க.பாலாசி: யாதுமற்ற....

Wednesday, May 26, 2010

யாதுமற்ற....

மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட அம்மாவின் முந்தாணி என் தலையிலும் அப்பாவின் துண்டென் மாரிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் அம்மாவிற்கும் அப்பாவிற்குமான தூக்கம். அப்பொழுதெல்லாம் அரைநாண்கொடி இடுப்பில் தங்கிக்கொள்ள பழகிவிட்டிருந்தது, அதன் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்க பள்ளிக்கூடத்து காக்கி அரைக்கால் சட்டையும்தான். ஆயினும் அவர்களின் கூட்டுக்குள் நான் குளிர்காய்ந்த இரவுகள் பெரிதாய் மதிக்கப்படாமலே இருந்திருக்கிறது. இருந்திருக்கவேண்டும்... அறியாப்பருவமாதலின்....

[ஒருவேளை எங்கப்பாவிற்கு எழுதத்தெரிந்திருந்தால் இப்படித்தான் ஆரம்பித்திருப்பார்...


மழையிலொழுகும் வீட்டிற்குள் கண்விழித்து மண்தரை நனையாமல் பாத்திரங்களைக்கொண்டு பாதுகாத்ததாய் நினைவிலில்லை. விடியலில் விழிப்பு வரும்போதெல்லாம் கவனித்திருக்கிறேன் அனிச்சையாய்கூட என்மகனின் தலை என்வலக்கை முட்டியிலும், இடக்கால் அவனம்மாவின் இடுப்பிலும் கிடைப்பதை. விடிந்த பிறகும் ஓரங்காத்த சுவர்களினூடே எஞ்சிக்கிடக்கும் என் மனைவிக்கான தூக்கம்..........]


கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல மழையில் விளையும் என் சில்வண்டுத்தனங்களை அவர்கள் ரசித்திருக்கலாம். ‘அப்பாடி இப்பயாச்சும் மானம் நல்லா பேயுதே’ என்று மச்சுவீட்டு மாமனும், ‘இந்தவாட்டியாவது மழைலேர்ந்து என்னோட பயிர காப்பாத்தும்மா தாயே’ என்று சின்னவண்டி முனுசாமியும், ‘அய்யோ அடிக்கிற காத்துல வாசல்ல உள்ள முருங்கமரம் வீட்ல சாஞ்சிடப்போவுது’ என்று உடையார் வீட்டு ஆச்சியும் புலம்பிக்கொண்டிருப்பது கரைந்து என்வீட்டு வாசல்வரையும் வந்திருக்கும். வழக்கம்போல அம்மா இருப்புச்சட்டியில் பச்சரிசி வறுக்க தாழ்வாரத்தில் கட்டிவைத்த சுப்பிகளை எடுத்துக்கொண்டிருப்பார். ‘பஞ்சாங்கத்துலதான் மழைன்னு போட்டிருக்கானே... எப்டிப்பெய்யாம போவும்’ என்று 222
ம் நம்பர் பீடிப்புகையில் வட்டம் விடாமல் ஊதிக்கொண்டே இயல்பாகச் சொல்லுவார் அப்பா.

மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...


பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....





49 comments:

ஜெய்லானி said...

//அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக் கொண்டிருப்பேன். //

பழைய நினைவுகள் மீண்டும் வருது....

ரோகிணிசிவா said...

//பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முருக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....//
பீல் பண்ண வைக்கிற பாலாசி ,,,,,எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முருக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல்,பாவக்க வத்தல் இல்லாத மழை தான் இங்க

ராஜ நடராஜன் said...

எழுத்து கவிதை நடையை சொல்ல வார்த்தை இல்லை!

அகல்விளக்கு said...

எழுத்தைப் பாராட்ட வார்த்தைகளில்லை அண்ணா...

மழை என்றுமே இனிமைதான்..

(ரூம் சன்னல்ல இதெல்லாம் கூட வருதா....)

:-)

அன்புடன் நான் said...

அந்த நினைவு பிடிமானத்தை வியக்கிறேன்.

யாதுமற்ற.... நெகிழ்வான நெருடல்.

க ரா said...

மழை பெய்யும் பொழுது மழை தண்ணி பிடிக்கும் சாக்கில் மழையில் நனைந்து விளையாடி கூடி கும்மாளம் போட்டு மகிழ்ந்திருந்த நினைவுகளை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறது இந்த பதிவு. நன்றி பாலாசி.

vasu balaji said...

ரை ரை..ப்ப்போஓஓ போஓஒ போய்க்கேயிரு. எங்கயோ ஒரு உன்னதத்த நோக்கிப் போறா!.

dheva said...

பாலாசி......

என் எழுத்துத் தோழனே....! ஆமாம் எண்ணங்களை ஒத்த தோழன் எழுத்தில் அதை கொண்டு வருவதால் அவனை எப்படி விழிப்பது. இன்று என் இதயம் நிறைத்திருக்கிறாய் நண்பா...உனக்கு வேண்டுமானால் இது மற்றுமொரு பதிவாக இருக்கலாம்....என்னைப் போன்று தாய் நாடு விட்டு வெளி நாட்டில் வாழும் இந்திய பிரஜைகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.

எமக்குள் படிமனாகி பாடமாய் போயிருக்கும் அந்தக்கால நினைவுகளை உன்னுடைய "யாதுமற்ற " இழுத்து பிடித்து உயிரூட்டியிருப்பதால் மட்டும் எனக்கு இந்த மகிழ்ச்சியில்லை, இதை எழுதிய நீ எனது நட்பானதால் கூட மகிழ்ச்சியில்லை...ஆனால்

"மகனாய் நான் அம்மாவின் அருகில், அடுக்கலையில் வறுத்த பொரியரிசியை கொரித்துக்கொண்டிருப்பேன். வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. மிதிவண்டிக்கான கனவு மிகைந்திருந்தமையால் கப்பல்விடும் கனவு அதில் மிதிபட்டிருக்கலாம். வாசலொட்டி குதூகலமாய் நீச்சல்பயிலும் மண்புழுக்களும், மிகைநீர் பெற்றதால் சுமக்கமுடியாமல் மிகமெதுவாய் ஊர்ந்திடும் நத்தைகளும், மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான குளிர்ச்சிகள் ஏராளம். மழைக்கு மகுடியூதும் தவளைகூட்டங்களின் இரைச்சல்கள் சிலருக்கு எரிச்சலாகவோ அல்லது வரமாகவோ இருக்கக்கூடும். இன்னும் எத்தனையோ...

"

பொருளீட்டும் பொருட்டு பாலையில் வாசம் கொண்டிருக்கும் எனைப்போன்றவர்கள் எப்போது வேண்டுமானலும் உன்னுடைய இந்த பதிவு எடுத்துப் படித்து மண்ணின் வாசத்தையும் எம் மக்களின் வாழ்கையும் அசை போட்டு ஆனந்தப் பட செய்தாயே...அது தான் மகிழ்ச்சி....!



சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை பாலாசி.....இது ஒரு மைல்கல்!

பத்மா said...

கை குடுங்க பாலாசி ..என்னமாதிரி எழுதிருக்கீங்க ! அட்டகாசம் ! இதை உங்க அம்மா அப்பாவிற்கு வாசிச்சு காமிக்கணும். very proud of u !
எவ்ளோ இயல்பா அழகா தமிழ் வந்து விளையாட்றா உங்க கிட்ட ! கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு :)
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் பாலாசி

Ahamed irshad said...

//வேறெந்த இயல்பையும் மீறி பள்ளிக்கூட குறிப்பேட்டில் கத்திக்கப்பல் செய்து தாழ்வாரத்தில் ஒழுகியோடும் மழைநீர்களுக்கு தாரைவார்த்ததாக என் வரலாறு பதியப்படவில்லை. ///

வார்த்தைகளை வட்டார மொழி நடையிலேயே கோர்த்து சொல்றது நல்லாயிருக்கு.. அருமை பாலாசி...

ராமலக்ஷ்மி said...

நனைந்து விட்டோம் நாங்களும் நினைவுகளில்:)! அருமை பாலாசி.

Unknown said...

அருமைங்க பாலாசி..
நனைய வைத்து விட்டீர்கள்..

Unknown said...

பாலாசி அருமையா இருக்கு..

ஆனா பாருங்க உங்களால எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முருக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க முடியுது. எங்களால அது கூட முடியலை.

அடுத்த தடவை என் ஜன்னல் வழியா மழையைப் பாத்தா கண்டிப்பா எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடை முறுக்கும், உருளைக்கிழங்கு வருவலும் நினைவுக்கு வரும்.

ரிஷபன் said...

மழையில் பொந்துகளையிழந்து அலைந்து திரியும் நெருப்பெறும்பு கூட்டங்களும், கூட்டுக்குள் விழும் நீர்ச்சிதறல்களுக்கு மெளிதாய் கீய்ச்சலிடும் சிட்டுக்குருவிகளின் கூச்சல்களும், அடுத்த வீட்டு லலி அக்காவின் ஆட்டுக்குட்டிகள் தூற்றிவிட்டுப்போன நனைந்த புலுக்கைகள் வாசம் என அந்நேரத்து அவசரத்துக்கான ...

பாலாசி .. கை கொடுங்க தோழரே..

தாராபுரத்தான் said...

ஒரே வார்த்தை..அ..

சத்ரியன் said...

//சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்..//

முறுக்கையும், உருளைக்கிழங்கு சிப்ஸையும் கொரித்துக்கொண்டே... பழைய நெனப்பையும் கொரிக்கிற.

சூப்பர் அப்பு. (இதையே சேத்து எழுதினா நல்லாவே இல்ல.இப்ப பாரேன் , “சூப் பருப்பு”. )

r.v.saravanan said...

உங்கள் எழுத்து நடை என்னை கவர்ந்த ஒன்று அருமை பாலாசி தொடர்ந்து எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறோம்

Ashok D said...

//கூரைக்குள் பொழியும் மழைநீர்க்குட்டுகளை அலுமினிய ஏனங்கள் அசையாமல் நின்று வாங்கிக்கொள்வதைப்போல//

வாங்கிக்கொண்டேன் இந்த பதிவை பாலாசி

மனதிற்குள்ளிருந்து தெரித்து வரும் பதிவு.. அழகு :)

நேசமித்ரன். said...

//வானம்பாடிகள் said...
ரை ரை..ப்ப்போஓஓ போஓஒ போய்க்கேயிரு. எங்கயோ ஒரு உன்னதத்த நோக்கிப் போறா!.
//

Repeatu!!!

ஈரோடு கதிர் said...

கவிதை பாலாசி...

செ.சரவணக்குமார் said...

Excellent balasi..

க.பாலாசி said...

நன்றி ஜெய்லானி..
நன்றி ரோகிணி அக்கா (ம்ம்ம்)
நன்றி ராஜநடராஜன்
நன்றி அகல்விளக்கு ராசா
நன்றி சி.கருணாகரசு
நன்றி இராமசாமி கண்ணன்
நன்றி வானம்பாடிகள் அய்யா..
நன்றி தேவா...(நண்பனாகவே மகிழ்கிறேன்..மிக்க நன்றி)
நன்றி பத்மாக்கா... (வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி)
நன்றி இர்ஷாத்
நன்றி ராமலக்ஷ்மி
நன்றி திருஞானசம்பத்.மா.
நன்றி முகிலன் (வேணும்னா சொல்லுங்க பார்சல் பண்ணிடலாம்)
நன்றி ரிஷபன்
நன்றி தாராபுரத்தான் அய்யா
நன்றி சத்ரியன்... (சூப்.. பருப்பா??)
நன்றி ஆர்.வி.சரவணன்
நன்றி அசோக் அண்ணா
நன்றி நேசமித்ரன் அய்யா
நன்றி கதிர் அய்யா
நன்றி செ.சரவணக்குமார்..

கலகலப்ரியா said...

அருமை பாலாசி.. கவித்துவமா இருக்கு...

ஜோதிஜி said...

உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் பேறு பெற்றவன் என்பதே எனக்கு பெருமையாய் இருக்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

இதமான பதிவு பாலாசி.

இடுகைகள் குறைந்தாலும் தரமாக வருவது பாராட்டத்தக்கது.

சிநேகிதன் அக்பர் said...

நைஸ் பாலாசி.

சிநேகிதன் அக்பர் said...

சாரல் என் மீது அடித்து விட்டது.

ஹேமா said...

கவிச்சரமாய் நினவலைகள் சாரலாய் நாங்களும் நனைய.
நனைந்தேன் என் வீட்டு பழைய
மண் குசினி வரை பாலாஜி!

பழமைபேசி said...

சாமான்யனின் வலு என்பது இதுதான்!! படைப்பாளி என்பதை விட, அனுபவசாலி என்பதே பொருத்தமாக இருக்கும்!!

ஆரூரன் விசுவநாதன் said...

மிகவும் நன்றாக இருக்கின்றது பாலாசி...வாழ்த்துக்கள்

Chitra said...

பணியிடம்பொருட்டு யாதுமற்ற தனியறையில் பாதுகாப்பாக நாற்காலி போட்டமர்ந்து எஸ்.ஆர்.எம் இனிப்புக்கடையில் முறுக்கு ஒரு பொட்டலம், உருளைக்கிழங்கு வறுவல் ஒரு பொட்டலம் வாங்கி சுவைத்துக்கொண்டே மழையை ரசிக்க சன்னலைத்திறந்தால் மேற்சொன்னவைகளே சாரல்களாய்....


..... அருமை...... அருமையான காட்சிகளின் விளக்கம்..... அழகும் கூட..... :-)

அ.முத்து பிரகாஷ் said...

தோழர் ....
நல்ல மழையா...
தஞ்சைல வெய்யில் கொளுத்துது ...
எப்படியோ ...
உங்க எழுத்து மழையில் நனஞ்சதுல சந்தோசம் தோழர் பாலாசி ...

புலவன் புலிகேசி said...

பாலாசி என்ன ஒரு எழுத்து நடை...வியந்து போனேன். அற்புதமான அனுபவத்தை அழகான எழுத்துக்கள் கொண்டு முத்து போல் கோர்த்தெடுத்து எங்களுக்கு மாலையாய் அணிவித்து விட்டீர்கள். மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

பாலாசி!

ரொம்ப ரசித்துப் படித்தேன்.
//மேற்சொன்னவைகளே சாரல்களாய்....//
அடேயப்பா.... அழகு!
தங்கள் எழுத்துக்கு என் பாராட்டுக்கள்.

Mahi_Granny said...

இவ்வளவு அருமையான எழுத்தையா, அல்லது அதை அனுபவித்து எழுதியவரையா எதை பாராட்டுவது

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு பாலாஜி.. மனதைக் கிளரும் நினைவுகள்

அம்பிகா said...

மழை நினைவுகளில், மலரும் நினைவுகளில் நாங்களும் நனைந்தோம். அருமை.

உமா said...

அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

ஜெயசீலன் said...

என் நினைவுகளை கட்டவிழ்த்தமைக்கு நன்றி பாலாசி.... வாழ்க வளமுடன்...

Ahamed irshad said...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.. http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

க.பாலாசி said...

நன்றி கலகலப்பிரியா
நன்றி நசரேயன்
நன்றி ஜோதிஜி
நன்றி ச.செந்தில்வேலன்
நன்றி அக்பர்
நன்றி ஹேமா
நன்றி பழமை(ப்)பேசி அய்யா
நன்றி ஆரூரன்
நன்றி சித்ரா
நன்றி நியோ (கொஞ்சமாத்தாங்க பெய்தது.)
நன்றி புலவன் புலிகேசி
நன்றி மாதவாராஜ் அய்யா
நன்றி Mahi_Granny
நன்றி உழவன்
நன்றி அம்பிகா
நன்றி உமா
நன்றி ஜெயசீலன்
நன்றி இர்ஷாத்

(நான்கு நாட்கள் விடுப்பில் இருந்தேன்..தாமதத்திற்கு வருந்துகிறேன்.)

அண்ணாமலை..!! said...

இயல்பான ரசிக்கக்கூடிய எழுத்துநடை.
வாழ்த்துகள் பாலாசி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எங்கள் மனத்திலும் பல நினைவு சாரல்களை கிளப்பி விட்டு விட்டீர்கள் பாலாசி. நன்றி.... அருமையான பதிவு

குடந்தை அன்புமணி said...

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

அன்புடன் மலிக்கா said...

ஆகா பழைய நினைவுகளின் பொக்கிஷமெல்லாம் பொல பொலவென கொட்டுது மழைப்போல.

பாலாசி கலக்கல்..

க.பாலாசி said...

நன்றி அண்ணாமலை
நன்றி அப்பாவி தங்கமணி
நன்றி குடந்தை மணி
நன்றி மலிக்கா....

RASSI said...

நல்ல பதிவு,

கோமதி அரசு said...

அருமையான மலரும் நினைவுகள்.

உங்கள் நினைவு மழையில் நனைந்து
சிலிர்த்துப் போனோம்.

க.பாலாசி said...

நன்றி ரசிகரன்
நன்றி கோமதி அரசு

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO