திராட்சை என்றும் இனிப்புதான் அதன் நற்பலன்களையும் சேர்த்து. அதிலும் குறிப்பாய் பச்சை திராட்சை. இந்த வெய்யிலின் வெம்மைக்கு உகந்ததாய்கூட, உடற்சூட்டினை கொஞ்சமே தணிப்பதாகக்கூட இருக்கலாம். இவைத்தவிர அதன் ருசியில் சப்புக்கொட்ட நாவென்றும் தயங்கியதில்லை. முதலியார் மளிகைக்கடையில் சப்பாத்திக்கு மாவு வாங்கியபோது அங்கே ஓரமாய் பல்லிளித்துக்கொண்டிருந்த அதன் மீதான ஈர்ப்பு இன்னும்கொஞ்சம் என்னுடன் சேர்ந்திருக்கவேண்டும். வாங்கி சுவைத்துப்பார்க்க ஆசை. இருபதுரூபாய்க்குள் அதனையும் மஞ்சள் பைக்குள் அடைக்கமுடியாதென்பது தெரியும். சட்டைப்பைக்குள் முன்பிருந்த இருபது ரூபாயுடன் நான்காய் மடிக்கப்பட்ட ஒரு ஐம்பது ரூபாய் நோட்டும், இருபது ரூபாய்நோட்டும் சொன்னது போன்ற உணர்வு, அதையும் ‘என்’னறைக்கு அழைத்துச்செல்ல.
வாங்கிவந்து இரண்டைப்பறித்து வாய்க்குள் செருகி சுவைத்துண்கையில் நினைத்ததைவிட இருமடங்கினும் அதிகமாகவே அந்த பரவசத்தில் லயித்துப்போகவேண்டியிருந்தது. ஆனால் நினைவலைகளின் அசைவு 70 ரூபாயின் பின்னணியில்.
நான்காய் மடிக்கப்பட்டு மண்ணின் வாசத்துடன் என் மேல்சட்டைப் பைக்குள் அமிழ்ந்துகிடந்த அது, இரவு உணவருந்திவிட்டு சாப்பாட்டுக்கடையிலிருந்து திரும்பும்போது ஒரு சிறிய மருத்துவமனையின் வாசலொட்டிய சாலையில் கிடந்தது. நற்பண்பிற்கும், நடைமுறை வாழ்விற்குமுள்ள வித்யாச மனப்பான்மையில் கட்டப்பட்டிருந்த என்கைகள் கொஞ்சமும் கூச்சமில்லாமல், எவர்கண்ணும் கொத்திக்கொள்ளும்முன் பறித்து சட்டைக்குள் திணித்தது. பின்னணி இதுதான்.
அந்த பணம்....
ஓருடலின் உழைப்பில், ஒருகுடும்பத்தின் இரவுநேர உலைக்காக காத்திருந்திருக்கலாம். அல்லது ஒருவயிற்றின் பசியாற்ற பதுக்கப்பட்டு... வழிதவறியிருக்கலாம்.
குடும்பச்சண்டைக்குள் தலையிட்டு ஒரு உழைக்கும் கணவானின் ஆளுமையை அரங்கேற்ற பயணப்பட்டிருக்கவும் வாய்ப்பதிகம்.
இல்லையேல் ஏதோவொரு சுமைதூக்கியின் உடல்வலியை, மதுவாடையில் ஓரிரவு மறைத்துவைக்க உதவியிருக்கும்.
ஒரு ஏழையன் மனைவிக்கு உடற்பிணிவிரட்ட ஊசியாகவோ, அல்லது மாத்திரைக்கட்டிகளாகவோ மாறியிருக்கலாமென்பதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும், எடுத்தவிடம் மருத்துவமனை வாசல்.
வேறெந்த காரணத்தினையும், கால் கிலோவில் 100 கிராம் உட்செல்வதற்குள் என் சிறுமூளை உண்டாக்கவில்லை. அந்த 100 கிராமில் கடைசியொன்றை மென்றுகொண்டிருந்தபோது புளிப்பா, கசப்பா, உவற்பா என்றறியமுடியவில்லை. சுவை மாறிவிட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.
••••••••••
பக்கத்துவீட்டு அக்காவிடம் அவசரமாக 20ரூபாய் கடன் வாங்கி (20ரூபாய் திராட்சை போக ரூ.50 என்னிடம்), மிதிவண்டியுடன் மீண்டும் அவ்விடம் சென்று அதை தூக்கியெறிய நினைத்தபொழுது பறிகொடுத்தவரின் கண்கள் அதற்காக காத்திருந்தது.
‘அய்யா... என்ன தேடுறீங்க..???’
‘ஒண்ணுமில்ல கண்ணு.. பணம் ஒரு 70ரூவா வச்சிருந்தேன். மளிகக்கடயாண்ட போயிப்பாத்தா காணல. அதான் வாங்குன எடத்துலயே பாக்குறேன். இங்கத்தான் வாங்கி, மடிச்சு வேட்டிக்குள்ள சொருவுனேன்.’
‘அப்டியா... இங்க வாங்க... என்கிட்டதான் இருக்கு.’
‘ஏ... அப்டியா கண்ணு. எங்கிருந்துகண்ணு எடுத்த?’
‘இங்கதாங்க... சாப்டு முடிச்சிட்டு ரூமுக்கு போயிட்ருந்தேன். கண்ணுல அம்புட்டுது. அதான்.... ம்ம்... இந்தாங்க...’
‘ரொம்ப நல்லதுப்பா.. கடஞ்சொல்லி வாங்க மனசில்ல...வாங்குன அரிசிய கடைலேயே வச்சிட்டு வந்திட்டேன்.’
‘பாத்து வைச்சிக்குங்க...மறுபடியும் தொலைஞ்சிடப்போவுது...’.
••••••••••
நினைத்த காரணங்களில் முதல் ஒன்று பலித்திருந்தது.
பெருமிதமாய் அறைக்கு வந்தேன். கடங்காரனாய் திராட்சையை எடுத்தேன், சுவைத்தேன்....
திராட்சை என்றும் இனிப்புதான்..........