க.பாலாசி: துயரம்....
Showing posts with label துயரம்..... Show all posts
Showing posts with label துயரம்..... Show all posts

Friday, December 4, 2009

மழலைகளும் மரணங்களும்...

வேதாரண்யத்தில் நடந்த பள்ளி வாகன விபத்திற்கும் (இதுவரை) 9 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் வழக்கம்போல் நமது முதல்வர், முரசொலியில் ஒரு கவிதையும், திரைத்துறைக்கு ஒரு காவியமுமாக எழுதி மௌன கண்ணீரஞ்சலி செலுத்திவிடுவார். உடனிருப்புக்கள் (பிறப்பு) யாரும் கவலைக்கொள்ள தேவையில்லை. அதேபோல் ரத்தத்தின் ரத்தங்களுக்காக கொடநாடு நிலத்திலிருந்தபடி 200 பக்க ஆறுதல் அறிக்கையை எதிர்கட்சித்தலைவர் தயார் செய்துவருவதாக உளவுத்துறை, கோபாலபுரத்தை உசுப்பியுள்ளதாகவும் தகவல். விரைவில் அனைத்து அரசியல்வாதிகளும் நாகப்பட்டிணத்திற்கு அஞ்சலி செலுத்தவும், ஆறுதல் கூறவும் இழப்பீடு வழங்கவும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள்.

இந்த விபத்திற்கு காரணம் ஓட்டுனர் உரிமம் பெறாத ஓட்டுனரே என்று, மக்களும் போக்குவரத்துதுறை அதிகாரிகளும் கண்டுபிடித்திருக்கின்றனர்(!?). இன்னொரு சாரார் அந்த வாகனத்தில் 15 குழந்தைகளே பயணம் செய்யமுடியுமென்றும், மொத்தம் 22 குழந்தைகள் அவ்வாகனத்தில் இருந்ததாகவும் வருத்தப்படுகிறார்கள் மற்றும் பள்ளிவாகனம் சரியாக பராமறிக்கப்படாததும் காரணமாம். பள்ளிக்கல்வித்துறையும், போக்குவரத்துதுறையும் ஒருவரையொருவர் அயோக்கியன் என்று உண்மைகளை உளரிவருகின்றனர். எனது எண்ணம் 16லிருந்து 22வது குழந்தை வரை அந்த வாகனத்தில் ஏற்றிய பெற்றோர்களுக்கு ஏன் இந்த அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனது?

எத்தனையோ மூன்று சக்கர வாகனங்கள் எல்லைக்குமீறிய அளவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு போவதை பார்த்திருக்கிறோம். இத்தனைக் குழந்தைகளை ஏற்றிய ஒரு வாகனத்தில் கடைசி குழந்தையாக தன்னுடையதையும் கடமையே கண்ணாக கடைசியில் ஏற்றிவிடும் பெற்றோர்கள் கொஞ்சமாவது சிந்தித்து பார்க்கவேண்டும். இத்தனை நெரிசலில் நம் பிள்ளையையும் ஏற்றிவிடுகிறோமே, இவ்வாகனம் விபத்துக்குள்ளானால் என்ன ஆகும் என்ற எண்ணம் சிறிதேனும் அவர்களுக்கு இருக்கவேண்டும். எத்தனை பண, மன துயர்களுக்கிடையே படிக்க வைத்தாலும் ஒரு குழந்தையின் உயிர் எவ்வளவு விலைமதிப்பில்லாதது. என்ன சொல்லி என்ன பயன். கந்தனுக்கு புத்தி கவட்டியில் என்பார்கள். இதேபோல அடுத்த விபத்து நடந்தாலும் எவரும் கண்டுகொள்ளப்போவதில்லை.


புளியங்காய்க்கு புளிப்பை ஏற்றிவிடவா முடியும்?


Tuesday, October 6, 2009

கடன்...


சாதம்
கூட்டு
பொரியல்
சாம்பார்
ரசம்
மோர்
எல்லாம்
முடித்து......
பில்
கொடுப்பவனுக்கு
மிச்ச காசு லாபம்.

எச்சில் இலையை
எடுத்துவிட்டு...
சிந்திய பருக்கை
ஒழுகிய சாம்பார்
சொட்டிய ரசம்
தெரித்த மோர்
எல்லாவற்றையும்
சுத்தமாய்
துடைப்பவனுக்கு
ஒரு நன்றி கூட
கிடைப்பதில்லை கடனாக...


**********


தங்களது வாக்கினை தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் செலுத்தவும்....நன்றி....

Thursday, September 17, 2009

என் கண்ணீரையும் சேர்த்து...

ஏற்றம் இறக்கம்
இழுக்க முடியா சுமை...
கழுத்தில் வலி, காலில் நடுக்கம்
எல்லாம் பொறுத்து
கடக்க முயலும் நேரத்தில்...

சாட்டை எடுத்து
முதுகில் பாய்த்து
கூட்டல் கழித்தலின் குறிப்புணர்த்தி
அதன்நடுவே
ஊசிமுனைக் குச்சியால் புள்ளியிட்டு...

அப்பப்பா...தாங்கமுடியா துயர்நடுவே
பாரத்தின் எல்லையடைந்து
திரும்பி வருகையில்...
கடன் சொல்லி வாங்கிய
தீவனமும் புண்ணாக்கும்
பாதி பசியணைக்க
...

வண்டியுடன் கட்டிவிட்டு
வஞ்சியுடன் அவனிருக்க...

கால்வயிற்று கஞ்சியுடன்
கடுங்குளிரில் நானிருக்க...
அடித்து பெய்தமழை ஆறாய் ஓடியது....
என் கண்ணீரையும் சேர்த்து...


(தமிழ்மணம் மற்றும் தமிலிஸில் உங்களது வாக்கினை பதிவிடவும்)

Friday, September 4, 2009

பெண்ணவள்... பெண்ணாக...

(இந்த படத்தை எடுத்தவர் பெயர் கருவாயன் என்ற சுரேஷ், அவருக்கு நன்றி)


பத்துமாதம் சுமந்தவள்
பெற்றெடுத்த பிள்ளையது
பெண்ணாய் போக...

வருந்திய தகப்பன்
மூன்றுவேளை சோற்றில்
ஒரு முழுவேளை குறைத்து...

அவள் வளர இவன் குறுக...
அழகுற நடந்தவள்...
3ம் அகவைபெற...

கொஞ்சம் சேர்ந்த பணம்
பள்ளிதனில் கொள்ளைபோக...
ஐந்து வருடமும் அவன்பட்டபாடு...

சாரெடுத்த சக்கைதனை
மேலும் பிழிய...
அதிலொழுகும் உதிரம் போல் ஆனது...

பெண்ணவள்... பெண்ணாக...
அவன் கொண்ட இன்பத்தில்...
இமைவடிந்த நீரது இம்சையென்றே காட்டியது.

அஞ்சு பத்து கடன் வாங்கி
அவளை மேல்நிலையில் சேர்த்துவிட...
பள்ளி சென்றவள்...

பிஞ்சொன்று கனிய
வஞ்சமது கொண்டு
கொத்தித் திண்ண காத்திருந்த கழுகினைப்போல்...

காமம் கொண்டு
கண்மறைக்க ஆசிரியன்
எனும் அரக்கனவன்.......................

நாசம்பட்ட வாழ்வுதனை...
பெற்றவனிடம் சொல்ல நாகூச...
அவள் கொண்ட துயரமது குருதியாய்க் குறிப்புணர்த்த...

பொங்கியெழுந்தவன்...எடுத்த கத்தி...
ஆற்றினில் நீராடிய ஆசிரியனவனின்...
................அறுத்தெறிந்தே அடங்கியது...

ஆறது சிவக்க...
அங்கே அறமது சிறக்க...
ஆறாத மனதுடன் வீடு வந்தான்...


தமிழ்மணத்திலும் தமிலிஸ்ஸிலும் தங்களது வாக்கினை பதிவிடவும்....நன்றி...



***********

Saturday, August 29, 2009

துடைக்கப்படா துயரங்கள்....

செத்துப்போன குருவிகளின் மீதமிருக்கும் சிறகுகளையும் ஒடிப்பதுபோல்,
ஈசலாய் கிளம்பிய இலங்கை ராணுவம்,
நம் தமிழர்களின் ஒன்றிரண்டு மீந்து போன உயிர்களையும் ஒடித்துகொண்டிருக்கிறது...
ஈழத்தமிழனின் வலியையும், உணர்ச்சிகளையும் மட்டுமே புரிந்துகொள்ளும் நம்மால்
எதிர்த்து போராட இன்று முடியாவிட்டாலும்,
நம் போராடும் குணத்தில் ஒரு முயற்சியாக

நம் குரலாவது ஓங்கி ஒலிக்கட்டும்...
ஒரு பதிவின் வழியாக...

கீழே உள்ள படம் அவர்களின் ஈவு இரக்கமற்ற செயலை உலகிற்கு உணர்த்த அவர்களே எடுத்து காட்டியது...




இந்த ஒளியிடல் ஒரு மிகச்சிறிய உதாரணம் மட்டுமே...
இதைவிட எண்ணிலடங்கா கொடுமைகள்,
துயரங்கள், வேதனைகள்...

உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பகிரும் நம் நெஞ்சங்கள்
உரக்க கத்தட்டும் ஓர் நாள்...

இன்னும் சிலரது குரல்கள்....
தங்கமணிபிரபு
சடகோபன் முரளிதரன்
கதிர் (ஈரோடு)
நர்சிம்
காமராஜ்



  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO