க.பாலாசி: என் கண்ணீரையும் சேர்த்து...

Thursday, September 17, 2009

என் கண்ணீரையும் சேர்த்து...

ஏற்றம் இறக்கம்
இழுக்க முடியா சுமை...
கழுத்தில் வலி, காலில் நடுக்கம்
எல்லாம் பொறுத்து
கடக்க முயலும் நேரத்தில்...

சாட்டை எடுத்து
முதுகில் பாய்த்து
கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி
அதன்நடுவே
ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு...

அப்பப்பா...தாங்கமுடியா துயர்நடுவே
பாரத்தின் எல்லையடைந்து
திரும்பி வருகையில்...
கடன் சொல்லி வாங்கிய
தீவனமும் புண்ணாக்கும்
பாதி பசியணைக்க
...

வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...

கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து...


(தமிழ்மணம் மற்றும் தமிலிஸில் உங்களது வாக்கினை பதிவிடவும்)

38 comments:

தேவன் மாயம் said...

வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து.///

கண்ணீர் மழையில் குளிப்பாட்டிவிட்டீர்

தேவன் மாயம் said...

கவிதை யதார்த்தமாக உள்ளது..

ஹேமா said...

பாலாஜி,பசு பேசத்தொடங்கினால் இன்னும் என்னென்னவோ சொல்லும்.அதன் மனதில் அத்தனை வேதனைகள் இருக்கு.அடுத்த உயிர்களையும் உணர்ந்து கொள்வோம்.

vasu balaji said...

காக்க வெச்சி போட்ட கவிதை. கண்ணீர் வரவழைக்கும் கவிதை.

ஈரோடு கதிர் said...

//ஏற்றம் இறக்கம்
இழுக்க முடியா சுமை...
கழுத்தில் வலி, காலில் நடுக்கம்
எல்லாம் பொறுத்து
கடக்க முயலும் நேரத்தில்...//

படிக்க படிக்க கண்களெல்லாம் நடுங்குகிறது

//சாட்டை எடுத்து
முதுகில் பாய்த்து
கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி
அதன்நடுவே
ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு...//

முதுகு எறியும் உணர்வு

//வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து...//

நகைப்பும் / அழுகையும் ஒரு சேர

பாலாஜி...
கவிதை அருமை.... மிகுந்த வலி

நாடோடி இலக்கியன் said...

//ஏற்றம் இறக்கம்
இழுக்க முடியா சுமை...
கழுத்தில் வலி, காலில் நடுக்கம்
எல்லாம் பொறுத்து
கடக்க முயலும் நேரத்தில்...//

இந்த காட்சியை நகர்புறத்தில் அவ்வப்போது காணௌம்போது சாட்டைக் குச்சியால் வண்டி ஓட்டுபவனைக் குத்த வேண்டுமெனத் தோணும்.கலங்கடித்த வரிகள் பாலாஜி.

சுரேஷ்குமார் said...

//வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து...


//
ரசித்து யோசிக்க வைக்கும் வரிகள்.
கலக்கல் பாலாஜி

குடந்தை அன்புமணி said...

வண்டியோட்டிகள் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மாடுகளாக பிறக்க வேண்டும்...

சீலன் பக்கங்கள் said...

சொன்னது நடந்ததா பாலாஜி!!

ஆரூரன் விசுவநாதன் said...

வாய்பேசமுடியாதவற்றிக்காக குரல் கொடுத்தது அருமை.

வாய்மட்டும் பேசமுடிந்தால் இவை என்னவெல்லாம் சொல்லும் என்று இன்று காலை யோசித்தேன். பதில் உங்களிடமிருந்து.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

Jerry Eshananda said...

என் கண்ணீரையும் தான்.

இரும்புத்திரை said...

அருமையான கவிதை நண்பா

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

அதன் இடத்தில் நீங்கள் இருந்து எழுதியிருக்கிறீர்கள்.

இது உங்களால் மட்டுமே முடியும்.

Ashok D said...

அனைத்து வரிகளும் முக்கியமான வரிகளென்று இங்கே பதிவு செய்கிறேன்.

ஹேமா.. இது எருதுவை பற்றியது. :)

ஹேமா said...

மன்னிப்புடன் அஷோக்,

எருது என்று நினைத்தபடி பசுவை எழுதிவிட்டேன்.பொதுவாக சுதந்திரம் இல்லாமல் மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிருகங்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்தால் தங்கள் குறைகளை எவ்வளவோ சொல்லும்.அது மட்டுமே என் மனதில் நின்றது.

அஷோக்,மீண்டும் தவறுக்கு மன்னிப்போடு.

பிரபாகர் said...

பாலாஜி,

பாரம் இழுக்கும் மாடுகளை பார்க்கும்போதெல்லாம் மனதில் பாரமாவதுண்டு.

இன்று அவைகளின் பாரத்தை இறக்கிவைக்கிறேன் என்று, ஒரு பெரிய பாரத்தை மனதில் மூலையில் நிரந்தரமாய்...

நிறைய தாக்கம் நண்பரே...

என்ன்னை மிகக் கவர்ந்த கவிதைகளில் முதலிடம் இதற்குத்தான்.

பிரபாகர்.

Sadagopal Muralidharan said...

பாலாஜி,
எனக்கு என்னவோ இது ஒரு வண்டி மாட்டுக்காக எழுதிய கவிதையாகத்தெரியவில்லை. இது ஒரு நடுத்தர தமிழ்க்குடிமகனுக்காக வருந்தியது போல தெரிகிறது. ஆழமான உருக்கமான கவிதை. இத்தனை நாள் எங்கே வைத்திருந்தீர்கள் இப்படியான திறமையை.

க.பாலாசி said...

தேவன் மாயம் said...
//கண்ணீர் மழையில் குளிப்பாட்டிவிட்டீர்//
// கவிதை யதார்த்தமாக உள்ளது..//

நன்றி அன்பரே உங்களின் வருகைக்கு...

//Blogger ஹேமா said...
பாலாஜி,பசு பேசத்தொடங்கினால் இன்னும் என்னென்னவோ சொல்லும்.அதன் மனதில் அத்தனை வேதனைகள் இருக்கு.அடுத்த உயிர்களையும் உணர்ந்து கொள்வோம்.//

ஆமாம்...கண்டிப்பாக எல்லா ஜீவராசிகளின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவேண்டும்...

நன்றி தோழியே...

//Blogger வானம்பாடிகள் said...
காக்க வெச்சி போட்ட கவிதை.//

ஆமாம்...கொஞ்ச நாள் ஊரில் இல்லை...

//கண்ணீர் வரவழைக்கும் கவிதை.//

நன்றி தங்களின் கருத்திற்கு...

//Blogger கதிர் - ஈரோடு said...
படிக்க படிக்க கண்களெல்லாம் நடுங்குகிறது
முதுகு எறியும் உணர்வு
நகைப்பும் / அழுகையும் ஒரு சேர
பாலாஜி...
கவிதை அருமை.... மிகுந்த வலி//

மிக்க நன்றி அன்பரே தங்களின் வருகை மற்றும் கருத்திற்கு...

க.பாலாசி said...

//நாடோடி இலக்கியன் said...
இந்த காட்சியை நகர்புறத்தில் அவ்வப்போது காணௌம்போது சாட்டைக் குச்சியால் வண்டி ஓட்டுபவனைக் குத்த வேண்டுமெனத் தோணும்.கலங்கடித்த வரிகள் பாலாஜி.//

நன்றி அன்பரே...

//Blogger சுரேஷ்குமார் said...
ரசித்து யோசிக்க வைக்கும் வரிகள்.
கலக்கல் பாலாஜி//

நன்றி சுரேஷ் அவர்களே...தங்களின் வருகை மற்றம் கருத்திற்கு...

//Blogger குடந்தை அன்புமணி said...
வண்டியோட்டிகள் அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் மாடுகளாக பிறக்க வேண்டும்...//

ஆமாம் எனது ஆசையும் அதுதான்...

நன்றி அன்பரே...

//Blogger jeyaseelan.R said...
சொன்னது நடந்ததா பாலாஜி!!//

ஆமாம் தினமும் நடப்பது....

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
வாய்பேசமுடியாதவற்றிக்காக குரல் கொடுத்தது அருமை.
வாய்மட்டும் பேசமுடிந்தால் இவை என்னவெல்லாம் சொல்லும் என்று இன்று காலை யோசித்தேன். பதில் உங்களிடமிருந்து.
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்//

வாழ்த்துக்களுக்கும் தங்களின் வருகைக்கம் நன்றி...

க.பாலாசி said...

//Blogger ஜெரி ஈசானந்தா. said...
என் கண்ணீரையும் தான்.//

நன்றி நண்பரே...

//Blogger இரும்புத்திரை அரவிந்த் said...
அருமையான கவிதை நண்பா//

நன்றி நண்பா...

//Blogger கிறுக்கல் கிறுக்கன் said...
அதன் இடத்தில் நீங்கள் இருந்து எழுதியிருக்கிறீர்கள்.இது உங்களால் மட்டுமே முடியும்.//

ஜீவராசிகளையும் நேசிக்கும் எல்லா உணர்வுள்ள மனிதனாலும் முடியும் என்றே நினைக்கிறேன்...

நன்றி அன்பரே உங்களின் வருகைக்கு...

//Blogger D.R.Ashok said...
அனைத்து வரிகளும் முக்கியமான வரிகளென்று இங்கே பதிவு செய்கிறேன்.//

நன்றி தோழரே...

க.பாலாசி said...

//ஹேமா said...
மன்னிப்புடன் அஷோக்,
எருது என்று நினைத்தபடி பசுவை எழுதிவிட்டேன்.பொதுவாக சுதந்திரம் இல்லாமல் மனிதனின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிருகங்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்தால் தங்கள் குறைகளை எவ்வளவோ சொல்லும்.அது மட்டுமே என் மனதில் நின்றது. அஷோக்,மீண்டும் தவறுக்கு மன்னிப்போடு.//

இதில் மன்னிக்க எதுவும் இல்லை தோழியே...எருது, பசு இவையிரண்டின் நிலைமையும் ஒன்றுதான்...சுமையிழுப்பதில் மட்டுமே மாறுபடுகின்றன...

மீண்டும் நன்றி ஹேமா...

//Blogger பிரபாகர் said...
பாலாஜி,
பாரம் இழுக்கும் மாடுகளை பார்க்கும்போதெல்லாம் மனதில் பாரமாவதுண்டு.
இன்று அவைகளின் பாரத்தை இறக்கிவைக்கிறேன் என்று, ஒரு பெரிய பாரத்தை மனதில் மூலையில் நிரந்தரமாய்...
நிறைய தாக்கம் நண்பரே...
என்ன்னை மிகக் கவர்ந்த கவிதைகளில் முதலிடம் இதற்குத்தான்.
பிரபாகர்.//

மிக்க நன்றி தோழரே...சிலநாட்களுக்கு பிறகு தங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது...

//Blogger Sadagopal Muralidharan said...
பாலாஜி,
எனக்கு என்னவோ இது ஒரு வண்டி மாட்டுக்காக எழுதிய கவிதையாகத்தெரியவில்லை. இது ஒரு நடுத்தர தமிழ்க்குடிமகனுக்காக வருந்தியது போல தெரிகிறது. ஆழமான உருக்கமான கவிதை.//

வாங்க சடகோபன் சார்...
இது வண்டிமாட்டுக்காக எழுதியதுதான்...ஆயினும் அதில் வண்டியோட்டியின் வலியும் கொஞ்சம் இருக்கிறது...

//இத்தனை நாள் எங்கே வைத்திருந்தீர்கள் இப்படியான திறமையை.//

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்...பார்க்கும்போது மனதில் உண்டாகும் வலி...இவைகளின் தாக்கமே இந்த படைப்பு...

மிக்க நன்றி அன்பரே...

அன்புடன் நான் said...

கவிதை மிக அருமைங்க ... பாராட்டுக்கள்.

தமிழ் நாடன் said...

மாட்டுக்காக கண்ணீர் சிந்தவாவது நாம் இருக்கிறோம். அந்த மூன்று லட்சம் பேருக்கு யார் இருக்கிறார்கள்.

க.பாலாசி said...

//சி. கருணாகரசு said...
கவிதை மிக அருமைங்க ... பாராட்டுக்கள்.//

நன்றி தோழரே....

//Blogger தமிழ் நாடன் said...
மாட்டுக்காக கண்ணீர் சிந்தவாவது நாம் இருக்கிறோம். அந்த மூன்று லட்சம் பேருக்கு யார் இருக்கிறார்கள்.//

நன்றி உங்களின் வருகைக்கு....

"உழவன்" "Uzhavan" said...

நன்று

புலவன் புலிகேசி said...

கவிதை சிறப்பாக உள்ளது... மாட்டை போல் உழைக்கும் மனிதனுக்கும் இது பொருந்தும்..........

க.பாலாசி said...

//" உழவன் " " Uzhavan " said...
நன்று//

நன்றி அன்பரே...

//Blogger புலவன் புலிகேசி said...
கவிதை சிறப்பாக உள்ளது... மாட்டை போல் உழைக்கும் மனிதனுக்கும் இது பொருந்தும்..........//

உண்மைதான் அன்பரே...நன்றி உங்களின் முதல் வருகை மற்றும் கருத்திற்கு...

ப்ரியமுடன் வசந்த் said...

//சாட்டை எடுத்து
முதுகில் பாய்த்து
கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி
அதன்நடுவே
ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு...//

அளவுக்கு மீறிய வலிகளோடு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை அருமை....

Admin said...

///வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து.///


அருமையான வரிகள் நண்பரே

Admin said...

///வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து.///


அருமையான வரிகள் நண்பரே

Admin said...

///வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...
கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து.///


அருமையான வரிகள் நண்பரே

Radhakrishnan said...

யதார்த்தம் சொல்லும் அழகிய வரிகள். உழைப்பாளருக்கு நேர்வது உபாதைதானே!

பா.ராஜாராம் said...

அப்பா! வலிக்குது பாலாஜி கவிதை.இன்னும் ஓட்டிட தெரியாது பாலாஜி.தெரிந்திருந்தால் ஓட்டு இட்டுருப்பேன்..இப்போதைக்கு தெரிந்த பின்னூட்டமிடுகிறேன்.அபாரம்!

பழமைபேசி said...

நண்பா, காலையில கொஞ்ச நேரம் வாய்ப்புக் கெடச்சது... இப்பத்தான் வீட்டுக்கு வந்து இருக்கேன்.... மறுபடியும் வந்து படிக்கிறேன்....

க.பாலாசி said...

//பிரியமுடன்...வசந்த் said...
அளவுக்கு மீறிய வலிகளோடு...//

நன்றி நண்பா...

//Blogger T.V.Radhakrishnan said...
கவிதை அருமை....//

நன்றி தோழரே...

//Blogger சந்ரு said...
அருமையான வரிகள் நண்பரே//

நன்றி அன்பரே...

க.பாலாசி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
யதார்த்தம் சொல்லும் அழகிய வரிகள். உழைப்பாளருக்கு நேர்வது உபாதைதானே!//

உண்மைதான் தோழரே...
நன்றி உங்களின் வருகைக்கு..

//Blogger பா.ராஜாராம் said...
அப்பா! வலிக்குது பாலாஜி கவிதை.இன்னும் ஓட்டிட தெரியாது பாலாஜி.தெரிந்திருந்தால் ஓட்டு இட்டுருப்பேன்..இப்போதைக்கு தெரிந்த பின்னூட்டமிடுகிறேன்.அபாரம்!//

மிக்க நன்றி அன்பரே...உங்களின் ஓட்டை விட பின்னூட்டமே சிறந்தது...

//Blogger பழமைபேசி said...
நண்பா, காலையில கொஞ்ச நேரம் வாய்ப்புக் கெடச்சது... இப்பத்தான் வீட்டுக்கு வந்து இருக்கேன்.... மறுபடியும் வந்து படிக்கிறேன்....//

நன்றி நண்பரே....எப்ப வேணும்னாலும் வாங்க நம்ம வீடு திறந்தே இருக்கும்...

ரோகிணிசிவா said...

ம்ம்ம் , கலக்கற பாலாசி ,

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO