க.பாலாசி: ஒன்று சேர்ந்த....

Tuesday, March 9, 2010

ஒன்று சேர்ந்த....

சின்ன வயசு பசங்க பக்கத்துலையோ இல்லன்னா அடுத்த தெருவிலயோ எதாவது நண்டு சிண்டுகளபாத்து டாவடிச்சி கொஞ்சம் முத்துனவொடனே, கிளிக்கு றக்க மொளச்சிடுத்து ஆத்தவிட்டு பறந்துபோயிடுத்துங்கற கதையா பொசுக்குன்னு காணாப்போயிடுவாங்க. அப்பப்ப நம்மவீட்டுகிட்டயோ இல்ல அக்கம்பக்கத்துலயோ நடக்குறதுதான், புதுசில்ல.

ஓடிப்போறதுங்க சும்மாப்போனா பரவாயில்ல, ஆத்தாக்காரி தாலியத்தவற பாக்கி எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போயிடுங்க. வழக்கம்போல பெத்ததுங்க, தென்னய பெத்தா எளநீரு புள்ளைய பெத்தாகண்ணீருன்னு கானம் பாடிகிட்டு காலத்த ஓட்டிகிட்டு கெடக்கும். செலபேரு இதுங்க ஓடிப்போனவொடனே நமக்கு இப்டி ஒண்ணு பொறக்கவேயில்லன்னு நெனச்சிகிட்டு தலைய முழுகி தண்ணி தெளிச்சிடுவாங்க. இன்னும் செலபேரு அவமானத்துல தூக்குலையே தொங்கிடுவாங்க. சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடுன்னு ஜோடிங்க போனது போனதுதான். அப்பன் ஆத்தா என்னானாங்கன்னே திரும்பி பாக்கறதில்ல. அதான எவன்குடி எக்கேடு கெட்டாயென்ன.

அப்டிப்போறதுங்கள்ல செலது என்ன பண்ணும்னு நெனக்கிறீங்க, ஒரு யெழவும் இருக்காது. ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்துன்னு...... எல்லாங் கொஞ்ச நாளைக்கு நல்லாதான் போயிட்டிருக்கும். அதுக்கப்பறம் மடியில ஒண்ணு மசக்கையா ஒண்ணுன்னு நிக்குறப்பதான தெரியும், எப்டிடா குடும்பத்த ஓட்டுறதுன்னு. வீட்டக்கட்டிப்பாரு கல்யாணத்தப் பண்ணிப்பாருன்னு சொல்லுவாங்க. இது ரெண்டும் கூட பரவாயில்ல. குடும்பத்த நடத்திப்பாருன்னு, நடத்திப்பாக்குறப்பத்தான் தெரியும் அங்கண சோத்துக்கே ஜிங்கி அடிக்கிறது. சுருட்டிகிட்டு போனதெல்லாம் வித்து திண்ணதுக்கப்புறம்தான் ரெண்டுக்கும் ஞானம் பொறக்கும். சொந்தக்காரங்க மூலமா பெத்தவங்களுக்கு தூதுவுட்டு பாக்குங்க. பெத்ததுங்களும் என்ன பண்ணும்?. எல்லாத்தையும் மறந்து அதுங்களுக்கு எதோவொரு வூட்டையோ இல்ல சொந்த வூட்லையோ குடித்தனம் பண்ணவெச்சிடுவாங்க.

நெத்துன காயும், முத்துன வெதையும் வெடிக்காமலா இருக்குங்கறமாதிரி மாமியாக்காரி வாயி சும்மாவா இருக்கும். எம்மொவன மானமுள்ள பையனுன்னு மதுரையில கேட்டாக...அந்தமாயவரத்துல கேட்டாகன்னு ராகம்பாடிகிட்டே அவன் 40 பவுனு போடுறன்னு சொன்னான், என்தம்பிபய 50 பவுனோட பெரிய வண்டியும் வாங்கித்தர்ரன்னு சொன்னான், இப்ப ஒண்ணுத்துக்கும் ஆவாத இந்த ஒதவாக்கரைய கூட்டியாந்து என்னோட எல்லாக்கனவுலையும் மண்ணள்ளி போட்டுட்டானேன்னு பொலம்பிகிட்டேயிருக்கும். சோத்து கறியில ஆரம்பிக்கிற சண்ட எங்கல்லாமோ நீண்டு சந்தேகத்துல போயி முடியும். ஆரம்பத்துல லேசுலேசா ஆரம்பிச்சி கடைசியா பாப்பாத்தியம்மா மாடு வந்துடுச்சி, கட்டுனா கட்டு கட்டாட்டினா போங்கற நெலமயாயிடும். வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா எல்லாத்துக்கும் கட் அண்ட் ரைட்டா ரெண்டுபேருக்கும் எதுவுமே ஒத்துக்காம போயிடும். கூத்தாடி கெழக்கப்பாத்தான், கூலிக்காரன் மேற்க பாத்தாங்கற கதையா வீட்டுக்காரனும் ஒண்ணுங் கண்டுக்கமாட்டான்.


கொஞ்சநாளு அந்த பொண்ணு மூக்க சிந்திக்கிட்டு பொருத்துப்பாப்பா. முடியலைன்னா கொழம்புச்சட்டிய தூக்கி புருஷங்காரன் தலையில ஒடைச்சிட்டு, போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட பொறம்போக்கு மரத்துல நாண்டுகிட்டு சாவலாம்னுட்டு அப்பங் கையிலயோ, கால்லையோ விழுந்து வீட்டோட வாழாவெட்டியா போயிடுவா.

அப்பறமென்ன ஒட்டட ஒட்டட கம்பத்துல என்னய உட்டுட்டு போனானே அந்தத்துலன்னு ஒரே அழுவாச்சி காவியந்தான். இது அப்டியே தலைகீழா செல எடத்துல நடக்கிறதும் உண்டு. சும்மாவாச் சொன்னாங்க, இட்ட ஒறவு எட்டுநாளைக்கு, நட்ட ஒறவு நாலு நாளைக்குன்னு.



53 comments:

ராமலக்ஷ்மி said...

நல்லாச் சொல்லியிருக்கீங்க:)!

தமிழ் அமுதன் said...

கருத்தும்.. நடையும்.. கலக்கல்..!

Rajan said...

நெத்துன காயும், முத்துன வெதையும் வெடிக்காமலா இருக்குங்கறமாதிரி//


த்சு த்சு த்சு ! அடா அடா ... என்னமா பீல் பண்றாரு !

Rajan said...

போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட பொறம்போக்கு மரத்துல நாண்டுகிட்டு சாவலாம்னுட்டு//

இல்லையே இந்த பழமொழி வேற மாதிரி கில்மாவா இருக்குமே

Unknown said...

//.. இல்லையே இந்த பழமொழி வேற மாதிரி கில்மாவா இருக்குமே..//

இது மட்டும் உங்க கண்ணுல பட்டுடுமே.. :-)

காமராஜ் said...

ஊர்லருந்து வந்தவங்க சொல்ற கதைமாதிரி பேச்சுச்சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த குரலக்லையெல்லாம் ஒட்டி வைத்து கேட்கிறேன்.

பிரேமா மகள் said...

இப்ப என்னத்துக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்றதைப் பத்தி கட்டுரை.. மனசுல எதாவது ஐடியா இருந்தா, கதிர் அங்கிள்‍கிட்டேயோ இல்லை, வால் பையன் அங்கிள்‍கிட்டேயோ சொல்லுங்க.. அட தங்கச்சி என்கிட்டவாவது 'இப்படி இப்படி விசயம்"ன்னு சொல்லுங்க.. வீட்டு சொந்த பந்தத்தை கூப்பிட்டு பேசி,, சட்டு புட்டு‍ன்னு கல்யாணத்தை முடிப்போம்,.. அதை விட்டிட்டு? விடுண்ணே... உன் மனசு படி கல்யாணம் நடக்கும்...

ஈரோடுவாசி said...

நீங்க எப்போ ஓடிப்போக போறீங்க அண்ணா....

அகல்விளக்கு said...

ஆஹா....

இப்போ எதற்கு இப்படி ஒரு ஆராய்ச்சி....

எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....

அப்புறம் பதிவுல அங்கங்க சேத்துருக்குற பாட்டெல்லாம் கலக்கல்ஸ்...

செம சிச்சுவேசன் சாங்ஸ்...

:-)

ஈரோடு கதிர் said...

பாலாசி கல்யாணம் ஆயிடுச்சா!

ஊட்டுக்காரம்மா எங்கே இருக்காங்க?

சத்ரியன் said...

//கூத்தாடி கெழக்கப்பாத்தான், கூலிக்காரன் மேற்க பாத்தாங்கற கதையா வீட்டுக்காரனும் ஒண்ணுங் கண்டுக்கமாட்டான்.//

பாலாசி,

பழமொழியெல்லாம் கலந்து
நல்லா கதை வுடறீங்களே...!

அட்ரா..அட்ரா..அட்ரா..!

( ஈரோடு கதிர்-ணா இந்த பாலாசி பயபுள்ளைக்கு கண்ணாலம் ஆயிடிச்சிங்களா...?)

vasu balaji said...

இவன் ரவுசுக்கு பயந்தே ஒரு பொண்ணும் சிக்கலையோ? எத்தன பழமொழி! என்னா நக்கலு:))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பராயிருக்கு சார்..

பருவத்தில பன்னிக்குட்டி கூட அழகாயிருக்கும்..
அந்தப் பருவத்தை, அழகா, கடந்துட்டா..'சூப்பர் எதிர்காலம்தான்..'

ஆனா, திசை மாறினாங்க.. சனீஸ் சல்யூட் வெக்க , வீட்டு காலிங்பெல்ல
அடிப்பான்..

புரிஞ்சவன் பொழச்சுக்குவான்.. புரியாதவன்.... ????

அகல்விளக்கு said...

//பருவத்தில பன்னிக்குட்டி கூட அழகாயிருக்கும்..
அந்தப் பருவத்தை, அழகா, கடந்துட்டா..'சூப்பர் எதிர்காலம்தான்..'
//

செம அட்வைசு...

புரிஞ்சு நடந்துக்குங்க அண்ணா...

ஈரோடு கதிர் said...

//சத்ரியன் said...

( ஈரோடு கதிர்-ணா இந்த பாலாசி பயபுள்ளைக்கு கண்ணாலம் ஆயிடிச்சிங்களா...?)//

ஆமாங்க எனக்கும் அதே டவுட்டுதான்

தேவன் மாயம் said...

கதை மிக அருமை!

Jerry Eshananda said...

பழ மொழியெல்லாம் தூள் பறக்குது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் பாலாசி

அன்புடன் நான் said...

நான் பாலாசி பக்கம்..... பழமொழி சொன்னா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது.....ஆமா.

பழமைபேசி said...

பழம்!

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
//சத்ரியன் said...
( ஈரோடு கதிர்-ணா இந்த பாலாசி பயபுள்ளைக்கு கண்ணாலம் ஆயிடிச்சிங்களா...?)//
ஆமாங்க எனக்கும் அதே டவுட்டுதான்//

நோ..நோ... இது தீவிரவாதிகளால் செய்யப்படும் ‘உள்’நாட்டு சதி.... வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்....

Chitra said...

நெத்துன காயும், முத்துன வெதையும் வெடிக்காமலா இருக்குங்கறமாதிரி மாமியாக்காரி வாயி சும்மாவா இருக்கும்.


........கலக்கல் பதிவு.

Unknown said...

இந்த வயசுலயே இப்பிடி பழுத்த பழம் மாதிரி பேசுறீங்களே பாலாசி, பேசாம நீங்க ஆஸ்ரமம் ஒன்னு ஆரம்பிச்சா என்ன?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@முகிலன் said...
இந்த வயசுலயே இப்பிடி பழுத்த பழம் மாதிரி பேசுறீங்களே பாலாசி, பேசாம நீங்க ஆஸ்ரமம் ஒன்னு ஆரம்பிச்சா என்ன?
//

என்னவோ எழுதுங்க..
அந்த ஆசிரம மேட்டரை மட்டும் நான் பார்த்துக்கிறேன்..
டீலா..?
(எனக்கென்ன சார் பெரிய ஆசை?
அப்படியே.. பொழுதப்போக்கிட்டு, புரியாத தேவ பாஷையில நாலு வரி சொல்லிட்டு..
மக்களுக்கு, வெள்ளிக்கிழமை உண்டகட்டி கொடுத்துட்டு..
சிம்பிளா வாழ்ந்துடுவேன் சார்..)

நசரேயன் said...

//
வானம்பாடிகள் said...

இவன் ரவுசுக்கு பயந்தே ஒரு பொண்ணும் சிக்கலையோ? எத்தன பழமொழி! என்னா நக்கலு:))
//

அண்ணே நீங்க என்னைய மட்டும் நக்கல் பண்ணுறேன்னு சொல்லக்௬டாது, இந்த இடுகைக்கு முன்னாடி நான் எல்லாம் ... வாயிலே வருது சொல்லமுடியலை

சீமான்கனி said...

ஐயா பெரியவரே..பழைய பாட்டெல்லாம்...கேட்டு நீங்க ரெம்ப கேட்டு போயிடீக...யார கவுக்க காத்து இருகீகளோ தெரியலையே...

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒட்டட ஒட்டட கம்பத்துல என்னய உட்டுட்டு போனானே//

நல்லா சொல்லியிருக்கீங்க...

தாராபுரத்தான் said...

உங்க பதிவுக்கு தருகிற பின்னலுக்காகவே படிக்க தோனுது..ங்க.

புலவன் புலிகேசி said...

எழுத்து நடை சூப்பர் தல

//கூத்தாடி கெழக்கப்பாத்தான், கூலிக்காரன் மேற்க பாத்தாங்கற கதையா வீட்டுக்காரனும் ஒண்ணுங் கண்டுக்கமாட்டான்.
//

//சும்மாவாச் சொன்னாங்க, இட்ட ஒறவு எட்டுநாளைக்கு, நட்ட ஒறவு நாலு நாளைக்குன்னு.//

//போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட பொறம்போக்கு மரத்துல நாண்டுகிட்டு சாவலாம்னுட்டு//

ஒரே பழமொழியா பின்றீங்களே தல...

கார்த்திகைப் பாண்டியன் said...

இதெல்லாம் எங்க போய் முடியுமோ?

திவ்யாஹரி said...

கலக்கல் பதிவு.. அருமை..

நாமக்கல் சிபி said...

நைஸ் ஒன்!

எழுத்து நடை சூப்பர்!

இளந்தமிழன் said...

:-)

"உழவன்" "Uzhavan" said...

நீங்க சொன்னது கதையல்ல நிஜம் பாலாஜி

KARTHIK said...

முனுக் முனுக்னு இருக்கரவங்க முன்னூறூ ஊட்டுக்கு தீ வைப்பாங்ககிறது உங்க விசையத்துல சரியாத்தான் போச்சு தல :-))

// எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....//

வாழ்துக்கள் தல :-))

கண்மணி/kanmani said...

இதையும் தாண்டி வாழ்ந்து காட்டும் வீராப்புகளும் இருக்கத்தான் செய்யிது.இருந்தாலும் பெத்தவுக வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேனாம்.

சத்ரியன் said...

//நோ..நோ... இது தீவிரவாதிகளால் செய்யப்படும் ‘உள்’நாட்டு சதி.... வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்..//

எதுக்கு இத்தன நோ..ஓஓஓஓஓஓ....?

சரி... யாரந்த உள் நாட்டு “சதி”..?

கோமதி அரசு said...

ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று எழுதுவீர்கள் என்று பார்த்தால் ஒன்று சேர்ந்த அன்பு மாறி ஆத்தாவீட்டோட வாழாவெட்டியா போயிடுவா என்று எழுதி விட்டீர்களே!

இப்படிதான் அவசரப்பட்டு வாழ்க்கையை அமைத்து கொள்பவர்களுக்கு ஏற்படுகிறது.

நாமக்கல் சிபி said...

ஓ! அப்படியா சங்கதி!

வாழ்த்துக்கள் பாலாசி!

க ரா said...

ஒங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.

நினைவுகளுடன் -நிகே- said...

நல்லாச் சொல்லியிருக்கீங்க

க.பாலாசி said...

//ராமலக்ஷ்மி said...
நல்லாச் சொல்லியிருக்கீங்க:)!//

நன்றிங்கக்கா...

//Blogger ஜீவன்(தமிழ் அமுதன் ) said...
கருத்தும்.. நடையும்.. கலக்கல்..!//

நன்றி ஜீவன்...

//Blogger ராஜன் said...
த்சு த்சு த்சு ! அடா அடா ... என்னமா பீல் பண்றாரு !
இல்லையே இந்த பழமொழி வேற மாதிரி கில்மாவா இருக்குமே//

கில்ல்ல்ல்மாவா.... அப்டின்னா என்னங்க தலைவரே... நன்றிங்க...

//திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...
இது மட்டும் உங்க கண்ணுல பட்டுடுமே.. :-)//

நீங்களே பாருங்களேன்..
நன்றி சம்பத்...

//Blogger காமராஜ் said...
ஊர்லருந்து வந்தவங்க சொல்ற கதைமாதிரி பேச்சுச்சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த குரலக்லையெல்லாம் ஒட்டி வைத்து கேட்கிறேன்.//

நன்றி அய்யா...

க.பாலாசி said...

//பிரேமா மகள் said...
இப்ப என்னத்துக்கு ஓடிப் போய் கல்யாணம் பண்றதைப் பத்தி கட்டுரை.. மனசுல எதாவது ஐடியா இருந்தா, கதிர் அங்கிள்‍கிட்டேயோ இல்லை, வால் பையன் அங்கிள்‍கிட்டேயோ சொல்லுங்க.. அட தங்கச்சி என்கிட்டவாவது 'இப்படி இப்படி விசயம்"ன்னு சொல்லுங்க.. வீட்டு சொந்த பந்தத்தை கூப்பிட்டு பேசி,, சட்டு புட்டு‍ன்னு கல்யாணத்தை முடிப்போம்,.. அதை விட்டிட்டு? விடுண்ணே... உன் மனசு படி கல்யாணம் நடக்கும்...//

நல்லது தங்கச்சி... அப்டியேதாவதிருந்தா சொல்லியனுப்புறேன்...

//Blogger ஈரோடுவாசி said...
நீங்க எப்போ ஓடிப்போக போறீங்க அண்ணா....//

ஆகா... ரெடியாயிட்டாங்களே....
நன்றி

//Blogger அகல்விளக்கு said...
ஆஹா....
இப்போ எதற்கு இப்படி ஒரு ஆராய்ச்சி....
எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....
அப்புறம் பதிவுல அங்கங்க சேத்துருக்குற பாட்டெல்லாம் கலக்கல்ஸ்...செம சிச்சுவேசன் சாங்ஸ்...//

நன்றி ராசா... கண்டிப்பா உங்களுக்கிட்ட சொல்லாமலா....

//Blogger ஈரோடு கதிர் said...
பாலாசி கல்யாணம் ஆயிடுச்சா!
ஊட்டுக்காரம்மா எங்கே இருக்காங்க?//

ம்ம்ம்... அவங்க ஆத்தாவீட்ல... கண்ணாலம் முடிச்சபெறவு சொல்றேன்....

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
பழமொழியெல்லாம் கலந்து
நல்லா கதை வுடறீங்களே...!
அட்ரா..அட்ரா..அட்ரா..!
( ஈரோடு கதிர்-ணா இந்த பாலாசி பயபுள்ளைக்கு கண்ணாலம் ஆயிடிச்சிங்களா...?)//

நன்றி சத்ரியன்... நீங்கவேற அவருத்தான் ஏதோ சொல்றாருன்னா... என்னையப்போயி....

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
இவன் ரவுசுக்கு பயந்தே ஒரு பொண்ணும் சிக்கலையோ? எத்தன பழமொழி! என்னா நக்கலு:))//

நன்றிங்கய்யா.... சிக்கலையா... யாரப்பாத்து என்னா சொன்னீங்க... பாருங்க....

//Blogger பட்டாபட்டி.. said...
சூப்பராயிருக்கு சார்..
பருவத்தில பன்னிக்குட்டி கூட அழகாயிருக்கும்..
அந்தப் பருவத்தை, அழகா, கடந்துட்டா..'சூப்பர் எதிர்காலம்தான்..'
ஆனா, திசை மாறினாங்க.. சனீஸ் சல்யூட் வெக்க , வீட்டு காலிங்பெல்ல
அடிப்பான்..
புரிஞ்சவன் பொழச்சுக்குவான்.. புரியாதவன்.... ????//

நன்றிங்க தலைவரே... என்னவிட சூப்பரா சொல்லியிருக்கீங்க...

//Blogger அகல்விளக்கு said...
செம அட்வைசு...
புரிஞ்சு நடந்துக்குங்க அண்ணா...//

அவ்வ்வ்வ்வ்வ்.......

//Blogger ஈரோடு கதிர் said...
ஆமாங்க எனக்கும் அதே டவுட்டுதான்//

ம்கூம்... டவுட்டாவே இருங்க...

//Blogger தேவன் மாயம் said...
கதை மிக அருமை!//

நன்றிங்க டாக்டர்...

//Blogger ஜெரி ஈசானந்தா. said...
பழ மொழியெல்லாம் தூள் பறக்குது.//

நன்றிங்க சார்...

//Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
கலக்கல் பாலாசி//

நன்றிங்கய்யா...

க.பாலாசி said...

//சி. கருணாகரசு said...
நான் பாலாசி பக்கம்..... பழமொழி சொன்னா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது.....ஆமா.//

நன்றிங்க சி.கருணாகரசு...

//Blogger பழமைபேசி said...
பழம்!//

நன்றிங்கய்யா...

//Blogger Chitra said...
........கலக்கல் பதிவு.//

நன்றிங்க சித்ரா...

//Blogger தியாவின் பேனா said...
அருமையாக இருக்கு//

நன்றி தியா...

//Blogger முகிலன் said...
இந்த வயசுலயே இப்பிடி பழுத்த பழம் மாதிரி பேசுறீங்களே பாலாசி, பேசாம நீங்க ஆஸ்ரமம் ஒன்னு ஆரம்பிச்சா என்ன?//

நல்ல ஐடியா... அடுத்ததா.............

//Blogger பட்டாபட்டி.. said...
என்னவோ எழுதுங்க..
அந்த ஆசிரம மேட்டரை மட்டும் நான் பார்த்துக்கிறேன்..
டீலா..?
(எனக்கென்ன சார் பெரிய ஆசை?
அப்படியே.. பொழுதப்போக்கிட்டு, புரியாத தேவ பாஷையில நாலு வரி சொல்லிட்டு..
மக்களுக்கு, வெள்ளிக்கிழமை உண்டகட்டி கொடுத்துட்டு..
சிம்பிளா வாழ்ந்துடுவேன் சார்..)//

ஆகா... நெறயப்பேரு இருப்பாங்க போலிருக்கே....

//Blogger நசரேயன் said...
அண்ணே நீங்க என்னைய மட்டும் நக்கல் பண்ணுறேன்னு சொல்லக்௬டாது, இந்த இடுகைக்கு முன்னாடி நான் எல்லாம் ... வாயிலே வருது சொல்லமுடியலை//

ஏங்க நீங்கவேற.... நன்றிங்க நசரேயன்...

க.பாலாசி said...

//seemangani said...
ஐயா பெரியவரே..பழைய பாட்டெல்லாம்...கேட்டு நீங்க ரெம்ப கேட்டு போயிடீக...யார கவுக்க காத்து இருகீகளோ தெரியலையே...//

நன்றி சீமாங்கனி...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
நல்லா சொல்லியிருக்கீங்க...//

நன்றி வசந்த்

//Blogger தாராபுரத்தான் said...
உங்க பதிவுக்கு தருகிற பின்னலுக்காகவே படிக்க தோனுது..ங்க.//

நன்றி அய்யா...

//Blogger புலவன் புலிகேசி said...
எழுத்து நடை சூப்பர் தல
ஒரே பழமொழியா பின்றீங்களே தல...//

நன்றி நண்பா...

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
இதெல்லாம் எங்க போய் முடியுமோ?//

சும்மாதாங்க....தலைவரே.... நன்றி

//Blogger திவ்யாஹரி said...
கலக்கல் பதிவு.. அருமை..//

நன்றி திவ்யா...

//Blogger நாமக்கல் சிபி said...
நைஸ் ஒன்!
எழுத்து நடை சூப்பர்!//

நன்றிங்க தலைவரே...

//Blogger இளந்தமிழன் said...
:-)//

நன்றி இளந்தமிழன்...

க.பாலாசி said...

//"உழவன்" "Uzhavan" said...
நீங்க சொன்னது கதையல்ல நிஜம் பாலாஜி//

ஆமங்க...நன்றி உழவன்...

//Blogger கார்த்திக் said...
முனுக் முனுக்னு இருக்கரவங்க முன்னூறூ ஊட்டுக்கு தீ வைப்பாங்ககிறது உங்க விசையத்துல சரியாத்தான் போச்சு தல :-))//
// எனி ஜடியா டூ ஜம்ப் பம்பாய்....//
வாழ்துக்கள் தல :-))//

அய்யய்யோ...அப்டில்லாம் இல்லைங்க தலைவரே...

//Blogger கண்மணி/kanmani said...
இதையும் தாண்டி வாழ்ந்து காட்டும் வீராப்புகளும் இருக்கத்தான் செய்யிது.இருந்தாலும் பெத்தவுக வயித்தெரிச்சலைக் கொட்டிக்க வேனாம்.//

சரிதாங்க.... நன்றி கண்மணி....

//Blogger சத்ரியன் said...
எதுக்கு இத்தன நோ..ஓஓஓஓஓஓ....?
சரி... யாரந்த உள் நாட்டு “சதி”..?//

‘உள்’நாடுங்க.... இன்னுமா...சொல்லனும்...

//Blogger கோமதி அரசு said...
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா என்று எழுதுவீர்கள் என்று பார்த்தால் ஒன்று சேர்ந்த அன்பு மாறி ஆத்தாவீட்டோட வாழாவெட்டியா போயிடுவா என்று எழுதி விட்டீர்களே!
இப்படிதான் அவசரப்பட்டு வாழ்க்கையை அமைத்து கொள்பவர்களுக்கு ஏற்படுகிறது.//

நன்றிங்க கோமதி..வருகைக்கும் கருத்திற்கும்...

//Blogger நாமக்கல் சிபி said...
ஓ! அப்படியா சங்கதி!
வாழ்த்துக்கள் பாலாசி!//

அப்டில்லாம் இல்லீங்க...

//Blogger இராமசாமி கண்ணண் said...
ஒங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு.//

நன்றிங்கய்யா....

//Blogger நினைவுகளுடன் -நிகே- said...
நல்லாச் சொல்லியிருக்கீங்க//

நன்றிங்க நிகே....

அம்பிகா said...

பழமொழியும், பாட்டுமா கலந்த நகைசுவை பதிவு. பின்னூட்டங்களும் அப்படியே!

ஜீவன்சிவம் said...

வட்டார வழக்கில் நன்றாக வந்திருக்கிறது மேட்டர்...வாழ்த்துக்கள் சார்...

அப்பாதுரை said...

ரசித்துப் படித்தேன். சமூகப் புலம்பல்னா இப்படித்தான் இருக்கணும். 'நட்ட உறவு இட்ட உறவு' புரியலையே?

க.பாலாசி said...

//அம்பிகா said...
பழமொழியும், பாட்டுமா கலந்த நகைசுவை பதிவு. பின்னூட்டங்களும் அப்படியே!//

நன்றி அம்பிகா...

//Blogger ஜீவன்சிவம் said...
வட்டார வழக்கில் நன்றாக வந்திருக்கிறது மேட்டர்...வாழ்த்துக்கள் சார்...//

நன்றி ஜீவன்சிவம்....

//Blogger அப்பாதுரை said...
ரசித்துப் படித்தேன். சமூகப் புலம்பல்னா இப்படித்தான் இருக்கணும். 'நட்ட உறவு இட்ட உறவு' புரியலையே?//

மரம் நட்ட உறவு, தண்ணீர் இட்ட உறவு.... புரிஞ்சிதுங்களா...

நன்றிங்க அப்பாதுரை....

பனித்துளி சங்கர் said...

கலக்கல் நண்பரே !

மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !


மீண்டும் வருவான் பனித்துளி !

Chitra said...

பழமொழிகளும், பேச்சு தமிழும், கருத்தும் கொண்ட கலக்கல் பதிவு.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO