க.பாலாசி: ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்...

Tuesday, December 8, 2009

ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசகர்கள் சங்கமம்...

நவிதொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்பு உடையார் தொடர்பு.

ஒவ்வொருமுறை படிக்கும்போதும் சிந்தனைகளையும் கருத்துக்களையும் புதிய தகவல்களையும் உணர்த்துவன மிகச்சிறந்த நூல்களாம். அதுபோல பண்புடைய நல்லோர்களின் சுற்றத்தை விரும்பி, நட்பாக உறவாடும் ஒவ்வொருமுறையும் அந்த சுற்றத்தின் அருமை கூடும். அந்த உறவின் பெருமை மிகும் என்பது மேற்சொன்ன குறளின் மூலம் வள்ளுவன் எடுத்தியம்பும் வாழ்வியலின் நியதி.

இக்குறளினை சிரமேற்கொண்டு ஈரோடு மாநகரில் பதிவர்களின் சங்கமத்தினை அரங்கேற்ற வரும் 20.12.09 ஞாயிறு அன்று மதிமயங்கும் மாலை 3.30 மணியளவை, மதிபெறும் மாலையாக மாற்ற ஈரோட்டு பதிவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுசமயம் பதிவர்களும் வாசகர்களும் திரளாக பங்குபெற்று இனிய அனுபவத்தினை பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடனும், பண்புடனும் அழைக்கிறோம்.இச்சங்கமத்தில் முக்கிய அம்சங்களாக நாங்கள் தெரிவுசெய்வது...

* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்

* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு
* இன்னும் சில.....

தங்களது வருகையினை கீழ்கண்ட பதிவர்களின் அலைபேசி எண்களுக்கு அழைத்து உறுதிபடுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வால்பையன் (ஈரோடு) - 9994500540
கதிர் (ஈரோடு) - 9842786026
ஆரூரன் விசுவநாதன் (ஈரோடு) - 9894717185
அகல்விளக்கு (ஈரோடு) - 9578588925

சந்திப்பு நடைபெறும் இடம் :
பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா ஹால் (ஏ/சி)
லோட்டஸ் ஷாப்பிங் சென்டர் பின்புறம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,
பெருந்துறை சாலை,
ஈரோடு - 11

நாள் : 20.12.2009 ஞாயிற்றுக்கிழமை
நேரம்
: சரியாக மாலை 3.30 மணியளவில்.

தங்களின் வருகையினை அன்புடன் எதிர்நோக்கும்

- ஈரோடு பகுதி பதிவாசிகள்.21 comments:

புலவன் புலிகேசி said...

பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வாழ்த்துக்கள் நண்பர்களே....

கலகலப்ரியா said...

//ஈரோடு பகுதி பதிவாசிகள்//

ஆசிகள்...!

கலகலப்ரியா said...

ah..! tamilmanam sothappalz... satrup porungal.. =))

vasu balaji said...

அழைப்புக்களே அழகா இருக்கு. பதிவர் கூடல் பரிமளிக்க வாழ்த்துகள்.

ஹேமா said...

ஒன்றுகூடலுக்கு வாழ்த்துக்கள் பாலாஜி.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துச் சொல்றதோட வந்து கலந்துக்கங்க நண்பர்களே...

அன்பேசிவம் said...

nanbaa enakku oru thundai pottu vainga, kandippaa varen.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே said...

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் பாலாசி !!!

வால்பையன் said...

அவ்வண்னமே கோறும்!

கலகலப்ரியா said...

duty over.. =))

மகா said...

advance wishes for u and the team....

ஆரூரன் விசுவநாதன் said...

எங்கே பாலாசி.....உங்களைப் பார்க்க முடிவதில்லை...


வேலைப் பளு அதிகமோ....

இன்றைய கவிதை said...

பெங்களூரு பதிவாளர்கள் கூட்டம் நடந்தால்
கொஞ்சம் சொல்லுங்க!
போயி கலந்துகிடறோம்!

-கேயார்

cheena (சீனா) said...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - பாலாசி

நிலாமதி said...

சுபமே அமைய வாழ்த்துக்கள்

நிகழ்காலத்தில்... said...

\\வால்பையன் said...

அவ்வண்னமே கோறும்!\\

எல்லாம் சரி

அலைபேசி எண் சரியா !!!

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சி,,நானும் கலந்துக்கிறேன்,,,

வால்பையன் said...

எனது எண் சரிதான்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நானும் கார்த்தியும் வருகிறோம்.

க.பாலாசி said...

அழைப்பினை ஏற்றவர்களுக்கும், மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கும் எனது நன்றிகள்...

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO