க.பாலாசி: அது சரி..

Friday, January 29, 2010

அது சரி..


அன்னியிலேர்ந்து இன்னிக்கு வரைக்கு இந்த பொம்பளப்புள்ள பொறந்ததுன்னா மட்டும் நம்மாளுங்களுக்கு ஏனோ கஷ்டமாத்தான் இருக்கு. அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல பொட்டப்புள்ள பொறந்தாமட்டும் அப்பங்காரன்லேர்ந்து மாமியாக்காரி வரைக்கும் கழுத்துஒருதடவயாவது கோணிக்காட்டுது. கிராமத்துல ஒரு பயக்கம் உண்டு. என்னன்னா கொளவி (குளவிப்பூச்சி) மண்கூடு கட்டுச்சினாக்கா வூட்டுல இருக்குற நெறமாசக்காரிக்கு பொட்டப்புள்ளதான் பொறக்கும்னு. இல்லன்னா அடிவயிறு பெருசாயிருக்கும்னு சொல்லுவாங்க. அப்பயிலேர்ந்து இதுங்க மனசத்தேத்திக்க ஆரம்பிச்சிடுங்க. ஆனாலும் பெரசவம் ஆவுறப்ப பொண்ணப்பெத்த ஆத்தாக்காரியத்தவர மத்த யாருக்கும் ஒரு சொரத்தையே இல்லாம யெழவு ஊட்டுக்கு வந்த மாதிரிமூக்க சிந்திக்கிட்டுதான் நிப்பாங்க. புருஷங்காரனுக்கு இதுகளுக்கு டீயும் பண்ணும் வாங்கியாந்தே நொந்துபோயி நிப்பான்.

பொறந்த ஆறுமாசக் கொழந்தைய மடியில வச்சிகிட்டு இந்த மாமியாக்கார கெழவி சும்மாயிருக்கும்கிறீங்களா? ம்ம்...‘மொதல்லத்தான் பொட்டையாப்போச்சு. அடுத்ததாவது பேர்சொல்றமாதிரி ஆம்பளையா பொறக்குதான்னு பாக்கும்’னு மொவங்காரன் காதுல உழுவுறமாதிரி சொல்லிகிட்டே இருக்கும். இந்த பயபுள்ள சுழி சும்மா இருக்குமா?... ம்ம்கூம். அதுலேர்ந்து பயபுள்ள மந்திரிச்சிவுட்ட மாதிரியே சுத்தி.... ஒருவழியா மொதப்புள்ள பால (பால்) மறக்குறத்துக்குள்ள ரெண்டாவதா... பாலும் பழமும் கைகளில் ஏந்தி, மசக்கையில் மவ எடுப்பாலேவாந்தி. இப்பிடியே ஆயி..ஆயி...கடைசியா அஞ்சாம் பொண்ணோட வந்து நிக்கும். அதுக்கப்புறம்ஸ்டாப் த மியூசிக். ஏன்னா அஞ்சாவதா பொண்ணு பொறந்தா அரசாளுமாம். ஆறாவதா அதுவேபொறந்தா அப்பங்காரன் ஆண்டியாயிடுவானாம். (அஞ்சு பொறந்த பெறவும் அவன் ஆண்டிதான்). இங்கத்தான் அதுங்களுக்கு ‘பொதுநலனே’ எட்டிப்பாக்கும். எத்தனக் கோயில் கொளம் ஏறிஎறங்குனாலும் செலப்பேருக்கு இப்டித்தான் வாய்க்குது.

‘அஞ்சுப்பொண்ணு பெத்த மவராசன்னு’ போறவங்க வரவங்கல்லாம் அந்த பயபுள்ளைக்கு கொடுக்கரபட்டம்போக வேறவொன்னும் மிச்சங்கெடையாது. காலம்புல்லா ஒழச்சி, ஒழச்சி ஓடாதேஞ்சிபோறதுதான் அவனுக்கு மிச்சமா இருக்கும். எனக்குத்தெரிஞ்சி என் வூருல ஒரு கிராமநிர்வாக அதிகாரிக்கு 4 பொண்ணுங்க. அதுங்க நண்டு சிண்டா இருக்குறப்ப அவரோட எம்80 வண்டியில எல்லாத்தையும் அள்ளிப்போட்டுகிட்டு பொண்டாட்டியையும் கூட்டுட்டுப்போற அழகுஇருக்கே....அடடா... குடும்ப கட்டுப்பாட்டுக்கு வௌம்பரம் கொடுத்த கணக்கா சும்மா சூப்பராஇருக்கும்.

இதுமாதிரி அஞ்சுப்பொண்ணுங்கள பெத்த மவராசங்க ரெண்டுபேரு அக்கம் பக்கத்துல இருக்காங்க. இரண்டுபேருமே அஞ்சையும் கட்டிகொடுத்துட்டாங்க (கல்யாணம்). அதுல ஒருத்தரு பழக்கடக்காரு, இன்னொருத்தரு மாட்டு வண்டி ஓட்டுறவரு. இதுல மாட்டு வண்டிக்காரு பாடுதான்திண்ணடாட்டமானுது. கடைசியா குடியிருந்த குச்சியையும் வித்துதான் கடக்குட்டியகட்டிக்கொடுத்தாரு. இதோட முடிஞ்சா போயிடும்?? இந்த ‘கொண்டான் கொடுத்தான்’ ஒறவுஇருக்கே... அப்பப்பா...அயிரத்தெட்டு சிக்கல் உள்ளதுங்க. வாழ்வு, சாவு, நல்லது கெட்டது இப்டி என்னயெழவுன்னாலும் பொண்ணு குடுத்தவன் போயி முன்ன நிக்கனும். இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமையாயிடும். இதுல எத்தனப்பொண்ணபெத்தாலும் ஆடாம அசையாம குத்துக்கல்லாட்டம் குடும்பம் நடத்துற மவராசனுங்களும்இருக்கத்தான் செய்யுறாங்க. இருந்தாலும் ஆசயப்பாருங்களேன். அது கடக்கட்டும் நமக்கு அந்த வயித்துவலி வரும்போது பாக்கும் எத்தனன்னு.

இப்ப வர்ரவங்கல்லாம் கொஞ்சம் பரவாயில்ல. மொதல்லையே பொண்ணு பொறந்தாலும் மியூஸிக்க ஸ்டாப் பண்ணிட்டு, இதுக்கு பாட்டு எழுதுனா போதும்னுட்டு விட்டுடுறாங்க. இந்த அரசாங்கத்துல முக்கோணமா ஒரு வௌம்பரம் அங்கண, இங்கண எழுதி வச்சிருப்பாங்க... அதையும் இப்ப காணல. படுபாவிங்க அதுமேலத்தான நமிதா போஸ்ட்டர சைஸ் பாத்து ஒட்டிவச்சிடுறாங்களே. அதுசரி...ஞாயிறும் திங்களும் நாளைக்குதான தெரியும்.


45 comments:

அகல்விளக்கு said...

யப்பே....

செம ஆராய்ச்சியா இருக்கே...

அகல்விளக்கு said...

///புருஷங்காரனுக்கு இதுகளுக்கு டீயும் பண்ணும் வாங்கியாந்தே நொந்துபோயி நிப்பான். //

பாத்துக்கங்க அண்ணா..

நாளப்பின்ன இந்த மேட்டரு நம்மளுக்கும் நேரலாம்..

:-(

காமராஜ் said...

நல்லா இருக்கு தோழா பதிவு.
பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட கேட்டகுரல் பதிவாகியிருக்கு.
அந்த நமீதா, அவங்க சைசுக்கு அதிகமாத்தான் ஆளாளுக்கு தாக்றீங்க.

அகல்விளக்கு said...

///ஸ்டாப் த மியூசிக்.//

இப்பல்லாம் மக்கள் உசாரு அண்ணா..

இரண்டாவது பொண்ணோடயே இப்பல்லாம் மியூசிக்க ஸ்டாப் பண்ணிடராங்க...

அகல்விளக்கு said...

//மக்களே...

போர்க்கொடி உயரட்டும்....

ஆணாதிக்கவாதி பாலாசியை எதிர்த்து பெண்ணியத்தை நிலைநிறுத்த அணிதிரண்டு வாரீர்...//

அப்படின்னு ஒரு போஸ்ட் - கூடிய விரைவிலேயே பார்க்கப்போறேன்னு நினைக்கிறேன்...

Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது.

ஆசை யாரை விட்டது?

அகல்விளக்கு said...

//படுபாவிங்க அதுமேலத்தான நமிதா போஸ்ட்டர சைஸ் பாத்து ஒட்டிவச்சிடுறாங்களே. //

ஆளாளுக்கு நமிதா மேலயே குற்றம் சாட்டுகிறீர்களே...

ஜனத்தொகைக்கும் அவியளுக்கும் என்ன தொடர்பு...??

நமிதா ரசிகர்கள் யாராவது சொல்வீர்களா???

Paleo God said...

ஆடாம அசையாம குத்துக்கல்லாட்டம் குடும்பம் நடத்துற மவராசனுங்களும்இருக்கத்தான் செய்யுறாங்க. இருந்தாலும் ஆசயப்பாருங்களேன். அது கடக்கட்டும் நமக்கு அந்த வயித்துவலி வரும்போது பாக்கும் எத்தனன்னு.
//

விளையாட்டா சொன்னாலும்..:(
ரொம்ப சுலபமா, பயமில்லாத மாதிரி நடிக்கிறா மாதிரி, கடந்து போய்ட்டேதான் இருக்காங்க..எல்லாரும்.:)

vasu balaji said...

அடியேன்னு கூப்பிட பொண்டாட்டி வரமுன்ன அஞ்சாவது பொண்ணுக்கு பேரு தேடின கதையால்ல இருக்கு. நீ மொத பத்திரிகை குடு தம்பி. பொறவு படலாம் இந்தக் கவலையெல்லாம்:))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லா சொன்னீங்க.

கார்த்திகைப் பாண்டியன் said...

சீரியசான விஷயத்த சிரிச்சுக்கிட்டே சொல்லி இருக்குற விதம் நல்லா இருக்கு பாலாஜி..:-))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

பேச்சுத்தமிழ் சுலுவா வருது பாலாசி உங்களுக்கு...!

பழமைபேசி said...

நன்று, பாலாசி!

கண்மணி/kanmani said...

படுபாவிங்க அதுமேலத்தான நமிதா போஸ்ட்டர சைஸ் பாத்து ஒட்டிவச்சிடுறாங்களே. அதுசரி...ஞாயிறும் திங்களும் நாளைக்குதான தெரியும். //

:))

நடை பேச்சு நடையோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present sir

அரசூரான் said...

அந்த முந்திரிகொட்ட "குளவிபூச்சி"ய கொல்லோனும், அத பார்த்தோன்ன "கிழவிபேச்சி"ய (மியூஜிக்க) ஸ்டார்ட் ப்ண்ணிடுத்து... :)

sathishsangkavi.blogspot.com said...

அது சரி...

உங்களுக்கு பார்த்த பொண்ணு 4வது பொண்ணோ?

செ.சரவணக்குமார் said...

நல்ல நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.

Jerry Eshananda said...

நமீதாவை வம்புக்கு இழுக்க வேண்டாம்,[ உங்களால இழுக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் சொல்றேன்.]

சந்தனமுல்லை said...

:-)))) கலக்கலா எழுதியிருக்கீங்க!
போறபோக்குலே /இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமையாயிடும்./ நச்'னு சொல்லீட்டீங்க...

/இப்ப வர்ரவங்கல்லாம் கொஞ்சம் பரவாயில்ல. மொதல்லையே பொண்ணு பொறந்தாலும் மியூஸிக்க ஸ்டாப் பண்ணிட்டு, இதுக்கு பாட்டு எழுதுனா போதும்னுட்டு விட்டுடுறாங்க./

:-))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது சரி :)

ஹேமா said...

பாலாஜி...இப்பவே யோசிக்கத் தொடங்கிட்டீங்க.உங்க பொழைப்பு நல்லாவே போகும்.வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

காலம் மாறிப்போச்சுங்க..இந்த காலத்திலே அஞ்சு பிள்ளையை அரசனாகலாம் . ஆனனா நம்மளை மாதிரிக்கு ஒன்னு இருந்தா போதுமே......

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அண்ணா சார்.. ரொம்ம
டமாசா கீது..

நல்ல ஆராச்சி பண்ணிப்போட்டிங்க..

< சூப்பரா இருக்கு சார்...>

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல எழுத்து நடை....வாழ்த்துக்கள்

Vidhoosh said...

:))
சிரிச்சுக்கிட்டே சீரியஸ் விஷயமா.

கண்ணகி said...

இந்த ‘கொண்டான் கொடுத்தான்’ ஒறவுஇருக்கே... அப்பப்பா...அயிரத்தெட்டு சிக்கல் உள்ளதுங்க. வாழ்வு, சாவு, நல்லது கெட்டது இப்டி என்னயெழவுன்னாலும் பொண்ணு குடுத்தவன் போயி முன்ன நிக்கனும். இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமைஆகிடும்..

பாலாசி இப்பவாவது தெரிஞ்சுதே.. எங்க பாடு...

யோசிங்க மக்கா.

ஈரோடு கதிர் said...

அட...அட... பின்னிப் பெடலெடுத்துட்ட சாமி..

உங்கிட்டதான் புள்ள பெத்துக்குறத... ச்சீ... இப்படி இடுகை எழுதற கத்துக்கணும் போல இருக்கு

சீமான்கனி said...

ஆட்தி...இம்புட்டு விஷயம் இருக்குதாக்கும்...பலாசி...

க.பாலாசி said...

//அகல்விளக்கு said...

// யப்பே....
செம ஆராய்ச்சியா இருக்கே...//

அடடே கண்டுபிடிச்சிட்டீங்களே...

//பாத்துக்கங்க அண்ணா..
நாளப்பின்ன இந்த மேட்டரு நம்மளுக்கும் நேரலாம்..
:-(//

நாமல்லாம் உசாருல்ல..

// இப்பல்லாம் மக்கள் உசாரு அண்ணா..
இரண்டாவது பொண்ணோடயே இப்பல்லாம் மியூசிக்க ஸ்டாப் பண்ணிடராங்க...//

ஆமங்க...ராசா...

// போர்க்கொடி உயரட்டும்....
ஆணாதிக்கவாதி பாலாசியை எதிர்த்து பெண்ணியத்தை நிலைநிறுத்த அணிதிரண்டு வாரீர்...
அப்படின்னு ஒரு போஸ்ட் - கூடிய விரைவிலேயே பார்க்கப்போறேன்னு நினைக்கிறேன்...//

ஏங்கராசா இந்த வெறி... நன்றி...

//Blogger காமராஜ் said...
நல்லா இருக்கு தோழா பதிவு.
பக்கத்து வீட்டு பாட்டிகிட்ட கேட்டகுரல் பதிவாகியிருக்கு.
அந்த நமீதா, அவங்க சைசுக்கு அதிகமாத்தான் ஆளாளுக்கு தாக்றீங்க.//

மிக்க நன்றி தோழரே... நமக்கு நமிதாதாங்க நல்லா தெரியுது...

//Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
நன்றாக இருக்கிறது.
ஆசை யாரை விட்டது?//

ஆமங்க...வெ.இரா... நன்றி...

//Blogger அகல்விளக்கு said...
ஆளாளுக்கு நமிதா மேலயே குற்றம் சாட்டுகிறீர்களே...
ஜனத்தொகைக்கும் அவியளுக்கும் என்ன தொடர்பு...??
நமிதா ரசிகர்கள் யாராவது சொல்வீர்களா???//

நமக்கு தெரியாததையா அவிங்க சொல்லப்போறாங்க...

//Blogger பலா பட்டறை said...
விளையாட்டா சொன்னாலும்..:(
ரொம்ப சுலபமா, பயமில்லாத மாதிரி நடிக்கிறா மாதிரி, கடந்து போய்ட்டேதான் இருக்காங்க..எல்லாரும்.:)//

உண்மைதானுங்க... நன்றி பலா பட்டறை...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அடியேன்னு கூப்பிட பொண்டாட்டி வரமுன்ன அஞ்சாவது பொண்ணுக்கு பேரு தேடின கதையால்ல இருக்கு. நீ மொத பத்திரிகை குடு தம்பி. பொறவு படலாம் இந்தக் கவலையெல்லாம்:))//

எதுக்குங்க அய்யா...மொட்டையடிச்சு காதுகுத்தர விழாவுக்கா... நான் கொழந்தைங்க...

நன்றி...

//Blogger ஸ்ரீ said...
நல்லா சொன்னீங்க.//

நன்றிங்க அண்ணா..

//Blogger கார்த்திகைப் பாண்டியன் said...
சீரியசான விஷயத்த சிரிச்சுக்கிட்டே சொல்லி இருக்குற விதம் நல்லா இருக்கு பாலாஜி..:-))))))))//

நன்றி கார்த்திகைப்பாண்டியன்...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
பேச்சுத்தமிழ் சுலுவா வருது பாலாசி உங்களுக்கு...!//

நன்றி வசந்த்....

//Blogger பழமைபேசி said...
நன்று, பாலாசி!//

நன்றி அய்யா...

//Blogger கண்மணி said...
:))
நடை பேச்சு நடையோ?//

ஆமங்க..கண்மணி... நன்றி...

//Blogger T.V.Radhakrishnan.. said...
Present sir//

நன்றி டி.வி.ஆர்..

க.பாலாசி said...

//அரசூரான் said...
அந்த முந்திரிகொட்ட "குளவிபூச்சி"ய கொல்லோனும், அத பார்த்தோன்ன "கிழவிபேச்சி"ய (மியூஜிக்க) ஸ்டார்ட் ப்ண்ணிடுத்து... :)//

சரிதாங்க அரசூரான்... பாருங்களேன்... நன்றி ....

//Blogger Sangkavi said...
அது சரி...
உங்களுக்கு பார்த்த பொண்ணு 4வது பொண்ணோ?//

அய்யோ...நான் கொழந்தைங்க... நன்றி சங்கவி...

//Blogger செ.சரவணக்குமார் said...
நல்ல நடையில் அருமையாக எழுதியிருக்கிறீர்கள் நண்பா.//

நன்றி செ.சரவணக்குமார்...

//Blogger ஜெரி ஈசானந்தா. said... நமீதாவை வம்புக்கு இழுக்க வேண்டாம்,[ உங்களால இழுக்க முடியாதுன்னு தெரிஞ்சு தான் சொல்றேன்.]//

அது என்னமோ உண்மைதானுங்க... நன்றி அய்யா...

///Blogger சந்தனமுல்லை said...
:-)))) கலக்கலா எழுதியிருக்கீங்க!
போறபோக்குலே /இல்லன்னா அந்தவூட்டுக்காரவங்களுக்கு இங்கேயிருந்து போனது அடிமையாயிடும்./ நச்'னு சொல்லீட்டீங்க...
:-))))//

நன்றி சந்தனமுல்லை...

க.பாலாசி said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...
அது சரி :)//

அது சரி.. நன்றிங்கக்கா...

