமே சுண்ணாம்புகளுக்கு வாக்கிடும்வரை.//
உண்மைதான்...நன்றி சடகோபன் அய்யா வருகைக்கும் கருத்திடலுக்கும்...
//Blogger காமராஜ் said...
அந்த ஜோக் தெரியுமா பாலாஜி,
சித்திரகுப்தனின் முன்னிருக்கும் மானிட்டரில் ஒரு சிகப்பு விலக்கெரிந்தால்
பூலோகில் ஒருத்தர் ப்ய் சொல்லுகிறார் என்று கணக்காம்.
சாயங்காலம் ஏழரை மணிக்கு மானிட்டர் மொத்தமாக எரிந்ததாம்.
எதுக்கு ?
அப்போது பூல்லொகத்தில் தொலைக்காட்சி செய்திகளாம் .//
ஹா...ஹா.....அவ்வளவும் பொய்கள்.....
நன்றி தோழரே வருகைக்கு....
//Blogger வானம்பாடிகள் said...
செய்திய எப்படி நம்ப கூடாதோ, சினிமா விளம்பரத்தையும் நம்பக்கூடாது தானே. அப்புறம் ஏன் தியேட்டருக்கு போறது? தொலைக்காட்சி என்பது கட்சியின் ஊடகமா போச்சே பாலாசி. இதில செய்தி எங்க வரும்? அருமையாய்ச் சொன்ன ஆதங்கம். கீப் இட் அப்.//
நன்றி வானம்பாடிகள் அய்யா....
//Blogger நர்சிம் said...
மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள் பாலாஜி.பிடித்திருந்தது.//
மிக்க நன்றி நர்சிம் அண்ணா....
//பிரபாகர் said...
பாலாசி,
சுருங்க சொன்னால் ஊடக விபச்சாரம். கண்டுகொள்ளாமல் இருப்பது நமக்கு மிக நல்லது...
பிரபாகர்.//
சரிதான் பிரபாகர் அண்ணா...நன்றி கருத்திடலுக்கு....
//Blogger T.V.Radhakrishnan said...
நச்!//
நன்றி ராதா அவர்களே...
//Blogger சி. கருணாகரசு said...
உண்மைத்தான்...ஊடகத்தில் இதைவிட வேறு அசிங்கம் வரபோவதில்லை!
காசுக்காக எதையும் செய்வார்கள்.//
நன்றி சி.க...அண்ணா....வருகைக்கும் கருத்திற்கும்...
//Blogger அகல்விளக்கு said...
ஊடகத்தை விமர்சனம் செய்ய வேண்டும் என நானும் நினைத்திருந்தேன்.
உங்களது பார்வைதான் எனது பார்வையும்...
வாழ்த்துக்கள் தோழரே...//
நன்றி நண்பரே....
//கவிக்கிழவன் said...
நல்லா இருக்கு
உண்மை உண்மை//
நன்றி நண்பா...
//Blogger தேவன் மாயம் said...
உண்மையான அக்கரையுடன் எழுதியிருக்கீங்க பாலாஜி!!//
நன்றி மருத்துவரய்யா....
//Blogger ஹேமா said...
பாலாஜி,ஊடகங்களெல்லாம் இப்போ வியாபாரப் போட்டியாகிவிட்ட நிலைதானே !அழகாய்த் திட்டி முடிச்சிருக்கீங்க.//
நன்றி ஹேமா....
//Blogger (Mis)Chief Editor said...
என்ன சொல்ல வர்றீங்க ஸார்?!
-பருப்பு ஆசிரியர்//
ஆசிரியருக்கு தெரியாததையா இந்த அடியேன் சொல்லிவிட்டேன். நன்றி வருகைக்கு...
//இன்றைய கவிதை said...
நாளுக்கு நாள் தங்கள் எழுத்து மெருகேறி வருகிறது!
தமிழ்நாட்டு செய்தி ஊடகங்கள் பற்றிப் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நன்று!
-கேயார்//
நன்றி கேயார் அவர்களே...கருத்திற்கு...
//Blogger பட்டிக்காட்டான்.. said...
செய்திதாள்களிலும் இதே கதைதான்.. நாமதான் எல்லா செய்தியையும் படிச்சு ஒரு மாதிரி தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு.. :-(//
சரிதான்...நன்றி பட்டிக்காட்டான்....
//Blogger பிரியமுடன்...வசந்த் said...
நச்சுன்னு கேட்டீங்க...
நமக்கு புரியுது...
ஆனா...//
புரியவேண்டியவங்களுக்கு புரியனுமே.....நன்றி நண்பா...
//Blogger seemangani said...
உண்மையா எழுதியிருக்கீங்க பாலாஜி!!வாழ்த்துக்கள்//
நன்றி சீமாங்கனி நண்பா...
//உங்கள் தோழி கிருத்திகா said...
இதுலேருந்தே தெரிஞ்சுக்கலாம் எவ்வளோ டுபாக்கூர் படம் அதுன்னு...நல்ல படத்துக்கு ஓரளவு விளம்பரம் போதும்...பில்ட்-அப் விட்டாலே தெரிஞ்சுக்கணும் அது ப்லேட் நம்பர்-1 அப்டின்னு...நல்ல இடுகை பாலா//
நன்றி தோழியே....
//Blogger பழமைபேசி said...
சாமன்யன் மண்டையப் பிச்சுக்க வேண்டியதுதான்!//
நன்றி பழமை அய்யா...
//Blogger சந்தான சங்கர் said...
அன்று சம்பவத்தை
உணர்ந்து செய்தியிட்டார்கள்
இன்று சம்பவம் பண்ணி
அதை சம்பந்தப்படுத்தி
நம்மையும் படுத்துகிறார்கள்..///
உண்மைதான் நண்பரே....
//Blogger வெண்ணிற இரவுகள்....! said...
சன் குழுமம் பற்றி நெத்தி அடி//
உண்மை
என்ன கொடுமை என்றால் ...................ஒரு ஆங்கில தொலைக்காட்சி பிரபகரன் செத்ததை ஒரு கொடூரன் செத்தது போல காண்பித்தது...இது ஒரு ஊடக விபச்சாரம் இல்லையா .....
குழந்தைகள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்படும் போது இவர்கள் எங்கு இருந்தார்கள் ....//
கொடுமை நண்பா.....நன்றி வருகைக்கும் கருத்திற்கும்....
// @ஊடகன்@ said...
கருணாநிதி குடும்பத்தை ஒழித்தால் எல்லாம் தீற்ந்துவிடும்........
ஊடகத்தில் இருக்கும் இந்த அலங்கொலங்களை ஒழிப்பதே, இந்த ஊடகனின் தலையாய கடமை.......//
அப்படியா....நல்லது நண்பா....உங்களது சேவையும் தொடரட்டும்....நன்றி வருகைக்கு...
//Blogger தமிழ் நாடன் said...
என்ன செயவது காலை முதல் மாலைவரை தொலைக்காட்சியே கதியாக கிடக்கும் மக்கள் மாறினால்தான் உண்டு!//
உண்மை.....நன்றி தமிழ் நாடன்....
பாலாசி.. நீங்க சொல்றது மிகவும் சரி.. ஆனால் எல்லாம் டிஆர்பி உலகம்.. சினிமா விளம்பரக்கூத்தைக் குறிப்பிட்டதை ரசித்தேன்.
இந்த சன் டிவி அடிக்கும் கூத்து இருக்கிறதே தாங்கமுடியவில்லை. ஒரு படம் வந்கிவிட்டார்களானால் அதை திருப்பி திருப்பி போட்டு அய்யோ தாங்க முடியலை.
வாழ்த்துக்கள்
விஜய்
// தங்களின் படங்களுக்கு திரைப்படச்சாலையில் கூட்டம் அலைமோதுவதாக. கொடுமை கொடுமை என்று கோயிலுக்குப் போனால் அங்கொரு கொடுமை அவிழ்த்துபோட்டு ஆடுகின்ற கதையாக திரையரங்கம் சென்றால்தான் தெரியும் இவர்களின் திரைப்படம் திரையிடப்படும்போது எத்தனை ஈக்கள் மொய்க்கின்றனவென்று. இவையெல்லாம் ‘முக்கிய’ செய்திகளாம். //
அவுங்களுக்கு இதன் தலைவா முக்கிய செய்தி மத்ததெல்லாம் முக்காத செய்தி தான் ...
இன்றைய சூழலில் தேவையான நல்லதொரு விமர்சனப்பதிவு.
என்ன சொல்லி என்ன பண்ண டிங்குடாங்கு டிங்குடாங்குடோய்..
மத்தவங்க காதில் ஏறாது டிகுங்குடாங்கு டிங்குடாங்குடோய்..
பாட்டு படிக்கனும்போலிருந்தது பாலாஜி..
அருமையான பதிவு..
என்னைவிட நீங்க வேலைல முசுவு போல இருக்கு? புது இடுகை இருக்கும்னு வந்தேன்.
பிணத்தின்னி கழுகுகள் நம் ஊடகங்கள். இந்தியா மாதிரியான வேற்றுமையில் ஒற்றுமை தேசத்தில் ஊடகங்களை கட்டுபடுத்தவில்லை எனில் மிகப் பெரிய இடையூருக்கு ஆளாக வேண்டி இருக்கும் அனைவரும்.
அருமையான கருத்து! அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்..!
//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பாலாசி.. நீங்க சொல்றது மிகவும் சரி.. ஆனால் எல்லாம் டிஆர்பி உலகம்.. சினிமா விளம்பரக்கூத்தைக் குறிப்பிட்டதை ரசித்தேன்.//
நன்றி ச. செந்தில்வேலன்....
//Blogger கவிதை(கள்) said...
இந்த சன் டிவி அடிக்கும் கூத்து இருக்கிறதே தாங்கமுடியவில்லை. ஒரு படம் வந்கிவிட்டார்களானால் அதை திருப்பி திருப்பி போட்டு அய்யோ தாங்க முடியலை.
வாழ்த்துக்கள்
விஜய்//
அதாங்க விஜய் எனக்கும் ஆதங்கமா இருக்கு...
//Blogger பேநா மூடி said...
அவுங்களுக்கு இதன் தலைவா முக்கிய செய்தி மத்ததெல்லாம் முக்காத செய்தி தான் ...//
நன்றி பேநா மூடி..
//Blogger ஆதிமூலகிருஷ்ணன் said...
இன்றைய சூழலில் தேவையான நல்லதொரு விமர்சனப்பதிவு.//
நன்றி ஆதியண்ணா...
//Blogger அன்புடன் மலிக்கா said...
என்ன சொல்லி என்ன பண்ண டிங்குடாங்கு டிங்குடாங்குடோய்..
மத்தவங்க காதில் ஏறாது டிகுங்குடாங்கு டிங்குடாங்குடோய்..
பாட்டு படிக்கனும்போலிருந்தது பாலாஜி.. அருமையான பதிவு..///
சரிதான் மலிக்கா...நன்றி...
//Blogger பழமைபேசி said...
என்னைவிட நீங்க வேலைல முசுவு போல இருக்கு? புது இடுகை இருக்கும்னு வந்தேன்.//
ஆமாம் தலைவரே..கொஞ்சம் கடுமையான பணிச்சுமை....நன்றி...
//Anonymous tamiluthayam said...
பிணத்தின்னி கழுகுகள் நம் ஊடகங்கள். இந்தியா மாதிரியான வேற்றுமையில் ஒற்றுமை தேசத்தில் ஊடகங்களை கட்டுபடுத்தவில்லை எனில் மிகப் பெரிய இடையூருக்கு ஆளாக வேண்டி இருக்கும் அனைவரும்.//
சரிதான்..நன்றி தங்களது கருத்திற்கு....
//Blogger திருப்பூர் மணி Tirupur mani said...
அருமையான கருத்து! அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்..!//
நன்றி மணி....
Post a Comment