நாளைக்காவது
ரேசங்கடையில அரிசிய வாங்கியாங்க..
‘வக்கத்தவனுக்கு வாழ்க்கப்பட்டா.......’
படபடத்தாள்...
தலை அசைத்தான்...
போனவாரம்
மச்சினனுக்குப்போட்ட
மோதிரமும், மத்தியான விருந்தும்
இன்னும் ஞாபகத்தில்.
••••••••••••
பாப்பாத்தியக்காவோட போனோம்னா..
போனமா...சாப்டமான்னு... வந்திடலாம்.
ரவிக்க ஒட்டு தெரியாம
முந்தானய இழுத்து மூடிக்கவேண்டியதுதான்....
பாவாட கீழதான் கிழிஞ்சிருக்கு...பரவால்ல...
அம்பது ரூவாயாவது
மொய் எழுதுனாத்தான்
கௌரவமா இருக்கும்...
அக்கா போலாமா?