//Blogger ஹேமா said...
பாலாஜி...இப்பவே யோசிக்கத் தொடங்கிட்டீங்க.உங்க பொழைப்பு நல்லாவே போகும்.வாழ்த்துக்கள்.//

என்னபண்றது தாயி நம்ம பொழப்பு அப்டி...

//Blogger தாராபுரத்தான் said...
காலம் மாறிப்போச்சுங்க..இந்த காலத்திலே அஞ்சு பிள்ளையை அரசனாகலாம் . ஆனனா நம்மளை மாதிரிக்கு ஒன்னு இருந்தா போதுமே......//

சரிதாங்க அய்யா.. நன்றி கருத்திற்கு...

//Blogger பட்டாபட்டி.. said...
அண்ணா சார்.. ரொம்ம
டமாசா கீது..
நல்ல ஆராச்சி பண்ணிப்போட்டிங்க..
< சூப்பரா இருக்கு சார்...>//

அது யாருப்பா இங்கண சாரு (சார்)...

நன்றி பட்டா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல எழுத்து நடை....வாழ்த்துக்கள்//

நன்றி ஆரூர்...யூத்...

//Blogger Vidhoosh said...
:))
சிரிச்சுக்கிட்டே சீரியஸ் விஷயமா.//

ஆமங்கம்முணி... நன்றிங்க...

க.பாலாசி said...

//கண்ணகி said...
பாலாசி இப்பவாவது தெரிஞ்சுதே.. எங்க பாடு...
யோசிங்க மக்கா.//

முன்னாடியே தெரிஞ்ச விசயம்தாங்க... என்ன பண்றது பட்டாதான புத்தி வரும்.. நன்றி கண்ணகி...

//Blogger ஈரோடு கதிர் said...
அட...அட... பின்னிப் பெடலெடுத்துட்ட சாமி..
உங்கிட்டதான் புள்ள பெத்துக்குறத... ச்சீ... இப்படி இடுகை எழுதற கத்துக்கணும் போல இருக்கு//

இப்டியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே...ஒருவாரத்துக்கு ஒரு இடுகையும் போடமுடியாம பண்ணிடுறாங்கப்பா...

நன்றி கதிரய்யா...

//Blogger seemangani said...
ஆட்தி...இம்புட்டு விஷயம் இருக்குதாக்கும்...பலாசி...//

வாங்க நண்பரே... நன்றி...

திவ்யாஹரி said...

அது சரி.. ரொம்ப சரி.. உங்க எழுத்து நடை நல்லா இருக்குங்க..

ஈரோடுவாசி said...

நல்ல ஆராச்சி.

நல்லா சொன்னீங்க அண்ணா...

அன்புடன் மலிக்கா said...

வந்திடட்டும் ஒரு மனைவி அப்புறம் எப்படி இப்படியெல்லாம் பேசுறீங்கன்னு பார்க்கிறேன்..


சுவாரசியமாக எழுதுறீங்க பாலாஜி
எங்கே ஆளையே காணோம்|?

புலவன் புலிகேசி said...

தல ரொம்ப தாமதமா வந்துட்டேன்..எங்க தாத்தனுகு கூட 5 பொண்ணு ஒரு பையன்...சூப்ப்ரா எழுதிருக்கீங்க தல

ராமலக்ஷ்மி said...

நல்ல சிந்தனை. நல்ல நடை. அருமை:)!

அம்பிகா said...

அர்த்தமுள்ள பதிவு.
நகைச்சுவையா சொன்னாலும் நல்லாவே சொல்லியிருக்கீங்க.

க.பாலாசி said...

//திவ்யாஹரி said...
அது சரி.. ரொம்ப சரி.. உங்க எழுத்து நடை நல்லா இருக்குங்க..//

நன்றி திவ்யா...

//Blogger ஈரோடுவாசி said...
நல்ல ஆராச்சி.
நல்லா சொன்னீங்க அண்ணா...//

நன்றி தம்பி (நண்பா)...

//Blogger அன்புடன் மலிக்கா said...
வந்திடட்டும் ஒரு மனைவி அப்புறம் எப்படி இப்படியெல்லாம் பேசுறீங்கன்னு பார்க்கிறேன்..
சுவாரசியமாக எழுதுறீங்க பாலாஜி//

நன்றி மலிக்கா...

//எங்கே ஆளையே காணோம்|?//

வருவேன்...

//Blogger புலவன் புலிகேசி said...
தல ரொம்ப தாமதமா வந்துட்டேன்..எங்க தாத்தனுகு கூட 5 பொண்ணு ஒரு பையன்...சூப்ப்ரா எழுதிருக்கீங்க தல//

நன்றி நண்பரே...

//Blogger ராமலக்ஷ்மி said...
நல்ல சிந்தனை. நல்ல நடை. அருமை:)!//

நன்றி ராமலக்ஷ்மி...அக்கா...

//Blogger அம்பிகா said...
அர்த்தமுள்ள பதிவு.
நகைச்சுவையா சொன்னாலும் நல்லாவே சொல்லியிருக்கீங்க.//

நன்றிங்க அம்பிகா...

KARTHIK said...

// இந்த அரசாங்கத்துல முக்கோணமா ஒரு வௌம்பரம் அங்கண, //

ஒரு படத்துல சிங்கமுத்து சொல்லுவாரு
அரசாங்கமே இதையும் சொல்லும் அப்புறம் பிளாஸ்டிக் பொருக்கள பயன்படுத்தானைனும் சொல்லும்னு

உங்க எழுத்து நடை அட்டகாசம் தல

கலக்குங்க

பிரேமா மகள் said...

நீங்க ஏன், திருமண வீடுகளுக்கு சிறப்பு உரை ஆற்ற போகக் கூடாது?

சத்ரியன் said...

//மொதல்லையே பொண்ணு பொறந்தாலும் மியூஸிக்க ஸ்டாப் பண்ணிட்டு, இதுக்கு பாட்டு எழுதுனா போதும்னுட்டு விட்டுடுறாங்க.//

பாலாசி,

ம்ம்ம்ம்... வெச்சிக்கறேண்டி உன்னிய. பாலா அண்ணன் சொன்ன மாதிரி மொதல்ல அழைப்பிதழ் அனுப்பி வெய்யி. அப்பாலிக்கா இருக்கு உனக்கு.

நல்லா சோக்கான பதிவு மக்கா. நானும் யோசிக்கிறேன்.( உங்க பதிவு சொல்ற கருத்தை தான்)

க.பாலாசி said...

//கார்த்திக் said...
ஒரு படத்துல சிங்கமுத்து சொல்லுவாரு
அரசாங்கமே இதையும் சொல்லும் அப்புறம் பிளாஸ்டிக் பொருக்கள பயன்படுத்தானைனும் சொல்லும்னு//

ஆமங்க...பாருங்களேன்..

// உங்க எழுத்து நடை அட்டகாசம் தல
கலக்குங்க//

நன்றி தலைவரே...

//Blogger பிரேமா மகள் said...
நீங்க ஏன், திருமண வீடுகளுக்கு சிறப்பு உரை ஆற்ற போகக் கூடாது?//

யோசிக்கிறேன்...

நன்றி மகளே...

//Blogger சத்ரியன் said...
பாலாசி,
ம்ம்ம்ம்... வெச்சிக்கறேண்டி உன்னிய. பாலா அண்ணன் சொன்ன மாதிரி மொதல்ல அழைப்பிதழ் அனுப்பி வெய்யி. அப்பாலிக்கா இருக்கு உனக்கு.//

ஓ....

// நல்லா சோக்கான பதிவு மக்கா. நானும் யோசிக்கிறேன்.( உங்க பதிவு சொல்ற கருத்தை தான்)//

நல்லா யோசிங்க....

நன்றிங்க சத்ரியன்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO