க.பாலாசி: June 2009

Friday, June 26, 2009

என் கணிதம்


நீ ஒரு புள்ளி,

நான் ஒரு புள்ளி என

இருவருக்கும் இடையில்

ஓர் நேர்கோடு போட்டேன்,

ஆனால்

எவனோ ஒருவன் இடையில் வந்து

முக்கோணம் ஆக்கியவேளையில்,

நீயோ

புதிதாய் ஒருபுள்ளியை தொட்டு

நாற்கரம் ஆனாய்.

மையத்தில் உன்னை வைத்து

சுற்றிவந்தபோது

உன்னிடமே

சுருண்டுபோனது என் உலகம்
உன்னுடன் என்னை கூட்டி

நாம் ஒன்றுதான்

என்று நான் சொன்னபோது

உன்னுடன் நீ இன்னொன்றை கூட்டி

என்னை கழித்து

நாங்கள் இருவர் என்றாய்.

தண்டணை


பாவை சென்ற பாதை

என் பார்வை சென்ற வேலை

பாவியாய் இன்று நான் பாடையில்....

(எனது கல்லூரி நண்பன் ஒருவன் எழுதியது)

இப்போது உணர்கிறேன்....
நான் பிறந்தது அமாவாசையாம்

ஏனென்று இப்போது உணர்கிறேன்,

நீ பிறக்கவில்லையே....
Monday, June 22, 2009

செயல்வினை
என் நெஞ்சில் முகம் பதித்து

எனை நீ கட்டியணைக்கும் போதெல்லாம்

நான் என்ற நான் அங்கு நாணமில்லாமல்

நாம் ஆகிறது.Wednesday, June 17, 2009

போராளிஎன் பெயர் சீதாராமன்.

பெண்களுக்கு 33% இட ஓதிக்கீடு கொடுக்கவேண்டும் என்பதில் எனக்கு தீவிர உடன்பாடு,

இப்போதுகூட அப்படியானதொரு போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுதான்

பேருந்தில் பயணித்து கொண்டிருக்கிறேன்.

எனது இருக்கையின் மேல் மகளிர் மட்டும் என்றிருக்கிறது.Monday, June 15, 2009

பதிவுகள்

நாம் சாய்ந்திருந்த சுவற்றில்
இன்னும் நம் வாசம்,

நாம் நடந்து சென்ற பாதைகளில்
இன்னும் நம் சுவடு

நம் விரல்கள் பதித்த ரேகைகள்
இன்னும் நம் உடலில்.

ஆனால்

நீ மட்டும் உன் கணவனோடு
நான் உன் கனவோடு.Friday, June 12, 2009

காதல்காதல் மீன்கள் உன் மனதில்!
தூண்டிலுடன் எத்தனை ஆண்கள்.
சிக்கிவிடாதே சீரழிந்துவிடுவாய்,
மாட்டிக்கொள்ளாதே மாய்ந்துவிடுவாய்,
அகப்படாதே அழிந்துவிடுவாய்,
அனுபவம் கொள்,
ஆய்ந்து யோசி,
இணைந்து முடிவெடு,
ஈர்ப்பு தவிர்,
உடன்படு
ஊடல் கொள்ளாதே
ஒருவன் உனக்காக
ஓரிடத்தில் இருப்பான்.


  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO