க.பாலாசி: பிஞ்சிற் பழுத்த...

Thursday, January 21, 2010

பிஞ்சிற் பழுத்த...

உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது. எங்கோ பார்த்தோ பழகியோ நமக்குள் ஒட்டிக்கொண்டிருக்கும் அவ்விதமான படிமங்களை பறித்தெரிவதற்கான நேரமும் காலமும் சுலபமாய் அமைந்துவிடுவதில்லை. எனக்கான இந்த வாய்ப்புகள்போல் (பகிர்தல்). சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம். வெண்ணையைத்தின்றாலும், சாம்பலைத்தின்றாலும் செல்லுமிடம் எதுவாக இருக்குமோ அதுவே மடியலுக்கு செல்லும்பாதையாகவும் அமையும். சிறிது ஆயுட்காலங்கள் மட்டும் வித்யாசப்படலாம்.

சமீபத்திய எனதூர் பயணத்தில் நான் கண்டறிந்த விடயங்கள் கொஞ்சம் மனதை திகைக்கவும் இளைஞர்களில் நிலையைக்கண்டு திகட்டவும் செய்தது. என் வீட்டுக்கு எதிர்வீட்டுப்பையன் வயது 19-20 இருக்கும். நான் தூக்கிவளர்த்தவன் என்பதை சொல்வதற்கும் மெல்லக் கூசவும் செய்கிறது. இன்றைய நாளில் வாரத்திற்கு இரண்டுநாட்களுக்கு குறையாமல் மது அருந்துகிறான். அவன் மட்டுமல்ல. எங்களது தெருவிலுள்ள மற்றய நாலைந்து இளைஞர்களும் (சிறுவர்கள்) சேர்ந்து. கல்லூரியில் முதலாமாண்டு தொழில்நுட்பம் படிக்கிறார்கள். தொழில்நுட்பத்தைதான் படிக்கிறார்களா? என்ற கேள்வியும் அவர்களின் செயல்கண்டு எழுந்துபார்க்கிறது.

நானும் கல்லூரிப் பயிலும்போது இவ்வாய்ப்பினில் மாட்டி மங்கியிருக்கிறேன். இந்தப்பழச்சாறும் புளிக்குமென்று முதல்நாளே அகற்றியெரிந்திருக்கிறேன். வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும் என்ற நோக்கின் அடிப்படை அறிவினால் எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன். எனது தந்தைக்கு அப்பழக்கம் உண்டு. இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...படலாம்... அதனால் என்மனம் அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.

ஆனால் இந்த இளைவர்களுக்கு என்னக்கேடு என்றுதான் தெரியவில்லை. அவர்கள் குடிப்பதற்கான காரணமாய் ஏதோவொன்று இருக்கவேண்டும். (நொண்டிச்சாக்காக). சிறிதுநேர மனமகிழ்வுக்காக என்கிறார்கள். மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் என்வயதொத்த ஒரு ஆண்மகனின் மனநிலையும் இதுவும் ஒன்றன்றி வேறெப்படி எண்ணவென்று தெரியவில்லை. இதற்கு வழிகாட்டுதலாக சில பெரியவர்களும் அமைந்துவிடுகிறார்கள். அப்துல்கலாம் காணச்சொன்ன கனவு இவ்வாறு மதிமயங்கி காணும் கனவாகவா இருக்கப்போகிறது??


80 comments:

Unknown said...

நல்ல இடுகை நன்பா..., என்ன எனக்கு தான் நாலாவது தடவ படிக்கும் போது புரியுது..., நம்ம அறிவு அந்த மாதிரி

புலவன் புலிகேசி said...

நல்ல நடையில் வருத்தப்பட்டிருக்கிறீர்கள். குடிப்பதெல்லாம் இப்போ ஃபேசனாம் பாலாசி. என்ன செய்வது?

Unknown said...

தல, குடிக்கிறவனெல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்லை. அதுனால குடிக்கிறதை மட்டும் வச்சி யாரையும் எடை போடாதீங்க..

அகல்விளக்கு said...

என்னைப்போல பல நல்ல சிறுவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அண்ணா...

ஆரூரன் விசுவநாதன் said...

//வீட்டுக்கொரு குடிமகனிருந்தாலே நாடு நலம்பெறும்///

ஆமா....ஆமா.....ஆமா ராசா......

//மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் //

அட...அட....

பாலாசி என்னாதிது???????

கலக்கறீங்களே....... தொடருங்கள் வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

நல்லதொரு இடுகை. முகிலனின் எண்ணமும் கணக்கில் கொள்ளவேண்டியதுதான்.

vasu balaji said...

படிக்கிற பையன். குடிக்கிறது அவன் காசில்லை. அந்த ஒரு விசயத்துக்கே கண்டிக்கலாம். மற்ற எதுவும் அப்புறம்தான். நல்ல இடுகை.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை.

கண்ணகி said...

அந்தப்பையனின் வளர்ப்பு அப்படி. கண்டிப்பாக அவனுக்கு பெற்றொரின் அன்பும், கவனிப்பும் கிடைத்திருக்காது.

க.பாலாசி said...

//கண்ணகி said...
அந்தப்பையனின் வளர்ப்பு அப்படி. கண்டிப்பாக அவனுக்கு பெற்றொரின் அன்பும், கவனிப்பும் கிடைத்திருக்காது.//

வளர்ப்பை குறைகூற இயலாது. பெற்றவர்களின் அன்பிற்கும் கவனிப்பிற்கும் எந்த குறையுமில்லை. எல்லாம் நன்கு கிடைக்கிறது. எந்த குறையும் இல்லை. சேர்மானங்கள் சரியில்லாமல் அமைவதும் காரணம். சிறுவயதில் மதுவருந்துபவர்களுக்கு நீங்கள் சொல்வது மட்டுமே காரணமாய் இருக்க வாய்ப்பில்லை. நன்றி தங்களின் கருத்திற்கு...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள் ஒரு ப்ரபலமில்லையா இப்ப... எதிர்வீடுன்னு அட்ரஸெல்லாம் போடறிங்க ..யாரைப்பத்தி எழுதறீங்களோ அவங்களை :)

ஹ்ம்.. கவலையைக்கூட அழகா கவலைப்பட்டிருக்கீங்க..ஆரம்பம் ரொம்ப அழகா இருக்கு..

//சாம்பல்//


புலவர் மேலே சொன்னமாதிரி இதெல்லாம் இப்ப ஃபேசனாம்..செய்யலன்னா peer pressure வேறயாம்.. :(

ராமலக்ஷ்மி said...

நல்ல இடுகை. பாதை மாறிப் போகும் இளைய தலைமுறையின் போக்கை நன்றாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் பாலாசி!

கமலேஷ் said...

மிகவும் பயனுள்ள இடுகை பாலாசி உங்களின் கருத்தை கேட்டு ஒருவன் திருந்தினால் சந்தோசம்தான்...வாழ்த்துக்கள் தொடருங்கள்...

Thekkikattan|தெகா said...

பாலாஜி, கட்டுரையின் தொடக்கம் அருமையா இருக்கு. நேரடியா உங்களின் அனுபவத்தை வைச்சு தைச்சது இன்னும் சிறப்பா இருந்துச்சு.

இதில பாருங்க முகிலன், வெ. இரா சொன்னது எல்லாம் கவனத்தில் நிறுத்துவது கொஞ்சம் நல்லதுன்னு நினைக்கிறேன்.

ஆரம்பித்தில் கிடைக்கும் நட்புச் சூழலைக் கொண்டு சில அறிமுகங்கள் கிடைச்சாலும் (அதுவும் அவசியம்தானே முழுமைக்கு :), போகப் போக சுய நினைவிற்கு திரும்பி தன்னய வழி நடத்திக்கிறவங்க உண்டு. முதல் அறிமுகத்திலேயே நீங்க வெளி நடப்பு செஞ்ச மாதிரி...

Ashok D said...

பாலாசி.. இதற்கு மறுமொழியிட வேண்டுமென்றால்.. நான் குடிக்காமல் இருக்கவேண்டும்... so no way .. சரக்குவிட்ட பிறகு வருகிறேன்.

அப்புறம் சரக்கடிக்கறது பத்தி வடகரை வேலன் அவர்கள் சிறப்பானதொரு பதிவு எழுதியிருக்கிறார்.(one or 2 months இருக்கும்)

டைய்லி 2 or 3 லார்ஜஸ் சாப்பிடறது உடம்புக்கு நல்லது என்றே எண்ணுகிறேன். வீட்டல எங்கப்பா சாப்பிடமாட்டார். அதனால நான் :)))

பிரபாகர் said...

எனது நண்பர்கள், குடிக்காமல் நீ என்ன சாதிக்கப்போகிறாய் என கேட்டும் போதெல்லாம், குடித்து நீ என்ன செய்வாயோ அதைத்தான் என சொல்லிவிடுவேன்....

அருமை இளவல்... நல்ல பகிர்வு.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

தம்பி....

அதெல்லாஞ்சரி...

நாளைக்கு ராத்திரி... ஒரு பியரோடு... இது பத்தி நம்ம தலைவர் தலைமையில் ஒரு கூட்டம் போட்டு பேசி முடிவு பண்ணிடுவோம்....

அட சரக்கடிக்கிறதில் நான் இன்னும் உன்னை விட குழந்தைப்பையன்பா

ஈரோடு கதிர் said...

//எனது தந்தைக்கு அவ்விலாக்காவை தாரைவார்த்துவிட்டேன்.//

ச்சே... இப்படியொரு மகன் கிடைக்கனுமே செல்லம்

Chitra said...

தங்களுக்கு தாங்களே வெட்டி கொள்ளும் அழகான ஆழமான குழி. பதிவு அருமை.

Romeoboy said...

15 வயதில் தண்ணி அடித்து , அது போதாமல் கஞ்சா அடித்து தனது வாழ்க்கையை கேள்வி குறி ஆகிய ஒருவன் எனது வீட்டின் அருகில் வசிக்கிறான் நண்பரே . அவனது நண்பர்கள் இப்பொது கல்லூரியில் படித்து கொண்டு இருகிறார்கள் இவனோ யாரவது அகபடுவார்கள இன்று தண்ணி அடிக்க என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான். எல்லாம் முடிந்த பிறகு யோசித்து என்ன பயன்??

அரசூரான் said...

இங்க நக்கலாகவும் நாசுக்காகவும் சொல்லுவாங்க... அடுத்தவன் பட்டத பார்த்து தெரிஞ்சிகிறவன் அறிவாளி (இந்தியன்), அவனா பட்டு தெரிஞ்சிகிறவன் அமெரிக்கன்னு. உங்க எதிர் வீட்டு பையன் எல்லாம் அமெரிக்கனுங்கோ... திருந்திடுவாங்கோ

ஹேமா said...

சித்ரா சொன்னதுபோல தங்கள் வாழ்வைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.குடிப்பது தப்பல்ல.முதலில் தன் வாழ்வை நிலைப்படுத்திக்கொண்டு தேவைக்கேற்ப குடிக்கட்டுமே.

பா.ராஜாராம் said...

சார்,

அடுத்த பஸ் எத்தன மணிக்குங்க?

:-)

நல்ல பதிவுதான் பாலாஜி...ஹி..ஹி..

கலகலப்ரியா said...

arumai...!

பழமைபேசி said...

பாலாசி... தொடருங்கள்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை

Unknown said...

//||| Romeo ||| said...
15 வயதில் தண்ணி அடித்து , அது போதாமல் கஞ்சா அடித்து தனது வாழ்க்கையை கேள்வி குறி ஆகிய ஒருவன் எனது வீட்டின் அருகில் வசிக்கிறான் நண்பரே . அவனது நண்பர்கள் இப்பொது கல்லூரியில் படித்து கொண்டு இருகிறார்கள் இவனோ யாரவது அகபடுவார்கள இன்று தண்ணி அடிக்க என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான். எல்லாம் முடிந்த பிறகு யோசித்து என்ன பயன்??
//

Romeo, எனக்குத் தெரிஞ்சி ஒரு பையன் இருந்தான். பத்தாவது படிக்கும் போது முதல் தடவை டேஸ்ட் பண்ணான். அதுக்கப்புறம் காலேஜ் வந்ததில இருந்து ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது குடிச்சிருவான். அப்புறம் நடுவுல யாராவது ஃப்ரண்ட்ஸ் பார்ட்டின்னு வச்சா குடிப்பான். அப்புறம் எம்.சி.ஏ படிக்கும் போதும் ஹாஸ்டல் மொட்ட மாடியில இருக்குற வாட்டர் டேங்க் மேல உக்காந்து ஃப்ரண்ட்ஸோட வாரம் ஒரு தடவை தண்ணி அடிப்பான்.

பெங்களூர்ல வேலைக்குப் போனப்பறமும் அப்பிடித்தான். இப்ப அமெரிக்கால இருக்கான். வாரா வாரம் அடிக்கிறதுல்ல, ஆனா எப்பயாவது செட்டு சேந்துச்சின்னா அடிப்பான். பிதற்றலகள்னு ஒரு ப்ளாக் வேற எழுதிக்கிட்டு இருக்கான். அவன் என்ன குட்டிச்சுவராவா போயிட்டான்.(ஒரு வேளை குட்டிச்சுவராயிட்டதால தான் ப்ளாக் எழுதுறானோ?)

ஒரு எக்ஸாம்பிள் மட்டும் குடுத்து எதையும் நியாயப் படுத்திடவும் முடியாது, அநியாயப் படுத்திடவும் முடியாது..

சந்தான சங்கர் said...

மதுவெல்லாம் இப்ப புட்டிப்பால் என
பெருகி முக்குக்கு மூணு கடையென
பசங்க பார்வையில் போதையாய்..
பட்டுன்னு திருந்தமாட்டங்கையா
பட்டு திருந்துவாங்க..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான படைப்பு பாலாசி. மது அருந்துவது தன் மதிப்பை உயர்த்துவதாக எண்ணுவதால் தான் இந்தப் பழக்கம் ஏற்படுகிறது.

கண்ணகி said...

நீங்கள் சொல்வது உண்மை.. நல்ல பெற்றொர்கள் வளர்ப்பாக இருந்தாலும் சேர்க்கை தவறால் கெட்டுப்போகும் பசங்களை பெற்றோரால் என்ன செய்ய முடியும்...

க.பாலாசி said...

//பேநா மூடி said...
நல்ல இடுகை நன்பா..., என்ன எனக்கு தான் நாலாவது தடவ படிக்கும் போது புரியுது..., நம்ம அறிவு அந்த மாதிரி//

நன்றி நண்பரே...

//Blogger புலவன் புலிகேசி said...
நல்ல நடையில் வருத்தப்பட்டிருக்கிறீர்கள். குடிப்பதெல்லாம் இப்போ ஃபேசனாம் பாலாசி. என்ன செய்வது?//

ஆமாம் நண்பா.... நன்றி...

//Blogger முகிலன் said...
தல, குடிக்கிறவனெல்லாம் கெட்டவனும் இல்ல, குடிக்காதவன் எல்லாம் நல்லவனும் இல்லை. அதுனால குடிக்கிறதை மட்டும் வச்சி யாரையும் எடை போடாதீங்க..//

நன்றி முகிலரே... உங்களின் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே... ஆனால் பிஞ்சில் பழுக்கும் பழங்களில் சிலதுமட்டுமே இனிக்கலாம்.

//Blogger அகல்விளக்கு said...
என்னைப்போல பல நல்ல சிறுவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அண்ணா...//

ம்ம்ம்...ஆமா நீங்க சிறுவரா?? என்னைவிடவா???நன்றி அகல்..

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
ஆமா....ஆமா.....ஆமா ராசா......
அட...அட....
பாலாசி என்னாதிது???????
கலக்கறீங்களே....... தொடருங்கள் வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி ஆரூரன்..

க.பாலாசி said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
நல்லதொரு இடுகை. முகிலனின் எண்ணமும் கணக்கில் கொள்ளவேண்டியதுதான்.//

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..

//Blogger வானம்பாடிகள் said...
படிக்கிற பையன். குடிக்கிறது அவன் காசில்லை. அந்த ஒரு விசயத்துக்கே கண்டிக்கலாம். மற்ற எதுவும் அப்புறம்தான். நல்ல இடுகை.//

அதுதான் எனது எண்ணமும்.. நன்றி அய்யா..

//Blogger ஸ்ரீ said...
நல்ல இடுகை.//

நன்றி...அண்ணா...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
நீங்கள் ஒரு ப்ரபலமில்லையா இப்ப... எதிர்வீடுன்னு அட்ரஸெல்லாம் போடறிங்க ..யாரைப்பத்தி எழுதறீங்களோ அவங்களை :)//

தெரியறத்துக்கு வாய்ப்பில்லைங்கற தைரியம்தானுங்க...

// ஹ்ம்.. கவலையைக்கூட அழகா கவலைப்பட்டிருக்கீங்க..ஆரம்பம் ரொம்ப அழகா இருக்கு..//

நன்றி...

//சாம்பல்////

திருத்திக்கொண்டேன்...

// புலவர் மேலே சொன்னமாதிரி தெல்லாம் இப்ப ஃபேசனாம்..செய்யலன்னா peer pressure வேறயாம்.. :(//

ம்ம்...நன்றி அக்கா..

//Blogger ராமலக்ஷ்மி said...
நல்ல இடுகை. பாதை மாறிப் போகும் இளைய தலைமுறையின் போக்கை நன்றாகச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள் பாலாசி!//

மிக்க நன்றி அக்கா...

க.பாலாசி said...

//Blogger கமலேஷ் said...
மிகவும் பயனுள்ள இடுகை பாலாசி உங்களின் கருத்தை கேட்டு ஒருவன் திருந்தினால் சந்தோசம்தான்...வாழ்த்துக்கள் தொடருங்கள்...//

நன்றி கமலேஷ்...

//Blogger Thekkikattan|தெகா said...
பாலாஜி, கட்டுரையின் தொடக்கம் அருமையா இருக்கு. நேரடியா உங்களின் அனுபவத்தை வைச்சு தைச்சது இன்னும் சிறப்பா இருந்துச்சு.

// இதில பாருங்க முகிலன், வெ. இரா சொன்னது எல்லாம் கவனத்தில் நிறுத்துவது கொஞ்சம் நல்லதுன்னு நினைக்கிறேன்.//

கண்டிப்பாக...கொஞ்சம்தான்..

// ஆரம்பித்தில் கிடைக்கும் நட்புச் சூழலைக் கொண்டு சில அறிமுகங்கள் கிடைச்சாலும் (அதுவும் அவசியம்தானே முழுமைக்கு :), போகப் போக சுய நினைவிற்கு திரும்பி தன்னய வழி நடத்திக்கிறவங்க உண்டு. முதல் அறிமுகத்திலேயே நீங்க வெளி நடப்பு செஞ்ச மாதிரி...//

உண்மைதான்... சுயசிந்தனையும் முக்கியம்... நன்றி தெகா...

//Blogger D.R.Ashok said...
பாலாசி.. இதற்கு மறுமொழியிட வேண்டுமென்றால்.. நான் குடிக்காமல் இருக்கவேண்டும்... so no way .. சரக்குவிட்ட பிறகு வருகிறேன்.//

நான் குறைசொல்வது சிறுவர்களை மட்டுமே...கருத்துரைக்க உங்களுக்கும் உரிமையுண்டு...

// அப்புறம் சரக்கடிக்கறது பத்தி வடகரை வேலன் அவர்கள் சிறப்பானதொரு பதிவு எழுதியிருக்கிறார்.(one or 2 months இருக்கும்)
டைய்லி 2 or 3 லார்ஜஸ் சாப்பிடறது உடம்புக்கு நல்லது என்றே எண்ணுகிறேன். வீட்டல எங்கப்பா சாப்பிடமாட்டார். அதனால நான் :)))//

சரி..சரி.. சாப்பிடுங்க... நம்மைக்கண்டு பிறர் கெடாமல் இருப்பது சாலச்சிறந்தது.

//Blogger பிரபாகர் said...
எனது நண்பர்கள், குடிக்காமல் நீ என்ன சாதிக்கப்போகிறாய் என கேட்டும் போதெல்லாம், குடித்து நீ என்ன செய்வாயோ அதைத்தான் என சொல்லிவிடுவேன்...//

அருமை...

// அருமை இளவல்... நல்ல பகிர்வு.//

நன்றி பிரபாகர் அண்ணா..

//ஈரோடு கதிர் said...
தம்பி....
அதெல்லாஞ்சரி...
நாளைக்கு ராத்திரி... ஒரு பியரோடு... இது பத்தி நம்ம தலைவர் தலைமையில் ஒரு கூட்டம் போட்டு பேசி முடிவு பண்ணிடுவோம்....//

பண்ணிடலாமே...

// அட சரக்கடிக்கிறதில் நான் இன்னும் உன்னை விட குழந்தைப்பையன்பா//

ஓ...நன்றி...

//Blogger ஈரோடு கதிர் said...
ச்சே... இப்படியொரு மகன் கிடைக்கனுமே செல்லம்//

ம்ம்ம்...என்னைத்தானே சொல்றீங்க...

//Blogger Chitra said...
தங்களுக்கு தாங்களே வெட்டி கொள்ளும் அழகான ஆழமான குழி. பதிவு அருமை.//

இதைப்பற்றின அழகான எண்ணம்.நன்றி சித்ரா... கருத்திற்கு...

க.பாலாசி said...

//| Romeo ||| said...
15 வயதில் தண்ணி அடித்து , அது போதாமல் கஞ்சா அடித்து தனது வாழ்க்கையை கேள்வி குறி ஆகிய ஒருவன் எனது வீட்டின் அருகில் வசிக்கிறான் நண்பரே . அவனது நண்பர்கள் இப்பொது கல்லூரியில் படித்து கொண்டு இருகிறார்கள் இவனோ யாரவது அகபடுவார்கள இன்று தண்ணி அடிக்க என்று எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான். எல்லாம் முடிந்த பிறகு யோசித்து என்ன பயன்??//

கொடுமைதான் நண்பரே...
நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..

//Blogger அரசூரான் said...
இங்க நக்கலாகவும் நாசுக்காகவும் சொல்லுவாங்க... அடுத்தவன் பட்டத பார்த்து தெரிஞ்சிகிறவன் அறிவாளி (இந்தியன்), அவனா பட்டு தெரிஞ்சிகிறவன் அமெரிக்கன்னு. உங்க எதிர் வீட்டு பையன் எல்லாம் அமெரிக்கனுங்கோ... திருந்திடுவாங்கோ//

நம்பிக்கைதான்... இருந்தாலும்.....

நன்றி அரசூரான்...

//Blogger ஹேமா said...
சித்ரா சொன்னதுபோல தங்கள் வாழ்வைத் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள்.குடிப்பது தப்பல்ல.முதலில் தன் வாழ்வை நிலைப்படுத்திக்கொண்டு தேவைக்கேற்ப குடிக்கட்டுமே.//

சரிதான். நன்றி ஹேமா...

//Blogger பா.ராஜாராம் said...
சார்,
அடுத்த பஸ் எத்தன மணிக்குங்க?
:-)//

எங்க தலைவரே...

// நல்ல பதிவுதான் பாலாஜி...ஹி..ஹி..//

நன்றி பா.ரா..அவர்களே...

//Blogger கலகலப்ரியா said...
arumai...!//

நன்றி கலகலப்ரியா...

//Blogger பழமைபேசி said...
பாலாசி... தொடருங்கள்!//

நன்றி அய்யா..

//Blogger T.V.Radhakrishnan said...
நல்ல இடுகை//

நன்றி டி.வி.ஆர்...

க.பாலாசி said...

//முகிலன் said...
Romeo, எனக்குத் தெரிஞ்சி ஒரு பையன் இருந்தான். பத்தாவது படிக்கும் போது முதல் தடவை டேஸ்ட் பண்ணான். அதுக்கப்புறம் காலேஜ் வந்ததில இருந்து ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது குடிச்சிருவான். அப்புறம் நடுவுல யாராவது ஃப்ரண்ட்ஸ் பார்ட்டின்னு வச்சா குடிப்பான். அப்புறம் எம்.சி.ஏ படிக்கும் போதும் ஹாஸ்டல் மொட்ட மாடியில இருக்குற வாட்டர் டேங்க் மேல உக்காந்து ஃப்ரண்ட்ஸோட வாரம் ஒரு தடவை தண்ணி அடிப்பான்.
பெங்களூர்ல வேலைக்குப் போனப்பறமும் அப்பிடித்தான். இப்ப அமெரிக்கால இருக்கான். வாரா வாரம் அடிக்கிறதுல்ல, ஆனா எப்பயாவது செட்டு சேந்துச்சின்னா அடிப்பான். பிதற்றலகள்னு ஒரு ப்ளாக் வேற எழுதிக்கிட்டு இருக்கான். அவன் என்ன குட்டிச்சுவராவா போயிட்டான்.(ஒரு வேளை குட்டிச்சுவராயிட்டதால தான் ப்ளாக் எழுதுறானோ?)

ஒரு எக்ஸாம்பிள் மட்டும் குடுத்து எதையும் நியாயப் படுத்திடவும் முடியாது, அநியாயப் படுத்திடவும் முடியாது..//

கடைசியா சொன்னீங்களே அது பாயிண்ட் தலைவரே... எல்லாப்பாதையிலும் முள் இருப்பதுமில்லை...பூக்களிருப்பதுமில்லை. நன்றி தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு...

//Blogger சந்தான சங்கர் said...
மதுவெல்லாம் இப்ப புட்டிப்பால் என
பெருகி முக்குக்கு மூணு கடையென
பசங்க பார்வையில் போதையாய்..
பட்டுன்னு திருந்தமாட்டங்கையா
பட்டு திருந்துவாங்க..//

ம்ம்...சரிதான் நண்பரே...பட்டாவது திருந்தினால் சரிதான்...

//Blogger ச.செந்தில்வேலன் said...
அருமையான படைப்பு பாலாசி. மது அருந்துவது தன் மதிப்பை உயர்த்துவதாக எண்ணுவதால் தான் இந்தப் பழக்கம் ஏற்படுகிறது.//

மதிப்பை குறைப்பதுவும் அதுதான் என்பதை உணர்வார்கள்...என்ற நம்பிக்கையுடன் நானும் இருக்கிறேன்...நன்றி செந்தில்..

//Blogger கண்ணகி said...
நீங்கள் சொல்வது உண்மை.. நல்ல பெற்றொர்கள் வளர்ப்பாக இருந்தாலும் சேர்க்கை தவறால் கெட்டுப்போகும் பசங்களை பெற்றோரால் என்ன செய்ய முடியும்...//

இவ்வாறு தனது மகன் மது அருந்துகிறான் என்றே அவர்களால் கண்டுபிடிக்கமுடிவதில்லை. பிறகெப்படி...????

மீண்டும் நன்றிகள்...

காமராஜ் said...

ரொம்பச் சீக்கிரம் அடிமையாவதும் அதிலிருந்து மீள முடியாமல் தொலைந்து போவதும் வலிக்கிற நிகழ்வு. சென்னை ச்டான்லி மருத்துவமணையில் நரம்பு சம்பந்தமான நோயாளிகளில் பான்பராக் நோயாளிகள் 99 சதம்.இதை அவர்களிடம் எப்படிச்சொல்ல.

ரோஸ்விக் said...

//பிஞ்சில் பழுக்கும் பழங்களில் சிலதுமட்டுமே இனிக்கலாம். //

இது பாயிண்டு.

நல்ல பதிவு மொத்தத்தில்... தொடருங்கள் பாலாசி.

சீமான்கனி said...

நல்ல பகிர்வு பாலாசி இதை படிக்கும் பொது ஒரு வாண்டு என்னை கேட்டதுதான் நியாபகத்திற்கு வருது...''என்ன அண்ணா பீர் கூட குடிக்க மாட்டிங்களா? நீங்கலாம் வேஸ்ட் அண்ணா ....''அவ்வ்வ்வவ்வ்வ்...

Romeoboy said...

\\முகிலன் said...

ஒரு எக்ஸாம்பிள் மட்டும் குடுத்து எதையும் நியாயப் படுத்திடவும் முடியாது, அநியாயப் படுத்திடவும் முடியாது..//

தலைவரே அவனுக்கு இப்பொது வயது 32. ஊருக்குள்ள ஒருத்தனும் அவனை மதிக்கமாட்டாங்க. அவங்க வீட்டுல கூட அவனை மதிப்பது இல்லை. இதுக்கு என்ன சொல்ல?? புத்தி இருப்பவன் புலச்சுகிறான்.

பனித்துளி சங்கர் said...

நண்பரே இந்த வயது நாம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ . அதைத்தான் செய்ய தூண்டும் . அவர்களின் நண்பர்கள்தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லவேண்டும் . இதற்குத்தான் அன்று சொன்னார் ஒரு மேதை உனது நண்பன் யாரென்று சொல்லு நான் உன்னை யார் என்று நான் சொல்கிறேன் என்று

TELL ME WHO IS YOUR FRIEND
I WILL SAY WHO YOU ARE

நமது நண்பர்களை வைத்தே நமது மோத்த குணாதிசயங்களை அறிந்துவிடலாம் .

இவர்களை இந்த வயதில் திருத்துவது என்பது கடலில் கரைத்த பெருங்காயதத்திற்கு சமம் .

இவர்கலாய்ப் பார்த்து திருந்தா விட்டால்
இவர்களை திருத்த முடியாது .

இவர்களைபோன்றவர்களை நம்பிய அந்த மனிதர் நமது நாடு 2020 ல் வல்லரசாக மாறிவிடும் என்று கனவு கண்டார் என்று நினைக்கும்பொழுதும் மிகவும் வருத்தம் தரும் ஒரு விசாயமாகத்தான் உள்ளது .

சமூக அக்கறையுடன் ஒரு சிறந்த பதிவு வாழ்த்துக்கள் !

க.பாலாசி said...

//காமராஜ் said...
ரொம்பச் சீக்கிரம் அடிமையாவதும் அதிலிருந்து மீள முடியாமல் தொலைந்து போவதும் வலிக்கிற நிகழ்வு. சென்னை ச்டான்லி மருத்துவமணையில் நரம்பு சம்பந்தமான நோயாளிகளில் பான்பராக் நோயாளிகள் 99 சதம்.இதை அவர்களிடம் எப்படிச்சொல்ல.//

அவர்களாய் உணர்ந்தால்தான் உண்டு.
இன்னும் மோசமான பழக்கமிது. இப்பழக்கமுடையவர்கள் மீள்வது மிகக்கடினம் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.

நன்றி அய்யா..

//Blogger ரோஸ்விக் said...
இது பாயிண்டு.
நல்ல பதிவு மொத்தத்தில்... தொடருங்கள் பாலாசி.//

நன்றி ரோஸ்விக்..

//Blogger seemangani said...
நல்ல பகிர்வு பாலாசி இதை படிக்கும் பொது ஒரு வாண்டு என்னை கேட்டதுதான் நியாபகத்திற்கு வருது...''என்ன அண்ணா பீர் கூட குடிக்க மாட்டிங்களா? நீங்கலாம் வேஸ்ட் அண்ணா ....''அவ்வ்வ்வவ்வ்வ்...//

அவ்வ்வ்வ்வ்வ்... ஆமாங்க...

நன்றி நண்பரே...

க.பாலாசி said...

//|| Romeo ||| said...
தலைவரே அவனுக்கு இப்பொது வயது 32. ஊருக்குள்ள ஒருத்தனும் அவனை மதிக்கமாட்டாங்க. அவங்க வீட்டுல கூட அவனை மதிப்பது இல்லை. இதுக்கு என்ன சொல்ல?? புத்தி இருப்பவன் புலச்சுகிறான்.//

சரிதான் நண்பரே...மீண்டும் நன்றி...

//Blogger சங்கர் said...
நண்பரே இந்த வயது நாம் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறோமோ . அதைத்தான் செய்ய தூண்டும் . அவர்களின் நண்பர்கள்தான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லவேண்டும் . இதற்குத்தான் அன்று சொன்னார் ஒரு மேதை உனது நண்பன் யாரென்று சொல்லு நான் உன்னை யார் என்று நான் சொல்கிறேன் என்று

TELL ME WHO IS YOUR FRIEND
I WILL SAY WHO YOU ARE

நமது நண்பர்களை வைத்தே நமது மோத்த குணாதிசயங்களை அறிந்துவிடலாம் .

இவர்களை இந்த வயதில் திருத்துவது என்பது கடலில் கரைத்த பெருங்காயதத்திற்கு சமம் .

இவர்கலாய்ப் பார்த்து திருந்தா விட்டால்
இவர்களை திருத்த முடியாது .

இவர்களைபோன்றவர்களை நம்பிய அந்த மனிதர் நமது நாடு 2020 ல் வல்லரசாக மாறிவிடும் என்று கனவு கண்டார் என்று நினைக்கும்பொழுதும் மிகவும் வருத்தம் தரும் ஒரு விசாயமாகத்தான் உள்ளது .

சமூக அக்கறையுடன் ஒரு சிறந்த பதிவு வாழ்த்துக்கள் !//

மிக்க நன்றி சங்கர் அவர்களின்..தங்களது விரிவான கருத்துரைக்கு... தங்களின் கருத்துடனும் ஒத்துப்போகிறேன். நன்றி...

திவ்யாஹரி said...

நல்ல இடுக்கை நண்பா..

அம்பிகா said...

மிக அவசியமான இடுகை. ஃபேஷன் என்பதெல்லாம் சரி.படிக்க வேண்டிய,
சாதிக்க வேண்டிய வயதில் தேவையில்லை என்பது மிகச்சரி. நல்லதோர் இடுகை.

க.பாலாசி said...

//திவ்யாஹரி said...
நல்ல இடுக்கை நண்பா..//

நன்றி திவ்யா ஹரி..

//Blogger அம்பிகா said...
மிக அவசியமான இடுகை. ஃபேஷன் என்பதெல்லாம் சரி.படிக்க வேண்டிய,
சாதிக்க வேண்டிய வயதில் தேவையில்லை என்பது மிகச்சரி. நல்லதோர் இடுகை.//

மிக்க நன்றி அம்பிகா...

KARTHIK said...

தல ஒன்னும் தப்பு இல்ல பிரியாவிடுங்க
நானும் தான் 16 வயசில ஆரம்பிச்சேன்
(இப்போ வரைக்கும் வீட்டுக்கு தெரியாது )என்ன கெட்டுப்போயிட்டேன் என் நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லாருக்குமே பழக்கம் இருக்கு.ஒருத்தன் கூட அழிஞ்சுபோகல எல்லாம் நல்லா செட்டில் ஆயிருக்கானுங்க.
குடிங்கரது நம்ம மரபு அதெல்லால்ம் அப்படி விட்டுர முடியாது :-))

// இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...//

போனவாரம் ஒரு பள்ளிகூடத்துக்கு போயிருந்தேன்.அங்க 4ம் வகுப்புல எல்லாமாணவர்களும் சீறுடைலதான் வந்திருந்தாங்க.ஒரு மூனு பேர் மட்டும் சாதரன உடைல இருந்தாங்க நாங்க கேட்டோம் அதுக்கு அந்த ஆசிரியை பதில் சொன்னாங்க அவங்க மூனு பேரும் சுண்ணாம்பு சூலைல வேல பாக்குராங்க வேல முடிஞ்சதும் பள்ளிக்கு வருவாங்க பள்ளி முடிஞ்சதும் திறும்ப வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு போவாங்கன்னு

அவங்க கடினம வேல பாக்கலையா
அப்ப அவ்ங்க தண்ணி போட்ட சரியா ?

//மஞ்சள்நிற சிலேடைகளின் சிலுசிலுப்பில், பிஞ்சில் வெதும்பி குறைநேர சிற்றிந்தின்பத்திற்காட்பட்டு விலைமாதுவின் வியர்வைகளை விலைக்குவாங்கி விலங்காகும் //

ரசிச்ச் வரிகள்
ஆனா என்ன சொல்லவ்ரீங்கன்னுதான் புரியல :-))

உங்க மொழிநடை அருமை

KARTHIK said...

சரியாச் சொன்னீங்க முகிலன் :-))

க.பாலாசி said...

வணக்கம்.. வாங்க தலைரே...

//அவங்க கடினம வேல பாக்கலையா
அப்ப அவ்ங்க தண்ணி போட்ட சரியா ?//

கடினமா வேல பாக்குறவங்க எல்லாரும் தண்ணியடிக்கலாம்னு நான் சொல்லலையே...

நன்றி....

KARTHIK said...

//கடினமா வேல பாக்குறவங்க எல்லாரும் தண்ணியடிக்கலாம்னு நான் சொல்லலையே...//

// இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...//

அப்போ அவங்க தண்ணி அடிக்குரது மட்டும் மன்னிக்கப்படும் ? இல்லையா தல :-))

க.பாலாசி said...

//கார்த்திக் said...
அப்போ அவங்க தண்ணி அடிக்குரது மட்டும் மன்னிக்கப்படும் ? இல்லையா தல :-))//

என்னால் மட்டிலும் கூட இருக்கலாம்.

உங்களாலும் முடிந்தால்.....

KARTHIK said...

// என்னால் மட்டிலும் கூட இருக்கலாம். //

உங்களால் மட்டிலும் சரி இல்லையா :-))

உங்களாலதான் மன்னிக்கமுடியுதே அப்புறம் எதுக்கு இங்க உங்க வீதி பசங்களப்பத்தி எழுதனும்.
மன்னிச்சு விட்டிருக்கலாமே :-))


நீங்கதான் ஒரு பக்கா இந்தியன்

ஏன்னா இங்க தான் டில்லி,மும்பை,கல்கத்தா...
போன்ற நகரங்கள்ல சரின்னு ஒத்துக்கப்படுற விசையம்,மத்த மாநிலங்கள்,நகரங்கள்ல சட்டப்படி தப்பும்பாங்க :-))

க.பாலாசி said...

//கார்த்திக் said...
உங்களால் மட்டிலும் சரி இல்லையா :-))
உங்களாலதான் மன்னிக்கமுடியுதே அப்புறம் எதுக்கு இங்க உங்க வீதி பசங்களப்பத்தி எழுதனும்.
மன்னிச்சு விட்டிருக்கலாமே :-))//

அந்த பசங்களுக்கும் எங்கப்பா வயசாயிருந்தால், அவராட்டமிருந்தா செய்யலாம்...

// நீங்கதான் ஒரு பக்கா இந்தியன்//

நன்றி தலைவரே, உங்களோட பார்வையும் நல்லாருக்கு...

KARTHIK said...

மொதல்ல என் சந்தேகங்களுக்கு எல்லாம் தொடர்ந்து பதில் சொல்லுரதுக்கு
என் நன்றிகள் தல :-))

// அந்த பசங்களுக்கும் எங்கப்பா வயசாயிருந்தால், அவராட்டமிருந்தா செய்யலாம்...//

அப்பா கடினமா வேலை செய்யுரதாலா மட்டும் அவர் பூஸ்ட்டு எடுத்துக்குரது சரின்னு சொன்னீங்க

அதோ போல கடினமா வேல பாக்குர 4ம் வகுப்பு பாசங்கள

நீங்க சொன்னீங்க கடின உழைப்பாளிய்ய இருந்தா என் பார்வைல மன்னிச்சிருவேன்னு

இப்போ சொல்லுரீங்க உங்க அப்பா வயசா இருந்தான்னு

ஒரு விசையம் தப்புன்னா யாராருந்தாலும் தப்புன்னு தான சொல்லனும்

அது என்ன உங்க அப்பாவுக்குமட்டும் நாயம் மத்தவங்களுக்கு ஒரு நாயாம் :-))

இப்போ அவர் பூஸ்ட் சாப்புட்டு வண்டீல போனா போலீஸ் புடிச்சா வயசு காரணமா விட்டுருவாங்களா தல ?

உங்க பதில் கொஞ்சம் முன்னுக்கு பின் முரனா இல்ல.

// உங்களோட பார்வையும் நல்லாருக்கு... //

சரியாப்போச்சு போங்க அது நல்லா இருந்தா நான் ஏங்க கண்ணாடி மாட்டிகிட்டு திரியுறேன் :-((

க.பாலாசி said...

//மொதல்ல என் சந்தேகங்களுக்கு எல்லாம் தொடர்ந்து பதில் சொல்லுரதுக்கு
என் நன்றிகள் தல :-))//

இரண்டாவதா என் நன்றியும் தலைவரே...ஏன்னா நீங்க கேட்கரதெல்லாம் சந்தேகம்தான்னு சொன்னதுக்கு...

//இப்போ சொல்லுரீங்க உங்க அப்பா வயசா இருந்தான்னு//

அதுக்கடுத்த வரியயையும் சேத்து படிங்க....

//ஒரு விசையம் தப்புன்னா யாராருந்தாலும் தப்புன்னு தான சொல்லனும்

அது என்ன உங்க அப்பாவுக்குமட்டும் நாயம் மத்தவங்களுக்கு ஒரு நாயாம் :-))//

நான் எப்பாவுக்கு மட்டுந்தேன் நாயம்னு சொல்லியிருக்கனாயென்ன?

//இப்போ அவர் பூஸ்ட் சாப்புட்டு வண்டீல போனா போலீஸ் புடிச்சா வயசு காரணமா விட்டுருவாங்களா தல ?//

அது அவங்களப்பொருத்ததுங்க.. அதெப்படி நான் சொல்ல முடியும்.

//உங்க பதில் கொஞ்சம் முன்னுக்கு பின் முரனா இல்ல.//

இல்லியே...

//சரியாப்போச்சு போங்க அது நல்லா இருந்தா நான் ஏங்க கண்ணாடி மாட்டிகிட்டு திரியுறேன் :-((//

கண்ணாடியோடத்தான் சொன்னேன்.

KARTHIK said...

// இருந்தாலும் அவரின் செய்கை மன்னிக்கத்தக்கது (என்னால் மட்டிலும்கூட இருக்கலாம்). பகற்பொழுதினில் உழைத்து உடல்வலுவை வியர்வைகள் வெளிக்கொணர்வதால் அவருக்கந்த இளைப்பாற்றல் தேவைப்படலாம்...//

நீங்க அவரின் சொன்னது உங்க அப்பாவைனு நெனச்சுட்டேன் தல

அப்போ அந்த அவர் யாரு ?

சரி அவர் வயதைசார்ந்த ஆட்கள்னு வெச்சுக்குவோமே
கரண்ட்ட யார் தொட்டாலும் சாக் அடிக்கத்தான செய்யும் அது சின்னவங்க பெரியவங்க பேதம் இல்லையே

இது முரன் இல்லையா

அப்போ தப்பு எங்க இருக்கு நமக்கு ரோல் மாடல இருக்க வேண்டிய பெரியவங்ககிட்ட தான்

சோ உங்க வருத்தம் கோபம் கடுப்பு...எல்லாத்தையும் காட்ட வேண்டியது அந்த பெரியவர பாத்து தான.அத விட்டுபுட்டு அந்த சின்னப்பசங்கள் குத்தம் சொல்லுரது நியாமில்லைனு எனக்குபடுது.

//இப்போ அவர் பூஸ்ட் சாப்புட்டு வண்டீல போனா போலீஸ் புடிச்சா வயசு காரணமா விட்டுருவாங்களா தல ?//

// அது அவங்களப்பொருத்ததுங்க.. அதெப்படி நான் சொல்ல முடியும்.//

இது பதில் இல்லையே தல
விடுவாங்கள விடமாட்டாங்கள அது தான் என் கேள்வி

KARTHIK said...

என்னப்பொருத்தவரைக்கும் இதுக்கு முன்னாடி இருந்த தகைமுறையைவிட இந்த தலைமுறை ரொம்ப சிறப்பா இருப்பதையே நான் பாக்குறேன்

ஒத்துக்குறேன் முன்னெப்போதும் இல்லாதா அளவைவிட இப்போ மதுவிற்ப்பனை அதிகமாகியிருக்கு
ஆனா குடிக்குர இந்ததலைமுறைல தான் 25 வயசுலையே சொத்துவாங்குராங்க.இதுவே போன தலைமுறை சராசரி சொத்து வாங்கிய வயசு விகிதம் 43 (ஒரு தடவ ஆவில படிச்சது)

போன தலைமுறைகாரங்கல காட்டிலும் இந்த தலைமுறைக்காரங்க சிறப்பாவே இருப்பதா நான் உணர்கிறேன்.
பல உதாரணம் உங்களுக்கு நேர்லையே என்னால காட்டமுடியும்

குடி...நம்ம பாரம்பரியம் கலாச்சாரம் சார்ந்த விசையம்

பாண்டிச்சேரில பல கிராமங்கள் இன்னைக்கும் விருந்தாளிகளுக்கு நாம தண்ணி குடுக்குரமாதிரி அங்க கல் தான் குடுக்குராங்க இத இல்லைனு சொல்லமுடியுமா

தண்ணி அடிப்பது அவனவன் தனிப்பட்ட விசையும் தல

உங்களுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கல அதனால விட்டுட்டீங்க பிடிச்சிருந்தா கண்டினு பண்ணிருப்பீங்க அந்த பய கூடையும் சேந்து ஒருவேள அடிச்சிருக்கலாம் :-))

க.பாலாசி said...

//சரி அவர் வயதைசார்ந்த ஆட்கள்னு வெச்சுக்குவோமே
கரண்ட்ட யார் தொட்டாலும் சாக் அடிக்கத்தான செய்யும் அது சின்னவங்க பெரியவங்க பேதம் இல்லையே
இது முரன் இல்லையா//

இப்பதான் நீங்க மேட்டர புடிக்கிறீங்க. நீங்க சொல்றது மிகச்சரிதான்.

//சோ உங்க வருத்தம் கோபம் கடுப்பு...எல்லாத்தையும் காட்ட வேண்டியது அந்த பெரியவர பாத்து தான.அத விட்டுபுட்டு அந்த சின்னப்பசங்கள் குத்தம் சொல்லுரது நியாமில்லைனு எனக்குபடுது//

அய்யா இதுல பெரியவங்க சின்னவங்க யாரு செஞ்சாலும் தப்பு தப்புதாங்க. எங்கப்பா குடிக்கிறாரு...அந்தளவுக்கு உழைக்கிறாரு சம்பாதிக்கராரு..குடிச்சி அழிக்கிறாரு. எனக்குக்கூட பலநேரங்கள்ல வெறுப்புதான் வரும். இப்டி உடம்ப கெடுத்துக்கிறாரேன்னு. சில நேரங்கள்ல சரி...மனுஷன் மாடா உழைச்சு மடியா தேயிராறு. தான் சம்பாதிச்சத வச்சிதான குடிக்கிறாரு. நான் சம்பாரிக்கறதையும் சேத்து அழிச்சா என்னாலையும் பொறுத்துக்க முடியாதுதாங்க. அவரோட பணம் அவரோட ஒடம்பு சரி...ஆனாலும் குடிச்சி செத்துப்போனாருன்னா எனக்கும் வருத்தமாத்தாங்க இருக்கும். எங்க தாத்தன் உழச்சி செத்தாரு...எங்கப்பாரு குடிச்சி செத்தாருன்னு சொல்றதுக்கு எந்த மவனுக்கும் விரும்பம் இருக்காதுங்க...எனக்கும்...

இந்த தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்னு சொல்லுவாங்களே. அதுமாதிரி...நீங்க 16 வயசுல ஆரம்பிச்சீங்க...இன்னிக்குவரைக்கும் ஒரு கண்ணியத்தோட இருக்கீங்கன்னு நெனைக்கிறேன்(???) கிராமத்து பக்கமுல்லாம் அப்டி இல்லீங்க. கிராமத்துல ஒரு பய சினன வயசுலேயே குடிக்க ஆரம்பிச்சான்னா அவன் வளந்து பெரியவனாயி நாசமாத்தாங்க போறான். இது எங்க கிராமத்துலயும் நடக்குறதுங்க. என்னோட நண்பனும் அப்டித்தாங்க என் கண்முன்னாடியே ரத்த வாந்தியெடுத்தான். அவனும் வாரம் ரெண்டுமொறத்தான் சாப்பிடுவான். பஃட்... அதுக்காக எல்லாரும் அப்டித்தான்னு நானும் சொல்லலைங்க. நான் முகிலனுக்கு போட்ட பதிலூட்டத்தப்பாத்தீங்கன்னா தெரியும்.

ரோல் மாடலா பெரியவங்கள்ட எடுத்துக்க நல்ல விசயங்க நெறய இருக்குங்க... (எப்பாரு பாத்து நான் வீணாப்போவலையே..)

க.பாலாசி said...

//என் கண்முன்னாடியே ரத்த வாந்தியெடுத்தான்.//

ஆனாலும் சாவல...மாறிட்டான்.

க.பாலாசி said...

//ஒத்துக்குறேன் முன்னெப்போதும் இல்லாதா அளவைவிட இப்போ மதுவிற்ப்பனை அதிகமாகியிருக்கு
ஆனா குடிக்குர இந்ததலைமுறைல தான் 25 வயசுலையே சொத்துவாங்குராங்க.இதுவே போன தலைமுறை சராசரி சொத்து வாங்கிய வயசு விகிதம் 43 (ஒரு தடவ ஆவில படிச்சது)//

நீங்க சொல்றதுல்லாம் நகரப்பார்வையாவே இருக்கு தலைவரே...கிராமங்கல்ல இந்த நெலம 75 சதத்துக்குமேல தலைகீழத்தான் இருக்கு.

//உங்களுக்கு அந்த டேஸ்ட் பிடிக்கல அதனால விட்டுட்டீங்க பிடிச்சிருந்தா கண்டினு பண்ணிருப்பீங்க அந்த பய கூடையும் சேந்து ஒருவேள அடிச்சிருக்கலாம் :-))//

இதுல டேஸ்ட்ன்னு இல்ல...ஒரு பகுத்தறிவாதிக்கு சாமி கும்புடுறது எப்டி புடிக்காதோ அப்டித்தான்.

KARTHIK said...

சரி உழைச்சாலும் குடிப்பது தப்புதான்னு சொல்லுரீங்க இப்போ இல்லையா

தல மூளப்பாளையம் ஒன்னும் பெரிய டவுன் இல்லை அதுவும் கிராமம் தான் :-))

முகிலன் சொன்னதுக்குதான் நான் வழிமொகிறேன்னு சொல்லிறுக்கேன்
அதையும் பாருங்க தல

ஒருத்தன் குடிச்சு வீனாப்போரான்னா அதுக்கானா காரணத்த பாத்தீங்கன்ன போதைக்கு அடிமையானவங்கள விட
தன்னோடா பிரச்சனைகள்ல இருந்து விடுபட ஒரு மாற்றுவழியாத்தான் அதை தேர்ந்தெடுத்திருப்பாங்க.
போதைக்கு ஆசைபட்டு போரவங்க கத வேற அவங்க அளவு பாத்தீங்கன்ன மொத்த குடி மக்கள் தொகைல ஒரு 5% இருக்குமா.அவங்கள ஒன்னும் பண்டமுடியாது.

க.பாலாசி said...

//கார்த்திக் said...
சரி உழைச்சாலும் குடிப்பது தப்புதான்னு சொல்லுரீங்க இப்போ இல்லையா//

இதை படிக்கவும்....
//அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.//

KARTHIK said...

// நீங்க சொல்றதுல்லாம் நகரப்பார்வையாவே இருக்கு தலைவரே...கிராமங்கல்ல இந்த நெலம 75 சதத்துக்குமேல தலைகீழத்தான் இருக்கு.//

நாம பேசுரது நம்மமாதிரி இருக்க நடுத்தவர்க்கத்த பத்தி சரியா

நடுத்தர வர்க்கத்துக்கு கிராமம் நகரம் எல்லாம் ஒன்னு தான்

கிராமங்கள் எவ்வளவு முன்னேற்றம் அடஞ்சிருக்கு ஐடி கம்பெனிகள்ல சரிபாதி கிராத்தவர்களும் வேலை பாக்குராங்க.வசிப்பது கிராமா இருந்தாலும் வேலைக்கு நகரத்துக்கு தான பெரும்பாலும் போராங்க.
என் அக்கா இருப்பதும் பஸ் வசதி கூட இல்லா ஈரோட்டுக்கு பக்கத்துல இருக்க கிராமம் தான்.அங்க எனகுத்தெரிஞ்சு ஒரு பயளும் குடிப்பதில்லை.டாஸ்மார்க்கும் நகரத்தில் தான் அதிகம்.கிராம கெடலை நல்லா இருக்கு எல்லா விசையத்திலும் :-))

// இதுல டேஸ்ட்ன்னு இல்ல...ஒரு பகுத்தறிவாதிக்கு சாமி கும்புடுறது எப்டி புடிக்காதோ அப்டித்தான்.//

எப்புடி இன்றைய திராவிட பகுத்தறிவுவாதிகள் மாதிரியா :-))

எனக்கு கடவுள் பக்தி அதிகமா இருக்கு தல.அதனால தான் உங்கள மாதிரி பகுத்தறிவு இல்லாம போச்சோ ??????

க.பாலாசி said...

//தல மூளப்பாளையம் ஒன்னும் பெரிய டவுன் இல்லை அதுவும் கிராமம் தான் :-))//

ஏங்க மூலப்பாளையம் கிராமம்னா...அக்கரப்பட்டி, கல்பாவியெல்லாம் (எனக்கு தெரிஞ்சது) என்னன்னு சொல்லுவீங்க... நானும்தான் சொல்லுவேன் ஈரோடுகூட வளர்ச்சியடைந்த கிராமம்னு...

KARTHIK said...

//அவரின் செய்கையை ஒத்துக்கொள்கிறது தவறுதானென்றாலும்.//

அப்போ அவர் சரக்குல வண்டில போனா போலீசாரால் ஒத்துக்கொள்ளப்படும் இல்லை

இதுக்கும் அவிங்கவிங்கள பொருத்துன்னு சொன்னா
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-))

க.பாலாசி said...

//ஒரு பயளும் குடிப்பதில்லை.//

சந்தோசம்தானுங்களே...

//டாஸ்மார்க்கும் நகரத்தில் தான் அதிகம்//

அதிகம்...

க.பாலாசி said...

//எப்புடி இன்றைய திராவிட பகுத்தறிவுவாதிகள் மாதிரியா :-))//

பெரியார் மாதிரின்னு வச்சிக்குங்களேன். அவரும் திராவிடம்தானே...(எனக்குத்தெரிஞ்ச நல்ல பகுத்தறிவாதி இவருதானுங்க)

க.பாலாசி said...

//அப்போ அவர் சரக்குல வண்டில போனா போலீசாரால் ஒத்துக்கொள்ளப்படும் இல்லை

இதுக்கும் அவிங்கவிங்கள பொருத்துன்னு சொன்னா
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :-)) //

நீங்கயேன் அவர வண்டியில ஏத்துறீங்க... நடக்கவிடுங்க தலைவரே... குடிக்கிறவங்கல்லாம் வண்டியிலத்தான் போவனும்னு இருக்காயென்ன??

KARTHIK said...

// அக்கரப்பட்டி, கல்பாவியெல்லாம் (எனக்கு தெரிஞ்சது) //

கிராமம்ன உங்களுக்கு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் கிராமம் தான்

இன்னைக்கும் என் வீட்டை ஒட்டிய நிலம்லாம் விவசாய நிலங்கள் தான் என் மாமா முதலிய சொந்தங்கலோட பிரதான தொழில் மூளப்பாளையத்துல இப்போவரைக்கும் எல்பிபி பாசனம் நடக்குது

ஞாயித்துகெழம எங்க கச்சேரியா குச்சிக்காட்ட ஒட்டிய கெணத்தடியத்தான் வேணா வந்து பாத்துபோட்டு சொல்லுங்க :-))

இங்க கமண்டிருக்கா மேல் பதிவருங்கள்ல பெரும்பாலனவங்க எந்த வெரைட்டின்னு என்னவிட உங்களுக்கு நல்லா தெரியும்

அவங்களாம் என்ன கொறஞ்சுபோயிட்டாங்க.
அங்க எப்போ ஆரம்பிச்சாங்கன்னு கேளுங்க தெரியும் சேதி :-))

@ Romeo boy

நம்ம மொதல் சந்திப்பு எங்க தல.

க.பாலாசி said...
This comment has been removed by the author.
க.பாலாசி said...

//ஒருத்தன் குடிச்சு வீனாப்போரான்னா அதுக்கானா காரணத்த பாத்தீங்கன்ன போதைக்கு அடிமையானவங்கள விட
தன்னோடா பிரச்சனைகள்ல இருந்து விடுபட ஒரு மாற்றுவழியாத்தான் அதை தேர்ந்தெடுத்திருப்பாங்க.//

பொதுவா சொல்றதுக்கு மன்னிக்கனும்.... நீங்களும் உங்க நண்பரும் இந்த மேலவுள்ள மேட்டராலத்தான் குடிக்கிறீங்களா இல்ல, அந்த 5சதவீதத்துல வர்றீங்களா?

அப்பறம் மாற்று வழின்னா இதுவொன்னுதானுங்களா வேறயெதாவது இருக்குங்களா??

க.பாலாசி said...

//அவங்களாம் என்ன கொறஞ்சுபோயிட்டாங்க.
அங்க எப்போ ஆரம்பிச்சாங்கன்னு கேளுங்க தெரியும் சேதி :-))//

சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம்...இது எனக்கும் பொருந்தும்....

KARTHIK said...

// குடிக்கிறவங்கல்லாம் வண்டியிலத்தான் போவனும்னு இருக்காயென்ன?? //

தல இது விதண்டாவாதம் :-))

நாளைக்கு மாட்டாஸ்ப்த்திரிகிட்ட இருக்க டிராபிக் ஸ்டேசன்கிட்ட வாங்க பதி இன்ஸ்பெக்டர் இருப்பார்
தண்ணியடிச்சு வண்டி ஓட்டுன பெரியவங்க (கடும் உழைப்பாளிகள்)லிஸ்ட் நான் வாங்கித்தறேன்.
அவங்கலாம் ஏன் வண்லபோறான்னு அவங்களையே நீங்க கேட்டுக்கலாம் :-))

க.பாலாசி said...

//கார்த்திக் said...
கிராமம்ன உங்களுக்கு தெரிஞ்சாலும் தெரியாட்டாலும் நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் கிராமம் தான். இன்னைக்கும் என் வீட்டை ஒட்டிய நிலம்லாம் விவசாய நிலங்கள் தான் என் மாமா முதலிய சொந்தங்கலோட பிரதான தொழில் மூளப்பாளையத்துல இப்போவரைக்கும் எல்பிபி பாசனம் நடக்குது//

சரிங்க தலைவரே...உங்களுக்குத்தான் தெரியும் உட்புறம். என் பார்வை மேம்போக்கா இருக்கலாம்...ஒத்துக்குறேன்.

சரி விடுங்க...படிக்கிற வயசுல குடிக்கிறது சரியா?? தப்பா??

KARTHIK said...

// பொதுவா சொல்றதுக்கு மன்னிக்கனும்.... நீங்களும் உங்க நண்பரும் இந்த மேலவுள்ள மேட்டராலத்தான் குடிக்கிறீங்களா இல்ல, அந்த 5சதவீதத்துல வர்றீங்களா?//

சரியாக்கேட்டிருக்கீங்க

இதுக்கு என்கிட்ட மலுப்பலான ப்தில் தான் இருக்கும் :-))

மேல நான் சொன்னது சதாசர்வகாலமும் போதைல இருப்பவங்கள பத்தி

நான் கரூர் நவலடி மருத்துவமனைல 2 வாரம் ஒரு உறவினர்க்கா உடன் இருந்தேன்.அங்க எனக்கானா அனுபவம்....

பெரும்வாரியா சுய பிரச்சனைகலாலையா குடிய நாடிருக்காங்க,அடுத்தகட்டம் மனச்சிதைவு இல்ல தற்க்கொலை இதுக்கு தண்ணி எவ்வளவோ தேவலை சில கவுன்சிலிங்கல மனம் மாற்றம் அடையராங்க

சரி எங்க பசங்கள பாத்தீங்கன்னா

பெரும்பாலும் மாசம் இரண்டு தடவையோ மூனு தடவையோ பயன்படுத்துறோம்.அது எதுக்குன்னு தெரியாதா வய்சுலையே ஆரம்பிச்சாச்சு அதனால ஒரு தொந்தரவும் இல்லை எல்லாரும் மனசுவிட்டு பேசுவோம்
போதைக்கான்னு யாரும் குடிகுரதில்லை
வேணா நீங்க அடுத்தவாரம் வ்ந்து எங்க கூட ஒரு ஜமா சேந்து பாருங்க
படிக்குரவன்ல இருந்து என்னிப்போல கைனாட்டு கேஸ்வரைக்கும் எல்லாம் ஒரே குட்டைல தான் மிதப்போம் :-))


60 பேர் கொண்ட எங்க கூருப்ல ஒரு 7,8 பேர் குடிக்காம இருந்தா பெரிய விசையம் தான்
அவனும் இப்போ சமீபத்துல விட்டவனாத்தான் இருப்பான்

ஒருத்தன் கூட வீணா போகலை

KARTHIK said...

மறுபடியும் மொதல்லிருந்தா.......

// சரி விடுங்க...படிக்கிற வயசுல குடிக்கிறது சரியா?? தப்பா?? //

தப்பில்லை
அது அவன் தனிப்பட்ட விசையம்
தண்ணியடிச்சதுக்காக அவன் தம்புட வீட்டு பதில பக்கத்தூட்டுக்கா போகப்போறான் :-))
அவனுக்கும் நல்லது கெட்டது எல்லாந்தெரியும் தல
சொல்லப்போனா எனக்கு 20 வயசுல தெரிஞ்ச விசையமெல்லாம் இன்னைக்கும் 10 வயசு பசங்களுக்கு தெரியுது

அவங்க நம்மல விட புத்திசாலிங்க

+1 ல என்ன குரூப் இருக்குன்னே எனக்கு தெரியாது ஆனா 7 வது படிக்கும் மாணவன் வருங்காலத்துல என்னாவாகனும் அதுக்கு எத எல்லாம் படிக்கனும்னு தெளிவா இருக்காங்க

KARTHIK said...

// சாம்பலைத்தின்று, வெளியே வெண்ணைகளை பூசிக்கொள்ளும் சக மனிதர்களையும் நம் கண்கள் அவ்வப்போது உள்ளிடுகைச்செய்யும்போது ஏற்கிறோமோ அல்லது ஏற்றுகிறோமோ ஆயினும் கடந்துவிடுகிறோம் அல்லது கடத்திவிடுகிறோம்...இது எனக்கும் பொருந்தும்.... //

சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல

கவிஞரே நான்லாம் அவ்வளவு ஒர்த் இல்ல தல :-))

க.பாலாசி said...

//மேல நான் சொன்னது சதாசர்வகாலமும் போதைல இருப்பவங்கள பத்தி//

எப்போதும் போதையிலேயே இருக்கவங்களுக்கு நீங்க சொல்ற மாதிரியான காரணங்கள்தான்னு என்னால ஏத்துக்க முடியலங்க...

//அவனுக்கும் நல்லது கெட்டது எல்லாந்தெரியும் தல //

இருந்துட்டு போகட்டும். அதாவது தன்னோட சுயபுத்தியால தன்னால அது இல்லாமலும் வாழமுடியும்ங்கற நம்பிக்க இருக்குறவன் சர்வ காலமும் சாப்பிட்டாலும் ஏதோவொரு கட்டத்துல நிறுத்திக்கிறான். அது முடியாம பைத்தியமா திரியர நெலமையில வாழுறவங்களும் இருக்கத்தான செய்யுறாங்க.

//பெரும்வாரியா சுய பிரச்சனைகலாலையா குடிய நாடிருக்காங்க,அடுத்தகட்டம் மனச்சிதைவு இல்ல தற்க்கொலை இதுக்கு தண்ணி எவ்வளவோ தேவலை சில கவுன்சிலிங்கல மனம் மாற்றம் அடையராங்க//

எப்டியிருந்தாலும் சாவத்தான் போறோம்... மறுக்கல... அதுக்காக சரக்கடிச்சு சாவலாங்கறீங்களா?

//தப்பில்லை
அது அவன் தனிப்பட்ட விசையம்
தண்ணியடிச்சதுக்காக அவன் தம்புட வீட்டு பதில பக்கத்தூட்டுக்கா போகப்போறான் :-))//

இல்லதான். அப்டின்னா நீங்கயேன் வீட்டுக்கு தெரியாம 14 வருசமா தண்ணியடிக்கிறீங்க..தெரிஞ்சே செய்யலாமே. தனிப்பட்ட விசயம்தானே.

KARTHIK said...

// எப்டியிருந்தாலும் சாவத்தான் போறோம்... மறுக்கல... அதுக்காக சரக்கடிச்சு சாவலாங்கறீங்களா? //

அப்போ நாங்களாம் என்ன செத்தா போயிட்டோம்

// இல்லதான். அப்டின்னா நீங்கயேன் வீட்டுக்கு தெரியாம 14 வருசமா தண்ணியடிக்கிறீங்க..தெரிஞ்சே செய்யலாமே. தனிப்பட்ட விசயம்தானே.//

உங்கள மாதிரி ஆட்கள் அவங்க அதனால தான்

ரண்டாவது அது என் தனிப்பட்ட விசையம் இப்போ வரக்கும் நான் என்ன தொழில் பண்ணுறேன்னே அவங்களுக்கு தெரியாது :-))
அப்புறம் இது மட்டும் எங்க தெரியப்போகுதுங்க

நான் இதப்பண்டுவேன் அதப்பண்டுவேன்னு எல்லார்க்கிட்டையும் யாரும் எதையும் சொல்லிகிட்டு சுயதம்பட்டம் அடிக்குரதில்லை இல்லையா :-))

யார் யார்கிட்ட எத சொல்லனுமோ அதமட்டுமே செய்யுறோம் :-))

சரி உங்க தாத்தா கடின உழைப்பாளி
எந்த கெட்டபழக்கமும் இல்லாதவர்னு நீங்க சொன்னீங்க
அவ வளர்த்த உங்க அப்பா ஏன் சரக்கடிக்குரார்
சரி அவர் வளப்பானா நீங்க என்ன கொறஞ்சு போயிட்டீங்க
சொல்லப்போனா உங்க தாத்தவை விட உங்க அப்பா மேலனவர் இல்லையா
அவர் தன்னோட கடமைல எந்த குறையும் வெச்சமாதிரி தெரியலையே
நான் பாத்தா சிறந்த மனிதர்கள்ல நீங்களும் ஒருத்தர்
நம்மூர் வலைபதிவர் கூட்டத்துல உங்க பங்களிப்பு என்ன சாதரணமானதா வெளிய பெருசா அறியப்படாம போயிட்டீங்க

அவ்வலவு பெரிய ஆளுமையா நீங்க வளத்தப்பட்டிருக்கீங்க

மறுக்காளுஞ்சொல்லுறேன் இந்தக்காலத்து பசங்க நம்மள விட ரொம்ப வெவரமானவங்க

யாரைப்பாத்தும் கவலைப்பட்டும் எந்தப்பயனும் யாருக்கும் இல்லை

உங்களோட அந்த அனுதாபம் யாருக்கும் தேவையும் இல்லை :-))

உங்களுக்கு ஒரு ஞானம் வந்து விட்டது மாதிரி அவனுங்களும் ஒரு நாள் விடலாம்.இல்ல தொடரலாம்

இளைய சமுதாயத்துக்கு நீங்க எதாவது செய்யனும்னு நெனைக்குரீங்களா.இந்தமாதிரியா இலவசமா அட்வைஸ் பண்ணுரத விட்டுட்டு பிராக்டிகலா எதாவது செய்யப்பாருங்க :-))
இது அட்வைஸ் இல்ல உங்க பதிவுக்கானா என் கருத்து

எந்த ஒரு விசையத்தையும் துரியோதனனா பாத்தா எல்லாருமே கெட்டவனாத்தான் தெரிவான்
கொஞ்சம் தர்மரோட பார்வைலையும் பாருங்க
எல்லாமே சரியாத்தான் தெரியும்.

க.பாலாசி said...

//உங்களோட அந்த அனுதாபம் யாருக்கும் தேவையும் இல்லை :-))//

ஏங்க தலைவரே தாங்களால் ‘பக்கா இந்தியன்’னு புகழப்பட்ட ஒருத்தனுக்கு அனுதாபப்பட உரிமையில்லையா என்ன???

//இந்தமாதிரியா இலவசமா அட்வைஸ் பண்ணுரத விட்டுட்டு பிராக்டிகலா எதாவது செய்யப்பாருங்க :-))//

தலைவரே நான் எங்கயாவது இங்கண அட்வைஸ் பண்ணியிருக்கனா.

//உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது//

இதுதாங்க என்னோட இடுகையே...மறுபடியும் நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லிங்க...அப்டின்னீங்கன்னா.........

இது வந்து என்னோட வருத்தம்தானுங்க... அதநான் பகிர்ந்திருக்கேன் அவ்வளவே...இதில் அட்வைஸ் இல்லை...

KARTHIK said...

// ‘பக்கா இந்தியன்’னு புகழப்பட்ட ஒருத்தனுக்கு அனுதாபப்பட உரிமையில்லையா என்ன??? //

கடின வேல செஞ்யுரவங்க குடிக்கலாம்னு நீங்க சொன்னது சொன்னேன் இல்லை :-))

இடத்துக்கிடம் உங்க கருத்து மாறுபட்டதால சொன்னேன்
இதுக்கு பேர் தான் முரன்பாடு :-))

இதுல அனுதாப்பட ஒன்னும் இல்லைனுதான் சொல்லுறேன்

//உள்ளத்து ஆளுமைகளை ஆசுவாசப்படுத்தி அமர்த்திவிட்டு, அதனுள் படிந்திருக்கும் கசடுகளை அவ்வப்போது அகற்றவேண்டிய கட்டாயம் எனக்கும் இருக்கிறது//

அது நீங்க எதவேணாலும் அகற்றலாம்,அகத்தினுள் புகுத்தலாம்
ஆனா சப்பமேட்டருக்கெல்லாம் அனுதாப்படக்கூடாது

மறுக்காளுஞ் சொல்லுறேன்

நீங்க தான் ஒரு பக்கா அக்மார்க் இந்தியன்
உங்களுக்கு சப்ஸ்டியுட்டே கிடையாது
நீங்க தான் ஒரிஜினல் :-))

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO