க.பாலாசி: ஒரு விமர்சனம்

Thursday, January 13, 2011

ஒரு விமர்சனம்



‘கள்ளிக்காட்டில் பெறந்த தாயே’ என்று தொடங்கும்போதே இந்த ஒத்தையடிப்பாதை எந்த மையத்தில் செல்லப்போகிறது என்று தெரிந்துவிடுகிறது. பெயர்கள் ஓடும்போது வருகிற செஃபியா டோன் புகைப்படங்கள் அத்தனை கிராமத்து முகங்களையும் ஒத்தியெடுத்திருக்கிறது. கூடவே எனக்கு அண்ணன் கருவாயனின் புகைப்படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது.  படம் தென்மேற்கு பருவக்காற்று, இயக்கம் சீனு ராமசாமி அவர்கள்.

நசநசத்த மண்ணும் தூரிக்கொண்டிருக்கும் மழையுமாக பட்டிகளுக்குள் அடைந்துகிடக்கும் செம்மறியாட்டு கூட்டங்களை காட்டும்போது கூடவே படத்துடன் அடைந்துபோவதைத்தவிற வேறுவழியில்லையெனக்கும். எல்லா நகர மனிதனுக்குள்ளும் பிதுங்கிவழியும் அந்த கிராமத்துமண் ஏக்கம் காரணமாக இருக்கலாம். வாயில்லாப்பூச்சிகளை வசைக்குள்ளாக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வீதிகளில் செல்லும் டயர்வண்டி மாடுகளை பார்க்கும்போது அதன் முதுகில் உள்ள தார்க்குச்சி புள்ளிகளில், மாட்டுக்குச் சொந்தக்காரனின் ‘வீரம்’ தான் முதலில் தெரிகிறது. இதில் பசுமாடுகளும், ஆடுகளும் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, இறுதியில் பலியானாலும்கூட. ஆடுகளை கொஞ்சி வளர்ப்பதும், அவைகளுக்கு சீக்குவந்து கழிந்தால்கூட கண்ணீர் சிந்துமளவுக்கு பாசங்காட்டும் பொம்பளைகள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள்.

போக... ஆடு மேய்க்கும் தொழிலு‘முடைய குடும்பத்திற்கும், அவைகளை களவாடி இறைச்சியாக்கி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பத்திற்கும் கொஞ்சம் காதலுடன் கட்டப்பட்ட கதை. படத்தின் நாயகன் நாயகி என்று காட்டப்படும் இரண்டு முகங்களைத்தாண்டி ஓடியாடி உழைத்திருப்பது ‘நாயகனின்’ நாயகி  சரண்யாவும்,  ஒளிப்பதிவாளர் செழியனும், இயக்கிய சீனுராமசாமியுந்தான் என்பதே சரி. சிற்றுந்துகள் தூரத்திலிருந்து வரும்பொழுது பின்னாலொலிக்கும் இசையில்,  இளையராஜாவின் இசைச்சுவற்றில் கொஞ்சம் சுண்ணாம்பைச்சுரண்டி  எடுத்ததுபோல் தெரிகிறது. மேலும் ஆரம்ப இறுதி மற்றும் இடையில்வரும் ‘கள்ளி கள்ளிச்செடி’ பாடல்களைத்தவிர மற்றெதுவும் பெரிய தாக்கத்ததை தரவில்லை.

கதை, திரைக்கதை, செம்மண் வசனங்கள் இதர பாத்திரங்கள் மற்றும் மற்ற இத்யாதிகளை ஓரங்கட்டிவிட்டு இங்கே பார்க்கவேண்டியது பொன்வண்ணனின் பொண்டாட்டி முகத்தையும் நடிப்பையும். மேலுதட்டுக்கு மேலே ஓட்டைகள்தெரிய புடைத்த அந்த மூக்கே போதும். பார்ப்பவர்கள் ராட்சஸி பட்டம்தர ஏற்ற இந்த பொம்பளையை,  ‘ச்ச்சே என்ன பொம்பளடா’ என்று நவநாகரீகத்தார் நினைத்துக்கொள்ளலாம். ஆயினும் கிராமத்து புழுதியை எண்ணெய்த்தலையில் சுமந்தலைந்தவர்களுக்கு அவள் ஒரு பழக்கப்பட்ட முகமாகவே தெரிவாள். எனக்கு அப்படித்தான். இந்த ராங்கி ரப்பு இல்லாத பொம்பளைகளை எங்கள் தெருவில் பார்ப்பதரிது. மயிலாம்பாள், சரசு, முருகனோட அம்மா, வைத்தி பொண்டாட்டி, பக்கத்து தெரு ராசாவோட அக்கா என்று பட்டிவாய்ப் பொம்பளைகளுடன் புழங்கியப்பொழுதுகள் படம் முடிந்தபொழுதும், கனவிலும்கூட வந்து தொலைத்தது.

‘இந்த ரத்தம்லாம் அப்பனாத்தா இல்லாத புள்ளைங்களுக்கு குடுப்பாங்களா!!?’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா?’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா?... நீ நல்லாவே இருக்கமாட்ட...நல்லாவே இருக்கமாட்ட’ என்று அந்த தம்பிமுறையான் மண்ணை தூற்றிவிட்டு செல்லுமிடத்தில், அவமானத்திலும் ஆங்காரத்திலும் விழிபிதுங்கும் இடமும்............இந்த பொம்பளை வாழ்ந்திருக்கிறாள். எனக்கென்னமோ எல்லாரையும் தாண்டி அப்படியே என் சரசு அத்தையை ஞாபகப்படுத்தினா‘ள் அல்லது ‘ர்’.

இன்னொரு கருவாச்சி பெண்ணும் வருகிறாள். ‘நீங்க எனக்கு தூரத்து சொந்தந்தான்’ என்று தொங்கட்டான் குலுங்க தலையாட்டிப்பேசும் பேச்சே போதும்..செமத்தியான சிறுக்கி.

படத்தில் ஆங்காங்கே இழுத்து இழுத்து பேசும் நண்பனின் வசனமும், மூடியக்கையில் நொழுந்திய வெங்காயப்பக்கோடா போன்ற ஒரு கிளைமாக்ஸ் காட்சியும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இவையெல்லாம் அந்த தாயின் கலப்பையில் அரைந்துபோன மண்புழுப்போலதான்.

இப்படத்தின் நாயகியைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்கக்கூடும். 

ஒரு அலக்குக்குச்சிக்கு பாவாடைத்தாவணி போட்டதுபோல்தான் நாயகி. முனை அருவாளை கண்ணில் வைத்திருக்கிறாள். கள்ளிப்பழத்தை சாப்பிடும்போது மோவாயில் குத்துகிற பூமுற்களைப்போல நெஞ்சில் குத்துகிறாள். அந்த உதட்டெச்சிலைத் தொட்டு வெறுமனே கன்னத்தில் வைத்துக்கொள்ளலாம்போல. என் முகத்தில் பருக்கள் வந்து காலமாகிவிட்டது. மீண்டும் இக்காலத்தே வரலாம். (கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?)  வேறொன்றுமில்லை. கண்களால் நடிக்கத்தெரிந்தவளுக்கு வளையவளைய வந்தாலும் பெரிதாய் சொல்’லமுடியாத ‘வாய்’ப்பூ.

ஒரு நல்ல படைப்பையும், சரண்யாவின் முழு நடிப்புத்திறனையும் திரையுலகிற்கொணர்ந்த இயக்குநர் சீனுராமசாமிக்கு எக்காலமும் நன்றி.


நல்லாயிரு தாயீ






.

24 comments:

vasu balaji said...

ங்கொய்யால. ஒன்னுத்தையும் உட்டு வைக்காத. நிஜம்மா ரொம்ப வித்யாசமான அருமையான விமரிசனம்.
/கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?)/

இப்புடி கேட்டா பொண்ண பெத்தவங்களே தரமாட்டாய்ங்க. அவுங்க சரின்னாலும் பொண்ணு ஒத்துக்காது. இதுல கடவுளு வேற. ரொம்பதான் லொல்லு உனக்கு.

Cable சங்கர் said...

நல்லாருக்கு பாலாசி..

Unknown said...

எப்படி இருக்கிங்க தலைவரே...
நீங்களும் சினிமா விமர்சனமா..

ஹேமா said...

நான் பாத்திட்டேன் பாலாஜி.
முழுதுமான கிராமத்து வாசனை.அம்மா பாடல் மிகவும் பிடித்திருந்தது.
சரண்யா அம்மாவும் கூட.

வினோ said...

படம் அருமையா இருக்கு பாலாசி... உங்க விர்மசனமும் தான்...

க ரா said...

மண் வாசனை மூக்கை தொலைக்குது பாலாசி... அருமை :)

ஈரோடு கதிர் said...

||கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?||

அட பாவிப்பயலே..
சரண்யா படத்துக்கு மேலே இதப் போட்டிருக்கியே!
பொன்வண்ணன் கிட்டே மாட்டுனே மவனே என்கவுண்டர்தான்

# ஸ்க்ரோல் பண்ணி கடைசி பத்தி மட்டும் படிப்போர்!

செ.சரவணக்குமார் said...

அருமையா எழுதியிருக்கீங்க பாலாசி. உண்மையிலயே சூப்பரான விமர்சனம். அடிக்கடி இதுபோன்ற விமர்சனப் பதிவுகளையும் எழுதுங்கள்.

செமத்தியான சிறுக்கியை ரசித்தேன் நண்பா.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல படம் .. மனதை தொட்ட பாடல்கள் .. அது போன்றே உங்க விமர்சனமும்..

காமராஜ் said...

பாலா இந்த சரண்யா இருக்காய்ங்களே எல்லா நடிப்பையும் தூக்கிசாப்டுர்ர்றாங்க.
இன்னும் அந்த பங்கர்வாடி நாவலில் மணக்கும் ஆட்டுக்கொட்டடியின் வாசனை
தமிழில் வரவே இல்லை.

Chitra said...

வித்தியாசமா விமர்சனம் எழுதி, கலக்கி இருக்கீங்க.

சிநேகிதன் அக்பர் said...

இந்த படத்தை பார்க்கும் போது இது பற்றி யாரும் விமர்சனம் எழுதலையேன்னு நினைச்சேன். அந்த குறையை போக்கிட்டீங்க. ஒரே எண்ணம்.

உங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

Mahi_Granny said...

ஆஹா , சந்தடி சாக்கில் அம்மாவுக்கு பெட்டிசன் போட்டது இன்னும் அழகு .

அரசூரான் said...

//(கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட?)//
தம்பி பாலாசி, எப்படி பட்ட பொண்ணு வேண்டும்னு சொல்லிட்ட, முருகன் அம்மாகிட்ட சொல்லி தகவல வீட்டுக்கு தெரியப்படுத்தலாமா?

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பா விமர்சனம் சரி அது என்ன பொன்வண்ணனின் மனைவி அவரை விட சரண்யாவிற்கு
தனியான ஆளுமை இருக்கிறதே

அன்புடன் நான் said...

பட கண்ணோட்டத்துக்கு நீங்க கையாண்ட கிராமிய சொற்களும் அந்த நிகழ்வுகளும் அருமை பாலாசி.

நல்ல படத்தை நன்கு அலசிய உங்களுக்காகவேணும்..... உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல ம(று)ருமகள் அமையும்.

உங்களுக்கும் உங்க அம்மாவின் மருமகளுக்கும் என் குடும்பத்தின் பொங்கல் நில் வாழ்த்துக்கள் பாலாசி.

அன்புடன் நான் said...

சி. கருணாகரசு said...
பட கண்ணோட்டத்துக்கு நீங்க கையாண்ட கிராமிய சொற்களும் அந்த நிகழ்வுகளும் அருமை பாலாசி.

நல்ல படத்தை நன்கு அலசிய உங்களுக்காகவேணும்..... உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல ம(று)ருமகள் அமையும்.

உங்களுக்கும் உங்க அம்மாவின் மருமகளுக்கும் என் குடும்பத்தின் பொங்கல் நல் வாழ்த்துக்கள் பாலாசி.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

ரவிஉதயன் said...

தமிழ் மண விருது பெற்ற தங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்

பிரதீபா said...

//தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்
1.சில புழுக்கள் - சி - க.பாலாசி-முதல் பரிசு//


வாழ்த்துக்கள் பாலாண்ணா !! ட்ரீட்டு ட்ரீட்டு ...

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப வித்யாசமான அருமையான விமரிசனம்.

r.v.saravanan said...

நல்லாருக்கு பாலாசி

Thenammai Lakshmanan said...

பதிவை அம்மா படிக்கிறாங்களா. இல்லாட்டி கூரியர் பண்ணிறலாம்..:))

Ahamed irshad said...

Nice review balasi.

  ©க.பாலாசி. Template by Dicas Blogger.

TOPO