க.பாலாசி: வலைச் சுரைக்காய்...

Thursday, December 17, 2009

வலைச் சுரைக்காய்...

சென்றவாரம் தினசரி பத்திரிக்கைகளில் ஒரு செய்தி.


‘குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி


இதென்ன புதுமை? செய்தி அச்சுப்பிழையோ என்றவாறே ஆராய்ந்தேன். உண்மையாகவே இந்த வீரப்பெண்மணி தனது கணவன் இன்னொருத்தியுடன் இருந்ததாக சந்தேகமடைந்து வெட்டிக்கொன்றுள்ளார். அவனும் அப்படித்தான் இருந்திருக்கிறான். இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.


•••••••••


அண்மையில் எனது கணிணி வைரஸ்களால் வலுவிழந்ததற்கு காரணமாக வன்பொருள் வல்லுனர்களால் சொல்லப்பட்டது சீனாவிலிருந்து வந்த மின்னஞ்சல்கள். ஒருவழியாக அவைகளை ஒருநாள் ஒருவேளை அடையாள உண்ணாவிரதமிருந்து அகிம்சை வழியில் ‘கொலைசெய்தேன்(தோம்).


சீனர்களின் கண் இப்போது நமது இரசாயன சந்தை. நானும் இரசாயனம் சார்ந்த துறையிலேயே பணிபுரிவதால் தெரிந்துகொண்டேன். இங்கே உற்பத்தி செய்யப்படும் இரசாயனங்களின் விலைகளை காட்டிலும் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் இரசாயனங்களின் விலை மிகக்குறைவு (அனைத்து வரிகள் மற்றும் செலவுகள் உட்பட) குறிப்பாக துணிச்சந்தைக்கு தேவைப்படும் இரசாயனங்கள். இவைகள் இலங்கை வழியாக நமது சென்னைத் துறைமுகங்களை வந்தடைந்து மற்ற மாநிலங்களுக்கும் வழிந்தோடுவதாக தகவல். நமது இரசாயன சந்தையும் அதன் விலைகளுடன் போட்டியிட முடியாமல்தான் உள்ளது. நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.


••••••••


பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)


•••••••••


பருத்தி பயிரப்படுவதில் ஆரம்பித்து அது நமது உடலுக்கு உடையாகும் வரை குறைந்தது 30 விதமான இரசாயனங்களை உள்வாங்கிக்கொண்டுதான் வெளிவருகிறது. ஆடைகளின் தரம், தன்மை, நிறம் இவைகளைப்பொருத்து அவைகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயனங்கள், சாயங்கள் கூடவோ குறையவோ செய்யலாம். இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன.


••••••••••

42 comments:

Unknown said...

ஐ.. நான்தான் முதலா..?

க‌ரிச‌ல்கார‌ன் said...

சூப்ப‌ர்

ப்ரியமுடன் வசந்த் said...

// நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம். //

ஹ ஹ ஹா

ஸ்ஸப்பா சிரிச்சு முடில பாலாஜி

ஆணுக்கு பெண் சரிசமம்ன்னு இப்போல்லாம் பெண்கள் நிருபிச்சுட்டு வர்றாங்கஎல்லா விஷயத்திலும் இதுக்கு குடி மட்டும் விதி விலக்கா என்ன?

//குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. //

ஓஹ் அவங்களுக்கு ஒரு சல்யூட்

இடைக்கவிதையில் அங்காளம்மனை ஏனப்பா இழுத்தீர்கள்?

வலைச்சுரைக்காய் பேர் நல்லா இருக்கு பாலாஜி....!

sathishsangkavi.blogspot.com said...

//பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோயில்

தாயத்துடன். (!?)//

நல்ல புதுக்கவிதை....

அகல்விளக்கு said...

எல்லாமே நல்லாருக்கு ....

//இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார்//

இது டாப்பு....

கடைரி பத்தி முடிவுறாமல் இருக்கிறதே... இரசாயனங்கள் பற்றி உங்களிடமிருந்து மேலும் அறியலாமா???

நாடோடி இலக்கியன் said...

//பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோயில்

தாயத்துடன். (!?)//

கலக்கல் பாலாஜி.

பூங்குன்றன்.வே said...

//பகுத்தறிவாதியின்
அரைநாண் கொடி
அறுந்து விழுந்தது...
அங்காளம்மன் கோவில்
தாயத்துடன். (!?)//

இது நல்லா இருக்கே !!

//குடிபோதையில் கணவனை கொன்ற மனைவி’//

கலிகாலம் நண்பா.

vasu balaji said...

நல்லாருக்கு தலைப்பும், இடுகையும். அதுக்குள்ளயே குத்தீட்டாய்ங்களா? பேமசுதான். :))

ஹேமா said...

பின்ன எத்தனை காலத்துக்கு... உங்க அட்டகாசமெல்லாம் ?கூடைல சுமந்து கொண்டு போய்விட்டதெல்லாம் எப்பவோ ஓடிப்போயிடிச்சு !

பாலாஜி,கவிதை சூப்பரோ...சூப்பர்.

இந்தச் சுரைக்காய் கறிக்குதவும்.

உங்க Profile ல இருக்கிற படம் ஏதோ சோகமா இருக்கு.பிடிக்கல.
முந்தி இருந்தது நல்லாருக்கு.

ஈரோடு கதிர் said...

//செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.//

எதுக்கு சரக்கடிக்கிறதுக்கா....

என்ன ஆச்சு பாலாசி

ஈரோடு கதிர் said...

/பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)
//

அசத்தல்

தமிழ் உதயம் said...

பின்ன எத்தனை காலத்துக்கு... உங்க அட்டகாசமெல்லாம் ?கூடைல சுமந்து கொண்டு போய்விட்டதெல்லாம் எப்பவோ ஓடிப்போயிடிச்சு !நன்றி
ஹேமா

சிவாஜி சங்கர் said...

தேவையான பதிவுதான் தலைவரே.. :)

க.பாலாசி said...

//ஈரோடு கதிர் said...
எதுக்கு சரக்கடிக்கிறதுக்கா....//

இல்ல...வெட்டினதுக்கு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)//

Super

Vidhya Chandrasekaran said...

பகுத்தறிவு மேட்டர் நல்லாருக்கு.

Vidhya Chandrasekaran said...

பகுத்தறிவு மேட்டர் நல்லாருக்கு.

Vidhya Chandrasekaran said...

பகுத்தறிவு மேட்டர் நல்லாருக்கு.

சீமான்கனி said...

//நமது பிரதமர் அடுத்தமுறை வெள்ளைமாளிகைக்கு விருந்தோம்பலுக்குச் செல்லும்பொழுது இதுபற்றி ஒபாமாவின் இரண்டு குழந்தைகளுடன் விரிவாக உரையாட உள்ளார். மதுரை நெஞ்சங்கள் அஞ்சவேண்டாம்.//

அப்படியா ஓகே..ஓகே...

//பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோவில்

தாயத்துடன். (!?)//


நல்ல கவிதை...

சரக்கு அடிச்ச பிறகு ஆண் என்ன? பெண் என்ன?எல்லாம் ஒன்னுதான்...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.//

எதுக்கு தலைவரே?
நல்ல கவிதை.

மணிஜி said...

///பகுத்தறிவாதியின்

அரைநாண் கொடி

அறுந்து விழுந்தது...

அங்காளம்மன் கோயில்

தாயத்துடன். (!?)//

fantastic.. keep it up

கமலேஷ் said...

கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
உங்களுடைய தகவலும் மிக துல்லியமானது...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது...
வாழ்த்துக்கள்...

Chitra said...

பகுத்தறிவாதியின்
அரைநாண் கொடி
அறுந்து விழுந்தது...
அங்காளம்மன் கோவில்
தாயத்துடன். (!?)

........அசத்தல்!

கலகலப்ரியா said...

அசத்தல்...! நல்லாருக்கு சுரைக்காய்..!

புலவன் புலிகேசி said...

//இதில் குறிப்பிடத்தகுந்த விசயம் இருவருமே மது அருந்துபவர்கள். கூலித்தொழிலாளிகள். செய்தது சரியோ தவறோ அந்த பெண்ணை பாராட்டியே ஆகவேண்டும்.//

ம் பாராட்டுங்க...

அப்புறம் பகுத்தறிவாளன் கவிதை நன்று..

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல தகவல்கள்.....சிறப்பு இடுகை...


கவிதை வரிகளும் ரசிக்கும்படி இருந்தது

அன்புடன்
ஆரூரன்

Anonymous said...

அவியல் சுவை பாலாஜி...

சந்தனமுல்லை said...

நல்லாருக்குங்க...தகவல்கள்! தொடருங்கள்! :-)

Unknown said...

எதுக்கு பாலாஜி அந்தம்மாவை பராட்டனும், குடுச்சதுக்கா? கொன்னதுக்கா?
எதுக்காக இருந்தாலும், இரண்டுமே நிச்சயம் பாராட்டக்கூடிய விஷயங்கள் இல்லையென்பது என்னுடைய கருத்து.

மகா said...

//எதுக்கு பாலாஜி அந்தம்மாவை பராட்டனும், குடுச்சதுக்கா? கொன்னதுக்கா?
எதுக்காக இருந்தாலும், இரண்டுமே நிச்சயம் பாராட்டக்கூடிய விஷயங்கள் இல்லையென்பது என்னுடைய கருத்து.//

repeat...

க.பாலாசி said...

//பட்டிக்காட்டான்.. said...
ஐ.. நான்தான் முதலா..?//

நன்றி பட்டிக்காட்டான்..

//Blogger க‌ரிச‌ல்கார‌ன் said...
சூப்ப‌ர்//

நன்றி கரிசல்...

//Blogger பிரியமுடன்...வசந்த் said...
ஹ ஹ ஹா
ஸ்ஸப்பா சிரிச்சு முடில பாலாஜி
ஆணுக்கு பெண் சரிசமம்ன்னு இப்போல்லாம் பெண்கள் நிருபிச்சுட்டு வர்றாங்கஎல்லா விஷயத்திலும் இதுக்கு குடி மட்டும் விதி விலக்கா என்ன?//
ஓஹ் அவங்களுக்கு ஒரு சல்யூட்//

// இடைக்கவிதையில் அங்காளம்மனை ஏனப்பா இழுத்தீர்கள்?//

சும்மாத்தான்...

// வலைச்சுரைக்காய் பேர் நல்லா இருக்கு பாலாஜி....!//

நன்றி வசந்த்...

//Blogger Sangkavi said...
நல்ல புதுக்கவிதை....//

நன்றி அய்யா..

//Blogger அகல்விளக்கு said...
எல்லாமே நல்லாருக்கு ....//
இது டாப்பு....
கடைரி பத்தி முடிவுறாமல் இருக்கிறதே... இரசாயனங்கள் பற்றி உங்களிடமிருந்து மேலும் அறியலாமா???//

நன்றி.. நண்பா...இன்னொரு இடுகையாக தொடரும்...

க.பாலாசி said...

//நாடோடி இலக்கியன் said...
கலக்கல் பாலாஜி.//

நன்றிண்ணா...

//Blogger பூங்குன்றன்.வே said...
இது நல்லா இருக்கே !!
கலிகாலம் நண்பா.//

நன்றி நண்பரே...

//Blogger வானம்பாடிகள் said...
நல்லாருக்கு தலைப்பும், இடுகையும். அதுக்குள்ளயே குத்தீட்டாய்ங்களா? பேமசுதான். :))//

நன்றி அய்யா...

//Blogger ஹேமா said...
பின்ன எத்தனை காலத்துக்கு... உங்க அட்டகாசமெல்லாம் ?கூடைல சுமந்து கொண்டு போய்விட்டதெல்லாம் எப்பவோ ஓடிப்போயிடிச்சு ! பாலாஜி,கவிதை சூப்பரோ...சூப்பர்.
இந்தச் சுரைக்காய் கறிக்குதவும்.//

நன்றி ஹேமா...

//Blogger ஈரோடு கதிர் said...
அசத்தல்//

நன்றி அய்யா..

க.பாலாசி said...

//tamiluthayam said...
பின்ன எத்தனை காலத்துக்கு... உங்க அட்டகாசமெல்லாம் ?கூடைல சுமந்து கொண்டு போய்விட்டதெல்லாம் எப்பவோ ஓடிப்போயிடிச்சு !நன்றி
ஹேமா//

நன்றி தமிழ்...

//Blogger Sivaji Sankar said...
தேவையான பதிவுதான் தலைவரே.. :)//

நன்றி சிவாஜி

//Blogger T.V.Radhakrishnan said...
Super//

நன்றி அன்பரே...

//Blogger வித்யா said...
பகுத்தறிவு மேட்டர் நல்லாருக்கு.//

நன்றி வித்யா...

க.பாலாசி said...

// seemangani said...
அப்படியா ஓகே..ஓகே...
நல்ல கவிதை...
சரக்கு அடிச்ச பிறகு ஆண் என்ன? பெண் என்ன?எல்லாம் ஒன்னுதான்...//

நன்றி நண்பா..

//Blogger ஸ்ரீ said...
நல்ல கவிதை.//

நன்றிங்ண்ணா...

//Blogger தண்டோரா ...... said...
fantastic.. keep it up//

நன்றிங்கண்ணே...

//Blogger கமலேஷ் said...
கவிதை மிகவும் அழகா இருக்கிறது...
உங்களுடைய தகவலும் மிக துல்லியமானது...
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது...
வாழ்த்துக்கள்...//

நன்றி கமலேஷ்...

க.பாலாசி said...

//Chitra said...
........அசத்தல்!//

நன்றிங்க முதல் வருகைக்கம் கருத்திற்கும்..

//Blogger கலகலப்ரியா said...
அசத்தல்...! நல்லாருக்கு சுரைக்காய்..!//

நன்றி கலகலா...

//Blogger புலவன் புலிகேசி said...
ம் பாராட்டுங்க...
அப்புறம் பகுத்தறிவாளன் கவிதை நன்று..//

நன்றி நண்பா...

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல தகவல்கள்.....சிறப்பு இடுகை...
கவிதை வரிகளும் ரசிக்கும்படி இருந்தது
அன்புடன்
ஆரூரன்//

நன்றிங்கய்யா...

//Blogger தமிழரசி said...
அவியல் சுவை பாலாஜி...//

நன்றிக்கா...

//Blogger சந்தனமுல்லை said...
நல்லாருக்குங்க...தகவல்கள்! தொடருங்கள்! :-)//

நன்றிங்க சந்தனமுல்லை..

//Blogger முரளிகுமார் பத்மநாபன் said...
எதுக்கு பாலாஜி அந்தம்மாவை பராட்டனும், குடுச்சதுக்கா? கொன்னதுக்கா?
எதுக்காக இருந்தாலும், இரண்டுமே நிச்சயம் பாராட்டக்கூடிய விஷயங்கள் இல்லையென்பது என்னுடைய கருத்து.//

நன்றி நண்பா கருத்தினை ஏற்கிறேன்...

//Blogger மகா said...
repeat...//

மேற்சொன்னதே...நன்றி மகா...

அன்புடன் நான் said...

நல்ல தரமான கட்டுரை....
(ஒரு கார்டூனின் குத்தலோடு)

க.பாலாசி said...

//சி. கருணாகரசு said...
நல்ல தரமான கட்டுரை....
(ஒரு கார்டூனின் குத்தலோடு)//

நன்றி அய்யா வருகைக்கும் பின்னூட்டலுக்கும்...

Romeoboy said...

\\ இதில் குழந்தைகளுக்கான ஆடைகளை குறைவான செயல்திறனுடைய இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. //

நல்ல செய்தி ..

அது சரி(18185106603874041862) said...

//
பகுத்தறிவாதியின்
அரைநாண் கொடி
அறுந்து விழுந்தது...
அங்காளம்மன் கோவில்
தாயத்துடன். (!?)
//

நச்!!!

(அது கண்டிப்பாக வைரக்கல் பதித்த தங்க அரைநாண் கொடியாகத் தான் இருக்கும்)

தாராபுரத்தான் said...

சுரைக்காய்... சுவையாகத்தான் உள்ளது,,

க.பாலாசி said...

//Romeoboy said...
நல்ல செய்தி ..//

நன்றி நண்பரே...

//Blogger அது சரி said...
நச்!!!
(அது கண்டிப்பாக வைரக்கல் பதித்த தங்க அரைநாண் கொடியாகத் தான் இருக்கும்)//

நன்றி அது சரி..

//Blogger அப்பன் said...
சுரைக்காய்... சுவையாகத்தான் உள்ளது,//

நன்றி அய்யா...

Unknown said...

நல்லா தான இருக்கு ..,, இதுக்கு ஏன் மூணு மைனஸ் ஓட்டு போட்டு இருக்காங்க...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO