க.பாலாசி: கதம்பம்...
Showing posts with label கதம்பம்.... Show all posts
Showing posts with label கதம்பம்.... Show all posts

Thursday, December 17, 2009

வலைச் சுரைக்காய்...

சென்றவாரம் தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.


‘குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி


இதென்ன புதுமை? செய்தி அச்சுப்பிழையோ என்றவாறே ஆராய்ந்தேன். உண்மையாகவே இந்த வீரப்பெண்மணி தனது கணவன் இன்னொருத்தியுடன் இருந்ததாக சந்தேகமடைந்து வெட்டிக்கொன்றுள்ளார். அவனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.


•••••••••


அண்மையில் எனது கணிணி வைரஸ்களால் வலுவிழந்ததற்கு காரணமாக வன்பொருள் வல்லுனர்களால் சொல்லப்பட்டது சீனாவிலிருந்து வந்த மின்னஞ்சல்கள். ஒருவழியாக அவைகளை ஒருநாள் ஒருவேளை அடையாள உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் ‘கொலைசெய்தேன்(தோம்).


சீனர்களின் கண் இப்போது நமது இரசாயன சந்தை. நானும் இரசாயனம் சார்ந்த துறையிலேயே பணிபுரிவதால் தெரிந்துகொண்டேன். இங்கே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் விலைகளை காட்டிலும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் இரசாயனங்களின் விலை மிகக்குறைவு (அனைத்து வரிகள் மற்றும் செலவுகள் உட்பட) குறிப்பாக துணிச்சந்தைக்கு தேவைப்படும் இரசாயனங்கள். இவைகள் இலங்கை வழியாக நமது சென்னைத் துறைமுகங்களை வந்தடைந்து மற்ற மாநிலங்களுக்கும் வழிந்தோடுவதாக தகவல். நமது இரசாயன சந்தையும் அதன் விலைகளுடன் போட்டியிட முடியாமல்தான் உள்ளது. நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.


••••••••


பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)


•••••••••


பருத்தி பயிரப்படுவதில் ஆரம்பித்து அது நமது உடலுக்கு உடையாகும் வரை குறைந்தது 30 விதமான இரசாயனங்களை உள்வாங்கிக்கொண்டுதான் வெளிவருகிறது. ஆடைகளின் தரம், தன்மை, நிறம் இவைகளைப்பொருத்து அவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.


••••••••••

Wednesday, October 28, 2009

பவானி தேனீ...


காலேஜ்ல படிக்கிறப்ப ஒருத்திய காதலிச்சேன். ஆதலினால் டெய்லியும் அவ டேபிள்ல (அவ போனதுக்கு அப்பறம்தான்) ஒரு கவிதன்னு எழுதி வைச்சிட்டு வருவேன். மறுநாள் போய் பாக்குறப்ப அது இருக்காது. ரொம்ப பாசமா அத பிளேடால சொரண்டி வைச்சிருப்பா. அதுக்கெல்லாம் சளைச்சவனில்லங்கற கணக்கா நானும் விடாம எழுதி வைச்சிகிட்டே இருந்தேன். அவளும் டெய்லியும் அழிச்சிட்டு போய்டுவா.


திடீர்னு ஒருநாள் அவ இடத்துல நான் எழுதின கவிதைக்கு பின்னூட்டம் போட்ட மாதிரி


பவானி தேனி

பாலாசி பண்ணி


- ன்னு எழுதியிருந்துச்சு (அவ்வ்வ்வ்...). நல்லாதானே போய்கிட்டு இருந்துச்சு. திடீர்னு இப்டி இருக்கே என்னடான்னு பார்த்தா அதுக்கு முதல் நாள் அவளோட அண்ணனுக்கு மாலைநேர வகுப்பு அதே கிளாஸ்ல நடந்திருக்கு. அதனாலத்தான் பாசமலர் அண்ணன் அன்ப பொழிஞ்சிருக்கார். அதுக்காகல்லாம் கவலப்படுறது நம்ம பரம்பரைக்கே பழக்கம் கெடையாதுல்ல. வழக்கம்போல வழுக்கத்தலயில எண்ண தடவுறமாதிரி அப்டியே போய்கிட்டிருந்துச்சு எதுக்குமே பிரையோசனமில்லாம.


கடைசியா நானும் மூணு வருசம் முடிச்சு நாலாவது வருசமும் பி.எஸ்.சிய படிச்சேன். அவ கரைட்டா மூணு வருசத்துல எல்லாத்தையும் முடிச்சிட்டு எம்.எஸ்.சிக்கு போயிட்டா. நான்தேன் நாசமாப்போனேன்.


அப்டி எழுதுன கவிதையில (நாமலே சொல்லிக்க வேண்டியதுதான்) ஒருசிலது கீழ தொங்கிகிட்டு இருக்கு (என்னோட பழைய டைரியில சுட்டது)



உன் கண்கள்

எழுதிய கவிதையில்

வளைத்துப்போடப்பட்ட

வார்த்தைகள் நான்.


******


காதல் மீன்கள்

உன் மனதில்

தூண்டிலுடன்

எத்தனை ஆண்களடி...



******


மடப்புறத்து மயிலே (மடப்புறம் அவளோட ஊரு)

என்னை

மடையனாக்கிய குயிலே. (ஆகா...தத்துவம்)


******


நான் பிறந்தது

அமாவாசையாம்...

உண்மைதான்

நீ பிறக்கவில்லையே...


******


உன்

கொலுசொலியால்...

கூவ மறந்த

குயில் நான்.


******


உன் பின்

வருகையில்

காற்றினில் அசையும்

துப்பட்டாகூட சொல்கிறது

வா...வா...என்று..


******

(பேருந்தில்)

முன்னிருக்கையில்

அமராதே....

எதிர்வரும்

வாகனங்கள்

முத்தமிடப்போகிறது.


******


முல்லைக்கு

தேர் கொடுத்தானாம்

பாரி...

மன்னித்துவிடு...

உன்னை

பார்த்திருக்கமாட்டான்.


******

இப்பவும் புரியல...அவ அண்ணன் ஏன் அப்டி எழுதினான்னு. இது ஒன் சைடு...டபுள் சைடு ஒண்ணு இருக்கு (அது ஒரு பெரிய கத....)


தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள். நன்றி...




Monday, August 31, 2009

கதம்பம்...

இளமைவிகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...



பள்ளியில் படித்த வரலாற்று பாடங்கள்...
பாதி பாதி ஞாபகம்...
சென்று பார்க்கையில் சிதிலமடைந்த செங்கற்கள்,
பாதுகாப்பு பணியில் சில வௌவால்கள் மட்டும்...

*******

பாக்கெட் பால் விலைவுயர்வு....
கலங்கும் கணவான்கள்...
தாய்ப்பாலின்
முக்கியத்துவம் உணரும் தாய்மார்கள்...

*******

அலைந்து திரிந்து கடன்வாங்கி,
வரதட்சணை கொடுத்த
கணவனைப் பற்றி கவலையில்லை...
பெண்ணின் பிரசவம் எண்ணி துயருரும் மனைவிக்கு...

*******

நகைகள், இரு சக்கர வாகனம், சீர்வரிசைகள்...
எதுவும் உணர்த்தவில்லை...
முதலிரவில் மனைவியின்
தாலி மட்டும் குத்துகிறது...

******

4 லட்சம் பட்டதாரிகள்
4000 ரூபாய் சம்பளத்திற்கு காத்திருக்கும் வேளை...

போராட்டத்தில் பொழுதை போக்குபவர்களுக்கு...
15 ஆயிரம் +++ போதவில்லையாம்...

*******

மழைவேண்டி ஊரே வேண்டுகிறது...
வருண பகவான் கண் திறந்தார்...மழை, வெள்ளம்...
காக்காய், குருவி கூட உயிருடன் இல்லை...
மறுபடியும் பள்ளிகொண்டார் பகவான்...

*******

தலைவரின் பிறந்தநாளில்
ன்னதான திட்டமாம்...அதற்கு
அயராது உழைக்கும் தொண்டன்...
பட்டினியில் பிள்ளை குட்டிகள்...

*******

பத்து சதவீத வட்டிக்கு வாங்கிய கடன்
தினமும் துரத்தும் தவணைக்காரன்...
நான் சொல்லும் பதில்...
‘அடுத்த எலக்ஸன் வரட்டும்...’

**********



தமிழ்மணத்திலும், தமிலிஸ்லிலும் உங்கள் ஓட்டினை பதிவிடவும்...

Saturday, August 22, 2009

கதம்பம்....

ஒரு கவிதை....


ஆதரவாய் உன் தோள் சாய
ஆயிரம் தலைகள் இருந்தாலும்,
நான் விம்மிய பொழுதுகளில்...
ஓய்ந்துகொள்ள உன் மார்பினைத் தந்தாய்...
வீழ்ந்தே கிடந்தேன் உன் விழிதனில்...
தெள்ளிய நீரோடையில்
அடிபடிந்த கசடுகள் போல்....


********
ஒரு விளக்கம்....


இந்த இடுகையினூடே எனது முந்தைய இடுகையின் தலைப்புதனை சற்று விரிவுப்படுத்த விரும்புகிறேன்.

அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு
அகந்தைக் குரங்கு தாவும் - அதன்
அழகைக் குலைக்க மேவும்
கொம்பு ஒடிந்து கொடியும் குலைந்து
குரங்கும் விழுந்து சாகும் - சிலர்
குணமும் இதுபோல் குறுகிப்போகும்
கிறுக்கு உலகமடா - தம்பி
தெரிந்த நடந்து கொள்ளடா - இதயம்
திருந்த மருந்து சொல்லடா.... என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளிலிலிருந்து நான் உருவகப்படுத்துவது யாதெனில்....

அதுபோல அன்பே வடிவான பெண்களின்* (மாறுதலுக்குட்பட்டது) வாழ்வினில் வரதட்சனை எனும் அகந்தை கொண்ட குரங்கு தாவும், அதனால் பெண்ணின்* வாழ்வு குலைந்து போகி இறுதியில் அந்த குரங்கும் இறந்து போகும்.....இப்படியாக....உருவகப்படுத்தியே இந்த தலைப்பினை எடுத்தேன்...

இதை சொல்ல வேண்டிய தேவை இல்லையென்றாலும் கடமை உள்ளதென்பதால் சொல்கிறேன்.

*********

ஒரு சிந்தனை...

1. நல்ல செய்தி:

பெரியக்கடை வீதியில் ஒரு கிலோ அரிசி வாங்கினால் ஒரு NOKIA N2020 இலவசம்...

2. கெட்ட செய்தி:

அப்படி நீங்கள் வாங்கும் அரிசியின் விலை, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 39,990 மட்டுமே... (in future)

**********

ஒரு குறுநகை...

சர்தார்: 5 white paper கொடுங்க...

கடைக்காரர்: 1 paper தான் இருக்கு சார்...

சர்தார்: பரவாயில்ல குடுங்க, நான் XEROX எடுத்துக்கிறேன்.


********

இந்த இடுகை பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிலிஸ்லும் தங்களது வாக்குகளை செலுத்தவும்.



********

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO